புலம் பெயர் வாழ்வும் தமிழ்க் கல்வியும்
இன் முற்பகுதியில் இலங்கைப் பிரச்சனை காரணமாக அகதிகளாக
மேலைநாடுகளுக்கு இடம் பெயர்ந்து வாழத் தொடங்கிய குடும்பங்களும் உள்ளங்டகும்
இடம்பெயர்ந்தவர்களும் தமிழ்க் கல்வியும்
மேற்கல்வி அல்லது உயர்தொழில் புரிவதற்காக ஆங்கிலம் பேசும் நாடுகளுக்குச் சென்ற கல்விமான்களின் குடும்பங்கள் அனேகமானவை தம்மையும் அந்த நாட்டு ஆங்கில கனவான்களாக பாவித்து அந்த நாட்டுக் கலாச்சாரத்திற்கு ஏற்ப வாழ ஆரம்பித்ததாலும் ஆங்கிலம் பேசுதல்
தமிழ் மக்களிடையே ஒரு கௌரவ அடையாளப்படுத்தலாக அன்றைய சமுதாயத்தில் அமைந்திருந்ததாலும் தம் பிள்ளைகளுக்கு குறைந்த பட்சம் வீட்டில் ஆவது தமிழைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நினைப்பு அல்லது தேவை அன்று அவர்களுக்கு இருக்கவில்லை.
பெற்றோர்களுக்கு தமிழ் நூற்றுக்கு நூறு வீதம் தெரிந்திருந்தும் அவர்கள் ஆங்கிலத்தை கௌரவ மொழியாக ஏற்றுக் கொண்டார்கள்.
எனவே தமிழ் அறிவு குடும்ப மட்டத்தில் பெற்றார்களுக்கு இருந்தது. அதனை அவர்கள் பாவிக்கவில்லை. ஆனால் பிள்ளைகளைப் பொறுத்தவரை ஆங்கில மொழியே தாய்மொழி ஆகவும் பாடசாலையில் கற்பிக்கப்படும் பிரான்ஸ்- ஸ்பானிய மொழிகளை இரண்டாம் மொழிகளாக ஏற்றுக் கொண்ட அளவிற்கு தமிழ்மொழி இல்லாது அமைந்து விட்டது.
இந்தச் சந்ததிக்கு இன்று வயது சுமார் 30 – 45 வயதாகி விட்டது. இவர்களில் பெரும் பாலானாருக்கு தழிழ் மொழியில் ஆறுதாலாக பேசினால் புரியும். அவர்களுக்கு தமிழில் பதில் சொல்வது கடினமாக இருக்கும். அல்லது அதிகமான ஆங்கில சொற்களை இணைத்து தமிழில் உரையாட முயற்சிப்பார்கள். இந்தச் சந்ததியைச் சார்ந்த பிள்ளைகள் சிலர் ஆடல் பாடல்களில் சிறப்பாக இருந்தாலும் அவர்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதி அதனைக் கற்று கலைகளை அரங்கேற்றும் வல்லமையும் துர்பாக்கிய நிலைமையும் நிலவுவது கண்கூடு.
புலம் பெயர்ந்தவர்களும் தமிழ்க் கல்வியும்
80களின் முற்பகுதியில் புலம்பெயந்;து ஆங்கிலம் பேசும்இ பிற மொழிகள் பேசும் நாடுகளுக்குச் சென்ற மக்களுக்கு இடையே தொடர்பு சாதன மொழியாக தழிழே இருந்தது. இவர்களின் பொழுது போக்கிற்காக இலங்கை இந்தியப் பத்திரிகைகள்இ வாராந்த சஞ்சிகைகள்இ வீடியோவில் தமிழ் படங்கள் என தமிழுடன் வாழ்ந்திருந்தார்கள்.
