Category Archives: சிறுகதைகள்

மணமகள் தேவை

நல்லூரைப் பிறப்பிடப்மாகவும் இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட உயர் சைவ வேளாளார் குலத்தில் பிறந்து,  மனைவியை இழந்து, பிள்ளைகளின்றி தனியே வாழும்  40 வயதான ஒரு பொறியியளாருக்கு இலங்கையைச் சேர்ந்த விதவையான,பிள்ளைகள் அற்ற தமிழ் பேசும் ஒரு மணப்பெண் வேண்டும். மணப் பெண்ணின் வயது  35  தொடக்கம்  45 வரையில்  இருப்பது விரும்பத்தக்கது. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: கல்யாணமாலை திருமணசேவை நிறுவனம் * இராகுலனின் இந்த மணப்பெண் அறிவித்தல் பலவிதமாக பல இடங்களில் அலசப்பட்டது. குறிப்பாக, பிறந்தநாள்… Read More »

தேவதூதர்கள் – சிறுகதை

அத்தியாயம் 1: காலம் 1984 இடம் : ஐரோப்பிய ஒன்றியம் ”எங்கள் பண்ணைகளில் பன்றிகளையும் மாடுகளையும் பராமரிக்கவும்இ கோடைகாலங்களில் பழங்கள் பறிக்கவும் போதியளவு வேலையாட்கள் இல்லை.” விவசாயத்துறை கவலைப்பட்டது. ”எங்கள் தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்த எங்கள் நாட்டு மக்களுக்கு முதுகுவலிகள் அடிக்கடி வருவதால் சுகவீன லீவின் தொகை அதிகமாகிறது. உற்பத்தியின் அளவு குறைந்து கொண்டு போகின்றது. இளைய சந்ததியினர் கணனித் துறையை தெரிவு செய்வதால் இங்கு வேலை செய்ய போதியளவு ஆட்கள் இல்லை. பாரிய பிரச்சனை… Read More »

எங்கே போனீர்கள்? – சிறுகதை

ஸ்பிரிங் காலத்து மெல்லிய குளிர். வீதிக்கரையெங்கும் தானாவே துளிர்த்தெழுந்த ரியூலிப்ரின் பூக்களின் அழகு. இந்த இரண்டையும் அனுபவித்தப்படி வீட்டின் பின்புறம்வரை மெதுவாக சைக்கிளை ஓட்டி வந்த குமாரின் கால்கள் வீட்டின் தபால் பெட்டியைக் கண்டதும் அவனையுமறியாமல் தானாகவே பெடல்களை ஊண்டி அழுத்துவதை உணர்ந்தான். அன்று செவ்வாய்கிழமை. அதிகமாக இலங்கையில் இருந்து கடிதங்கள் வரும் நாள். யாழ்ப்பாண கிடுகு வேலிகளுக்கு மத்தியில் இழுக்கவும் முடியாமல் இறக்கி வைக்கவும் முடியாமல் சுமைகளை ஏற்றி வைத்துக் கொண்டு அவதிப்படும் ஒரு சராசரிக்… Read More »

கிராமத்து பெரிய வீட்டுக்காரி . . சிறுகதை

2009முதலாவது காலாண்டில் தகவம் அமைப்பின் முதற்பரிசு பெற்ற சிறுகதை * முதல்காதல், முதல் நாள் பள்ளிக்கூடம், முதல்நாள் ஓடிய சைக்கிள், முதல் நாள் விளையாடிய முன்நூற்றுநாலு சீட்டாட்டம், முதன்நாள் களவாய்ப் போய்ப் பார்த்த படம். . .மனத்திலும் வாழ்விலும் எப்போதாவது வலிகளும் நோக்களும் வரும் போது இவைகள் அவ்வப்போது வந்து ஒத்தடம் தந்து விட்டுப் போகும். போன வின்ரரில் சாந்தி காரில் அடிபட்டு இறக்கும் வரை எனக்கு பெரிதாக எந்த ஒத்தடமும் தேவைப்படவில்லை. . .அல்லது அந்த… Read More »

செல்வி ஏன் அழுகின்றாள்? – சிறுகதை – 2009 போர் முடிந்தவுடன் எழுதப்பட்டது

எல்லாமே முடிந்து விட்டது. இருந்த வீடு. . . வாழ்ந்த கிராமம். . . தெரிந்த முகங்கள். . . எல்லாம். . . எல்லாமே. . . தொலைந்து போய்விட்டது. இப்பொழுது முழுக்க முழுக்க சனக்குவியல்கள் மத்தியில். . . இரத்த வாடைகளுக்கும். . . .இலையான்கள் மொய்க்கும் சிதழ்பிடித்த புண்களுக்கும் மத்தியில். . .யாராவது ஒரு சாப்பாட்டு பாசல் கொண்டு வந்து தருவார்களா என்ற ஏக்கத்துடன். . . . புல்டோசர் கொண்டு இடித்து,தறித்து,அடிவேர்க்… Read More »

