நானும் என் எழுத்துகளும் – வீரகேசரியில் இருவாரங்கள் தொடராக வெளிவந்த கட்டுரை

By | 6. juli 2016

நானும் என் எழுத்துகளும்…

இன்னமும் எழுத்தாளர் ஜீவகுமாரன் என்ற அங்கீகாரத்தை மற்றவர்கள் எனக்கு கொடுத்தாலும்வெறுமே ஜீவகுமாரனாக இந்த எழுத்துலகில் சுமார் 8 ஆண்டு காலம் மிகத்தீவிரமாக எழுதிவரும் ஒரு நல்ல வாசகன்தான் நான்.

அறிவு தெரிந்த காலம் தொடக்கம் எனது பிறந்த ஊரான சங்கானையில் இயங்கி வந்த 10 நாடக மன்றங்கள்நாடகப் போட்டிகள் என்பன எனக்குள் ஏதோ ஒன்றை தெளித்திருக்க வேண்டும். அதுதான் வித்தாக விளங்கியிருக்க வேண்டும்.

மானிப்பாய் இந்துக்கல்லூரியில் 4ம் வகுப்புத் தொடக்கம் உயர்தரம் வரை பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, நாடகப் போட்டிகள் என நிலவிய பசுமையானதும் ஆரோக்கியமானதுமான இலக்கியச் சூழல் என்னுள் என்னை வளர்த்திருக்க வேண்டும்.

ஒவ்வோர் ஆண்டும் பாடசாலை நாடகப் போட்டிகளும் இல்ல விளையாட்டுப் போட்டிகளும் முடிந்த பிறகு நாடகத்திற்கு நடுவர்களாக விளங்கிய 5 நடுவர்கள் தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் வந்து ஏன் முதலாம் இடத்திற்கு குறித்த ஒரு நாடகம் வந்தது என்றும் ஏன் இன்னுமோர் நாடகம் நாலாவது இடத்துக்கு தள்ளப்பட்டது என்றும் விளக்காமாக உரையாற்றுவார்கள்.

இந்த நிகழ்வு ஒரு நல்ல நாடகம் எப்படி இருக்க வேண்டும் என்பதனை விட எவ்வாறு தரம் குறைந்த நாடகமாக இருக்க கூடாது என அறிவதற்கான பெரிய வாய்ப்பாக இருந்தது. சிறுகதை எழுதும் ஆர்வம் எனக்குள் வந்த பொழுதும் தரமான கதையாக இருக்க வேண்;டும் என்பதை விட தரம்குறைந்த கதையாக அமைந்து விடக்கூடாது என்பதில்தான் கவனமாய் இருந்தேன்.

இதே கால ஓட்டத்தில் மற்ற எழுத்தாளர்கள் போல தமிழ்வாணனின் சித்திரக்கதைகள் தொடங்கி, சாண்டில்யன் – கல்கி நா. பார்த்தசாரதி ஜெயகாந்தன் – புதுமைப் பித்தன் என இந்திய எழுத்தாளர்களையும்செங்கை ஆழியான், டானியல், பாலமனோகரன், ஞானசேகரன், அருள் சுப்பிரமணியம், அன்னலட்சுமி இராஜதுரை, தாமரைச் செல்வி என த் படைப்புகளால் ஈழத்து இலக்கியத்தை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த வீரகேசரிப் பிரசுரங்களுக்குள்ளால் பயணப்பட்டுக் கொண்டே இருந்தேன்.

இதன் அடுத்த கட்டமாக ஆங்கில இலக்கியம் படிக்க நேரிட்ட பொழுது இலக்கியத்தின் இன்னோர் பக்கத்தை திரும்பிப் பார்க்க வாய்ப்பு கிடைத்ததும் எனக்கு ஆசானாக வாய்த்த காலம் சென்ற திரு. செல்வா கனகநாயகம் எனது பாக்கியம் என்றே நினைக்கின்றேன்.

இவ்வளவு நிகழ்வுகள் நிகழ்ந்த பொழுதும் நான் வாரப்பத்திரிகைகளுக்கோ அல்லது சஞ்சிகைகளுக்கோ எழுதத் துணியவில்லை.

