Category Archives: சிறுகதைகள்

சிறையுடைப்பு – சிறுகதை

என் பெயர் பஞ்சவர்ணம். ஆனால் என் முதலாளி என்னை அழைப்பது பஞ்சவர்ணம்மா என்றுதான். பெயருக்கு ஏற்றமாதிரி என் நிறம் பஞ்சவர்ணம்அல்ல. தென்னங்கீற்று பச்சை நிறம். கழுத்தில் தெளிவாக தெரியக் கூடிய ஒரு ஆரம். அதனில் என் கழுத்து நோகாத அளவு எடையுள்ள ஒரு சின்ன மணி. மதுரை மீனாட்சி அம்மனின் கையில் நாங்கள் அமர்ந்திருப்பது பற்றி எனக்கு எப்பவுமே ஒரு பெருமை. என் முதலாளியும் மஞ்சள் தலைப்பாகை அணிந்து நெற்றியில் சந்தனமும் பெரிய குங்குமமும் வைத்திருப்பார் வாரத்தின்… Read More »

கன்டோஸ் – சிறுகதை – வி. ஜீவகுமாரன்

கன்டோஸ் – சிறுகதை – வி. ஜீவகுமாரன் டென்மார்க் தமிழ்க் கடைகளில் இலங்கையில் விற்கப்படும் கன்டோஸைக் காணுவேன் என நான் கனவில் கூட கற்பனை; பண்ணியிருக்கவில்லை. கன்டோஸ்என்ற பெயராலே அந்த வகைச் சொக்கிலேற்றை அறிந்திருந்தேன். அல்லது தட்டையானதும் இறுக்கமானதும் இலகுவில் உருகக்கூடியதுமான சொக்கிலேற் வகைகள் எல்லாம் கன்டோஸ் எனவே நினைத்திருந்தேன். டென்மார்க்கிற்கு வந்தபின்பு ரொம்ஸ், மாபோ, றீற்ரா ஸ்பொட் கம்பனிகளின் சொக்கலேட்டுகள் போன்றன அறிமுகமாகிய பொழுது தான் கன்டோஸ் என்பது ஒரு நிறுவனம் சூட்டிய பெயர் என… Read More »

ஆண்… சிறுகதை

”இன்னும் என்ன உங்களுக்கு வேணும்” அந்த அதிகாலையில் அவளின் அவல ஒலி இருட்டான குடோனின் சுவர்களில் பட்டுத் தெறித்தது. இரண்டு கைகளாலும் தலைகளில் அடித்துக் கொண்டாள். அரிசியை சாக்கில் ஓட்டை போட்டு அதிலிருந்து விழுந்த அரிசியைக் கொறித்துக் கொண்டிருந்த இரண்டொரு எலிகள் சாக்குகளுக்கு பின்;னால் அமைந்திருந்த தம் பொந்துகளுள் ’கீச்’சு.. ’கீச்’சுக்கென்று ஒலி எழுப்பியபடி போய் ஒளிந்து கொண்டன. எல்லாம் முடிந்தவனான அவன் எழுந்து காறித்துப்பியபடி எதுவுமே பேசாமல் வெளியேறினான். திகைப்பு விடுபடாத நிலையில் அழுதபடி கலைந்திருந்த… Read More »

வேட்டை

வன்னி மண்ணை மூன்று குறுநில மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த காலம். முல்லை, நெய்தல், மருதம் என இயற்கை மண்ணின் வளத்தைப் பிரித்து வைத்ததையே தம் பிரதேசத்து எல்லையாகக் கொண்டு அவர்கள் ஆண்டு கொண்டிருந்தார்கள். குறிஞ்சியும் பாலையும் அங்கிருக்கவில்லை. முல்லைக்கே உரிய அழகு காடும் காடுசார்ந்த பிரதேசங்களும் என்றாலும் இயற்றைகயுடன் சேர்ந்து கொத்து கொத்தாக மலர்ந்து சிரிக்கும் காட்டுவாசிப் பெண்களும்தான். கருகுமணியும் பாசிக்கயிறும் சேர்த்துக் கொண்டு திரியும் இந்த காட்டுவாசிகளின் கூட்டத்தில் செம்பருத்தி கொஞ்சம் வித்தியாசமானவள். வயது ஈரெட்டு.… Read More »

சங்கானைச் சண்டியன்

(பாகம் 1)   கிறிஸ்த்துவிற்கு முன், கிறிஸ்த்துவிற்கு பின் என்பது போல இலங்கையில் ஆயுத போராட்டத்திற்கு முன். . .ஆயத போராட்டத்திற்குப் பின். . .மேலும் ஆயதங்கள் மௌனமாகி விட்ட காலம் என மூன்று காலகட்டங்களாக பிரித்துக் கொள்ளமுடியும். அவ்வகையில் இது ஆயுத போராட்டத்திற்கு முன்னான கதை!   அனைத்துத் தொகுதிகளிலும், ”எங்களையே அனுப்புங்கள். . . உங்களுக்கு தனித்தமிழ்நாட்டைப் பெற்றுத் தருவோம்”, என தமிழர்கூட்டணியினர் வாக்குறுதியளித்து பாராளுமன்றம் சென்ற கால கட்டத்தில் நடந்ததாக புனையப்பட்ட கதை!!… Read More »

