ஜேர்மனிய கரப்பான் பூச்சிகள் – சிறுகதை

By | 17. marts 2014

இது சக மனிதர்களைப் பற்றிய கதையே அல்ல. கரப்பான்களையும் என்னையையும் பற்றிய கதை. கரப்பான் என்ற பெயரைக் கேட்டாலோ அல்லது பார்த்தாலே அருவருப்புக் கொள்ளும் யாரும் தயவு செய்து இதனைப் படிக்க வேண்டாம். காரணம் இதனைப் படிக்க இருக்கும் எவரும் ஒரு நாள் நித்திரையைத் தொலைக்கப் போகின்றார்கள் என்பது உறுதி. ஏற்கனவே கரப்பான்கள் மீது அருவருப்பு உடையவர்கள் எதற்காக ஒருநாள் நித்திரையை வேறு தொலைக்க வேண்டும்:?

நான் எனது மனைவி, இரண்டு மகள்களுடன் வசிப்பது டென்மார்க்கில். உலக அளவில் பார்க்கும் பொழுது மனிதாபினத்தை பேணுவதிலும், சமூக உதவிகளை வழங்குவதிலும், மனவிரக்தியால் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையிலும்  முன்னிலையில் நிற்கும் ஒரு நாடு இது. மற்றும்படி வாழ்க்கைப் போராட்டம் என்பது இங்கு விதிவிலக்கல்ல. இலங்கையில் போராட்டங்கள் இரு இனங்களுக்கிடையில். இங்குள்ள போராட்டங்கள் நான்கு சுவர்களுக்குள்ளே. இதைவிட பெரிதாகச் சொல்லவோ பெருமைப்படவோ இது ஒன்றும் சொர்க்கபூமி அல்ல.

இனி ஜேர்மன் கரப்பான்களிடம் செல்வோம். இதனை டெனிஸ் மொழியில் ருஸ்க்க கக்கலாக்கள் என்றுதான் சொல்வார்கள். நான்தான் இலங்கை இந்திய மற்றைய தமிழ் வாசகர்களுக்காக அதனை தமிழ்ப்படுத்தியுள்ளேன். இவை ஜேர்மனியில் இருந்து வந்தவையா அப்படியா இப்படியா என பலபேரிடம் விசாரித்துப் பார்த்தேன். ஆனால் சரியான பதில் யாரிடமும் கிடைக்கவில்லை முள்ளிவாய்க்காய்கால் இறுதிநாள் யுத்தம் போல. அதன் பெயர் மட்டும் ஜேர்மனிய கரப்பான்கள் என இங்கு வழங்கப்படுகிறது. அந்த பெயரின் நதிமூலம் ரி~pமூலம் கூட இந்தக் கதைக்கு அவசியமில்லை.

இது தோற்றத்தில் இலங்கை இந்தியாவில் மலசல கூடங்களிலும், பழைய மரப்பெட்டிகளுக்குள்ளும், பெரிய பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடங்களிலும் ஒடித்திரியும் கரப்பான்கள் போன்றவை. ஆனால் நிறத்தில் கருமையும் தோலில் தடிப்பும் குறைந்து மெல்லிய மண்ணிறமாயும் அளவில் மிகச் சிறிதாயும் இருக்கும். இதில் ஒரு ஐம்பதைப்பிடித்து அடுக்கிப் பார்த்தால் உங்களுக்கு தெரிந்த கரப்பானின் வடிவில் வரும். அவ்வளவு சின்னது. ஆனால் அருவருப்பு என்பது ஐம்பது மடங்காகத்தான் இருக்கும். 