துணிந்து எழுதிய ஒரே ஒரு கதையையும் எரிந்து புணருத்தானம் செய்யப்பட்ட ஈழநாடு அலுவலக வாசல் மட்டும் கொண்டு சென்று விட்டு திரும்பி வந்து விட்டேன்.

புதுப்புலவு என்று ஒரு பெயரிடப்பட்டு யானை என்பதனை ஐ.தே.க.யின் குறியீடாகவும். அது மதம் வந்து அழிக்கும் கிராமமாக தமிழ்ப் பிரதேசமாகவும்மக்களைக் கிளர்ந்து எழ விடாமல் தடுத்து சமரசம் பேசும் கிராமத்து தலைவர்களை அரசியல்வாதிகளாகவும் சித்தரித்து இறுதியில் விரக்தி கொண்ட இளைஞர்கள் சட்டத்திற்கு விரோதமாக யானையைக் கொல்ல முயற்சிப்பதாக கதை முடிந்திருந்தது.

பெயரளவில் பத்திரிகைச் சுதந்திரமும் எழுத்துச் சுதந்திரமும் நிலவிய காலகட்டத்தில் அது என்னை ஒரு பயங்கவாதியாக சித்தரித்து விடும் என்ற பயத்தாலும் ஈழநாடு அதனைப் பிரசுரிப்பார்களோ என்ற தயக்கத்தாலும் நான் அதனைக் கையளிக்கவில்லை.

இதனைத்தான் என் எழுத்து முயற்சியின் பிள்ளையார் சுழி எனக் கொள்ளலாம்.

சராசரி நடுத்தரக் குடும்பத்தினருக்குரிய பொருளீட்டல்இலங்கை அரசியல்அது தந்த புகலிட வாழ்வு என துடுப்பில்லாத இந்தப் பாய்மரக்கப்பல் இறுதியாக டென்மார்க் கரையில் நங்கூரம் போட்டது.

பனைவளர் நாட்டில் இருந்து பனிபடர் நாட்டுக்கு இடம் பெயர்வது என்பது இலகுவான விடயம் அல்ல.

எமக்குத் தெரிந்த ஆங்கிலக் கலாச்சாரம் கொண்ட இங்கிலாந்து டென்மார்க்கிற்கு மிக அண்மையில் இருந்தாலும் இவர்களின் வாழ்க்கை முறையும் கலாச்சாரமும் இலங்கைக் கலாச்சாரத்தை 180 பாகையூடு திருப்பி வைத்தது போலிருந்தது.

பனி காலத்தில் உறங்குநிலைக்குச் சென்ற கிழங்குவகைகள் நிலத்தை பிரித்து முகிழ்த்து வெளிவருவது போலவே எமது முகிழ்ப்பும் டென்மார்க் நாட்டில் இருந்தது.

முதல் காலடியை மொழிப்பாடசாலையில் வைத்த பொழுது அங்குள்ள கலாச்சார உத்தியோகத்தரின் உதவியுடன் குயிலோசைஎன்ற கையெழுத்து சஞ்சிகையை நடாத்த சந்தர்ப்பமும் கிடைத்ததால் அந்த சஞ்சிகையை நானும் என் மனைவியும் பத்து மாதங்களாக 300 பிரதிகளை வெளிக்கொணர்ந்த கையெழுத்துப் பிரதியாக நடாத்தியதால் டென்மார்க்கின் குடிபுகுந்தோருக்கான நூலகத்தில் தமிழ் பகுதிப் பொறுப்பாளர் பதவியும் என்னைத் தேடிவந்தது.

 

அக்காலத்தில் மொழிபெயர்பு தொழிலை பகுதிநேர உத்தியோகமாக செய்து கொண்டிருந்தால் நான் தமிழ் கற்றுக் கொடுத்த டாக்டர். ஜென்ஸ் ஓகோட் கன்சனுடன் இணைந்து ஒரு மருத்துவ அகராதியையும் கையேட்டையும் டெனிஸ்-ஆங்கிலம்-தமிழ் மொழியில் வெளிக்கொணர்ந்தேன்.

