
எனது மனைவி திருமதி. கலாநிதி ஜீவகுமாரனால் டெனிஷ் மொழியில் எழுதப் பெற்ற உரைவீச்சுக் கவிதை வடிவில் அமைந்த Kærlig hilsen mor நாவலின் ஒரு பகுதியை அதன் வெளியீட்டு விழாவன்று நாடகமாக்கி சுமார் 600 பார்வையாளருக்கு சமர்ப்பித்திருந்தேன்.
இதே நூல் ’இப்படிக்கு அன்புள்ள அம்மா’ என என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பின்பு அது ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் ஹிந்தியிலும் வெளியாகியது.
இந்த விழாவிற்கு முன்னுரை எழுதிய டென்மார்க்கின் மிகச் சிறந்த கவிஞர் Benny Andersen நேரில் வந்து வாழ்த்திப் பேசியது மிகக் கௌரவமான விடயம். இது டெனிஸ் மொழியில் இருந்தாலும் திருமதி வாணி சுதனின் நடிப்பு மொழியைக் கடந்தது.