இலங்கையில் உள்ளவரை கரப்பான்களைப் பற்றி நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவைகளுடன் சேர்ந்தது தான் எங்கள் வாழ்வு என எடுத்துக் கொண்டு அந்த வாழ்வுக்கு இசைவாக்கப்பட்டிருந்தேன். கதிரை இடுக்கில் இருக்கும் மூட்டைப் பூச்சிஅதைப் பிடித்து நசுக்கும் பொழுது எழும் துர்நாற்றம்;… காலில் அல்லது சைக்கிள் ரையரில் நசியும் அட்டைகள்தங்கை கூட்டிக் கழுவி விட்ட நடுவீட்டிற்குள் ஓடி வந்து பீச்சி விட்டு ஓடும் கோழிகள்மரநிழலில் உள்ள தேனீர் கடைகளில் நின்று தேனீர் குடித்துக் கொண்டு இருக்கும் பொழுது காகங்கள் சேட்டின் மீது போடும் எச்சங்கள் எல்லாத்துடனும் தானே இருபத்தைந்து வருடத்துக்கு முன் வாழ்ந்திருந்தோம்.

ஏன் அதிகம் பேசுவான்?; பேன்கள்;??. இப்பொழுதும் ஞாபகம் இருக்கின்றது. பின்னேரத்தில் நாங்கள் விளையாடிக் கொண்டு இருக்கும் பொழுது எங்கள் அம்மா, சின்னம்மா, சின்ன மாமி, பெரியமாமி எல்லோரும் ஆளுக்காள் பேன் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். போதாததிற்கு எங்களையும் கூப்பிட்டு இருத்தி வைத்துப் பார்த்து விட்டு அனுப்புவார்கள். அங்கு அதிகமான ஆண்களுக்கு பேன் பிடிப்பதே திருமணத்திற்க்கு பின்பு தான். இங்கு டென்மார்க்கில் பாலர் பாடசாலையில் என்றாலும் சரி, பள்ளிக்கூடத்தில் என்றாலும் சரி ஒரு பிள்ளைக்கு பேன் வந்தால் அது முற்றான நீங்கும் வரை அங்கு போக முடியாது. அதற்குரிய மருந்துகளின் விலை நினைத்துப் பார்க்க முடியாதவை. ரீ. வி.யில் போட்டே காட்டுவார்கள் எப்படி பேன்சீப்பால் தலை வாருவது என்று. நான் உதட்டினுள் புன்னகைத்தபடி சென்று கொண்டிருப்பேன்.

இந்த கரப்பான்கள் எப்படி மற்றவர்களை குறிப்பாக வெளிநாட்டவர்களை எப்படி அருவருப்புக் கொள்ள வைக்கின்றது என கண்டது கனடாவில் தான். 

அப்பொழுது எனக்கு இருபத்தியொரு வயது. நானும் எனது நண்பனும் கடற்கப்பலில் வேலைசெய்திருந்த காலம். ஜப்பானில் இருந்து கிட்டத்தட்ட பதினான்கு நாட்கள் பிரயாணம் செய்து கனடாவில் உள்ள வன்கூவர். பி. சி. க்கு வந்திருந்தோம்.

இந்தக் கடல்காற்றில் காயும் எம் சக மாலுமிகளுக்கு கரைவந்ததும் சொர்க்கம் தான். காந்தி இங்கிலாந்திற்கு செல்லும் போது பெற்றோருக்கு செய்து கொடுத்த சத்தியங்கள் போல நானும் பல சத்தியஙஇகளை பல பேருக்கு செய்து வந்ததால் டர்பானிலும், மெல்பேர்னிலும், டோக்கியோவிலும், ; என் கற்புக் காப்பாற்றுப்பட்டு வந்தது. இதற்கு மேல் அந்தப் பகுதிக்குள் போகவிரும்பவில்லை.

வன்கூவரில் எனது நண்பரின் உறவினரைச் சந்தித்தோம். அவர் பி.எச்.டி. முடித்து ஓர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். இள வயது வேறு. ஆனாலும் அதிகம் படித்தவர்கள்; சிலருக்கு இருக்கும் சில கிறுக்குத்தனங்கள் சில அவருக்கும் இருந்தது போல எனக்குப்பட்டது. ஆனாலும் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு பின் எனக்கும் எனது நண்பருக்கும் தமிழில் கதைக்கவும் மாலை நேரங்களில் வீட்டை கூட்டிச் சென்று சோறும் பருப்புக் கறியும் தரவும் ஒருவர் கிடைத்ததை இட்டு மகிழ்ச்சியே.