மொழிப்பிரச்சனையுடைய பலருக்கு அந்த மருத்துவக் கையேடு உதவியதாலும் மருத்துவதுறை அதற்கு நல்ல வரவேற்புக் கொடுத்தாலும் அதிக பிரதிகள் விற்கப்பட்டன.

தற்பொழுதும் சுகாதாரத்தாதியாகவும் உதவியாளராகவும் பணிபுரிபவர்கள்; என்னிடம் அதனைப் பணம் செலுத்தி பெற்றுக் கொண்டு இருக்கின்றார்கள்.

தொடர்ந்து எழுதவும் அதனை விட எத்தனையோ நூல்களை வாசிக்கவும் அந்த நூலகம் காரணமாக அமைந்த பொழுதும் எனது முதலாவது சிறுகதை கட்டுரை உரைவீச்சுக் கவிதைகள் கொண்ட தொகுப்பு எனது 50 வயதில் யாவும் கற்பனை அல்லஎன்ற பெயரில் வெளியாகியது.

என் தலைச்சான் பிள்ளைக்கு நான் வைத்த பெயர் போலவே என் படைப்புகளில் அதீத கற்பனைகளுக்கு இடம் கொடாமலும். வாழ்வில் இருந்து விலகிச் செல்லாமலும்வாழ்வுடன் இணைந்து என் எழுத்து நடைபோடத் தொடங்கியது.

இதே ஆண்டில் டென்மார்க்கின் இளைய சமுதாயத்தினர் ஒரு இணையத்தளத்தை நடாத்தி வந்தார்கள்.

வானம். டிகே. (றறற. ஏயயயெஅ.னம)

அதிகமான இளையோர்; ஏதாவது ஒரு படத்தை வைத்து சின்னக் சின்னக் கவிதைகள் எழுதுவார்கள்.

இன்று முகநூல்களில் காணப்படும் போட்டி போலவே, எந்தக் கவிதை அதிக பாராட்டுகளைப் பெறும் என்ற போட்டி அவர்களுக்குள் நிலவியது. அதில் எல்லோரும் புனைபெயரில் தான் எழுதுவார்கள். ஆனால் எவர் எவர் யார் யார் என்று அனைவருக்கும் தெரியும். சுவீற் 50 (ளுறநநவ ககைவல) என்ற பெயருடன் நானும் விளையாட்டாக இணைந்து கொண்டு அவர்களின் தமிழ் பிழைகளை திருத்துவதுசெப்பனிடுவது என்று அவர்களுக்கு உதவி செய்து கொண்டு இருந்தேன்.

அது ஒரு மகிழ்வான ஒரு உலகம்.

அவர்களின் படைப்புகளில் மிக நல்லவற்றைத் தெரிந்து தொகுத்து அனைத்துச் சித்திரங்களையும் வர்ணச் சித்திரங்காக கலரில் பதிப்பித்து மெல்லத் தமிழ் இனித் துளிர்க்கும்என்ற பெயரில் வெளிக்கொணர்ந்தேன்.

 

அதற்கான பணத்தைக் கூட அவர்களே தந்திருந்த பொழுதும் அதனைத் தொகுத்து வெளிக்கொணர்ந்த பெருமையும் பாராட்டும் என்னையே வந்தடைந்தது.

எனக்கு என்னவோ தெருத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு அடித்த உணர்வு போல இருந்தாலும் புலம்பெயர் இளைஞர்களினமுதல் கவிதைத் தொப்பு என்ற பெருமையை அத்தனை இளையோர்களுக்கும் அள்ளிக் கொடுத்தது.

நூல்தேட்டம் திரு. என். செல்வராஜ் மிகவும் பாராட்டி கட்டுரை எழுதியதுடன் அதன் வெளியீட்டிற்கும் டென்மார்க் வந்திருந்தார்.

அடுத்து சின்னதொரு நாவல் எழுதும் ஆசை.

 

இறுதிக்கட்டப் போர் நடந்து கொண்டிருந்த காலம்.

