Category Archives: சிறுகதைகள்

கிணற்றடி… – சிறுகதை

”ஆரம்பத்தில் அகதிகளாக புலம் பெயர்ந்து சென்ற  தமிழர்கள் ஒரு செஞ்சிலுகைச் சங்கத்தில் இன்னோர் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு இடம் மாறும் பொழுது தங்கள் உடமைகளை எடுத்துச் செல்வதற்கு சாதாரணமாக குப்பைகள் போடப்பயன்படுத்தும் கறுத்த பிளாஸ்ரிப் பைகளையே பயன்படுத்தினார்கள் என்றும்… மிகவும்  ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும்  இருந்தார்கள் என்றும்… பின்பு படிப்பு – வேலை – வீடு – கார்கள் என வந்த பொழுது ஆளுக்கு ஆள் கௌரவச் சண்டைகள் பிடித்துக் கொண்டு ஐரோப்பியர்கள் போல தனித்து தனித்து வாழத் தொடங்கி… Read More »

கரும்புச்சாறும் வெள்ளிவிழாவும் – சிறுகதை

இந்தியாக்கும் இலங்கைக்கும் சிங்கப்பூர் – மலேசியாக்கும்  போகும் பொழுதெல்லாம் எனக்கு மிகவும் பிடித்தது வீதியோரத்தில் விற்கும் கரும்புச்சாறுதான். அதனைச் சுவைக்கும் பொழுது சலரோகம் வந்து இதனைக் குடிக்க குடுத்து வைக்காதவர்கள் தான் போன பிறப்பில் அதிக பாவம் செய்தவர்கள் என நினைத்துக் கொள்வேன்.  என்னை அதிசயிக்க வைக்கும் இன்னோர் விடயம் எப்படி அந்த இயந்திரம் கரும்புத் துண்டில் இருந்து ஒரு துளி இனிப்பையும் விடாது பிழிந்து எடுக்கிறது என்பதுதான். கரும்புச் சக்கையில் எந்த சுவையும் இராது. அது… Read More »

அம்மா – சிறுகதை

மழையிருட்டு மாலைப் பொழுதை விழுங்கி இருந்தது. புழுக்கம் வேறு. எப்போது மழை கொட்டித் தீர்க்கும்?… எப்போதுதான் புழுக்கம் கொஞ்சமாவது  குறையும்??… என்பது போலிருந்தது. ஐரோப்பாவில் ஐந்து நாட்கள் காலில் சில்லுகளைக் கட்டிக் கொண்டு ஓடும் வாழ்க்கையில் கொஞ்சம் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதே இந்த சனி ஞாயிறு தினங்களில் தான். ஞாயிறு மாலை வந்து விட்டால் திங்கள் கிழமை செய்து முடிக்க வேண்டிய பணிகள் வந்து பயமுறுத்தும். எனவே சனிக்கிழமைதான் உண்மையான விடுமுறை நாள் போல இருக்கும். டென்மார்க்கில்… Read More »

தெத்தெரி… தெத்தெரி – சிறுகதை

“தெத்தெரி… தெத்தெரி…தெத்தெரி… தெரி… தெரி… தெரியேல்லை…தெத்தெரி… தெத்தெரி…தெத்தெரி… தெரி… தெரி… தெரியேல்லை…” ’ தெத்தெரிக் குருடன்’ டென்மார்க்கிற்கு வந்தது போல இருந்தது. சிவமணி திடுக்கிட்டு எழுந்தார். பகல்நேரத் தூக்கத்தில் இருந்து எழும்பிய திகைப்பில் தெத்தெரிக் குருடனும் டென்மார்க் செஞ்சிலுவைச் சங்கத்தின் அகதி முகாமுக்கு வந்து விட்டானோ என்றும்… எப்படி வந்தான் என்ற வியப்புடனும்; சுற்றும் முற்றும் பார்த்தார். அவனைக் காணவில்லை. சிவமணியின் கனவுக்கும் பிரமைக்கும் இடையில் அவன் நின்றிருந்தான். அவரின் முகம் கைகால்கள் எல்லாம் வியர்ந்திருந்தன. சேலைத்… Read More »

மரணப்படுக்கை

பட்டினசபைத் தலைவரை சேர்மன் அல்லது சேர்மன் ஐயா என மற்றவர்கள் ஆங்கிலத்தில் அழைப்பதில் அவருக்கு ஒரு பெருமை. அவ்வாறுதான் நகரசபைக் காலம் கடந்து 42 வருடங்களின் பின்பும் செல்லமுத்து தாத்தாவை மற்றவர்கள் செல்லமுத்து சேர்மன் என அழைப்பதில் அவருக்கு அப்படி ஒரு சந்தோஷம். 78 வயதாகிய போதிலும்… அவர் தனது 36 வயதில் ஒரே ஒரு தடவை எங்கள் பட்டினசபையின் சேர்மனாய் இருந்தாலும்… செல்லமுத்து என்ற பெயருடன் ஒட்டிவிட்ட சேர்மன் என்ற பட்டப் பெயர் இன்றும் அவருடன்… Read More »

நானும்…என் சின்ன மச்சாளும்…மருமகனும்!

