வன்னி மண்ணை மூன்று குறுநில மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த காலம்.
முல்லை, நெய்தல், மருதம் என இயற்கை மண்ணின் வளத்தைப் பிரித்து வைத்ததையே தம் பிரதேசத்து எல்லையாகக் கொண்டு அவர்கள் ஆண்டு கொண்டிருந்தார்கள்.
குறிஞ்சியும் பாலையும் அங்கிருக்கவில்லை.
முல்லைக்கே உரிய அழகு காடும் காடுசார்ந்த பிரதேசங்களும் என்றாலும் இயற்றைகயுடன் சேர்ந்து கொத்து கொத்தாக மலர்ந்து சிரிக்கும் காட்டுவாசிப் பெண்களும்தான்.
கருகுமணியும் பாசிக்கயிறும் சேர்த்துக் கொண்டு திரியும் இந்த காட்டுவாசிகளின் கூட்டத்தில் செம்பருத்தி கொஞ்சம் வித்தியாசமானவள்.
வயது ஈரெட்டு.
இரண்டு கூரிய விழிகள்.
மிகுந்த துணிச்சல்காரி.
வில் வித்தையில் மிகவும் கெட்டிக்காரி.
மாலைச் சூரியன் மறையத் தொடங்கிய நேரம்.
மந்தார மலர்களின் வாசனை எங்கேயோ இருந்து வந்து கொண்டிருந்தது.
செம்பருத்தி பாலை மரத்தின் உச்சாணிக் கொப்பில் நின்று கொண்டிருந்தாள்.
பாலைப் பழங்களைப் பறித்து தின்றதால் வாயிலும் மேனியிலும் பால் ஒட்டியது போல இருந்தது.
கீழேயோடும் அருவியாற்றில் மரத்தில் குதித்து நீச்சலிடிக்க வேண்டும் என மனம் குறுகுறுத்தது.
தெற்குப் பக்கத்தில் இருந்து குரங்கு கூட்டம் ஒன்று மரங்கள் விட்டு மரங்கள் தாவிக் கொண்டு வருவது தெரிந்தது.
யாரோ அன்னியர்கள் காட்டுக்குள் வருவதற்கான அறிகுறிகள் அவை.
அவள் நின்றிருந்த பாலை மரக் கொப்பிலும் அவை ஒரு தாவுத்தாவி பின் அங்கிருந்து வாகை மரங்களுக்கும் தாவின.
அவள் நின்றிருந்த கிளைகளும் ஒரு முறை தாழ்ந்து எழுந்தன.
இராவணின் புஷ்பக விமானமும் இப்படித்தான் தாழ்ந்து எழுந்திருக்கும் என நினைத்தபடி குரங்குகள் வந்த திசையை நோக்கிப் பார்த்தாள்.
குதிரை ஒன்றின் குளம்படிச் சத்தம் கேட்டது.
இளங்கோவன் தனித்து குதிரையில் வந்து கொண்டு இருந்தான்.
இளம் காளையின் கம்பீரம் குதிரையில் அமர்ந்திருக்கும் பாங்கில் தெரிந்தது.
அவன் கண்களில் தேடல் தெரிந்தது.
’அரசகுமாரனாக இருக்க வேண்டும்…. அல்லது அரண்மனைப் போர் வீரனாக இருக்க வேண்டும்’
செம்பருத்தியின் மனம் சொல்லிக் கொண்டது.
தனித்துக் காட்டுக்குள் வரும் அந்த இளைஞனைச் சீண்டிப் பார்க்க அவள் விருப்பம் கொண்டாள்.
அடுத்த கணம் அவள் கையில் இருந்த வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு அவனது முகத்தை அரும்பிச் சென்று வீரை மரத்தில் குத்தி நின்றது.
இளங்கோவன் திடுக்கிட்டு விட்டான்.
கையில் வாளை உருவிக் கொண்டு அம்பு வந்த திசையை நோக்கிப் பார்த்தான்;.
செம்பருத்தி பாலையின் கிளைகளுள் ஒளிந்து கொண்டாள்.
யாரையும் காணவில்லை.