அத்துடன் அவர்கள் வாழும் பிரதேசங்களில் சிறியதும் பெரியதுமாக தமிழ்க் கலாச்சார கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டதும்இ அதில் தம் பிள்ளைகளின் திறமைகளை அரங்கேற்றுவதிலும் மகிழ்ச்சி அடைந்தார்கள். மேலும் இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் தெரிந்த யாரோ ஒருவரைக் கொண்டு சனிஇ ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழ்க் கல்வி கற்றுக் கொடுத்தார்கள்.
இந்த வளர்ச்சியுடன் இலங்கையின் போராட்ட வளர்ச்சியும் அதற்கான புலம் பெயர்ந்த நாடுகளின் பங்களிப்பும் அதிகமாகிக் கொண்டு செல்ல பல தமிழ்ப் பாடசாலைகள் போராட்டக்குழுக்களின் பின்னணியில் நடைபெற ஆரம்பித்தன.
ஆனாலும் பல நாடுகளில் இந்த கல்வி கற்பிக்கும்; நிறுவனங்கள் தொடந்து தனியார் நிறுவனங்களாக இயங்கி வந்தன.
இதனின் அடுத்த கட்டமாக போராட்டகுழுக்களின் பின்னணியில் நடைபெற்ற பாடசாலைகள் பெரிய ஒரு அமைப்பின் கீழ் இயங்க ஆரம்பித்தது. அனைத்து நாடுகளிலும் ஒரே பாடத்திட்டம்இ ஒரே நேரத்தில் பரீட்சைகள்இ ஒரே கேள்வித்தாள்கள் என அவை விரிவாகத் தொடங்கின.
இந்த பொதுப்பாடத்திட்டத்துடம்; இலங்கையின் வடஇ கிழக்குப் பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த அதே வேளை இலங்கை மற்றும் நாடுகளின் அரச பாடத்திட்டத்தில் புகுத்தப்படாத மொழிச்சீர்த்திருத்தம் இந்த கல்வித் திட்டத்தில் அறிமுகமாகிக் கொண்டு இருந்தது. உதாரணமாக பாண் செய்யும் இடங்களுக்கு பேக்கரி என்ற சொல்லையே தமிழ்ச் சொல்லாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் வட கிழக்குப் பிரதேசத்தில் அது ”வெதுப்பகம்” என்றே அழைக்கப்பட வேண்டும் என்று கட்டாயமாக கடைகளின் பெயர்ப் பலகைகள் மாற்றப்பட்ட பொழுது இந்த மாற்றம் பாடசாலைப் புத்தகங்களிலும் இடம் பெறத் தொடங்கின. இவ்வாறு ஐஸ்கிறீம் என்பது குளிர்களியாகவும்இ துவிச்சக்கரவண்டி என்பது ஈருளியாகவும் பல மாற்றங்கள் பெறத் தொடங்கியது. இந்த மாற்றங்களை அதிக பெற்றார்கள் வரவேற்காவிடினும் பிள்ளைகளுக்கு தமிழ்க் கல்வி வரட்டும் என்று அதனை அனுமதியாது அனுமதித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் ஆயுதங்கள் மொளனமாகி விட்ட நிலையில் பல வெதுப்பகங்களின் பெயர்ப்பலகைகள் இலங்கையில் மீண்டும் பேக்கரிகளாக பெயர்மாற்றம் கண்டுள்ள நிலையில் புலம்பெயர் நாட்டு பாடத்திட்டங்களில் எந்த மாற்றமும் இல்லாது தொடர்கிறது. இதன் எதிர்காலம்
பற்றி எதிர்காலமே சிந்திக்க வேண்டும்.
ஆனாலும் இடம்பெயர்ந்து வந்த மக்களின் பிள்ளளைகளைவிட புலம் பெயர்ந்து வந்த மக்களின் பிள்ளைகளின் தமிழ்ப்பாண்டித்தியம் எத்தனையோ மடங்கு பெரிதாக உள்ளது என்பது கண்கூடு.
