”கடவுச்சீட்டு”
மீண்டும் டென்மார்க்கு….
இந்திய – சிங்கப்பூர்பயணம்
டென்மாக் குறோன்களையும் ஐரோப்பிய யூரோக்களையும் இங்கிலாந்து புவுண்ட்ஸ்களையும் இந்தியாரூபாய்களிலும் சிங்கப்பூர்டொலர்களிலும் மாறி மாறி கணக்குப் பார்த்து மூளைகளைத்துப் போனாலும் பல எழுத்தாளர்களைச் சந்தித்தும் இலக்கியம் பற்றி பல பரிமாணங்ககளையும் அறிந்து வந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
எங்களால்தான் இலக்கியம் வளர்கிறது என்ற பலரின் கூற்றுகளால் அல்லது நடத்தைகளால் அல்லது இணையத்தளப் பதிவுகளால் அதிகமான இலக்கியவாதி கவலை கொண்டுள்ளார்கள்.
கன்னியாகுமாரியில் இருந்து இமயமலைக்கு பயணம் செய்யும் புகையிரதத்தில் ஏதோ ஒரு ஸ்டேசனில் ஏறி இன்னோர் ஸ்டேசனில் இறங்கின்றோம் என்றுஏனோ அதிகமான எழுத்தாளர்கள் ஒத்துக்கொள்ளும்போக்கு அரிதாகிக் கொண்டு வருகிறது என்பது பலரின் கவலையாக இருக்கின்றது.
சங்கம் வளர்த்த தமிழும் காப்பியங்களும் மாகா இதிகாசங்காசங்களும் பாரதியும் புதுமைப்பித்தனும, ஜெயகாந்தனும் இன்னும் பலரும் வளர்த்த குழந்தைகள்தான் நாம் என்ற உண்மையை மறத்தல் ஆரோக்கியமற்ற செயல் என்றே எண்ணுகின்றேன்.
இதனை இன்னோர் சந்தர்ப்பத்தில் விரிவாக ஆராய்வோம்.
தற்பொழுது என் கைவசம் சுமார் 50 ”கடவுச்சீட்டு” நாவல் பிரதிகள் உள்ளன.
இந்தியாவில் நற்றிணைப் பதிப்பகத்தில் 150 ரூபாய்செலுத்திப்பெற்றுக்கொள்ளலாம்.
இலங்கையில் கொழும்பில் உள்ள பூபாலசிங்கம் புத்தகசாலைக்கும் இதன் பிரதிகள் அனுப்பப்பட்டுள்ளன.
ஐரோப்பாவில் தபால் செலவு உட்பட 50 குறோன்கள் அல்லது 7 யூரோக்கள் அல்லது 5 பவுண்ஸ் செலுத்தி என்னிடம் பெற்றுக் கொள்ளலாம். (மீண்டும் குறோன்கள்…யூரோக்கள்…பவுண்ஸ்களா என மனத்துக்குள் புன்னகைக்கின்றேன்)
இதொன்றும் அதிகமில்லை. ஒரு போத்தல் சூர்யா மிளகாய்ப் போத்தலின் விலையை விடக் கம்மிதான்)
என்னுடன்தொடர்புகொள்ளவேண்டியமின்னஞ்சல்:
jeevakumaran5@gmail.com
0045-28 77 45 47
Skriv et svar