குதிரையும் தனது வேகத்தைக் குறைத்துக் கொண்டது.
நீண்ட தூரப் பயணமோ… அன்றி கிட்டவாகத் தெரிந்த அருவியாற்றில்; ஓடிக்கொண்டிருக்கும் தெளிந்த நீரோடையோ… குதிரைக்கும் தண்ணீர் விடாய் கண்டது.
உறையினுள் இன்னமும் போடாத வாளுடன் ஆற்றங்கரையில் குதிரையில் இருந்து குதித்து இறங்கினான்.
ஆற்று மண்ணில் வாளைக் குத்திவிட்டு அவனும் குதிரையும் பக்கம் பக்கமாய் நின்று குனிந்து தண்ணீர் அருந்திக் கொண்டு நிற்கும் பொழுது மீண்டும் குறும்பு செய்ய எண்ணினாள்.
ஒரு கணம்தான்.
பாலைமரக் கொப்பில் இருந்து தண்ணீர் பருகிக் கொண்டு இருந்த அவனுக்கு முன்பாக ஒரே குதியலில் குதித்து நீருக்கள் மறைந்து விட்டாள்.
தண்ணீர் பெரும் ஒலியுடன் திடீரென சிதற, குதிரையும் இளங்கோவனும் பயந்தே விட்டார்கள்.
குதிரை கனைத்தபடியே பின் வாங்கியது.
இளங்கோ ஆற்று மண்ணில் குத்தியிருந்த வாளைத் திரும்ப உருவிக் கொண்டான்.
அங்கும் இங்கும் பார்த்தான்.
யாரையும் காணவில்லை.
ஒரு கணம் தான்.
ஆற்றைக் கிழித்துக் கொண்டு அழகிய செம்பருத்தி ஆற்றின் மறுகரையில் இருந்த கற்களிலு; போய் அமர்ந்தாள்.
இளங்கோவனால் நம்ப முடியவில்லை.
இத்தனை நாட்களாக இந்தக் காட்டினுள் ஒரு அழகுப் பதுமையா?
”யார் நீ”
”இந்தக் காட்டின் மல்லிகை. தாங்கள் யாரோ?”
”நீ வாழும் இந்தக் காட்டுக்கும் இதனைச் சுற்றியுள்ள மூன்று குறுநிலங்களுக்கும் மன்னன் – சிற்றரசர்களின் தலைவன்”
மன்னன் என்பது அவளுக்குள் ஒரு மரியாதையை ஏற்படுத்தினாலும், அவனது வயதையும் தோற்றத்தையும் பார்த்த பொழுது அவனுடன் மேலும் மேலும் குறும்பு செய்ய வேண்டும் எனப்பட்டது.
”அதனால்தான் ஒரு பெண்ணின் அம்புக்கும் நீச்சலுக்கும் பயந்தீரோ?”சொல்லிவிட்டு கலகல என்று சிரித்தாள்.
அவளது கண்களுக்குள் தான் சிறைப்பிடிக்கப்பட்டது போல உணர்ந்தான்.
அழகிய கண்கள்.
கறுத்த உருண்டையான கண்கள்.
தன் வாள் வீச்சை விட வேகமாக மற்றவர்களை விழுத்தக் கூடிய அவளின் விழிவீச்சில் மயங்கி நின்றான்.
அடுத்த கணம் நீருக்குள் குதித்து மறைந்தாள்.
இளங்கோவனும் நீரினுள் பாய்ந்தான்.
சுழியோடிப் பார்த்தான்.
அவளைக் காணவில்லை.
மேலே வந்து பார்த்தான் – கற்களின் மீது அவளைக் காணவில்லை.
மீண்டும் சுழியோடிவிட்டு மேலே வந்தான்.
”மன்னர்; இப்போதுதான் நீச்சல் கற்றுக் கொள்ளுகின்றாரோ”
கலகல என மீண்டும் சிரித்தாள்.
இளங்கோவனுக்கு கொஞ்சம் அவமரியாதையாகக் போய்விட்டது.
