Author Archives: admin

ஜேர்மனிய கரப்பான் பூச்சிகள் – சிறுகதை

இது சக மனிதர்களைப் பற்றிய கதையே அல்ல. கரப்பான்களையும் என்னையையும் பற்றிய கதை. கரப்பான் என்ற பெயரைக் கேட்டாலோ அல்லது பார்த்தாலே அருவருப்புக் கொள்ளும் யாரும் தயவு செய்து இதனைப் படிக்க வேண்டாம். காரணம் இதனைப் படிக்க இருக்கும் எவரும் ஒரு நாள் நித்திரையைத் தொலைக்கப் போகின்றார்கள் என்பது உறுதி. ஏற்கனவே கரப்பான்கள் மீது அருவருப்பு உடையவர்கள் எதற்காக ஒருநாள் நித்திரையை வேறு தொலைக்க வேண்டும்:? நான் எனது மனைவி, இரண்டு மகள்களுடன் வசிப்பது டென்மார்க்கில். உலக… Read More »

புத்தக விமர்சனங்களும் இணையத் தளங்களும். . .வி.ஜீவகுமாரன்

      இலக்கியம்  சார்ந்து  பெருகி வரும் இணயைத்தளங்களின் எண்ணிக்கையும் அவற்றின்ந டுவு நிலைமைகளையும் பார்க்கும் பொழுது சில ஆண்டுகளுக்கு முன் நான் சந்தித்த ஒரு அனுபவத்தை இந்தக் கட்டுரைக்கு முன்னுரையாக வைக்கலாம் என எண்ணுகின்றேன். 2011 வைகாசி 13.  தமிழக தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள வேண்டும்  என்ற ஆவலில் அன்று காரியாலயத்திற்கும் செல்லாமல் ஒருநாள் லீவு போட்டு விட்டு அதிகாலையே எழுந்திருந்தேன். டென்மார்க்கில் வசிக்கும் எங்கள் வீட்டில் இலண்டனில் இருந்து ஐங்கரன் நிறுவனத்தினரால் ஒலிபரப்பபடும்… Read More »

இது இவர்களின் கதை – சிறுகதை

மரணஅறிவித்தல் அகிலம்சிதம்பரநாதன் தோற்றம்: 10-06-1958 இறப்பு: 15-03-2013 பார்வைக்கு : நேற்று கிரியைகளும்தகனமும் : இன்று எனக்குத்தான் இந்த கிரியைகளும் தகனமும். வடிவான பெட்டியுள் என்னை கிடத்தியிருக்கினம். நான் செத்தால் என்ரை முதல் கூறையைத்தான் கட்டவேணும்எ ன்று சொல்லியிருந்தனான். அது போலை வடிவாய் கட்டியிருக்கினம். மகளும் அவரும் வந்துதான் எனக்கு சீலை கட்டினவை. மருமகள்கள் இரண்டு பேருக்கும் பயம் என்று வரவில்லை. அவர் கல்லுப் போலை நிற்கிறார். சந்தோசம் துக்கம் இரண்டையும் வெளியில் காட்டத் தெரியாத சீவன்… Read More »

தாம்பத்தியம் – சிறுகதை

டென்மார்க்கின் சம்மர்காலக் காலைச்சூரியன் கண்ணைத் குத்துவது போல கயல்மொழிக்கு இருந்தது. ”எனக்கு அந்தப் பொடியன் சூட் ஆகும் போலை தெரியேல்லை அம்மா” ”ஏனடி பிள்ளை அப்பிடிச் சொல்லுறாய்” ”எனக்கு அடுத்த வருசம் யூனிவேசிற்றி முடியுது… இந்த பையனுக்கு அட்வான்ஸ் லெவல் கூட இல்லை…சும்மா ஒவ்வீஸ் வேலைதானே?” ”ஆனால் அவன் நல்ல குணமான பிள்ளையல்லோ” ”நல்லபிள்ளைப்பட்டம் கார் பில்லையும் கறண்ட் பில்லையும் கட்டுமோ அம்மா” * இன்று பதில் சொல்லியாக வேண்டும். ”ஆம்” அல்லது ”இல்லை”. ”இல்லை” என்றால்… Read More »

மானிப்பாய் இந்துக் கல்லூரி – சில ஆட்டோகிராவ்கள்

            (மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பசுமையான நினைவுகளுடன் என்னையும். . .எங்கெங்கோ வாழ்ந்து கொண்டிருக்கும் எனது நண்பர்களையும் இணைத்துக் கொண்டிருக்கும் அந்த வாகீசர் மண்டபம். . . செம்பருத்தி வேலிகள். . . மைதானத்தின் கரையில் நிற்கும்புளியமரம். . .அதன் பின்னால் நடந்து செல்லும் மகளிர் கல்லூரி மாணவிகள். . . இவைகளை உங்களுடன்ஆட்டோக்கிராவ்களாக உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்) பூபாலசிங்கம் மாஸ்ட்டரும் செம்பருத்தி தடியும்; அப்பொழுது நான் ஒன்பதாம் வகுப்பு… Read More »

நானும் எனது மரணமும் – சிறுகதை

செக்கல் நேரம். ”உனக்காகத்தான் கொஞ்ச நாட்களாக உன் முன்னாலும் பின்னாலும் திரிந்து கொண்டிருக்கின்றேன்” கண்களில் அழைப்பு! அமைதியான அழைப்பு!! ஆக்கிரோசம் இல்லாது அரவணைக்கும் அழைப்பு!!! என்னுடைய பிறப்பு எவ்வாறு என்னால் தீர்மானிக்கப்படவில்லையோ… என் வாழ்வு எப்படி என்னால் தீர்மானிக்கப்படவில்லையோ… அவ்வாறே என் இந்த மரணமும் என்னால் தீர்மானிக்கப்படவில்லை. ஐம்பத்தியொன்பது வயதில் தொண்ணூற்று ஐந்து வயது வயதுவரை வாழ்ந்த களைக்கு, கடவுளாய் எனக்கு தந்திருக்கும் வரம் தான் என்னருகில் நிற்கும் இந்த மரணம். மிக அருகில்… மிக மிக… Read More »

மாங்கல்யம் தந்துதானே

தகவத்தில் காலாண்டு இதழ்கள் தெரிவில் முதலாவது இடத்தைப் பெற்ற சிறுகதை முப்பது வருடங்களுக்கு பிறகு வன்னிக்கு வந்து எல்லா இடமும் பார்த்துக் களைத்துப் போனம். ஒரு மினிவான் பிடிச்சுக் கொண்டு யாழ்ப்பாணம்… நல்லூர்… நயினாதீவு… திருக்கேதீஸ்வரம்… திருக்கோணமலை…கதிர்காமம்… இந்த நாலு கிழமையும் எப்படிப் போனது என்றே தெரியவில்லை. இன்றும் டென்மார்க்கில்  இருக்கிற உறவினருக்கு சாமான்கள் வேண்டிக் கொடுக்க என்று அவரும் பிள்ளையளும் ரவுனுக்குப் போட்டினம். நான் கொஞ்சம் ஓய்வாக இருப்பம் எண்டு கதிரையில் இருந்து  இந்த வாரமங்கையர் … Read More »