தமிழ்க் கல்வியில் புராண இதிகாசங்கள்
தமிழ்க் கல்வியின் அத்திவாரம் என்றுமே எமது புராண இதிகாசங்களினாலும் கூத்து மரபுகளாளினாலும்; நீதி நூல்களினாலும் கட்டி எழுப்பப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய கல்வித் திட்டத்தில் அதற்குரிய இடம் மிகவும் குறைவாக அல்லது முன்னிலைப்படுத்தப்படாத நிலையில் இருப்பது மிகவும் வேதனைக்குரிய நிலையாகும். அன்றாட வாழ்வில் நாம் பாவிக்கும் பல இதிகாசக் கதைகள் எம் அடுத்த சந்ததிக்கு தெரியாமல் போய் விட்ட நிலைக்கு இந்தப் பாடத்திட்டங்கள் அதற்கு முன்னுரிமை வழங்காமையே என்ற கசப்பான உள்ளங்கை நெல்லிக் கனியை உண்டே ஆக வேண்டும்.
பிறநாடுகளில் தாய்மொழிக்கல்விக்குரிய கோட்பாடுகள்
புலம் பெயர்ந்த நாடுகளில் வௌ;வேறு காலகட்டங்களில் அந்த அந்த நாட்டு அரசியலுக்கு ஏற்ப தாய்மொழிக்கல்லி பற்றிய வௌ;வேறு கோட்பாடுகள் இருந்து வந்தன. ஒருக்கால் தாய்மொழியில் பிள்ளைகள் கவனம் செலுத்தினால் பிள்ளைகள் தாம் வாழ வந்த நாட்டு மொழியில் திறமையில்லாமல் போய்விடுவார்கள் என்று ஒரு கொள்ளையும்இ தாய் மொழியில் சிறப்பாக விளங்கும் பிள்ளைகளே பிற மொழியில் சிறப்பாக விளங்குவார்கள் என்று கொள்ளையும் இருந்து வந்தது. அதற்கு ஏற்றமாதிரி அரச மானியங்குள் வழங்கப்பட்டன அல்லது நிறுத்தப்பட்டன.
இன்று நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல அரசநிறுவனங்கள் இரண்டாம் மொழிக்குரிய மானியத்தை குறைத்துக் கொண்டே வருகின்றன. ஆனால் பெற்றார்களின் ஆதராவாலும் உதவியாலும் தமிழ்கல்வி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டே வருகின்றது.
தாய்மொழிக்கல்வியும் உயர்கல்வியும்
புலம்பெயர்நாடுகளில் இந்த தாய்மொழிக்கல்விகளில் பெற்றோர்களும் பிள்ளைகளும் காட்டும் ஆர்வம் பொதுவாக அவர்கள் பிள்ளைகள் உயர்தர வுகுப்பை எட்டும் வரையில் மட்டுமே தொடர்வது மன வேதனைக்குரி நிலையாகும். உயர்கல்வி கற்க ஆரம்பிக்கும் பொழுது தமக்கு மற்றைய பாடங்களுக்கு ஒதுக்கும் நேரத்தை இதற்கு ஒதுக்க முடியாது இருக்கின்து என்பதே அவர்கள் சொல்லும் காரணமாகும்.
ஆனால் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உயர்தரத்தில் தமிழ்கல்வியில் பெறும் பெறுபேற்றை பல்கலைக்கழக புகுமுக அனுமதிக்கு பாவிக்க முடியும் என்ற நிலை இருக்கும் பொழுது அங்கு அதனை கற்கும் ஆர்வம் மிக மேலிடுகிறது.
மொத்தத்தில் அரசியல் மாற்றங்கள் அல்லது ஆதரவு அல்லது எதிர்ப்பு புலம் பெயர்ந்த நாடுகளில் மெல்லத் தமிழை இனி வாழ வைக்கும் அல்லது மெல்லத் தமிழை இனிச் சாக வைக்கும்.