ஆனால் அடுத்த வார்த்தை பேசவிடாது நீர்த்திவலைகள் கொட்டிக் கொண்டிருக்கும் அவளது கூந்தலும்கன்னங்களும்… படபடவென வெட்டிக் கொண்டு இருக்கும் கண்களும் அவனைக் கிறங்கடித்துக் கொண்டிருந்தன.
மேலாக நனைந்த ஆடையினூடு தெரியும் அவளின் மார்பகங்கள்…
தன்னை இத்தனை துணிவுடன் மடக்கம் மங்கையை அவன் இதுவரை சந்தித்திருக்கவே இல்லை…. அது அந்தப்புரத்தில் என்றாலும் சரி… எதிரிகளின் பாசறைகளில் என்றாலும் சரி… இந்தகு; காட்டுப் பிரதேசத்தில் என்றாலும் சரி…
”இன்று நான் தேடி வந்தவள் இவள்தான்” – மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.
அவள் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
”உன் விழி என்னும் ஏரியினுன் என் மனம் என்னும் மீன் நீந்தியதால் என் நீச்சல் கலையை நான் மறந்து விட்டேன் பெண்ணே”
”மழுப்புகின்றீர்கள் – நீச்சல் பழகும் பொழுது என் போன்ற பெண்களைப் பார்த்துக் கொண்டிருந்திருப்பீர்கள் – கவனம் சிதறியிருக்கும்”
மீண்டும் ’கொல்’லெனச் சிரித்தாள்.
”உன் சிரிப்பால் என்னைக் கொல்லுகின்றாய்”
”நான் என்ன?… உங்கள் மீது போர் தொடுக்கும் அண்டை நாட்டு எதிரிகளா?”
”இல்லைப் பெண்ணே”
”என் பெயர் ’பெண்’ அல்ல – ’செம்பருத்தி’”
”ஆகா… அருமையான பெயர்…”
”மீண்டும் பொய் சொல்லுகின்றீர்கள்”
”இல்லை… உண்மையாகவே சொல்லுகின்றேன் – காட்டு மல்லிகைகள் நடுவிலே ஒரு செம்பருத்தி! – அவற்றின் இதழ்களும் உன் இதழ்கள் போன்று சிவந்து அழகாய் இருக்கின்றன”.
அவளை இப்போது நாணம் கொஞ்சம் கவிழ்த்தது.
நீரின் நடுவே நின்றவன் இப்போ மெதுவாக அவளிருந்த கரையின் பக்கம் நகர்ந்து வந்தான்.
அவளுக்கு இப்பொழுது கொஞ்சம் அச்சம் படர மெதுவாக எழுந்து கொண்டாள்.
”எங்கே போகின்றாய்?”
”நான் வீட்டுக்குப் போக வேண்டும். பாலைப்ழம் பறிக்க வந்து அதிக நேரம் ஆகிவிட்டது. என்னை என் பெற்றோர்கள் தேடுவார்கள்”.
”இன்னும் கொஞ்ச நேரம் இருந்து என்னுடன் அளவளாவிவிட்டுப் போ… உன்னுடன் இருந்து அளவளாவும்பொழுது எனக்கு நேரம் போனதே தெரியவில்லை…. காட்டில் பாதையைத் தவறவிட்ட பதைபதைப்பும் தெரியவில்லை”
”என்ன?.. மன்னர் காட்டில் பாதையைத் தவற விட்டு விட்டாரா?”
“ஆம் பெண்ணே… ஆனால் அதைப்பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை”
செம்பருத்தி நிமிர்ந்து பார்த்தாள்.
“பாதையைத் தவற விட்டபடியால் தானே இப்படி ஒரு அழகான பெண்ணை நான் சந்தித்தேன்”
அது அவளுக்குள் ஒரு கிறக்கத்தைக் கொடுத்தாலும் ஒரு கணப்பொழுத்தில் அவள் விழித்துக் கொண்டாள்.
“மன்னா… உங்களுக்குத் திருமணமாகி விட்டது. கனிமொழி… அமுதினி என்ற இரண்டு இளவரசிகள் நாலு வயதிலும் இரண்டு வயதிலும் இருக்கின்றார்கள். இப்படி ஒரு காட்டுவாசிப் பெண்ணுடன் ஊடலுடன் கதைப்பது தவறில்லையா?”
