எங்கெங்கு காணினும்… (சிறுகதை)

”புதிய மண்ணும் புதிய வாழ்வும்” என்ற பெயரில் நான் எழுதி வரும் வார மலருக்கான கட்டுரைகளை இரண்டு மூன்று இதழ்களுக்குப் போதுமானவற்றை முதலிலேயே டென்மார்க்கில் இருந்து அனுப்பி விடுவது என் இயல்பு. எனது எழுத்துகளைக் கௌரவப்படுத்தும் பத்திரிகைகளைக் கடைசி நேர டென்சனுக்குள் இழுத்துச் செல்வதில் எனக்கு என்றுமே உடன்பாடில்லை. ஆயுதங்கள் மௌனமாக்கப்பட்ட போருக்குப் பின்னான இலங்கையையும்…. அதற்கு  போருக்கு முன்னாக புலம் பெயர்ந்த மக்களின் வாழ்க்கையினையும் இணைத்து எழுதிக் கொண்டிருக்கும் தொடர். 25 தொடருக்ளுக்கான… அதாவது அரை… Læs mere எங்கெங்கு காணினும்… (சிறுகதை)

மாதுளம் மொட்டுகள் – சிறுகதை

கொரானா வருவதுற்கு சரியாக ஒன்பது மாதங்களுக்கு முன் தாஜ்மகாலுக்குப் போயிருந்தேன். நீண்ட காலக் கனவு அது. காலையில இளம் சிவப்பு நிறத்திலும் மதியத்தில் வெள்ளை நிறத்திலும் மாலையில் தங்க நிறத்திலும் நிலவு வெளிச்சத்தில் பளிங்கு போல மின்னும் அந்த அதி அற்புத கலைவடிவக் கட்டத்தை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன். மாலையில் ஜமுனை நதிக்கரை வீசும் காற்றை அனுபவித்தபடி அதன் அருகில் அமர்ந்திருந்தபடியும்;… பசும் புற்தரையில் ஒருக்களித்துப்; படுத்தபடியும்… அதன் அழகை அனுபவிக்கும் சுகமே தனி. 16ம்… Læs mere மாதுளம் மொட்டுகள் – சிறுகதை

கிணற்றடி… – சிறுகதை

”ஆரம்பத்தில் அகதிகளாக புலம் பெயர்ந்து சென்ற  தமிழர்கள் ஒரு செஞ்சிலுகைச் சங்கத்தில் இன்னோர் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு இடம் மாறும் பொழுது தங்கள் உடமைகளை எடுத்துச் செல்வதற்கு சாதாரணமாக குப்பைகள் போடப்பயன்படுத்தும் கறுத்த பிளாஸ்ரிப் பைகளையே பயன்படுத்தினார்கள் என்றும்… மிகவும்  ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும்  இருந்தார்கள் என்றும்… பின்பு படிப்பு – வேலை – வீடு – கார்கள் என வந்த பொழுது ஆளுக்கு ஆள் கௌரவச் சண்டைகள் பிடித்துக் கொண்டு ஐரோப்பியர்கள் போல தனித்து தனித்து வாழத் தொடங்கி… Læs mere கிணற்றடி… – சிறுகதை

கரும்புச்சாறும் வெள்ளிவிழாவும் – சிறுகதை

இந்தியாக்கும் இலங்கைக்கும் சிங்கப்பூர் – மலேசியாக்கும்  போகும் பொழுதெல்லாம் எனக்கு மிகவும் பிடித்தது வீதியோரத்தில் விற்கும் கரும்புச்சாறுதான். அதனைச் சுவைக்கும் பொழுது சலரோகம் வந்து இதனைக் குடிக்க குடுத்து வைக்காதவர்கள் தான் போன பிறப்பில் அதிக பாவம் செய்தவர்கள் என நினைத்துக் கொள்வேன்.  என்னை அதிசயிக்க வைக்கும் இன்னோர் விடயம் எப்படி அந்த இயந்திரம் கரும்புத் துண்டில் இருந்து ஒரு துளி இனிப்பையும் விடாது பிழிந்து எடுக்கிறது என்பதுதான். கரும்புச் சக்கையில் எந்த சுவையும் இராது. அது… Læs mere கரும்புச்சாறும் வெள்ளிவிழாவும் – சிறுகதை

அம்மா – சிறுகதை

மழையிருட்டு மாலைப் பொழுதை விழுங்கி இருந்தது. புழுக்கம் வேறு. எப்போது மழை கொட்டித் தீர்க்கும்?… எப்போதுதான் புழுக்கம் கொஞ்சமாவது  குறையும்??… என்பது போலிருந்தது. ஐரோப்பாவில் ஐந்து நாட்கள் காலில் சில்லுகளைக் கட்டிக் கொண்டு ஓடும் வாழ்க்கையில் கொஞ்சம் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதே இந்த சனி ஞாயிறு தினங்களில் தான். ஞாயிறு மாலை வந்து விட்டால் திங்கள் கிழமை செய்து முடிக்க வேண்டிய பணிகள் வந்து பயமுறுத்தும். எனவே சனிக்கிழமைதான் உண்மையான விடுமுறை நாள் போல இருக்கும். டென்மார்க்கில்… Læs mere அம்மா – சிறுகதை