என் பெயர் உஞ்சு. (சிறுகதை)

என் பெயர் உஞ்சு. எங்கள் வீடு… வீட்டோடு சேர்ந்த ஒரு பூனை… நாலைந்து கோழிக்குஞ்சுகள்… வீட்டின் பின் கொட்டிலில் கட்டியிருக்கும் ஒரு கிடாய் ஆடு… இரண்டு மறியாடுகள்.. மூன்று குட்டியாடுகள் எல்லோருக்கும் நான்தான் எப்போதும் காவல். எனது வீட்டு எஜமான் சுத்தக் கஞ்சன். இரவு வேளைகளில் நாலைந்து வீடுகளுக்கு கேட்கக் கூடியவாறு கோப்பையை திண்ணையில் தட்டி, ”உஞ்சு…உஞ்சு…” என மிகப் பலத்த சத்தத்துடன் கூப்பிடுவார். எங்கு நின்றாலும் ஓடிப் போவேன். கோப்பையில் ஒரு சோற்றப் பருக்கை கூட… Read More »

டென்மார்க் – சிறுகதை

‘வெளிநாட்டுக்குப் போனால் எங்கடை கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்திடும்”… ‘மூலைவீட்டு கணபதிப்பிள்ளையின்ரை பேரன் போய் மூண்டு வருசத்துக்கிடையிலை மூண்டு சகோதரிகளையும் கரையேத்திப் போட்டான்”… ‘இதொரு வாழ்வோ. . . இயக்கப் பொயெளோடை நிண்டு கதைச்சால் ஆமிக்காரன்களுக்குப் பயம். . . ஆமிக்காரன்களோடை கதைத்தால் இயக்கத்துக்குப் பயம்”… இந்த கனவுகள் அல்லது தப்பித்தல்களுக்குரிய காரணங்களுடன் நாட்டை விட்டு அகதி என்ற அவப்பெயரிலும். . . புலம் பெயர்ந்தவர்கள் என்ற கௌரவப் பெயரிலும். . . .இங்கு நாம் உண்ணல், உறங்கள்கள்,… Read More »

காக்க… காக்க… சிறுகதை

புதுமைப் பித்தனின் ”கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்;” என்ற கதையை எனது பதினைந்து வயதில் வாசித்ததில் இருந்தே எப்போதும் ஒரு பயம் இருந்து கொண்டே வந்தது… ரியூசனுக்கு என்று வீட்டில் சொல்லி விட்டு, மனோகரா தியேட்டரில் போய் 10 மணி காலைக்காட்சியையும், அக்காமாருடன் வந்து மூலைகளில் உட்கார்ந்திருக்கும் அண்ணாமாரையும் கடைக்கண்களால் ரசிக்கும் பொழுது ”கடவுள் என் பக்கத்தில் வந்து இருந்து எப்படி ரியூசன் போகுது என்று கேட்டால் என்ன சொல்வது?” என்ற பயம்தான் அது. எனது ஐம்பதாவது வயதில் இருந்து… Read More »

வரிச்சுமட்டை வேலிகள் – சிறுகதை

பொழுது இன்னும் புலரவில்லை.  சந்திரன்வீடு துரிதமாக இயங்கிக் கொண்டு இருந்தது.  எல்லோருக்கும் இடையில் மௌனத்திரைகள். பகல் பதினொரு மணிக்கு பலாலியில் இருந்து கொழும்புக்குச் செல்லும் விமாகத்தில் போகப் பதிவாகியிருந்தது. காலை எட்டுமணிக்கு காருக்குச் சொல்லியிருந்தார்கள். காரில் யாழ்ப்பாணத்துக்குப் போய் பின்பு ஆமியின் பஸ்சில் பலாலிக்குப் போகவேண்டும்.  கார் வர முதல் எல்லா சூட்கேசுகளும் சரியாக இருக்கின்றதா எனப் பார்த்துக் கொண்டார்கள்.  சந்திரன் முற்றத்து லைற்றைப் போட்டுவிட்டு சிகரட்டைக் கையில் வைத்து ஆழமாக யோசித்துக் கொண்டிருந்தான். ஆந்தப் பெரிய… Read More »

புதுப்புலவு – சிறுகதை

புதுப்புலவு(1979ம் ஆண்டு ஆகஸ்ட் கலவரத்தின் பொழுது எழுதப்பட்டது)   ‘தனியனுக்கு மதம் பிடிச்சு றோட்டுக்கு வந்து கடையள் எல்லாம் உடைச்சு எறியுதாம்”  ‘வெருண்டு ஓடட்டும் எண்டு ரயரைக் கொழுத்திப் போட,அதையும் தூக்கிப் புத்தகக் கடைக்கு மேலை எறிஞ்சு போட்டுதாம். கடை பத்தி எரியுது.”  ‘உந்தச் சனியனுக்கு வருஷத்துக்கு ஒருக்காவாவது மதம் வருகுது”  _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _… Read More »