 

போருக்கு பின்னால் இன்று விடுதலை இயக்கங்களைப் பற்றி பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் போராட்டக் காலத்தில் விடுதலை இயக்கத்தின் ஆதரவாளர்கள் எவ்வாறு ஒரு அப்பாவியை.. ஒரு போராளியாகபின் ஒரு துரோகியாக மாற்றினார்கள் என்பதைக் காதலும் போராட்டமும் இணைந்த ஒரு நாவலாக எழுதி மித்ரா பதிப்பகத்தி;ன் வாயிலாக வெளிக் கொணர்ந்தேன்.

பெயர் : மக்கள்மக்களால்மக்களுக்காக

 எந்த வாசகனையும் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு கடிதத்தினூடாகவே நாவலை ஆரம்பித்திருந்தேன்.

அன்புள்ள அம்மாவுக்கு…

 இந்தக் கடிதம் உன் கையில் கிடைக்கும் பொழுது நான் தற்கொலை செய்திருப்பேன். அல்லது கொலை செய்யப்பட்டிருப்பேன்.

 ஒரு கோழை என்ற பெயருடன் தற்கொலை செய்வதா…அல்லது கொலை செய்யப்பட்ட பின்பு அவர்கள் எனக்கு சூட்டவிருக்கும் ’துரோகி’என்ற பெயருடன் எங்கள் சந்ததி வாழ வேண்டுமா என எனக்குத் தெரியவில்லை.

எனது மரணத்தால் உலகம் ஒன்றும் ஸ்தம்பித்து நிற்கப் போவதில்லை. உண்மைகள் மறைக்கப்பட்டு விட்டது என யாரும் தலை தலையாய் அடித்துக் கொண்டு நிற்கப் போவதில்லை.

காடாத்து, எட்டுச் செலவு, அந்தியேட்டி எ னஎன் நினைவுகளும் கொஞ்சம் கொஞ்சமாக அழைந்து விடும்.

அம்மா!

 நீதான் அதிகமாக அழுவாய். நுல்ல காலம் அப்பா உயிருடன் இருந்தால் இன்னமும் கவலைப்பட்டிருப்பார்

இவ்வாறு தொடங்கி இலங்கையில் நடந்த அனைத்து இனக்கலவரங்கiயும் இணைத்துச் சென்றது மக்கள்மக்களால்மக்களுக்காக.

 மேலும் நானே இதனை விமர்சிப்பது அழகில்லை எனத் தவிர்த்தாலும் எனது நூல்களில் அதிக பிரதிகள் விற்றது இந்த நூலே. இலங்கையின் தமிழியல் விருதையும் 2010ல பெற்றது.

2009ல் நிகழ்ந்து கொண்டிருந்த பொழுது மக்கள் மக்களால் மக்களுக்காக அவுஸ்திரேலியா தமிழ்ச் சங்கத்தில் வெளியிடப்பட்டது.

இந்த நூலை இலங்கையில் இருந்த அனைத்துப் போராளிகளும் வாசித்து அவர்களுடன் தொடர்புடைய புலம்பெயர் ஆதரவாளர்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என அறிய வேண்டும் என விரும்பினேன்.

ஆனால் விதி வேறுவிதமாக போராட்டத்தை நிர்ணயித்தது துர்ப்பாக்கியமே.

தொடர்ந்து இன அனர்த்தம் நடந்த பொழுது இது பற்றிய பதிவாக பல எழுத்தாளர்களின் பதிவாக ஒரு நூலைக் கொண்டுவருவது பற்றி மித்ரா நிறுவனத்துடன் பேசிய பொழுது அதற்கு போதிய பணவசதி இல்லை எனத் தெரிவித்தார்கள்.

அச்சமயம் என்னிடம் இருந்த சிறுகதைகளையும் சங்கானைச் சண்டியன், கோமதி என்ற இரு நாவல்கள்களை எழுதி ஒரு தொகுப்பாக வெளியிட்டேன்.

சங்கானைச் சண்டியன் என்பது எமது போராட்டதின் ஆரம்பம் – வளர்ச்சி – மௌனித்தலை குறியீட்டு வடிவில் 1948ல் நடப்பது போலச் சித்தரித்திருந்தேன்.