புலம் பெயர் வாழ்வும் தமிழ்க் கல்வியும்
புலம் பெயர் வாழ்வில் தமிழ்க் கல்வியானது புதுவிதமான பரிமாணங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் தொழில் நிமித்தம் காரணமாகவும் உயர்கல்வி பெறும் பொருட்டும் வேறு நாடுகளுக்கு – அனேகமாக ஆங்கில மொழி பேசும் நாடுகளுக்கு சென்று வாழ ஆரம்பித்த கல்விமான்களின் குடும்பங்களும்இ 1980இன் முற்பகுதியில் இலங்கைப் பிரச்சனை காரணமாக அகதிகளாக மேலைநாடுகளுக்கு இடம் பெயர்ந்து வாழத் தொடங்கிய குடும்பங்களும் உள்ளங்கும்;.
இடம்பெயர்ந்தவர்களும் தமிழ்க் கல்வியும்
மேற்கல்வி அல்லது உயர்தொழில் புரிவதற்காக ஆங்கிலம் பேசும் நாடுகளுக்குச் சென்ற கல்விமான்களின் குடும்பங்கள் அனேகமானவை தம்மையும் அந்த நாட்டு ஆங்கில கனவான்களாக பாவித்து அந்த நாட்டுக் கலாச்சாரத்திற்கு ஏற்ப வாழ ஆரம்பித்ததாலும் ஆங்கிலம் பேசுதல் தமிழ் மக்களிடையே ஒரு கௌரவ அடையாளப்படுத்தலாக அன்றைய சமுதாயத்தில் அமைந்திருந்ததாலும் தம் பிள்ளைகளுக்கு குறைந்த பட்சம் வீட்டில் ஆவது தமிழைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நினைப்பு அல்லது தேவை அன்று அவர்களுக்கு இருக்கவில்லை.
பெற்றோர்களுக்கு தமிழ் நூற்றுக்கு நூறு வீதம் தெரிந்திருந்தும் அவர்கள் ஆங்கிலத்தை கௌரவ மொழியாக ஏற்றுக் கொண்டார்கள். எனவே தமிழ் அறிவு குடும்ப மட்டத்தில் பெற்றார்களுக்கு இருந்தது. அதனை அவர்கள் பாவிக்கவில்லை. ஆனால் பிள்ளைகளைப் பொறுத்தவரை ஆங்கில மொழியே தாய்மொழி ஆகவும் பாடசாலையில் கற்பிக்கப்படும் பிரான்ஸ்இ ஸ்பானிய மொழிகளை இரண்டாம் மொழிகளாக ஏற்றுக் கொண்ட அளவிற்கு தமிழ்மொழி இல்லாது அமைந்து விட்டது.
இந்தச் சந்ததிக்கு இன்று வயது சுமார் 30 – 45 வயதாகி விட்டது. இவர்களில் பெரும் பாலானாருக்கு தழிழ் மொழியில் ஆறுதாலாக பேசினால் புரியும். அவர்களுக்கு தமிழில் பதில் சொல்வது கடினமாக இருக்கும். அல்லது அதிகமான ஆங்கில சொற்களை இணைத்து தமிழில் உரையாட முயற்சிப்பார்கள். இந்தச் சந்ததியைச் சார்ந்த பிள்ளைகள் சிலர் ஆடல் பாடல்களில் சிறப்பாக இருந்தாலும் அவர்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதி அதனைக் கற்று கலைகளை அரங்கேற்றும் வல்லமையும் துர்பாக்கிய நிலைமையும் நிலவுவது கண்கூடு.
புலம்பெயர்ந்தவர்களும் தமிழ்க் கல்வியும்
80களின் முற்பகுதியில் புலம்பெயந்;து ஆங்கிலம் பேசும்இ பிற மொழிகள் பேசும் நாடுகளுக்குச் சென்ற மக்களுக்கு இடையே தொடர்பு சாதன மொழியாக தழிழே இருந்தது. இவர்களின் பொழுது போக்கிற்காக இலங்கை இந்தியப் பத்திரிகைகள் வாராந்த சஞ்சிகைகள் வீடியோவில் தமிழ் படங்கள் என தமிழுடன் வாழ்ந்திருந்தார்கள்.
