சென்றமாதம் ஒரு பிறந்த தின விழாவிற்கு குடும்பமாகச் சென்றிருந்தோம்.
என் மகளும் என் கூட வந்திருந்தாள்.
நெடுநாட்களாக என்னைக் காணாத என் நண்பி என்னிடம் வந்து கதைத்தாள்.
”இவள் என் மகள்” என அறிமுகப்படுத்தினேன்.
”ஆ… அப்படியா? நான் முன்பு இவாவைக் கண்டனான். ஆனால் உங்கள் மகள் என நினைக்கவில்லை” என்றாள்.
”ஏன்?… எனக்கு புரியவில்லை” என விழித்தேன்.
”இல்லையடி… அவள் வட்டமாக குங்குமம் வைத்திருக்கின்றாள்” இது அவள்.
”கல்யாணம் ஆகினால் வைக்கிறது தானே” இது நான்.
”இல்லையடி… இப்ப இளம் பிள்ளைகள் ஒருத்தரும் இப்படி பெரிதாய் வைக்கிறதில்லை… அது தான்…” அவள் இழுத்தாள்.
”சரிதான் போ… அந்தப் பொட்டு இருக்கிறதே தெரியாது. சின்னக் கடுகுபோலை…”
”இல்லை இப்ப இதுதான் ஸ்ரைல்” என்றாள் என் தோழி.
”எனக்கு இந்தப் பொட்டுத்தான் பிடிக்கும் அன்ரி – அதுதான் வைச்சனான்” என என் மகள் பதில் சொன்னாள்.
விழா முடிந்து வீட்டுக்கு வந்தாலும் இந்தப் ’பொட்டு’ என்னை விட்டுக் கலைத்துக் கொண்டே இருந்தது.
நானும் தொடர்ந்து எல்லா இடமும் பெண்களின் நெற்றியை பார்க்கத் தொடங்கினேன்.
பொட்டுகளின் அளவு மிகவும் சிறித்திருந்தது.
அதுவும் தோலில் நிறத்தில் அது இருப்பதுவே தெரியாதது போல வைத்திருந்தனர்.
ரி. வி. சீரியஸ் நடிகையர்… சினிமா நடிகைகள்… அறிவிப்பாளராக வரும் பெண்கள்… என அனைவரும் சிறிய பொட்டினுள் சிறைப்பட்டிருந்தனர்.
ஏதற்காக பின்பு இதனை வைத்திருக்கிறார்கள் என்பது புரியாத அளவு மிக மிக சிறியதாகவும்… அது இருக்கா அல்லது இல்லையா என தெரிந்து கொள்ள முடியாதளவு இருந்தது.
நான் டென்மார்க் வந்த காலத்தில் பக்கத்து வீட்டுக்கார டெனிஸ்காரன் கேட்டான், ”ஏன் நெற்றியில் ஜாமை வைத்திருக்கிறாய்?” என்று.
”உங்கள் பெண்கள் ஏன் சொண்டில் அதே ஜாமைப் பூசுகின்றார்கள்” எஎ திருப்பி அடித்துப் பதில் சொன்னாலும்…. பின்பு அவனுக்கு அதன் தோற்றம் பற்றி விபரமாக அவனுக்கு விபரித்துச் சொன்னேன்.
நம்பிக்கையும் சடங்கும்
ஆதிகாலத்தில் இயற்கையின் ஆற்றலை அறியாத மனிதன் அதனைக் கண்டு வியந்தவனாகவும் பயந்தவனாகவும் வாழ்ந்தான்.
இயற்கை தமக்கு உதவ வேண்டுமாயின் தாமும் இயற்கை போல் (imitate) நடக்க வேண்டும் என்றும்… தாமும் இயற்கைப் போல் நடக்க வேண்டும் என்றும்… தாம் செய்வதைப் பார்த்து இயற்கையும் செய்யும் எனவும் நம்பினார்கள். அதனையே வளம் செழிப்பு (Fertility belief)பற்றிய நட்பிக்கை எனப்பட்டது. இவற்றின் வளர்ச்சியே வளவழிபாடு ஆகும் (Fertility rituals)
பூமியும் பெண்களும்
நீண்ட காலமாக வேட்டைத் தொழில் செய்த மக்கள் தாவரங்களில் இருந்து உணவு கிடைப்பதைக் கண்டு கொண்டனர். ஆண்கள் வேட்டைக்கு சென்று வரும் வரை ஓரிடத்தில் இராது காய், கனி, கிழங்குகளை பெண்கள் கேசரித்து வந்தனர். மீதமிருந்த கிழங்குகளையும் பழங்களின் விதைகளை மண்ணில் வீசியெறிந்த பொழுது அவை வளர்ந்து பயன் தருவதைப் பார்த்து வியந்து நின்றனர்.