சுனாமி 2014 – சிறுகதை

சுனாமி 2014 – சிறுகதை   இன்னமும் பத்து நாட்களே பாக்கி இருக்கின்றது. ஒரு பழக்கத்தினுள் எங்களை முற்றாக ஐக்கியமாக்கிக் கொள்வதற்கு அல்லது அதிலிருந்து விடுதலை பெற்றுக் கொள்வதற்கு 21 நாட்கள் கணக்கு என்ற ஒன்றை மனோதத்துவ உலகம் வைத்திருக்கின்றது. இந்த 21 நாட்களுக்கு பின்னால் அது பழக்கமாகி விட்டுவிடும். மரணவீட்டின் கவலைகள்… திருமணவீட்டின் களைகள்…. குழந்தைப் பேறின் வலிகள் அத்தனைக்கும் இந்த 21 நாட்கள்தான் கணக்கு. அதிலிருந்து தேறிச் செய்யும் சடங்குகள் தான் இந்த 31நாள்… Read More »

எங்கே என் நாடு (சிறுகதை)

மனதை ஏதோ சூனியம் கவ்விக் கொண்டிருக்கிற மாதிரி ஓர் பிரமை. அப்படி ஏதும் நடந்து விடவில்லை. யாருடன் எந்தக் கொடுக்கல் வாங்கலோ, வாக்கு வாதமோ எதுவுமே இல்லை. ஆனால் மனம் மட்டும் வெறுமையில் போன மாதிரி. . . கண்கள் மட்டும் ரிவீயில் பதிந்திருக்க, கைகள் மட்டும் ஏனோ தானோ என்று ரிமோட் கொன்றோலில் சனல்களை மாற்றி மாற்றி அழுத்திக் கொண்டிருக்கிறது. றொஸ்கில் பெஸ்ரிவலில் அப்படி என்னதான் இருக்கின்றது. இவ்வளவு சனக்கூட்டம். ஆண்களில் தோள்களில் பெண்களும், பெண்களின்… Read More »

புதுப்பொம்மைகள்

புதுப்பொம்மைகள்  ”எதுக்காக என்னைக் கட்டினியள்?”  இந்த இலையுதிர் காலத்தில் மரங்கள் எல்லாம் இலைகளைக் கொட்டி விட்டு சூனியம் கவ்வி நிற்பது போலவே, அந்தக் கேள்வியின் பின் மூர்த்திக்கும் இந்த இரண்டு நாட்களாக மனதுள் இருள் கவ்வியிருந்தது.  பகற்காலம் குறைந்து இருள் காலம் கூடியிருந்தது போலவே, இந்த இரண்டு நாளும் அவனுள்ளும் ஓர் சரிசமனற்ற நிலை நிலவிக் கொண்டு இருந்தது.  இரண்டு நாட்களாகவே அவனாக அறையினுள் முடங்கிக் கொண்டான். வீட்டில் எந்தச் சாமான் குறைந்தாலும் வாங்கி வந்து ”இந்தா… Read More »

நான் அவனில்லை – சிறுகதை (சித்திரை 2024 ஜீவநதியில் வெளியானது)

”மிஸ்ஸிங் ஹோமா?… நவ் ஸ்றெயிற் கொனற்றெட் ரு யுவ ஹோம். லிபற மொபில்! இன்ரெநெற் கோலிங்…லோ கோஸ்ற்… ஹய் குவாலிட்டி…” தொலைக்காட்சியில் விரல்கள் ரம்ளருள் நனைய தண்ணீரைப் பரிமாறும் பையன்… மூக்கைத் தேய்த்தபடி ஒடர் எடுக்கும் சர்வர்;… இவர்களுக்கு எந்தவித மாறுபாடுபாடில்லாத ஒரு சாப்பாட்டுக் கடையில் அமர்ந்திருந்தேன் பத்து வருடத்துக்கு முன்பு நானும் லாவண்யாவும் சந்திக்கும் அதே யாழ்ப்பாண பஸ்ஸ்ராண்ட் முன்னுள்ள சாப்பாட்டுக்கடை. கடையின் தோற்றம் முற்றாகவே மாறியிருக்கின்றது. அவ்வாறே முன்பிருந்தவர்களும் கல்லாப்பெட்டியில் அமர்ந்திருக்கவில்லை. நாலு முழவேட்டியுடனும்… Read More »

ஊமை உறவுகள் – சிறுகதை

ஓரு மாதத்தின் முன்புதான் அன்னத்தின் மூத்தமகள் ராணி பெரியவளாகி இருந்தாள். அண்டை அயல்கள் கொண்டு வந்த நல்லெண்ணையிலும், உழுத்தம் மாவிலும், முட்டையிலும் இரண்டு ரின்கள் நிறைய முட்டைமா செய்தது போக எஞ்சியிருந்த முட்டைகள் பங்குனி வெயிலில் பழுதாகிப் போய் விடும் என்பதற்காக பக்கத்து வீட்டுப் பூரணத்திடம் இருந்த அடைக்கோழியை வாங்கி குஞ்சுக்கு வைத்ததில் தேறியவை ஏழு. காகம் தூக்கியது, பூனை பிடித்தது, கிணற்றுள் விழுந்தது. . . .என விசாவை முடித்துக் கொண்டவை போக மிகுதி மூன்று.… Read More »