எனக்கு அப்பா வழியில் மூன்று மச்சாள்களும் அம்மா வழியில் மூன்று மச்சாள்களும் இருந்த பொழுதிலும் எவருடனும் எனக்கு எந்த பிசிக்ஸ் கெமிஸ்றி எதுவும் வரவும் இல்லை… என் அம்மா அப்பா சரி… மாமாமியாட்கள் சரி என்னை எந்த மச்சாளுடனும் இணைத்து வைக்க முயற்சிக்கவும் இல்லை. சின்ன வயதிலேயே சவுதிக்கு ரைவராக போய் விட்டதாலோ என்னவோ… பெரிய படிப்பு இல்லாதவன் என்பதாலோ… எந்த மாமா மாமியும் எங்கள் வீட்டுடன் சம்மந்தம் வைக்கவில்லைப் போலும். இதனை உணர்ந்த என் அப்பா… Read More »

இலைமறைதாய் – வி. ஜீவகுமாரன்

லக்சுமியக்கா என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் மனைவி கனகலக்சுமியிடம் இருந்து குமாரசாமியார் தள்ளியிருக்கும் தருணங்கள் இரண்டு தான். ஓன்று வீட்டுக்கு விலக்காகும் காலங்கள். இரண்டாவது ஆண்டுக்கொரு முறை வரும் கந்தசஷ்டி விரத காலங்கள். இப்போது வந்திருப்பது மூன்றாவது. இது ஆயுட்காலத்திற்குமானதா என்ற மனப்போராட்டம் கடந்த ஒரு கிழமையாக நடந்து கொண்டிருக்கிறது. அறிவு சொல்லும் நியாஜங்களை மனம் ஏற்றுக் கொள்ளாமையும்… மனம் சொல்லும் நியாஜயங்களை அறிவு ஏற்றுக் கொள்ளாமையும் மனித வாழ்வில் புதிதில்லையே! * காரீனுக்கு 40வது பிறந்தநாளும்… Read More »

இலையுதிர்காலம்

கார்த்திகை மாதம்! கார்காலம்!! அந்திமாலை!!! செக்கச் சிவந்த வானம்!!!! கார் மேகங்களுக்குப் பிரசவலி குளிர்காற்று கூச்சலிடுகின்றது. காது மூக்கு வாய் எங்கும் கடித்துக் குதறும் கொடும் காற்று. நான் நடக்கின்றேன் நடக்கின்றேன் நடந்து கெண்டே இருக்கின்றேன் மூங்கிலில் இசையை மீட்டி விட்டவன் மூச்சுக் காற்றாய் எங்கும் இருப்பவன் மகரந்த துகள்களைக் பரப்பி விடுபவன் மண்ணிலே சக்தியை உற்பத்தி செய்பவன் என்னிலும் – உன்னிலும் – எறும்பிலும் – கரும்பிலும் ஏகாந்தமாகக் கலந்து விட்டவன் நீயல்லவா! என் இனிய… Read More »

கோடை – திருமதி. கலாநிதி ஜீவகுமாரன்

கோடை. நான் நடக்கின்றேன் நடக்கின்றேன் நடந்து கொண்டே போகின்றேன். அம்மியில்லை உரலில்லை ஆட்டுக்கல் ஏதுமில்லை ஈக்குப்பிடி பிடித்துக் கூட்ட வளவில்லை. தண்ணியள்ள கிணறில்லை விறகெரிக்க அடுப்பில்லை. குனிஞ்சு நிமிர்ந்து வேலை பார்க்க நேரமில்லை. என் உடலை வியாதிகள் விலை பேசிவிட்டன பிறசர் அழுத்த சலரோகம் துரத்த பிடி பிடி எனக் காலன் பின்னால் துரத்த நான் நடக்கின்றேன் நடக்கின்றேன் நடந்து கொண்டேயிருக்கின்றேன். டென்மார்க்கில் இப்போ கோடை விடுமுறை. ஊச்சிவெய்யில் நேரமிது பட்டப்பகல் வானம் பஞ்சுமிட்டாய் மேகங்கள் கிச்சுக்… Read More »

நோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன்.

டென்மார்க்கின் மிகச் சிறந்த கோடைகாலம் இதுதான் என அனைவரும் மகிழ்ந்த அந்த வருட கோடை காலம் கடந்து போக…. பச்சை இலைகள் பழுப்பு இலைகளாகி… அவைகள் உதிர்ந்து மரங்கள் நிர்வாணமாகும் காலத்தில் தான் இவர்களின் பெற்றோர்கள் டென்மார்க்கில் கால் வைத்தார்கள். இந்த இருபத்தியாறு வருடங்களில்; டென்மார்க்கும் இருபத்தியாறு கோடைகளையும், இலையுதிர்வுகளையும், பனி மழைகளையும்;, இலைதளிர்களையும் கண்டு விட்டது. நான்கு காலத்தின் சுழற்றியும் அதற்கான எதிர்பார்ப்புகளும் வருடச் சக்கரத்தை கொஞ்சம் அதிகமாகவே நகர்த்திச் சென்று விடும். கொழும்பு வந்து… Read More »