சங்கானைச் சண்டியனின் கதையின் முன்னுரை பின்வருமாறு அமைந்திருக்கும்.

 கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்குப் பின் என்பது போல இலங்கையில் ஆயுதப் போராட்டத்திற்கு முன்பு…ஆயுதப் போராட்டத்திற்கு பின்பு…ஆயுதங்கள் மௌனமாகிவிட்ட காலம் என மூன்றாகப் பிரிக்கலாம்.

அவ்வகையில் இது ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரான கதை.

அனைத்துத் தொகுதிகளிலும் எங்களையே அனுப்புங்கள்…உங்களுக்கு தமிழீழத்தைப் பெற்றுத் தருகின்றோம் என்று கூட்டணியினர் வாக்களித்து பாரளுமன்றத்திற்கு சென்ற காலகட்டத்தை கதைக்களமாகக் கொண்டு புனையப்பட்ட சித்திரம்.

இங்ஙனம்

வி. ஜீவகுமாரன் என ஆரம்பமாகும்.

அதற்கு நல்ல ஆதரவும் சின்னப்பபாரதி விருதும் கிடைத்தது.

பின்பு இந்த நாவல் யிலும், மலையாளத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.

சங்கானைச் சண்டியனில் இடம் பெற்ற மற்றைய குறுநாவலான கோமதியும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இது மிகவிரைவில் தமிழில் திரைப்படமாக எடுக்கப்பட இருக்கின்றது.

இலங்கையில் கற்பனை பண்ணியிராத அரசியல் மாற்றத்தை தொடர்ந்து பல சர்ச்சைகளினூடு இலங்கையில் 2011ல் அனைத்துலக தமிழ்மொழி மகாநாடு முன்னெடுக்கப்பட்டது.

அதில் முகங்கள் என்னும் சிறுகதை தொகுதி என்னால் தொகுக்கப்பட்டது.

இலக்கிய உலகின் பல முகங்களை கண்டு கொள்ள அந்த மகாநாடும் தொடர்ந்த சர்ச்சைகளும் உதவியது. ஆயினும் முகங்கள் நல்ல பாராட்டுகளைப் பெற்றது.

17 நாடுகளைச் சேர்ந்த 50 எழுத்தாளர்களின் படைப்புகளின் தொகுப்பு அது.

மிக அண்மையில் புதிய ஜனநாயம் இதழின் முன்னாள் ஆசிரியர் திரு. மாலனை சிங்கப்பூரில் சந்தித்த பொழுது அவர் அந்த நுல் மூலமே என்னை அறிந்திருந்தார் என்பது மகிழ்ச்சியைத் தந்தது.

இதே காலப்பகுதியில் எனது மனைவி கலாநிதி டெனிஸ் மொழியில் கெயவி கில்சின் மோவா (இப்படிக்கு அன்புள்ள அம்மா) என்ற கவிதை, உரைவீச்சில் அமைந்த தொகுப்பை வெளியிட்டார்.

 

அதற்கு டென்மார்க்கின் தலையாய கவிஞர் பெனி அனர்சன் முன்னுரை எழுதியதோடு மட்டுமில்லாது அதன் வெளியீட்டுக்கும் வந்து பெருமை சேர்த்தார்.

இலங்கைப் போரில் தவறவிட்ட தன் மகனை நினைத்து டென்மார்க் முதியோர் இல்லத்தில் வாழும் ஒரு தாய் அந்த மகனுக்கு எழுதும் பத்துக் கடிதங்களின் தொகுப்பே அந்த நூல்.

ஒரு மதர்ஸ்டேயில் ஆரம்பித்து மற்ற மதர்ஸ்டேயில் முடிவடையும் இந்த பதிவு ஐரோப்பாவில் நிகழும் நாலு கால கட்டத்தையும் கடந்து கொண்டு செல்கின்றது.

மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற இந்த காவியம் என்னால் தமிழிலும் திரு. பாலசுப்பிரமணியம் அவர்களால் ஹிந்தியிலும் திரு. ஸ்வாதி பத்மநாதன் அவர்களால் மலையாளத்திலும் மிகவும் அறியப்பட்ட காலம் சென்ற திரு. சிட்டியின் மகன் திரு. விஸ்வேஸ்வரனினால் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.

