கமலி அக்காவும் பாலன் அண்ணாவும்
”தத்தெடுத்து ஒரு பிள்ளையை வளர் எனச் சொல்லிப் பார்த்தன். ”அப்பிடி வளர்த்தால் போலை என்னை மலடி எண்டு சொல்லுறதை நிற்பாட்டிப் போடுவியளோ… என்னையும் இவரையும் நல்ல விசயங்களுக்கு முன்னாலை விடுவியளோ” என எதிர்த்தல்லோ கதைக்கின்றாள்” ”3 மிளகோடையும் 3 மிடறு தண்ணியோடையும் எத்தனை வருசம் கந்தசஷ்டி இருந்திட்டாள.; அந்தக் கடவுளாவது கண் திறக்கவில்லையே” திருமணம் நடந்து அடுத்தடுத்த மாதங்களிலே ” என்னடி… வயிற்றிலை ஒரு புழுப்பூச்சி இல்லையோ?” என தொடங்கிய ஊராரின் அக்கறையும்… விடுப்பும்… ஏளனப் பேச்சுகளும்…… Read More »