அந்தரங்கத்தை தொலைத்த வாழ்வு

அந்தரங்கத்தை தொலைத்த வாழ்வு SMSகள்… மின்னஞ்சல்கள… FACEBOOKகள்… Blogகள்… இணையத் தளங்கள்தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின்பெருமைகளையும் பயன்களையும் பார்த்து பரவசப்படவேண்டிய அல்லது பெருமைப்படவேண்டிய 21ம் நூற்றாண்டுக் காலகட்டத்தில், அதன் நீளமான கைகள் தனி மனிதர்களின் அந்தரங்கங்களுக்கு பக்கத்தே நின்று அவர்களின் குரல்வளையையே திருகும் எம் வாழ்வின் பெருமைகளை எவ்வாறு எண்ணி வியப்பது? கோபத்தில் தொலைபேசியில் ஒருவருடன் பேசமுடியாது. . குரலைத ; தாழ்த்தி இரகசியம் பேச முடியாது. . .காதலியுடன் றோட்டால் நடந்து போக முடியாது. .… Read More »

தேவதூதர்கள் – சிறுகதை

அத்தியாயம் 1: காலம் 1984 இடம் : ஐரோப்பிய ஒன்றியம் ”எங்கள் பண்ணைகளில் பன்றிகளையும் மாடுகளையும் பராமரிக்கவும்இ கோடைகாலங்களில் பழங்கள் பறிக்கவும் போதியளவு வேலையாட்கள் இல்லை.” விவசாயத்துறை கவலைப்பட்டது. ”எங்கள் தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்த எங்கள் நாட்டு மக்களுக்கு முதுகுவலிகள் அடிக்கடி வருவதால் சுகவீன லீவின் தொகை அதிகமாகிறது. உற்பத்தியின் அளவு குறைந்து கொண்டு போகின்றது. இளைய சந்ததியினர் கணனித் துறையை தெரிவு செய்வதால் இங்கு வேலை செய்ய போதியளவு ஆட்கள் இல்லை. பாரிய பிரச்சனை… Read More »

புலம் பெயர் வாழ்வும் தமிழ்க் கல்வியும்

புலம் பெயர் வாழ்வும் தமிழ்க் கல்வியும் இன் முற்பகுதியில் இலங்கைப் பிரச்சனை காரணமாக அகதிகளாக மேலைநாடுகளுக்கு இடம் பெயர்ந்து வாழத் தொடங்கிய குடும்பங்களும் உள்ளங்டகும் இடம்பெயர்ந்தவர்களும் தமிழ்க் கல்வியும் மேற்கல்வி அல்லது உயர்தொழில் புரிவதற்காக ஆங்கிலம் பேசும் நாடுகளுக்குச் சென்ற கல்விமான்களின் குடும்பங்கள் அனேகமானவை தம்மையும் அந்த நாட்டு ஆங்கில கனவான்களாக பாவித்து அந்த நாட்டுக் கலாச்சாரத்திற்கு ஏற்ப வாழ ஆரம்பித்ததாலும் ஆங்கிலம் பேசுதல் தமிழ் மக்களிடையே ஒரு கௌரவ அடையாளப்படுத்தலாக அன்றைய சமுதாயத்தில் அமைந்திருந்ததாலும் தம்… Read More »

எங்கே போனீர்கள்? – சிறுகதை

ஸ்பிரிங் காலத்து மெல்லிய குளிர். வீதிக்கரையெங்கும் தானாவே துளிர்த்தெழுந்த ரியூலிப்ரின் பூக்களின் அழகு. இந்த இரண்டையும் அனுபவித்தப்படி வீட்டின் பின்புறம்வரை மெதுவாக சைக்கிளை ஓட்டி வந்த குமாரின் கால்கள் வீட்டின் தபால் பெட்டியைக் கண்டதும் அவனையுமறியாமல் தானாகவே பெடல்களை ஊண்டி அழுத்துவதை உணர்ந்தான். அன்று செவ்வாய்கிழமை. அதிகமாக இலங்கையில் இருந்து கடிதங்கள் வரும் நாள். யாழ்ப்பாண கிடுகு வேலிகளுக்கு மத்தியில் இழுக்கவும் முடியாமல் இறக்கி வைக்கவும் முடியாமல் சுமைகளை ஏற்றி வைத்துக் கொண்டு அவதிப்படும் ஒரு சராசரிக்… Read More »

தகவத்தின் (தமிழ் கதைஞர் வட்டம்) பார்வையில் சமகாலச் சிறுகதைகள் – டாக்டர். எம். கே. முருகானந்தன் (15-06-2014)

தகவத்தின் (தமிழ் கதைஞர் வட்டம்) பார்வையில் சமகாலச் சிறுகதைகள் – டாக்டர். எம். கே. முருகானந்தன் (15-06-2014) தகவம் சிறுகதை பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கங்கள். பல மாத உழைப்பிக்கிற்கு பின்னர் இன்று தகவம் குழவினர் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். தகவம் அமைப்பானது இலங்கையில் சிறுகதை வளர்ச்சியை உக்குவிப்பதை நோக்கமாகக் 1975 களில் உதயமானது. தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்ளுதல், தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களை ஊக்குவிப்பது,… Read More »