“தவறுதான் பெண்ணே… ஆனாலும் பட்டத்துக்குரிய இளவரசன் ஒருவன் இனி மகாராணியின் வயிற்றிலு; பிரவேசிக்க முடியாது என்ற கவலைதான் என்னை உன்னிடத்தில் கவர்கிறது”
“என்ன சொலு;லகின்றீர்கள்”
அவள் விழிகள் படபடத்தன.
“;ஆம் பெண்ணே… இனியொருஇளவரசனோ… இளவரசியோ மகாராணியின் வயிற்றிலு; தங்கமாட்டார்கள் என்று அரமணை வைத்தியர்கள் உறுதியாகச் சொலு;லி விட்டார்கள். அதுதான் என் கவலை – பட்டத்துக்குரிய இளவரசன் எனக்குப் பின்பு இல்லையே என்று….”
“அதற்கேன் கவலை?… இளவரசிகளின் கணவனாக வருபவர்கள் இளவரசர்கள் ஆவார்கள் தானே?”
“ஆனால் அவன் எனக்குப் பிறந்தவன் இல்லையே. என் சிம்மானத்தில் வந்து இருப்பவன் என் விந்தில் இருந்து உதித்தவனாய் இருக்க வேண்டும்”
செம்பருத்தி தலையைக் குனிந்து கொண்டாள்.
அவன் தன்னை அண்மிப்பது போல உணர்ந்தான்.
“அவனை நீ எனக்குத் தருவியா?”
மன்னனின் குரல் அவளுக்கு மிக அண்மையாய் அவளின் காதருகே கேட்டது.
மன்னனின் சூடான மூச்சுக் காற்று அவள் மீது பட்டது.
அவள் கொஞ்சம் தடுமாறினாள்.
நிலத்தை நோக்கிய குனிந்த தலையுடன் ஓரடி எடுத்து முன்னே வைத்தாள்.
மன்னனின் வலிந்த கை அவளின் இடுப்பைச் சுற்றி அணைத்தது.
முகத்துக்கு கிட்டவாக முகம்.
”அப்படி என்னைப் பார்க்காதே பெண்ணே”
”நான் தோற்றுவிடுவேன் என பயமாக இருக்கின்றது மன்னா”
”இல்லை… எனக்கொரு இளவரசனைத் தந்து என்னை வெற்றி கொள்ளப் போகின்றாய்”
வார்த்தைகள் மௌனித்தன!
புற்றரை பஞ்சு மெத்தையாகியது.
குளிர்காற்று வீசிக்கொண்டு இருந்தது.
இளம் சந்திரன் மேல் வந்து காட்டுப் பிரதேசத்தை பிரகாசி;க்க வைத்துக் கொண்டிருந்தான்.
செம்பருத்தியை இளங்கோவனும்… இளங்கோவனை செம்பருத்தியையும் வென்று கொண்டு இருந்;தார்கள்… அல்லது இருவருமே மாறி மாறி இருவரிடம் தோற்றுக் கொண்டு இருந்தார்கள்.
இறுதியில் வேட்டைக்கு வந்து வென்றது இளங்கோவன்தான்.
*
பெண் வேட்டை!
மன்னன் இளங்கோவனுக்கு இந்த வேட்டை மிகவும் பிடித்தமானது.
பட்டத்தரசி கோமளவல்லி அழகிலும் பொக்கிஷமாக அரண்மனையில் இருந்தாலும்வேட்டைக்குப் போகின்றேன் என்று இதர வீரர்களுடன் குதிரை மற்றும் பரிவாரங்களுடன் புறப்பட்டு… பின் பாதி வழியில் அவர்களை அனுப்பி விட்டு… தனியே காட்டுக்குள் திரிவது…. காட்டுவாசிப் பெண்களைத் தேடுவது… வழி தெரியாமல் வந்துவிட்வேன் உன அவர்களை நம்ப வைப்பது.. அவர்களின் பெற்றோரின் அனுமதியுடன் அவர்களின் குடில்களுக்குள்…. அல்லது பெற்றோருக்கத் தெரியாது காட்டுப் புதர்களுக்குள்… அருவி ஆற்றங்கரையில் ப+ரண சந்திரன் வெளிச்சத்தில்… எட்டவாக நிற்கும் குதிரையின் கனைப்பில் அவர்களுடன் ஒதுங்கும் இந்தப் பெண்வேட்டை அவனுக்கு மிகவும் பிடித்தது.