ஒரு நாள் மாலை எங்களை கனடாவின் ஒரு இடத்திற்கு கூட்டிச் செல்லப்போவதாய் சொல்லிருந்தார். எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அவ்வாறே அடுத்த நாள் மாலை கப்பலடிக்கு வந்து அங்கு எங்களுடன் கிறீக் உணவும் (அன்று மாட்டின் வாலில் செய்த சூப் என நினைக்கின்றேன்)  சீனி போடாத கடும் கோப்பியும் அருந்தி விட்டு தன்னுடன் கூட்டிச் சென்றார். 

அது மேடையில் நடனம் நடைபெறும்; மண்டபம்;. வட்ட வடிவிலான மேடை. அதனைச் சுற்றி பார்வையாளர்கள் பலர் குவிந்திருந்தார்கள் பொதுவாக அதிகம் பேர் தம்பதிகளாயும் வந்திருந்தார்கள். நாங்களும் போய் இரண்டாவதோ அல்லது மூன்றவது வரிசையில் உட்கார்ந்திருந்தோம்.

நடனம் ஆரம்பிக்க மண்டபத்தின் விளக்குகள் அணைய மேடையின் விளக்குகள் பிரகாசமாகத் தொடங்கியது. தம் கணவன்மாருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த சில பெண்கள் தனித் தனியாக மேடையில் தோன்றத் தொடங்கினார்கள். அவர்களின் ஆடைகள் மெல்லியதாயும் கொஞ்சம் கவர்ச்சியாயும் இருந்தது.

அவர்கள் நல்ல குடும்ப பெண்கள். இது அவர்களின் தொழில் மட்டுமே. நடனம் முடிய கணவன்மாருடன் வீட்டிற்கு போய்விடுவார்கள்பி.எச்.டி. சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு என்னவோ அன்று பி.எச:;.டி.ஐ பிடிக்கவில்லை. அவர்கள் ஆடியபடியே தங்கள் ஒவ்வோர் ஆடையையும் மெதுமெதுவாக கழற்றத் தொடங்கி உள்ளாடைகளுடன் மட்டும் ஆடும் நிலைக்கு வந்திருந்தார்கள். உண்மையில் அது என்னை பெரிதாக கவர்ந்திருக்கவில்லை. அதனை விட சுஜாத்தாவின் கதைகளுக்கு ஜெயராஜ் வரையும் ஓவியங்களில் அதிக கவர்ச்சி இருப்பதாக நினைத்துக் கொள்வேன். அந்த நினைப்பு மறைய முதல் அவள் தனது மார்புக்கச்சையைக் கழற்றி வீசினாள். மண்டபத்தில் கரகோசம் கிளர்ந்தது. பி.எச்.டியை முறைத்துப் பார்த்தேன். அவர் என்னைப் பார்க்கவில்லை. சிறிது நேரம் தான். . . கடைசியாக உடலில் ஒட்டியிருந்ததும் மறைந்தது. எனக்கு வாந்தி வருமாப் போல இருக்க எழுந்து ரொயிலற் பக்கம் சென்றேன்.

ஐ வில் கிவ் தவுசண்ட் பக்ஸ் ரு கில் ஈச் ஒவ் தெம்” (ஒவ்வொருத்தரையும் கொல்லுபவருக்கு நான் ஆயிரம் டாலர்கள் கொடுப்பேன்) என அந்த மண்டபத்தை நடாத்துபவன் ரொயிலற்றுள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தான்.

அந்தப் பெண்களை வைத்துத்தானே இவன் பிழைப்பு நடாத்துகின்றான். பின்பு ஏன் அவர்களைக் கொள்ள வேண்டும் என புரியாமல் பார்த்தேன். அவனின் கால் இடைகளுக்கிடையால் இரண்டொரு பெரிய கரப்பான் பூச்சிகள் ஓடிக்கொண்டு இருந்தன. அவன் துரத்திக் கொண்டு சென்று கொண்டு இருந்தான்.