இதனை எங்கள் இருவரின் இலகஇகியப் பயணத்தின் மைல்கல் முயற்சியும் வெற்றியும் எனச் சொல்லலாம்.

முகங்களும், இப்படிக்கு அம்மாவும், மேலும் இலண்டனைச் சேர்ந்த ஊடகவியலாளர் திரு. அனஸ், நூலகர் திரு. என். செல்வராஜா, பத்திரிகைத் துறையைச் சேர்ந்த இவள் பாரதி ஆகியோரின் நூல்கள் என்னால் ஆரம்பிக்கப்பட்ட விஸ்வசேது பதிப்பகத்தால் வெளியிடப்பட்டாலும் காலப்போக்கில் சென்னையில் உள்ள பதிப்பகத்தை டென்மார்க்கில் இருந்து நிர்வாகம் செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாக அது கைவிடப்பட்டது.

நீங்கள் எழுத்தாளராகவே இருங்கள். பதிப்பாளராய் மாறினால் சிலவேளை இலட்சுமி உங்களிடம் வந்தாலும் உங்களிடம் இருந்து சரஸ்வதி சென்றுவிடுவாள் என அறிவுரை கூறினார்கள்.

மீண்டும் சிறுகதை உலகத்தில் நீச்சலடிக்கத் தொடங்கினேன்.

எந்த இசும்களினோடும். அல்லது அரசியல் கட்சிகளிளோடும்போராட்டக் குழுக்களினோடும் சமரங்களோ அல்லது கை குலுக்கலோ இல்லாத எனது தனிப்பாங்கு பல களங்களைப் பற்றி பல தளங்களில் எழுதவும் பல புதிய முயற்சிகளை செய்து பார்க்கவும் உதவியது.

கிழக்கில் சூரியன் உதித்தான்மழை சோவெனப் பொழிந்தது. அவனின் கைகளில் அவள் தவழ்ந்தாள் என்ற சந்தோசமாக முடிவுகளில் இருந்து வேறுபட்ட வடிவங்களில் எழுத பெரு விருப்பும் முயற்சியும் எடுத்துக் கொண்டேன்.

ஞானமும், ஜீவநதியும், செங்கதிரும், வீரகேசரியும், தினக்குரலும் என் பரீட்சார்த்த முயற்சிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்தன.

நிச்சயமாக புலம் பெயர்வாழ்வு வேறுபட்ட பல கதைக்களங்களையும் கருக்களையும் தந்தாலும் கதைவடிவமைப்பில் அவற்றில் மிகவும் வேறுபாடு இருக்க வேண்டும் என்று வெவ்வேறு விதங்களில் முயற்சித்தேன். அத்துடன் கதைசொல்லியாக வாசகனை அருகில் இருத்தி. அல்லது அவனின் தோள்களில் கை போட்டு நடந்து கொண்டும் உத்தியை என்னுள் நான் வளர்த்துக் கொண்டேன்.

கதையை ஆரம்பிக்கும் விதத்திலும்அதனை நகர்த்திச் செல்லும் விதத்திலும் இரண்டு கதைகளின் வாயல்கள் ஒன்றுடன் ஒன்று கிட்ட வராமல் பார்த்துக் கொள்வதில் மிக கவனமாய் இருந்தேன்;இருக்கின்றேன்இருப்பேன்.

ஆனால் பலகதைகளில் தொடக்கமும் முடிவும் ஒரே வசன அமைப்புகளில் வருவது போன்ற என் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. இராஜேஸ்கண்ணா இது ஜீவகுமாரன் முத்திரைஎன விமர்சித்தது மிகவும் மகிழ்வாக இருந்தது என்னையும் அறியாமல் ஏதோ ஒன்றை நான் செய்தது போல.

இதே உத்தியை சிறுகதைகளில் பாவித்தாலும் நாவலில் பல சிறுகதைக்களுக்கான கருக்களை ஒரு நாவலுக்குள் திணித்து நான் முயற்சி செய்தது தான் கடவுச்சீட்டுநாவல்.

