யாராவது என் நண்பனுக்கு உதவுங்களேன்!
“கற்புடைய முகநூல் காதலி வேண்டுமாம்!
பின்பு அவளையே திருமணம் செய்ய வேண்டுமாம்”
ஜமதக்கனி என்று மாமுனி இருந்தார். அவரது மனைவி சிறந்த பதிவிரதை.
தினமும் தண்ணீர் கொண்டுவர ஆற்றுக்கு போவாள்.
தண்ணீர் கொண்டு வர குடம் கொண்டு போகமாட்டாள். ஆற்று மணலையே குடமாக செய்து, அதில் தண்ணீர் கொண்டு வருவாள்.
ஒரு நாள், தண்ணீர் எடுக்க ஆற்றுக்கு போனபோது, கந்தர்வன் ஆகாயத்தில் இரதத்தில் அந்த வழியாக போய் கொண்டிருந்தான்.
அவனது உருவம் ஆற்றுத் தண்ணீரில் தெரிந்தது.
என்ன அழகாக இருக்கிறான்? என்று மேலே போய் கொண்டிருந்த கந்தவர்னை பார்த்தாள்.
எப்போதும் போல தண்ணீர் எடுக்க மணலை குடமாக்க முயன்றபோது, மணல் குடமாக மாறவில்லை.
தண்ணீர் எடுக்காமல் வீட்டிற்கே திரும்பி வந்தாள்.
ஏன் தண்ணீர் எடுக்கவில்லை? என்று முனிவர் கேட்க,
அதற்கு அவரது மனைவி மணல் குடமாக மாறவில்லை என்று பதிலளித்தாள்.
முனிவர் தனது ஞானத்திருஷ்டியால் நடந்ததை தெரிந்து கொண்டார்.நீ மனதளவில் கற்பை இழந்துவிட்டாய்! உன் கற்பு போய்விட்டது.
என்னோடு வாழும் தகுதியை இழந்துவிட்டாய்! என்று சொன்னதோடு, தனது மகன் பரசுராமனை அழைத்து, உன் தாய் கற்பை இழந்துவிட்டால், அவளது தலையை வெட்டு, அவளை உயிரோடு விடக் கூடாது என்று உத்தரவிட்டார்.
பரசுராமனும் தன் தாயின் தலையை வெட்டினான்.
பின் தன் தந்தையிடமே வரம் பெற்று தாயை மீட்டுவிட்டான்.
இது புராண கதை. இதற்கு மேல் நமக்கு தேவையில்லை.
இந்த கதையை நாம் ஏன் எழுதுகிறோம் என்றால்…இன்று பத்திரிகைகளை பார்க்கும் போது பக்கத்துக்குப் பக்கம் கற்பழிப்பு என்ற செய்தியே காணப்படுகிறது.
விபச்சாரியும் தன் வேண்டாதவன் மேல் கற்பழிப்பு புகார் கொடுக்கிறாள். அதையும் பத்திரிகைகள் செய்திகளாக வெளியிடுகின்றன.
ஒரு பெண் ஒருஆணை மனதார விரும்புகிறாள், பழகுகிறாள். கற்பை பறிகொடுக்கிறாள்.
ஆசை அறுபதுநாள், மோகம் முப்பது நாள் என்பது போல, மோகம் தீர்ந்ததும் அந்தப் பெண் புகார் கொடுக்கிறாள், இன்னார் என்னை கற்பழித்து விட்டார் என்று. அதுவும் கற்பழிப்பு செய்தியாக வருகிறது.
ஒரு பெண் மனதாலும் உடலாலும் பிற ஆடவனை தீண்டாமல் இருந்தால் அது கற்பு என்று அன்று கருதப்பட்டது.
இன்று மனதால் ஆயிரம் பேரை நினைத்தாலும், ஒரு ஆடவனோடு வாழ்ந்தால், அவளே கற்புக்கரசி.
வருங்காலத்தில் திருமணத்திற்கு முன்பு பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்தாலும் திருமணத்திற்கு பின்பு அந்த ஒருவனோடு வாழ்ந்தால் அவளே கற்புக்கரசி. இதுவே கற்பின் நிலை. மூன்று காலத்திற்கும் இது பொருந்தும்.
இது ஒரு பத்திரிகைச் செய்தி.
இனி என் நண்பனின் விடயத்துக்கு வருவோம்!
இன்றைய முகநூல் உலகில் கற்புடைய ஒரு பெண்ணைத் தேடிக் கொண்டு இருக்கின்றேன் என ஒரு நண்பன் சொன்னான். அவனுடைய முகநூல் தோழிகளில் 90 சதவீதம் திருமணமானவர்களாகவே இருந்தார்கள். அடுத்த பத்து வீதமும் பெண்கள் அவதாரம் எடுத்த ஆண் குமரிகளாய் இருந்தார்கள்? அவர்களில் அதிகமானவர்களுடன் அவன் எல்லை கடந்த சம்பாசணைகளை தினமும் நடாத்திக் கொண்டு இருந்தான்.
இந்த இலட்சணத்தில் எப்படி அவனுக்கு நான் கற்புடைய ஒரு முகநூல் தோழியை நான் தேடுவேன்?
பேசிப் பழகி பின் திருமணம் செய்ய வேண்டுமாம்!
திருமண விளம்பரங்களில் கூட திருமணம் ஆகாத இளைஞனுக்கு என்று விளம்பரம் பார்த்திருக்கின்றோமே தவிர கற்புடைய ஆணுக்கு ஒரு கற்புடைய பெண் வேண்டும் என இடுதல் இடுவதில்லையே?
வாழ்வில் கிடைக்காத ஒன்றை… கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில்… கானல்நீர்ப் பரப்பில் மாரீசமான் தேடல் வேட்டையில் இறங்கி இருக்கும் என் சக முகநூல் தோழர் தோழிகளே எப்படி அவனுக்கு நான் உதவமுடியும்?
உங்களால் முடிந்தால் சொல்லுங்கள்!