”பட்டத்தரசியாக இல்லாவிட்டாலும் உன்னை சிற்றரசியாக ஆக்குவதில் என் மனம் மிகவும் மகிழ்வுறும்” – இளங்கோவனின் இந்த வார்த்தைகளில் பெண்ணின் பேதமை தோற்றுப் போக, பெண்மை சிலிர்த்துக் கொள்ளும்.
அந்தச் சிலிர்ப்பு… விதம் விதமான சிலிர்ர்கள்… அதில் எழும் முனகல்கள்… அவைதான் அவனுக்கு வேண்டியவை.
பட்டத்தரசியும் தானும் கலந்து கொள்ளும் உறவி;ல் இருவருமே அணிந்திருந்த பல கவசங்கள் ஆளை ஆள் தழுவி ஆலிங்கம் செய்வதற்கு தடையாக இருப்பதாக அவன் என்றுமே எண்ணிக் கொள்வான்.
எத்தனை கவசங்கள்?குறுநில மன்னர்களின் மன்னன்…. பிறக்க இருப்பது பட்டத்துக்குரிய இளவரசனோ அல்லது இளவரசியோ என்ற கவலைகள்… வேலைக்காரர்கள்.. காவலாளிகள் பற்றி பட்டத்தரசி படுக்கையில் இருந்தபடி வாசிக்கும் குற்றப்பத்திரிகைகள்… இத்தனையும் தாண்டி அவளை அவன் அணைக்கும் பொழுது ஆங்காங்கு கவச மணிகள் குற்றத்தான் செய்தன.
காட்டுவாசிப் பெண்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இருப்பதில்லை.
எந்தத் தடையும் இல்லை.
பட்டு மெத்தைகள் கொடுக்காத அனைத்தையும் பருத்திக் காடுகள் கொடுத்தன.
பாவம்… பழி … எவை பற்றியும் அவன் கவலைப்படவில்லை.
கொடுத்த விலை… பொன்னும்-மணியும்.- பவள மாலையும்.
காடு பெரியது – அதனுள் இருநு;த சிற்றூர்களும் அதிகம்.
அதனுள் வாழும் காட்டுவாசிப் பெண்களின் எண்ணிக்கையும் அதிகம்.
தேனாலும் தினையாலும் காட்டு கோழிகளின் முட்டைகளாலும் வளர்ந்து சூரிய உதயத்திற்கு முன்னே எழுந்து கையால் இடித்த நல்ல எள் எண்ணையால் உச்சிமுதல் உள்ளங்கால்வரை தடவி… பகல் முழுக்கு சூரிய ஒளியில் காய்ந்து… சுத்தமான காற்றைச் சுவாசித்து… அந்திப் பொழுதில் ஆற்றில் நீச்சலதெ;த அந்த ஆரோக்கியமான உடல்களின் வழுவழுப்பான உடல்களின் தழுவல்களின் பொழுது குறுநில மன்னனான அவன் சக்கரவர்த்தியாகப் பிரகாசித்தான்.
சிலவற்றை மீண்டும் தேடிப் போனான்.
சில அவனை மீண்டும் தேடி வந்த – மீண்;டும் பவளத்திற்கும் முத்து மாலைகளுக்குமாக… அல்லது.. அவனின் முரட்டு முத்தத்திற்காக.
கர்ப்பபை என்று ஒன்றை ஆண்டவன் பெண்களின் வயிற்றினுள் வைத்து விட்டதால் எவ்;வாறு அவர்கள் தெய்வங்கள் என்று போற்றப்பட்டார்களோ… அதேபோல அந்த காட்டு மல்லிகைகள் கர்ப்பப்பையால் பாவப்பட்ட ஜீவன்கள் ஆயின.
