Category Archives: விமர்சனங்கள்

அது (சிறுகதை)

பெற்ற தாய்தனை மக மறந்தாலும்… பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்… உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்… உயிரை மேவிய உடல் மறந்தாலும்… கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்… கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்… *** ”இப்போ எப்படி இருக்கு… ” அவுஸ்திரேலியாவில் இருந்து. ”நாங்கள் வரும் வரை அண்ணாவின் உயிர் தாங்கும் தானே அண்ணி” கனடாவில் இருந்து. ”எப்பிடியும் வாற கிழமை வரை தாங்குவார்” இலங்கையில் இருந்து வெற்றிலைச் சாத்திரியார். இந்த வாரம் முழுக்க 5 கண்டங்களிலும் இருந்து… Read More »

பாவம்… அவள் ஒரு தமிழிச்சி!

செல்வி. சிவகௌரி சச்சிதானந்தன் – செல்வன் இராஜநாயகம் வேலுப்பிள்ளை இருவரின்  சாத்திரத்திரத்திற்கும்… 9 கிரகங்களின் நிலைகளுக்கும்… 12 இராசிகளின் பார்வைகளுக்கும்;… ஒரே ஊரில் வாழ்ந்தாலும் முப்பாட்டன் வழிகளில் எவர் எவர் வாய்கள் எவர் எவர் செம்புகளில் பட்டது என கொய்கச் சேலைகளால் துல்லியமாகத் துலக்கிப் பார்த்துää ஆராய்ந்து… பல்கலைக்கழகத்தில் ஏதாவது தொடுப்புகள் இருந்ததா என சின்ன சின்ன ஏஜென்ற் வாலுகளிடம் விசாரித்து…  மேலாக அவளின் வீட்டுக்கு வந்து போகும் கட்டாடியார் சின்னையா… முடிதிருத்தும் கார்த்திகேசு… மாவிடிக்கவரும் பாக்கியம்… Read More »

முன்னை இட்ட தீ

உயர்தரப் பரீட்சைக்கு இன்னும் 3-4 மாதங்களே இருந்தன. நிச்சயம் விமலன் பல்கலைக்கழகம் செல்வான் எனவே எல்லோரும் நம்பியிருந்தார்கள்.ஆனால் என்ன? நாலு வருடப் பட்டத்தைப் பெற சிலசமயம் எட்டு வருடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலைமை. போர்! அது பட்டப்படிப்பின் ஆயுட்காலங்களைக் குறைத்;தும் மற்றைய அனைத்தையும் நீட்டியுமிருந்;தது.இந்திய சமாதானப்படை வந்தும் சமாதானம் கிட்டவில்லை.இனி எந்த நாட்டின் சமாதானப் பேச்சு விடியலைக் கொண்டு வரப் போகின்றது என்று உலகமே உற்று நோக்கிக் கொண்டிருந்தது. ***வாணவேடிக்கைகள் வானமெங்கும் பரவி புதுவருடத்தின் வரவைப்… Read More »

நகரம்

இலங்கையின் குறிப்பிட்ட பகுதியை அடுக்கு மாடிக் கட்டிடங்கள் ஆக்கிரமித்திருந்தன.இடையிடையே இரண்டொரு சிறிய சின்ன சின்ன வீடுகள் – சிங்கப்பூரில் உள்ள வானுயர்ந்த கட்டங்களுக்கு இடையே அமைந்துள்ள அமைந்துள்ள தனியார் வீடுகள் போல.அதனையும் பெரிய பண முதலைகள் வேண்டி அடுக்கு மாடிகளும் கீழ் தளத்தில் பெரிய அங்காடிகளும் கட்டி வாடகைக்கு விட போட்டி போட்டுக் கொண்டிருந்தன.ஒவ்வோர் அடுக்கு மாடியிலும் குறைந்தது பத்து தளங்கள். தளங்கள் ஒவ்வொன்றிலும் 6 வீடுகளாக 60 வீடுகள். 60 வீடுகளிலும் 3-4 என மனித… Read More »

கூடப்பிறந்ததுகள் – சிறுகதை – வி. ஜீவகுமாரன்

உயர்கல்விச சான்றிதழை ஒரு கையில் வைத்துக் கொண்டும்… பிரிட்டிஷ் ஆங்கிலப் பரீட்சைக்குத் தேறிய சான்றிதழை மறுகையில் வைத்துக் கொண்டும்… ஐரோப்பாவுக்கும் அவுஸ்திரேலியாக்கும் அமெரிக்காவுக்கும் குடிபெயர்ந்து குடியுரிமை பெற்றிருந்தாலும்…. அகதி அந்தஸ்துக்கோரி நாகரீகமாக எதிலிகள் என அழைப்பட்டாலும்…. அல்லது அநாகரீகமாக கறுத்தப்பன்றிகள் என அவித்த இhறலின் நிறமொத்த வெள்ளைப் பன்றிகளின் கூக்குரல் பின்னால் கேட்டாலும்…. கோட்டுடனும் ரையுடனும் சென்னை சர்வதேச விமானநிலையத்தின் ரிக்கற் கவுண்டரில் நின்று இரண்டொரு கிலோ எக்ஸ்ரா பக்கேஜ்சுக்களுக்காகக் கெஞ்சும் நிலைமை எப்போது தான் மாறப்… Read More »