நிலத்தின் வளம் பெண்களால் பராமரிக்கப்பட்டது. பெண்கள் கருவுற்று குழந்தைக பெற்றுக் கொண்டதை அவர்கள் அதிசயமாகவும் மாந்தீரிகனமானதாகவும் நினைத்தார்கள்.
அத்துடன் ’பெண்ணையும் நிலத்தையும்’ ஒருவித ’சக்தி’யாக பார்க்கத் தொடங்கினார்கள்.
பெண்ணும் நிலமும் வளத்தின் ஊற்று என நம்பினார்கள்.
பெண்கள் மந்திர சக்தியுடையவர்களாகக் கருதப்பட்டதன் அடிப்படையில் தான் ஆரம்பத்தில் பெண் தெய்வ வழிபாடு ஆரம்பமானது.
தொல்காப்பியர் ’கொற்றவைநிலை’ என பெய் தெய்வவழிபாட்டை குறிப்பிடுகின்றார்.
வள்ளுவரும் ’பெண்ணில் பெருந்தக்க யாவுள’ என் கூறுகின்றார்.
பூப்பெய்திய குருதி
ஆதிகாலத்தில் பெண்களின் பூப்பெய்த குருதி வளமாகக் கருதப்பட்டது. அது தீட்டாகக் கருதப்படவில்லை. குழந்தைப் பேற்றுக்கும் மாதவிடாய்க்கும் தொடர்பு இருப்பதால் அதனை வளம் என நினைத்தனர். இந்தக் குருதியை விளை நிலத்தில் ஊற்றி சடங்கு செய்தனர். இதன் மூலம் விளைநிலமஇ நன்கு விளையும் என்று நம்பிக்கை கொண்டனர்.
பெண் இனப்பெருக்கத்துக்கு உடையவள் என்பதனையே ’பூப்படைதல்’ உணர்த்துகின்றது. பூ புத்து பின் காய் கனியாதல் போல பெண் பூப்பெய்தி பக்குவப்பட்டு விட்டாள் என குறிப்பிடுகின்றன.
ஆதிகாலத்தில் கிரேக்க ம+க்கள் தமது முதல் மாதவிடாய் குருதியை நெற்றியில் அணிந்து தம்மை… தாம் இன விருத்திக்கு தயாராகி விட்டதை உலகத்திற்கு இனம் காட்டினார்கள். அதுவே வளச்சடங்காகி அதன் நீட்சியாக குங்குமம் ஆகியது.
பல திருமணச் சடங்குகளில் மணமகள் நெற்றியில் சிவப்பு நிறத்தைப் பூசுகின்றனர்.
இது அவள் அவளது கணவனுக்கு மட்டுமே உரித்தானவள் என்பதனையும்… பிற ஆடவர்க்கு உரியவள் அல்ல என்பதனையும்… தன் கணவனுக்கு மட்டும் தான் குழந்தைப் பேற்றினை வழங்கும் வளமுடையவள் என்பதாயும் அது அடையும் என்கின்றார் பழம் பெரும் கிரேக்க சமுதாயத்தை ஆராய்ந்த ஸி. தொம்சன் அவர்கள்.(G. Thomsen – Studies in acient Greek society vol-1P – 209)
சுமங்கலிகள் – அமங்கலிகள்
இந்தவளச்சடங்குகளின்மறுவடிவமேவிதைகளின்பொட்டற்றநெற்றியும்வெள்ளைஆடையும்.
கணவனைஇழந்தபெண்கள்குங்குமம்வைப்பதையும்நிறஆடைகள்அணிவதையும்சமுதாயம்அங்கீகரிக்கவில்லை.