பிறந்த மேனியுடன் மேடையில் ஆடும் பெண்கள் எனக்கு அருவருப்பு. அவனுக்கோ கரப்பான் பூச்சிகள். எனது நண்பனும் அந்த பி.எச்.டி.யும் மிக இயல்பாக இருந்து ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். எனக்குத்தான் பக்குவம் வரவில்லையேர் என எண்ணிக் கொண்டேன். ஆனால் ஒரு கரப்பான் பூச்சியைக் கண்டு இந்தளவு தூரம் ஆக்ரோசித்த ஒரு மனிதனை அன்றுதான் கண்டேன்.

ஆனால் அவனது ஆக்ரோசத்தில் இருந்த நியாயத்தை முப்;பது வருடங்களுக்கு பிறகு இப்போது தான் நான் உணர்கின்றேன்.  

டென்டார்க்கில் செஞ்சிலுவைச் சங்கத்தின் கட்டடங்களில் அகதி வாழ்வை ஆரம்பித்த அதிகமானோரின் முதல் கனவு யாதெனில் டென்மார்காரர்கள் அரை அவையலும் கால் அவியலும் ஆக ஆக்கிக் கொடுப்பதை உண்ணாமல் தாமே எண்ணையில் வதக்கி உப்பும் தூளும் தூக்காலாகப் போட்டு சமைத்துச்சாப்பிட்டக் கூடிய ஒரு தனியிடத்துக்கு போகவேண்டும் என்பது தான்.

அவ்வாறு போவதற்று டென்மார்க் என்ன தனித்தனி வீடுகளா கட்டி வைத்திருக்கு? எனவே 2-3 குடும்பங்களை அல்லது தனியாக வந்தவர்களை ஒரே வீடுகளில் இருத்தினார்கள். கிடுகுவேலிக் கலாச்சாரத்துள் வளர்ந்த எங்களால் எப்படி ஒரே குசினியில் நின்று சமைக்க முடியும். சிலருக்கு வியாழக்கிழமை பாவித்த கரண்டி வெள்ளி அன்று கையில் படக்கூடாது. சிலருக்கு வெள்ளி இரவு தான் தண்ணியும் தொட்டக் கொள்ள சைற் டிஸ்யும் கேட்கும். புpன்பென்ன? வெள்ளி இரவு தொடங்கும் சண்டை திங்கள் காலை அகதிநிலைய வாசலில் போய் நிற்கும். இவ்வாறாக அசைந்து அசைந்து அனேகமானோருக்கு வாடகைக்கு ஒரு பிளாட் அல்லது வீடு கிடைத்தது.

அடுத்த கனவுகள் மெதுமெதுவாக விரியத் தொடங்கியது. பாவித்த ஒரு பழைய கார். பின் ஒரு புதுக் கார். பின் பக்கத்து வீட்டானின் காரை விட விலை கூடிய கார். இவ்வாறு இவ்வாறு வளர்ந்து இறுதியில் வீடு வேண்டுவதில் தொடங்கி பின் காணி வேண்டி அதில் புது வீடு கட்டும் கனவு. அதுவும் நிறைவேறியது. கடைசியாக நடந்த நிகழ்ச்சியின் றைக்கோட்டை யாரும் இருவரை உடைக்கவில்லை. அதுதான் எங்கள் தங்கமணி அக்கா தனது வீட்டிற்கு வீட்டிற்கு அத்திவாரம் போடுவதற்கு நோர்வேயில்; இருந்து ஒரு ஐயரை அழைத்து வந்தது தான். என்னத்தைதான் எங்கள் குறோன்களால் செய்ய முடியாது? அத்தனையையும் செய்தோம்.

நாமும் எங்கள் தகுதிக்கு தக்கவாறு ஐந்து வருடத்திற்கு முன் பத்துவருட ஒரு பழைய வீட்டை இருபது வருடக் கடனில் வேண்டி குடும்பமாக குடிபுகுந்தோம்.