அத்துடன் அவர்கள் வாழும் பிரதேசங்களில் சிறியதும் பெரியதுமாக தமிழ்க் கலாச்சார கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டதும் அதில் தம் பிள்ளைகளின் திறமைகளை அரங்கேற்றுவதிலும் மகிழ்ச்சி அடைந்தார்கள். மேலும் இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் தெரிந்த யாரோ ஒருவரைக் கொண்டு சனிஇ ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழ்க் கல்வி கற்றுக் கொடுத்தார்கள்.
இந்த வளர்ச்சியுடன் இலங்கையின் போராட்ட வளர்ச்சியும் அதற்கான புலம் பெயர்ந்த நாடுகளின் பங்களிப்பும் அதிகமாகிக் கொண்டு செல்ல பல தமிழ்ப் பாடசாலைகள் போராட்டக்குழுக்களின் பின்னணியில் நடைபெற ஆரம்பித்தன. ஆனாலும் பல நாடுகளில் இந்த கல்வி கற்பிக்கும்; நிறுவனங்கள் தொடந்து தனியார் நிறுவனங்களாக இயங்கி வந்தன. இதன் அடுத்த கட்டமாக போராட்டகுழுக்களின் பின்னணியில் நடைபெற்ற பாடசாலைகள் பெரிய ஒரு அமைப்பின் கீழ் இயங்க ஆரம்பித்தது. அனைத்து நாடுகளிலும் ஒரே பாடத்திட்டம்இ ஒரே நேரத்தில் பரீட்சைகள்இ ஒரே கேள்வித்தாள்கள் என அவை விரிவாகத் தொடங்கின.
இந்த பொதுப்பாடத்திட்டத்துடம்; இலங்கையின் வடஇ கிழக்குப் பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த அதே வேளை இலங்கை மற்றும் நாடுகளின் அரச பாடத்திட்டத்தில் புகுத்தப்படாத மொழிச்சீர்த்திருத்தம் இந்த கல்வித் திட்டத்தில் அறிமுகமாகிக் கொண்டு இருந்தது. உதாரணமாக பாண் செய்யும் இடங்களுக்கு பேக்கரி என்ற சொல்லையே தமிழ்ச் சொல்லாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் வட கிழக்குப் பிரதேசத்தில் அது ”வெதுப்பகம்” என்றே அழைக்கப்பட வேண்டும் என்று கட்டாயமாக கடைகளின் பெயர்ப் பலகைகள் மாற்றப்பட்ட பொழுது இந்த மாற்றம் பாடசாலைப் புத்தகங்களிலும் இடம் பெறத் தொடங்கின. இவ்வாறு ஐஸ்கிறீம் என்பது குளிர்களியாகவும்இ துவிச்சக்கரவண்டி என்பது ஈருளியாகவும் பல மாற்றங்கள் பெறத் தொடங்கியது. இந்த மாற்றங்களை அதிக பெற்றார்கள் வரவேற்காவிடினும் பிள்ளைகளுக்கு தமிழ்க் கல்வி வரட்டும் என்று அதனை அனுமதியாது அனுமதித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் ஆயுதங்கள் மொளனமாகி விட்ட நிலையில் பல வெதுப்பகங்களின் பெயர்ப்பலகைகள் இலங்கையில் மீண்டும் பேக்கரிகளாக பெயர்மாற்றம் கண்டுள்ள நிலையில் புலம்பெயர் நாட்டு பாடத்திட்டங்களில் எந்த மாற்றமும் இல்லாது தொடர்கிறது. இதன் எதிர்காலம் பற்றி எதிர்காலமே சிந்திக்க வேண்டும்.
ஆனாலும் இடம்பெயர்ந்து வந்த மக்களின் பிள்ளளைகளைவிட புலம் பெயர்ந்து வந்த மக்களின் பிள்ளைகளின் தமிழ்ப்பாண்டித்தியம் எத்தனையோ மடங்கு பெரிதாக உள்ளது என்பது கண்கூடு.