பொட்டுஇல்லாதபெண்வளம்அற்றவள்எனசித்திகரிக்கப்பட்டாள். அதாவதுஅவள்கணவனுடன்இருக்கும்பொழுதேஅவள்வளமானவள்என ‘ஒருதாரமணத்தை’ கைக்கொண்டவர்கள்வரையறைசெய்திருந்தனர்.
ஒருத்திக்குஒருவன்என்றதிருமணமுறைஉள்ளசமுதாயத்தில்இப்பொட்டுகைமைநோன்பு, உடன்கட்டைஏறுதல்என்பனவிதிமுறைகளாகமாறின. இதன்மூலம்பெண்களின்வளமானதுதரப்படுத்தப்பட்டுசிதைக்கப்பட்டது.
பொட்டுவைத்தல்என்பதுசுமங்கலிகளின்வரமாயும்அமங்கலிகளின்சாபமாயும்எதிர்வினைகளைக்கொடுக்கத்தொடங்கியது.
குங்குமமும் மதமும்
இந்துக்கோயில்களில்இந்தக்குங்குமப்பொட்டுஎன்பதுபுனிதச்சின்னமானது. தாம்நினைத்ததைஎல்லாம்கொடுக்கும்கடவுளார்உள்ளகோயில்களில்குங்குமம்அவர்களின்நம்பிக்கைக்குரியசின்னமானது. வுளமானகடவுள்கொடுக்கும்வளமானகுங்குமம்தம்வாழ்வையும்வளமானதாகமாற்றும்எனநம்பினார்கள். பெண்தெய்வங்களானதுர்க்கை, இலக்குமி, சரஸ்வதிமற்றும்கண்ணகி, திரெகுபதைபோன்றகாவல்பெண்தெய்வங்களின்பிரசாதமாககுங்குமமேமுதல்இடத்தைப்பெற்றது. இங்குஆண்-பெண்இருசாரரும்இந்தகுங்குமத்தைக்கொண்டாடினார்கள்.
மேலும்இச்சிவத்தப்பொட்டுஎதிர்மறைச்சக்திகளைவிரட்டவல்லதுஎன்றும்நெற்றியில்அதுஇருந்தால்அதுமற்றவரைவசியப்படுத்தும்தன்மைஉடையதாயும்இருக்குமெனநம்பப்பட்டது.
சமுதாயத்தில் குங்குமம்
சுமங்கலிப்பெண்களபுகுந்தவீட்டுநன்மைக்காகவும்பிறந்தவீட்:டுநன்மைக்காகவும்முன்தலையின்நடுஉச்சியில்பொட்டுவைப்பதும்ஒருவழக்கமாகநிலவிவந்தது. இன்றும்பலபெண்கள்நெற்றியிலும்உச்சியிலும்பொட்டுவைப்பதைக்காணலாம்.
நாளடைவில்இந்தப்பொட்டுஒருஅழகுசாதனமாகடாறியது. ஊடைகளின்நிறங்களுக்குஏற்பகுங்குமத்தின்நிறங்களும்மாறின. கஸ்தூரிமஞ்சளில்செய்தகுங்குமம்நாளடைவில்ஒட்டுப்பொட்டாகமாறியது. காகிதத்திலும்துணியிலும்பசைபோட்டுஒட்டுப்பொட்டுஉருவாகியது.
இந்தநிறப்பொட்டுகள்எல்லாம்அளவில்சிறித்துசிறித்துஇன்றுகடுகளவுசிறியஒட்டப்பொட்டாகஉலாவருகின்றது.
குங்குமமும்நமதுஅடையாளமும்;
சமூகவிஞ்ஞானஅறிவியல்வளர்ச்சிவளர்ந்துவரும்இக்காலத்தில்பொட்டுஎன்பதுகலாச்சாரச்சின்னமாகபார்க்கப்படும்தன்மைகுறைந்துவருகின்றது. மேலும்பலஇனமக்களிடையேபழகவேண்டியஇடங்களில்இந்தப்பொட்டுதவிர்க்கப்படுகின்றது.
ஒருபெண்வைக்கும்பொட்டுமூலம்அவள்தன்இனஅடையாளத்தைகாட்டுவதன்மூலம்இனவுணர்வுகளைத்தூண்டுவதாகஅமையும்என்றகாரணத்தினால்வேலையிடங்களில்அதுதவிர்க்கப்படுகின்றது.