மிக நல்ல காற்றோட்டமான வெளிச்சமான வீடு. முதலில் இருந்த டெனிஸ்காரர் நிச்சயமாக நல்லாய் அந்த வீட்டைக் கவனித்துப் பேணி இருக்க வேண்டும். மேலாக அழகிய பூந்தோட்டம். வருடத்தின் வௌ;வேறு காலங்களில் பூக்கும் பூக்களை வேறு நட்டு வைத்திருந்தார்கள். பனி பெய்யும் மார்கழி-தை-மாசி மாதத்தைத் தவிர ஏதோ ஒரு பூ வீட்டின் ஏதோ ஒரு மூலையில் பூத்தபடிதான் இருக்கும்.

டேனிஸ்காரர் தங்கள் சனி அல்லது ஞாயிறை முழுக்க முழுக்க வீட்டுப் பராமரிப்புக்கு என்று ஒதுக்கி வைப்பது போல எங்கள் வீட்டில் செய்யாவிட்டாலும் மனைவிக்காரி வெள்ளிக் கிழமைகளில் வீட்டை வடிவாக கூட்டிப் பெருக்கி கவனித்தே வந்தாள். நான் புல்லை வெட்டுவதிலும் வேலையை சரிப்பண்ணுவதிலும், வீட்டின் குப்பைகளை எட்டு கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள குப்பைகள் போடும் இடங்களுக்கு கொண்டு சென்று கொட்டும் இத்தியாதி வேலைகளில் ஈடுபட்டிருப்பேன். ஏதாவது பணவருவானமுள்ள வேலைகள் குறிப்பாக மொழி பெயர்பு வேலைகள் வந்தால் ஓடிவிடுவேன். வீட்டின் வேலைகள் தங்கி விடும். மனைவி எப்பவும் நேர்ந்து கொண்டு இருப்பாள் சனி, ஞாயிறுகளில் ஊரில் உள்ள புருசன் பெண்டாட்டிகள் சண்டை பிடித்துக் கொண்டு பொலிஸ் ஸ்ரேசனுக்கு போகக்கூடாது என்று. அல்லது ஏதோ ஒரு சீட்டுக்காரனின் சீட்டு முறிந்து கை கலப்பு வந்துவிடக்கூடாது என்று. இப்படி இத்தியாதி இத்தியாதி வேலைகள் வந்த பொழுதும் எங்கள் வீடு அழகாய்த்தான் இருந்தது அழையாத ஒரு விருந்தாளி ஒருவர் எங்கள் வீட்டுக்குள் வரும் வரை.

ஆம் ஒரு நாள் இரவு அல்பிரட் கிச்சொக்கின் பேர்ட்ஸ் படம் ரி. வி.யில் போய்க் கொண்டு இருந்தது. மிக இளவயதில் பார்த்த படம். ஒரு கிராமத்தினுள் வரும் பறவைக் கூட்டமொன்று அந்த ஊரின் மக்களையே கொத்தி கொத்தியே அவர்களையே ஊரைவிட்டுத் துரத்தும் பயங்கரமும் வேதனையும் மிக்க படம். எனது மகள்மாருக்கு அது நல்ல படம் எனக்கூறி என்னுடனேயே அவர்களை வைத்து பார்த்துக் கொண்டு இருந்தோம். அது முடிய கிட்டத்தட்ட இரவு மணி ஒரு மணியையாய் போய் விட்டது. அவர்களுக்கு கற்பனை தொடங்கி விட்டது. அந்த இரவில் அப்படி இரண்டு பறவைகள் வந்து யன்னலைக் கொத்த தொடங்கினால் என்ன செய்வது என்று.

ஒருவள் மற்றவளை ஆசுவாசப்படுத்திக் கொண்டு படுக்கையறைப் போக நான் குசினியுள் தண்ணீர் குடிக்கப் போனோன்.

குசினி லைற்றைப் போட எனக்கு திக்என்றது.