வயிற்றில் வேண்டி வருவனவறறை காட்டு வாசிகளின் மருத்துவச்சி பச்சிலை வைத்தியங்களால் கருக்கி விட்டாலும் சில வேளை அப்பாவித் தாய்மரங்களும் கருகிப் போயின.
அதையும் தாண்டி மன்னவனின் ஒட்டுண்ணியாக வயிற்றில் வளர்ந்தவை ஒருவனுக்கு சோறு குடுப்பதன் மூலம் குடிமக்கள் ஆயின… அதுவும் இல்லாவிட்டால் ஏதோ ஒரு காலைப் பொழுதில் ஊரின் எல்லையில் இருக்கும் வீரபத்திரரின் காலடியில் அழுகைச் சத்தம் கேட்கும்.
அக்குழந்தைகளை காட்டுவாசிகள் கொண்டு போய் வளர்ப்பார்கள்! அவைகளை வீரபத்திரரின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுவார்கள்.
வேட்டை ஆடவும்.. பயிர்கள் செய்யவும்.. தேன் பறிக்கவும்—- மன்னரின் வாரிசுகள் மந்தையில் சேர்த்து விட்ட காட்டுவாசிக்கடாக்களாக ஆவார்கள்.
ஆண்கள் ஆயின் வேட்டை… பெண்கள் ஆயின் விவசாயம்…
*
இளங்கோவனின் வாரிசு செம்பருத்தியின் வயிற்றில் வளரத் தொடங்கியது.
தன் வயிற்றில் வளரும் அவன் வம்சம் பற்றிய நல்ல செய்தி தினம் தினம் அருவியாற்றின் கரையில் காத்திருந்தாள்.
அவன் வரவில்லை – மனம் படபடக்கச் செய்தது.
நகரத்தினுள் போய் அவனைக் காண விரும்பினான்.
காட்டின் பாதையில் தவழ்ந்து விளையாடி அதன் வளைவு நெளிவுகள் அனைத்தும் அத்துப்படியான அவளுக்கு நகரத்தின் வாசனையே தெரியாது.
குண்டுமணி பாசி நூல் விற்கும் பெண்கள் பாதை காட்டுவதாக முன் வந்தார்கள்.
செம்பருத்தி சிற்றரசி ஆகினால் அரண்மணைத் தோழிகள் அவர்கள் தானே.
நகரம் விழாக்கோலம் கொண்டிருந்தது.
காரணம் யாதென்று விசாரித்தார்கள்.
இளவரசனுக்கு இன்று பெயர் சூட்டு விழாவாம் – செம்பருத்தியின் பன்னீர்க்குடம் ஒரு கணம் தளம்பியது.
பாலை மரத்தின் உச்சாணிக் கொப்;பில் வில்லுடனும் அம்புடனும் நின்ற வீரவேங்கையை குள்ளநரி ஒன்று ஏமாற்றிப் போட்டு விட்டதாக மனத்துள் குமுறினாள்.
அடுத்து வந்த பௌர்ணமியில் துவட்டதாத ஈரமுடியுடன் அருவி ஆற்றங்கரையின்; மறுகரையில் அமைந்திருந்த வீரபத்திரனின் காலடியில் நின்று சபதம் செய்தாள்.
”ஆண்வாரிசு பிறக்காது என்று சொல்லி என் பெண்மையை வார்ந்து எடுத்தவனேஎன் வயிற்றில் வளரும் உன் வாரிசுதான் உனக்கு எமன்!”
பின் தகிக்கும் மனத்துடன் ஆற்றினுள் இறங்கி மீண்டும் தலை முழுகினாள்.
நீர் புனிதமானது.
மன்னன் அசிங்கப்படுத்திய தன் உடலை அது சுத்தமாக்கும் என முற்றாக நம்பினாள்.
அந்த எண்ணம் அவளுக்கு வாழ்வின் மீது நம்பிக்கையைக் கொடுத்தது.
அடிவானத்தில் விடிவெள்ளி தெரியும்வரை அவள் தண்ணீரினுள்ளேயே நின்றாள்.