தெத்தெரி… தெத்தெரி – சிறுகதை

“தெத்தெரி… தெத்தெரி…தெத்தெரி… தெரி… தெரி… தெரியேல்லை…தெத்தெரி… தெத்தெரி…தெத்தெரி… தெரி… தெரி… தெரியேல்லை…” ’ தெத்தெரிக் குருடன்’ டென்மார்க்கிற்கு வந்தது போல இருந்தது. சிவமணி திடுக்கிட்டு எழுந்தார். பகல்நேரத் தூக்கத்தில் இருந்து எழும்பிய திகைப்பில் தெத்தெரிக் குருடனும் டென்மார்க் செஞ்சிலுவைச் சங்கத்தின் அகதி முகாமுக்கு வந்து விட்டானோ என்றும்… எப்படி வந்தான் என்ற வியப்புடனும்; சுற்றும் முற்றும் பார்த்தார். அவனைக் காணவில்லை. சிவமணியின் கனவுக்கும் பிரமைக்கும் இடையில் அவன் நின்றிருந்தான். அவரின் முகம் கைகால்கள் எல்லாம் வியர்ந்திருந்தன. சேலைத்… Læs mere தெத்தெரி… தெத்தெரி – சிறுகதை

மரணப்படுக்கை

பட்டினசபைத் தலைவரை சேர்மன் அல்லது சேர்மன் ஐயா என மற்றவர்கள் ஆங்கிலத்தில் அழைப்பதில் அவருக்கு ஒரு பெருமை. அவ்வாறுதான் நகரசபைக் காலம் கடந்து 42 வருடங்களின் பின்பும் செல்லமுத்து தாத்தாவை மற்றவர்கள் செல்லமுத்து சேர்மன் என அழைப்பதில் அவருக்கு அப்படி ஒரு சந்தோஷம். 78 வயதாகிய போதிலும்… அவர் தனது 36 வயதில் ஒரே ஒரு தடவை எங்கள் பட்டினசபையின் சேர்மனாய் இருந்தாலும்… செல்லமுத்து என்ற பெயருடன் ஒட்டிவிட்ட சேர்மன் என்ற பட்டப் பெயர் இன்றும் அவருடன்… Læs mere மரணப்படுக்கை

நானும்…என் சின்ன மச்சாளும்…மருமகனும்!

எனக்கு அப்பா வழியில் மூன்று மச்சாள்களும் அம்மா வழியில் மூன்று மச்சாள்களும் இருந்த பொழுதிலும் எவருடனும் எனக்கு எந்த பிசிக்ஸ் கெமிஸ்றி எதுவும் வரவும் இல்லை… என் அம்மா அப்பா சரி… மாமாமியாட்கள் சரி என்னை எந்த மச்சாளுடனும் இணைத்து வைக்க முயற்சிக்கவும் இல்லை. சின்ன வயதிலேயே சவுதிக்கு ரைவராக போய் விட்டதாலோ என்னவோ… பெரிய படிப்பு இல்லாதவன் என்பதாலோ… எந்த மாமா மாமியும் எங்கள் வீட்டுடன் சம்மந்தம் வைக்கவில்லைப் போலும். இதனை உணர்ந்த என் அப்பா… Læs mere நானும்…என் சின்ன மச்சாளும்…மருமகனும்!

கடைக்குட்டியன் – சிறுகதை

”ஐயோ” நிலம் நன்கு வெளிக்காத அந்த அதிகாலைப் பொழுதில் கனகம் அலறிய பொழுது ஊரே கூடியது. கிணற்றினுள் கணபதியின் உயிர் போய்; உடல் மிதந்து கொண்டிருந்தது. அக்கம் பக்கத்தவர் அந்தக் காலைப் பொழுதில் கனகத்தின் குரல் கேட்டு முன் – பின்; வளவு வேலிக்கதியால்களை விலத்தியும் தள்ளியும் கொண்டு உள்ளே வந்து அவனை கிணற்றினுள் இருந்து தூக்கி வெளியில் கொண்டு வந்தார்கள்;. சந்தையில் இருந்து கிழக்காகச் செல்லும் ஒழுங்கைப் பக்கத்தில் இருந்து யாரோ ஒருவரின் இழவுச் செய்தியை… Læs mere கடைக்குட்டியன் – சிறுகதை

கமலி அக்காவும் பாலன் அண்ணாவும்

”தத்தெடுத்து ஒரு பிள்ளையை வளர் எனச் சொல்லிப் பார்த்தன். ”அப்பிடி வளர்த்தால் போலை என்னை மலடி எண்டு சொல்லுறதை நிற்பாட்டிப் போடுவியளோ… என்னையும் இவரையும் நல்ல விசயங்களுக்கு முன்னாலை விடுவியளோ” என எதிர்த்தல்லோ கதைக்கின்றாள்” ”3 மிளகோடையும் 3 மிடறு தண்ணியோடையும் எத்தனை வருசம் கந்தசஷ்டி இருந்திட்டாள.; அந்தக் கடவுளாவது கண் திறக்கவில்லையே” திருமணம் நடந்து அடுத்தடுத்த மாதங்களிலே ” என்னடி… வயிற்றிலை ஒரு புழுப்பூச்சி இல்லையோ?” என தொடங்கிய ஊராரின் அக்கறையும்… விடுப்பும்… ஏளனப் பேச்சுகளும்…… Læs mere கமலி அக்காவும் பாலன் அண்ணாவும்