சின்ன ஒரு கரப்பான் பூச்சி ஒன்று குடுகுடு என்று ஓடியது.

ஓடிப்போய் அடிக்கப் போக முதல் அது மறைந்து விட்டுது.

எனக்கு அப்படி ஒரு ஜந்து வீட்டிற்குள் வந்தது நல்ல சகுனமாகப்படவில்லை.

அது கரப்பான் போலவும் இருந்தது. கரப்பான் இல்லாது போலவும் இருந்தது.

நேராய் கம்பியூட்டரின முன் போய் இருந்து அவை பற்றிய தகவல்களை சேகரிகத் தொடங்கினேன்.

எனது ஊகம் சரியாகத்தான் இருந்தது. அது கரப்பானின் இனம் தான். ஆனால் சிறியது. கரப்பானை விட ஒன்று பத்தாகவும் பத்து நூறாகவும் நுஸறு ஆயிரமாகமும் எங்கள் நாட்டில் உலவும் வதந்திகள் பெருகும் என இருந்தது. ஆவற்றின் பெயர் ருஸ்க்க கக்கலாக்களஇ என இருந்த்து – ஜேர்மன் கரப்பான் பூச்சிகள்.

எனக்குப் பயம் வந்தது – கிட் கொச்சின் பறவைகள் போல இவையும் எங்களை வீட்டை விட்டுத் துரத்தப் போகின்றனவா என்று.

அடுத்தநாள் இரவுவரை காத்திருந்தேன்.  இருட்டினுள்தான் அவை உலாவரும் என வாசித்திருந்ததால் அனைவரும் வேளையோடு உணவு அருந்திவிட்டு குசினி விளக்குகளை அணதை;து விட்டு ஒரிரண்டு மணித்தியாலம் கோலில் உலககிண்ணத்திற்கான உதைபந்தாட்டத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தோம். ஏதோ ஒரு ஆபிரிக்க நாட்டிடம் ஐரோப்பியா தோற்றுக் கொண்டு இருந்தது. அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாமல் என் மனம் எல்லாம் ஜேர்மனிய கரப்பான்களிடம் தான்.

குசினியுள் சென்று திடீரென விளக்குகளைப் போட்டேன்.

இன்று இருவர் ஒருவர் ஒருவர் பின்னால் ஓடிக் கொண்டு இருந்தார்கள். ஓடிச் சென்று ஒன்றை காலால் மிதித்தேன். அது நிலத்துடன் படிந்து விட்டது. மற்றையது மறைந்து விட்டது.

இனியும் பொறுக்க முடியாது என்று விட்டு அடுத்தநாள் சுகாதார அமைச்சுடன் தொடர்பு கொண்டேன்.

இறந்திருந்த ஒன்றை சின்ன பிளாஸ்ரிக் பையினுள் போட்டு அனுப்பச் சொன்னார்கள்.

அனுப்பினேன்.

இது ஜேர்மனிய கரப்பான்கள் என்றும் பொருந்தொனையாக உணவுப் பொருட்களை வேண்டும் பொழுது களஞ்சியச் சாக்கில் இருந்து குறிப்பாக ஆசிய ஆபிரிக்க நாட்டில் இருந்து வந்திருக்கலாம் என அபிப்பிராயப் பட்டார்கள். அதனை ஒழிப்பதற்கு பல நிறுவனங்கள் இருக்குதென்றும் அவற்றின் விலாசப்பட்டியல்களையும் அனுப்பி வைத்தார்கள்.

மாதமொன்றிற்று ஆயிரம் குறோன்கள் (இருபதினாயிரம் ரூபாய்) விகிதம் 12 தடவை வந்து அவர்கள் மருந்து விசிறினால் அதனை அழித்துவிடுலாம் என ஆலோசனை கூறினார்கள். நான் மனைவியைப் பார்த்தேன். வழமைபோல அவள் எதுவும் சொல்வில்லை.