*
மேலும் எட்டுத் திங்கள் கழிந்தது.
செம்பருத்தியின் கன்னங்கரேல் என்ற நிறத்துடனும் அவளது விழி வீச்சுடனும் இளங்கோவனின் சாயலுடனும் தனது பன்னீர்க்குடத்தில் இருந்து ஒரு ஆண் மகவை இறக்கி வைத்தாள்.
வீரசிங்கன் எனப் பெயரிட்டாள்.
அவனை வீரபத்திரனின் காலில் அர்ப்பணித்து ஊராருக்கு தத்துப் பிள்ளையாக மிருக வேட்டைக்கு அவள் அனுப்பினாள்.
பதிலாக மனித வேட்டைக்குத் தயாராக்கினாள்.
தன்னைக் குதறிச் சென்ற இளங்கோவன் என்ற மிருகத்தை பழி வேண்டுவதற்காக வளர்த்தாள்.
”என் தந்தை யார் அம்மா?”
ஐந்து வயதில் வீரசிங்கன் கேட்டான்.
”யாரை என் சுட்டு விரல்நோக்கி ’இவனைக் கொல்’ என நான் கட்டளை இடுகின்றனோ அவனே உன் தந்தையாவான்”
மல்யுத்தம்…. வில்வித்தை…. வாள்வீச்சு….
இளவரசனுக்குரிய அனைத்தையும் அவனுக்குப் பழக்கினான்.
தாயின் சுட்டுவிரலின் கட்டளைக்காக காத்திருந்தான்.
காலம் ஓடியது.
உலகம் அரசியல் மயமாகிக் கொண்டு இருந்தது.
வர்த்தக ஆதாயங்களும் அதனுடன் கை கோர்த்துக் கொண்டன.
1498ல் போத்துக்கீசரின் முதலாவது கப்பல் தென்னிந்தியக் கரைகளில் நங்கூரம் இடத்தொடங்கிய பொழுது சிற்றரசர்களின் கோட்டையில் அபாயச்சங்கு ஊதப்பட்டன.
இந்தியாவில் சுரண்டியது மட்டும் போதாது என்று 1505ல் காலித்துறை முகத்திலும் அவர்கள் கப்பல் தரைதட்டியது.
காலனிய ஆட்சியை ஏற்றுக் கொள்ளும்படி இலங்கையின் சிற்றரசுகளும் பீரங்கித் தாக்குதலால் வற்புறுத்தப்பட்டன.
கோட்டை அரசு போர்த்திக்கீச ஏகாதிபத்தியத்தை தனது மன்னராக ஏற்றுக் கொண்டது. ஏற்காத மற்ற அனைவரின் குரல்வளைகள் நசிக்கப்பட்டன.
இலங்கையின் கொழும்புக் கோட்டை இராச்சியமும்… கண்டி இராச்சியமும்… பின் யாழ்ப்பாண சங்கிலியன் இராச்சியமும்… இறுதியாக வன்னி மண்ணும்…
இளங்கோவன் தப்பிக்க வேண்டிய கட்டாயம்!
மகாராணியுடனும் பட்டத்துக்குரிய இளவரசன் இளவரசிகளுடன் காட்டின் நடுவே அமைந்;திருந்த குகையுள் தஞ்சம் புகுந்தான் இளங்கோவன். – மீண்டும் படைதிரட்டுவதற்காக. திரட்டுவதற்காக.
காட்டு மக்கள் வரிசை வரிசையாக… அவனுக்குத் தானியங்கள்..பதன் போட்ட இறைச்சி வகைகள்.. தேன்.. கள்ளுஎன உணவு வகைகளையும் குடிபான வகைகளையும் எடுத்துக் கொண்டு போய்க் கொண்டு இருந்தாhகள்.
செம்பருத்திக்கும் சேதி கிட்டியது.
இருட்டும்வரை காத்திருந்தாள்.
அன்று போல் இன்றும் நிலவு காய்ந்து கொண்டிருந்தது.
பாலைமரத்தில் பழங்கள் நிறைந்து கொத்துக் கொத்தாக மரங்களில் தொங்கிக் கொண்டிருந்தது. அதன் மணம் அந்தப் பிரதேசம் முழுக்க வீசிக்கொண்டு இருந்தது.