பொட்டுகலாச்சாரஅடையாளமாகப்பாவிக்கப்பட்டுவருவதானால்அதுவும்கலாச்சாரமாறுதலுக்குமுகம்கொடுக்கவேண்டிவருகின்றது.
ஆமா?
இல்லையா?
பொட்டைவைப்பதா?
வைக்காமல்விடுவதா?
பொட்டுவைக்காவிட்டால்நான்ஒருதமிழிச்சியாகஇருக்கமுடியாதா?
பொட்டுவைக்காவிட்டால்கணவனுக்குஉயிருக்குபாதகமா?
பொட்டற்றநெற்றியால்பெண்முழுமைபெறவில்லையா?
பொட்டுவைப்பதுபெண்அடிமைத்தனமா?
இப்படிஎத்தனையோகேள்விக்களுக்குஇன்றுவிடைதெரியாதநிலைஉருவாகியுள்ளது.
இதனால்தான்கடுகளவுவெள்ளைப்பொட்டுஅல்லதுதோல்நிறத்துப்பொட்டுகடைகளில்கிடைக்கின்றனவோ?
பொருளாதாரச்சமநிலையும்… நிறைவும்பெற்றவளர்ச்சியடைந்தசமூகங்களில்சடங்களும்சம்பிருதாயங்களும்மருவிவருவதுகண்கூடு.
உதாரணமாகஎமதுமக்கள்புலம்பெயர்ந்துவாழும்பலமேலைநாடுகளில்கிறிஸ்மஸ்என்பதுபாலனின்பிறப்புஎன்றநிலையில்இருந்துமாறிஅதுவிடுமுறைக்கும்களியாட்டங்களுக்கும்குடும்பங்கள்இணைந்துமகிழ்வதுக்கும்உரியவிடுமுறையாகமாறியுள்ளதுபோலவேஇங்குஎங்களின்மதநம்பிக்கைகள்.. சடங்குகள்எல்லாம்திசைமாறிச்செல்லத்தொடங்கிவிட்டன.
இதில்எங்கள்பொட்டும்விதிவிலக்குஇல்லை.
டென்மார்க்கில்பெரியவழிபாட்டு(Great prayerday) நாள்என்றுஒன்றுஉண்டு.
எங்கள்நாடுகளில்குருபூஜைக்களுக்குவிடுமுறைவிடுவதுபோலஇங்கு 12 அப்போஸ்தலர்களுக்கும் 12 விடுமுறைவிடும்வழக்கம்ஒன்றிருந்தது. நாட்டின்நலத்தைகருத்தில்கொண்டஅரசன்அந்த 12 நாட்களுக்கும்பதிலாகவருடத்தில்ஒருநாள்அனைத்துஅப்போஸ்தலர்களுக்குமாகவழிபடுங்கள்எனசட்டம்இயற்றினான். ஆனாலும்இன்றும்மக்கள்அதனைஒருவிடுமுறைநாளாகாககொண்டாடுகிறார்களேதவிரதேவாலங்களுக்குசெல்வதில்லை.
ஒருநகரத்தைவடிவமைக்கும்பொழுது 120 குடும்பங்கள்இருந்தால்ஒருதேவாலயம்அமைக்கவேண்டும்என்பதுஅடிப்படைச்சட்டம். இன்றும்சிறியஅளவில்தேவாலங்கள்அமைக்கப்படுகின்றது. ஆனால்அங்குபாதிரியாhகள்; மட்டமேவழிபாட்டில்ஈடுபடுகின்றார்கள்.
இவ்வாறுதான்எங்கள்பொட்டும்அதன்அர்த்தத்தைஇழந்துகொண்டுபோகின்றதோஎனஐயுறுகின்றேன்.
கலாச்சாரம்என்பதுமாற்றங்களைஉள்வாங்கிஓடிக்கொண்டிருக்கம்ஒருநதி.
மாற்றம் ஒன்றே மாறாதது.
இதில் பொட்டு மட்டும் எப்படி மாறாது இருக்கப் போகின்றது.
இந்தக் கலாச்சாரப் பரிமாணத்தையு பொறுத்திருந்திருந்து தான் பார்க்க வேண்டும்.