கொஞஆசம் பெருகினால் பார்ப்போம் என ஒரு கிழமை பொறுத்திருந்தேன். ஆனால் அவற்றின் பெருகல் பயம் கொள்ள வைத்தது. இனியும் பொறுப்பது உத்தேசம் இல்லை என்று விட்டு அந்த நிறுவனத்தை அழைத்தேன்.

வந்தார்கள்.

மருந்து விசிறத்தொடங்கினாhகள்;.

ஆனால் இவர்களின் வருகையும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

முற்றாக அழிக்க முடியவில்லை.

இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. மாதம் ஒருதரம் அவர்கள் வீசும் மருந்தால் எப்படி அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்று எனக்குள்ளும் சந்தேகம்.

எனக்கு கோபம் கோபம் ஆன வந்த்து. அவற்றின் மீதும். அந்தக் கம்பனி மீதும். 

இடையில் சம்மர் விடுமுறைக்கு என் தங்கையின் மகள் வந்த போது அவள் அவற்றைக் கண்டு விட்டு அலறிய அலறல் இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கின்றது. இனிமேல் பூச்சி வீட்டை வரமாட்டேன் என்று இப்பொழுதும் தொலைபேசியில் சொல்லிக் கொண்டு இருந்தாள்.

அந்த சம்மர் எல்லோர் மனதிலும் ஒரு காயத்தை ஏற்படுத்திய சம்மர் விடுமுறை. முள்ளிவாய்க்கால் சமர் முடிந்திருந்த நேரம். எல்லோரையும் பெருமௌனம் மூடியிருந்த நேரம். ஆரசியல் மௌனம் சூழ அப்பாவி மக்களின் கதறல்கள் வெளியுலகுக்கு கேட்கத் தொடங்கிய நேரம். ஊர்ஜிதப்படுத்தப்படாத உண்மைகள் வெளிவரத் தொடங்கிய நேரம்.

அதே சம்மர்லீவு காரணமாக மருந்து அடிக்கும் கம்பனிக்காரரும் மூன்று மாத லீவில் சென்றிருந்ததால் இந்த கரப்பானின் தொகையும் எங்கள் குசினியுள் அதிகரிக்க தொடங்கியது. மனைவி எல்லாத்தையும் சமாளித்தாலும் இங்கு பிறந்த மகள்மார் மிகவும் அருவருப்புபட்டார்கள்.

அப்பா வேறு வீடு வேண்டுவோம் என ஆக்கினை கொடுக்க தொடங்கியிருந்தார்கள்.

பொறுங்கள் பொறுங்கள் என்று விட்டு ஒரு நாள் இரவு நன்கு காத்திருந்து விட்டு மெதுவாய் போய் குசினி விளக்கைப் போட்டேன்.

நிலம் முழுக்க சின்னதும் பெரியதாயுமாய் அவற்றின் அளவுகளுக்கு ஏற்ப நிறைந்திருந்தார்கள்.

லைற் வெளிச்சத்திதையும் நான் வந்த அசைவை ஊகித்துக் கொண்டவைகளாக அவை அசைந்தோடத் தொடங்க முதல் இரு கைகளும் அவற்றை அடிக்கத் தொடங்கின.

ஏன்ன பரிதாபம்!

அவைக்கு எங்கு ஓடுகின்றோம் எனத் தெரியவில்லை.

வலது கையில் இருந்து தப்பியவை இடது கைக்குள் போய் இறந்தன.

இடது கைக்குள் இருந்து தப்பியவை வலது கைக்குள் போய் இறந்தன.

இரண்டு கைக்களும் தப்பிய சில ஓடும் திசை அறியாயது மீண்டும் என் கைக்குள் வந்து அடிபட்டு இறந்தன.

திடீரென முள்ளிவாய்க்கால் நினைவு வர எழுந்து போய் கைகளைக் கழுவி விட்டு சோபாவில் போய் அமர்ந்தேன்.

அன்றிரவு நான் நித்திரை கொள்ளவே இல்லை.

 

    

      

 

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

(Spamcheck Enabled)