கிராமத்து பெரிய வீட்டுக்காரி . . சிறுகதை

2009முதலாவது காலாண்டில் தகவம் அமைப்பின் முதற்பரிசு பெற்ற சிறுகதை * முதல்காதல், முதல் நாள் பள்ளிக்கூடம், முதல்நாள் ஓடிய சைக்கிள், முதல் நாள் விளையாடிய முன்நூற்றுநாலு சீட்டாட்டம், முதன்நாள் களவாய்ப் போய்ப் பார்த்த படம். . .மனத்திலும் வாழ்விலும் எப்போதாவது வலிகளும் நோக்களும் வரும் போது இவைகள் அவ்வப்போது வந்து ஒத்தடம் தந்து விட்டுப் போகும். போன வின்ரரில் சாந்தி காரில் அடிபட்டு இறக்கும் வரை எனக்கு பெரிதாக எந்த ஒத்தடமும் தேவைப்படவில்லை. . .அல்லது அந்த… Read More »

செல்வி ஏன் அழுகின்றாள்? – சிறுகதை – 2009 போர் முடிந்தவுடன் எழுதப்பட்டது

எல்லாமே முடிந்து விட்டது. இருந்த வீடு. . . வாழ்ந்த கிராமம். . . தெரிந்த முகங்கள். . . எல்லாம். . . எல்லாமே. . . தொலைந்து போய்விட்டது. இப்பொழுது முழுக்க முழுக்க சனக்குவியல்கள் மத்தியில். . . இரத்த வாடைகளுக்கும். . . .இலையான்கள் மொய்க்கும் சிதழ்பிடித்த புண்களுக்கும் மத்தியில். . .யாராவது ஒரு சாப்பாட்டு பாசல் கொண்டு வந்து தருவார்களா என்ற ஏக்கத்துடன். . . . புல்டோசர் கொண்டு இடித்து,தறித்து,அடிவேர்க்… Read More »

”கடவுச்சீட்டு”

மீண்டும் டென்மார்க்கு…. இந்திய – சிங்கப்பூர்பயணம் டென்மாக் குறோன்களையும் ஐரோப்பிய யூரோக்களையும் இங்கிலாந்து புவுண்ட்ஸ்களையும் இந்தியாரூபாய்களிலும் சிங்கப்பூர்டொலர்களிலும் மாறி மாறி கணக்குப் பார்த்து மூளைகளைத்துப் போனாலும் பல எழுத்தாளர்களைச் சந்தித்தும் இலக்கியம் பற்றி பல பரிமாணங்ககளையும் அறிந்து வந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. எங்களால்தான் இலக்கியம் வளர்கிறது என்ற பலரின் கூற்றுகளால் அல்லது நடத்தைகளால் அல்லது இணையத்தளப் பதிவுகளால் அதிகமான இலக்கியவாதி கவலை கொண்டுள்ளார்கள். கன்னியாகுமாரியில் இருந்து இமயமலைக்கு பயணம் செய்யும் புகையிரதத்தில் ஏதோ ஒரு ஸ்டேசனில்… Read More »

சுனாமி 2014 – சிறுகதை

சுனாமி 2014 – சிறுகதை   இன்னமும் பத்து நாட்களே பாக்கி இருக்கின்றது. ஒரு பழக்கத்தினுள் எங்களை முற்றாக ஐக்கியமாக்கிக் கொள்வதற்கு அல்லது அதிலிருந்து விடுதலை பெற்றுக் கொள்வதற்கு 21 நாட்கள் கணக்கு என்ற ஒன்றை மனோதத்துவ உலகம் வைத்திருக்கின்றது. இந்த 21 நாட்களுக்கு பின்னால் அது பழக்கமாகி விட்டுவிடும். மரணவீட்டின் கவலைகள்… திருமணவீட்டின் களைகள்…. குழந்தைப் பேறின் வலிகள் அத்தனைக்கும் இந்த 21 நாட்கள்தான் கணக்கு. அதிலிருந்து தேறிச் செய்யும் சடங்குகள் தான் இந்த 31நாள்… Read More »

எங்கே என் நாடு (சிறுகதை)

மனதை ஏதோ சூனியம் கவ்விக் கொண்டிருக்கிற மாதிரி ஓர் பிரமை. அப்படி ஏதும் நடந்து விடவில்லை. யாருடன் எந்தக் கொடுக்கல் வாங்கலோ, வாக்கு வாதமோ எதுவுமே இல்லை. ஆனால் மனம் மட்டும் வெறுமையில் போன மாதிரி. . . கண்கள் மட்டும் ரிவீயில் பதிந்திருக்க, கைகள் மட்டும் ஏனோ தானோ என்று ரிமோட் கொன்றோலில் சனல்களை மாற்றி மாற்றி அழுத்திக் கொண்டிருக்கிறது. றொஸ்கில் பெஸ்ரிவலில் அப்படி என்னதான் இருக்கின்றது. இவ்வளவு சனக்கூட்டம். ஆண்களில் தோள்களில் பெண்களும், பெண்களின்… Read More »