தமிழ்க் கல்வியில் புராண இதிகாசங்கள்
தமிழ்க் கல்வியின் அத்திவாரம் என்றுமே எமது புராண இதிகாசங்களினாலும் கூத்து மரபுகளாளினாலும்; நீதி நூல்களினாலும் கட்டி எழுப்பப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய கல்வித் திட்டத்தில் அதற்குரிய இடம் மிகவும் குறைவாக அல்லது முன்னிலைப்படுத்தப்படாத நிலையில் இருப்பது மிகவும் வேதனைக்குரிய நிலையாகும். அன்றாட வாழ்வில் நாம் பாவிக்கும் பல இதிகாசக் கதைகள் எம் அடுத்த சந்ததிக்கு தெரியாமல் போய் விட்ட நிலைக்கு இந்தப் பாடத்திட்டங்கள் அதற்கு முன்னுரிமை வழங்காமையே என்ற கசப்பான நெல்லிக் கனியை உண்டே ஆக வேண்டும்.
பிறநாடுகளில் தாய்மொழிக்கல்விக்குரிய கோட்பாடுகள்
புலம் பெயர்ந்த நாடுகளில் வௌ;வேறு காலகட்டங்களில் அந்த அந்த நாட்டு அரசியலுக்கு ஏற்ப தாய்மொழிக்கல்லி பற்றிய வௌ;வேறு கோட்பாடுகள் இருந்து வந்தன. ஒருக்கால் தாய்மொழியில் பிள்ளைகள் கவனம் செலுத்தினால் பிள்ளைகள் தாம் வாழ வந்த நாட்டு மொழியில் திறமையில்லாமல் போய்விடுவார்கள் என்று ஒரு கொள்ளையும்இ தாய் மொழியில் சிறப்பாக விளங்கும் பிள்ளைகளே பிற மொழியில் சிறப்பாக விளங்குவார்கள் என்று கொள்ளையும் இருந்து வந்தது. அதற்கு ஏற்றமாதிரி அரச மானியங்குள் வழங்கப்பட்டன அல்லது நிறுத்தப்பட்டன.
இன்று நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல அரசநிறுவனங்கள் இரண்டாம் மொழிக்குரிய மானியத்தை குறைத்துக் கொண்டே வருகின்றன. ஆனால் பெற்றார்களின் ஆதராவாலும் உதவியாலும் தமிழ்கல்வி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டே வருகின்றது.
தாய்மொழிக்கல்வியும் உயர்கல்வியும்
புலம்பெயர்நாடுகளில் இந்த தாய்மொழிக்கல்விகளில் பெற்றோர்களும் பிள்ளைகளும் காட்டும் ஆர்வம் பொதுவாக அவர்கள் பிள்ளைகள் உயர்தர வுகுப்பை எட்டும் வரையில் மட்டுமே தொடர்வது மன வேதனைக்குரி நிலையாகும். உயர்கல்வி கற்க ஆரம்பிக்கும் பொழுது தமக்கு மற்றைய பாடங்களுக்கு ஒதுக்கும் நேரத்தை இதற்கு ஒதுக்க முடியாது இருக்கின்து என்பதே அவர்கள் சொல்லும் காரணமாகும். ஆனால் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உயர்தரத்தில் தமிழ்கல்வியில் பெறும் பெறுபேற்றை பல்கலைக்கழக புகுமுக அனுமதிக்கு பாவிக்க முடியும் என்ற நிலை இருக்கும் பொழுது அங்கு அதனை கற்கும் ஆர்வம் மிக மேலிடுகிறது.
மொத்தத்தில் அரசியில் மாற்றங்கள் அல்லது ஆதரவு அல்லது எதிர்ப்பு புலம் பெயர்ந்த நாடுகளில் மெல்லத் தமிழை இனி வாழ வைக்கும் அல்லது மெல்லத் தமிழை இனிச் சாக வைக்கும்.