மனம் கனத்துக் கொண்டிருந்த இளங்கோவன் காற்று வாங்குவதற்காக அருவியாற்றங்கரைக்கு வந்திருந்தான்.
ஒரு கணம் தான்!
பாலை மரத்தில் இருந்து வீரசிங்கன் அருவி ஆற்றினுள் குதித்தான்.
இளங்கோவன் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்த பொழுது வீரசிங்கன் கையில் வாளுடன் தண்ணீரில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தான்.
இளங்கோவனுக்கோ தன்னையே தான் நிலைக்கண்ணாடியில் பார்க்கின்றமோ என அவனுக்குள் எழுந்துதஅலைகள் அவனை அதிர வைத்தது.
பின்னால் நிமிர்ந்து நின்ற கற்பாறையின் மீது சுட்டு விரலை இளங்கோவனை நோக்கிக் காட்டியவாறு செம்பருத்தி நின்றிருந்தாள்.
இளங்கோவனின் தலை வீரசிங்கனின் வாளுக்குள் இரையானது.
*
தென் இலங்கை முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
தமிழரின் கடைகள் அனைத்தும் சூறையாடப்பட்டுக் கொண்டிருந்தன.
பாணந்துறைப் பிரதேசத்தில் இருந்த கடைகளில் அரைவாசி வைத்திலிங்க முதலாளிக்குத்தான் சொந்தம்.
அவரே அங்கு ஒரு சமாதான நீதவானும் கூட.
தன் சொந்த ஊருக்கு போன காலத்தை விட அங்கு வாழ்ந்த காலம்தான் அதிகம்.
மனைவியின் பிரசவம்.. கோயில் கொடியேற்றம்…வயலில் அரிவு வெட்டு இந்த மூன்றிற்கும்தான் அவர் ஊருக்குப் போவது வழமை.
மற்றும்படி அவரின் வாழ்வு பாணந்துறையில் தான்.
ஆனாலும் தன் பிரதேசத்தில் இப்படி ஒரு அசம்பாவிதம் தன்னை மீறி நடந்து விடும் என்று கனவில்கூட அவர் நினைத்திருக்கவில்லை.
தொழிலாளிகளை முழுச்சாமான்களையும் லொறியில் ஏற்றும்படி பணித்துவிட்டு வழமைக்கு மாறாக வேட்டியை உயர்த்திக் கட்டிக் கொண்டு அனைத்தும் சரிவர நடைபெறுகின்றதா என்று பார்த்தபடி அமைதியில்லாது அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்.
அவர் கடையடையும் அவரையும் நோக்கி ஒரு கூட்டம் வந்து கொண்டிருந்தது.
சிங்கள மொழியில் ”கொல்லுங்கோடா” என்றுஅவனை நோக்கி தன் சுட்டுவிரலைக் காட்டியபடி சாராயம் விற்கும் ஜாமினி வந்து கொண்டிருந்தாள்.
ஜாமினிக்கு வயதாகியிருந்தது.
பக்கத்திலி;ல் ஜாமினியின் மகன் வீரசிங்கா.
வைத்திலிங்கத்தாருக்கு அவன் தன்னையே பார்த்துக் கொண்டு வருவது போலிருந்தது.
அடுத்த கணம் விஜயசிங்காவின் கையில் இருந்த நீண்ட கத்தி வைத்திலிங்கத்தாரின் நெஞ்சில் இறங்கியது.
கண்கள் செருகிக் கொண்டு போயின.
செம்பருத்தி கை விரலை நீட்டிக் கொண்டு நின்றாள்.
நெஞ்சில் செருகியிருந்த வாளை வீரசிங்கன் வெளியே இழுத்து எடுத்து அருவியாற்றில் கழுவிவிட்டு தன் உறையுள் போட்டுக் கொள்கின்றேன்.
வைத்திலிங்கத்தாருக்கு அதற்குப் பின் எதுவுமே தெரியவில்லை
உங்களுடைய கதைகள் யாவும் உண்மையா?