புயலிலே தோணிபுகழ் திரு. சிங்காரம் பெயரில் நடாத்தப்பட்ட நாவல்போட்டியில் முதல்பரிசும் 50.000 இந்தியா ரூபாய்களும் கிடைத்தது. இந்த நிகழ்வு என்னைப் பலர் அறிந்து கொள்ள காரணமாய் இருந்தது.

எந்தப் பரிசும் அது அந்த நேரத்திற்கான அங்கீகாரம் என்பதை நன்கு அறிந்ததால் அந்த வெற்றியை ஒரு புறம் வைத்து விட்டு தொடர்ந்து சிறுகதைகளின் நான் காட்டிய ஆர்வம் இதுவரை 8 தகவம் விருதுகளையும் ஜேர்மனிய கரப்பான்பூச்சிகள் (ஞானம் வெளியீடு) என்ற சிறுகதை தொகுதியையும் ஜீவகுமாரன் கதைகள் (ஜீவநதி வெளியீடு) என்ற இன்னுமோர் சிறுகதை தொகுதியையும் எனக்குத் தந்தது.

தற்பொழுது முகநூலில் எழுதும் பத்தி எழுத்துகளை வாசகர்களின் கருத்துகளுடன் ஒரு நூல் ஆகவும், எனது கோமதி சங்கானைச் சண்டியன் ஆகிய இரு நூல்களை ஆங்கிலத்திலும், தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் சிறுகதைகளை இன்னோர் தொகுப்பாகவும் மேலாக எனது நீண்டநாள் ஆசையான குதிரைவாகனத்தை நாவலாகவும் கொண்டு வர முயற்சித்துக் கொண்டு இருக்கின்றேன்.

கடவுச்சீட்டு எவ்வாறு ஒரு குடும்பத்தினூடு எவ்வாறு ஒரு புலம்பெயர் சமுதாயத்தை படம் பிடித்ததோஅவ்வாறே குதிரைவாகனமும் ஒரு குடும்பத்தின் கதையூடு எங்கள் சமுதாய பழக்கவழங்கங்கள் கலாச்சார விழுமியங்கள் சொந்த நாட்டிலும் புலம்பெயர் மண்ணிலும் சிதறிப்போய் உள்ளது என்பதனைக் காட்டும் நாவலாக அமையும்.

அது என்கதையாகவும் இருக்கலாம். உங்களின் கதையாகவும் இருக்கலாம்.

மேலாக எனது இந்த எழுத்துப் பயணம் பெரிய புரட்சி சமுதாய மாற்றங்களை கொண்டுவராவிட்டாலுமஅல்லது அதற்கான அரசியல் கொள்கைகளில் தீவிரம் இல்லாவிட்டாலும்அந்த அந்த காலகட்டங்களை படம் பிடித்துக் காட்டும் நல்லதோர் கமராவாக விளங்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

இந்தப் படங்களை வைத்து பின்னாளில் ஆராயும் ஒரு வரலாற்று மாணவனுக்கு எங்கெங்கு சரியானவை நடந்திருக்கின்றன. எங்கெங்கு எதிர்காலத்துக்குரிய எதிர்வு கூறல்களஇ சொல்லப்பட்டிருக்கின்றன. எங்கெங்கு தவறுகள் நடந்திருக்கிறன எனப் புரிய வைக்கும்.

இப்புரிதல்களும் ஆய்வுகளும் எதிர்கால அரசியல் சமுதாய விழிப்புணர்வுகளை எம் அடுத்த சந்ததிக்கு அளிக்குமானால் மிக்க மகிழஇச்சி அடைவேன்.

30 வருட புலம் பெயர்வாழ்வில் பெற்றதை விட இழந்ததே அதிகம் என்ற என் கணிப்பு சரியாக இருந்தால்இனியும் இழக்காமல் இருப்பதற்கும் இழந்தவற்றை மீண்டும் பெறுவதற்கும் எங்களுக்கு புதிய பார்வைகளும் புதிய அளவீடுகளும் நிச்சயம் வேண்டும்.

அதனை எதிர்காலம் தீர்மானிக்கட்டும்.  

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

(Spamcheck Enabled)