நெஞ்சில் இட்ட கோலங்கள் – சிறுகதை

இராமாயணத்தில் வனவாசம் 14 ஆண்டுகள்… மகாபாரத்ததில் வனவாசம் 12 ஆண்டுகள்…. எனக்கோ மொத்தம் 14 + 12 = 26 ஆண்டுகள். ஆம்! டென்மார்க்கில் என்னை ஒத்த நண்பர்கள் சேர்ந்து சென்ற ஆண்டு வெள்ளிவிழாக் கொண்டாடி மகிழ்ந்த பொழுது…  என் கனவும் நினைவும் என் நாடும் என் கிராமமும் இந்த யாழ்ப்பாண நகரும்…. குறிப்பாக யாழ்ப்பாண பஸ் ஸ்ராண்டும் தான். எண்ணை தடவி கொப்பியினுள் வைத்த மயிலிறகு குட்டி போடும் என்றும்…. அம்மா உருண்டித்தரும் கடைசி உருண்டைச்… Read More »

எங்கெங்கு காணினும்… (சிறுகதை)

”புதிய மண்ணும் புதிய வாழ்வும்” என்ற பெயரில் நான் எழுதி வரும் வார மலருக்கான கட்டுரைகளை இரண்டு மூன்று இதழ்களுக்குப் போதுமானவற்றை முதலிலேயே டென்மார்க்கில் இருந்து அனுப்பி விடுவது என் இயல்பு. எனது எழுத்துகளைக் கௌரவப்படுத்தும் பத்திரிகைகளைக் கடைசி நேர டென்சனுக்குள் இழுத்துச் செல்வதில் எனக்கு என்றுமே உடன்பாடில்லை. ஆயுதங்கள் மௌனமாக்கப்பட்ட போருக்குப் பின்னான இலங்கையையும்…. அதற்கு  போருக்கு முன்னாக புலம் பெயர்ந்த மக்களின் வாழ்க்கையினையும் இணைத்து எழுதிக் கொண்டிருக்கும் தொடர். 25 தொடருக்ளுக்கான… அதாவது அரை… Read More »

மாதுளம் மொட்டுகள் – சிறுகதை

கொரானா வருவதுற்கு சரியாக ஒன்பது மாதங்களுக்கு முன் தாஜ்மகாலுக்குப் போயிருந்தேன். நீண்ட காலக் கனவு அது. காலையில இளம் சிவப்பு நிறத்திலும் மதியத்தில் வெள்ளை நிறத்திலும் மாலையில் தங்க நிறத்திலும் நிலவு வெளிச்சத்தில் பளிங்கு போல மின்னும் அந்த அதி அற்புத கலைவடிவக் கட்டத்தை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன். மாலையில் ஜமுனை நதிக்கரை வீசும் காற்றை அனுபவித்தபடி அதன் அருகில் அமர்ந்திருந்தபடியும்;… பசும் புற்தரையில் ஒருக்களித்துப்; படுத்தபடியும்… அதன் அழகை அனுபவிக்கும் சுகமே தனி. 16ம்… Read More »

கரும்புச்சாறும் வெள்ளிவிழாவும் – சிறுகதை

இந்தியாக்கும் இலங்கைக்கும் சிங்கப்பூர் – மலேசியாக்கும்  போகும் பொழுதெல்லாம் எனக்கு மிகவும் பிடித்தது வீதியோரத்தில் விற்கும் கரும்புச்சாறுதான். அதனைச் சுவைக்கும் பொழுது சலரோகம் வந்து இதனைக் குடிக்க குடுத்து வைக்காதவர்கள் தான் போன பிறப்பில் அதிக பாவம் செய்தவர்கள் என நினைத்துக் கொள்வேன்.  என்னை அதிசயிக்க வைக்கும் இன்னோர் விடயம் எப்படி அந்த இயந்திரம் கரும்புத் துண்டில் இருந்து ஒரு துளி இனிப்பையும் விடாது பிழிந்து எடுக்கிறது என்பதுதான். கரும்புச் சக்கையில் எந்த சுவையும் இராது. அது… Read More »

கடைக்குட்டியன் – சிறுகதை

”ஐயோ” நிலம் நன்கு வெளிக்காத அந்த அதிகாலைப் பொழுதில் கனகம் அலறிய பொழுது ஊரே கூடியது. கிணற்றினுள் கணபதியின் உயிர் போய்; உடல் மிதந்து கொண்டிருந்தது. அக்கம் பக்கத்தவர் அந்தக் காலைப் பொழுதில் கனகத்தின் குரல் கேட்டு முன் – பின்; வளவு வேலிக்கதியால்களை விலத்தியும் தள்ளியும் கொண்டு உள்ளே வந்து அவனை கிணற்றினுள் இருந்து தூக்கி வெளியில் கொண்டு வந்தார்கள்;. சந்தையில் இருந்து கிழக்காகச் செல்லும் ஒழுங்கைப் பக்கத்தில் இருந்து யாரோ ஒருவரின் இழவுச் செய்தியை… Read More »