அந்தரங்கத்தை தொலைத்த வாழ்வு
SMSகள்… மின்னஞ்சல்கள… FACEBOOKகள்… Blogகள்… இணையத் தளங்கள்தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின்பெருமைகளையும் பயன்களையும் பார்த்து பரவசப்படவேண்டிய அல்லது பெருமைப்படவேண்டிய 21ம் நூற்றாண்டுக் காலகட்டத்தில், அதன் நீளமான கைகள் தனி மனிதர்களின் அந்தரங்கங்களுக்கு பக்கத்தே நின்று அவர்களின் குரல்வளையையே திருகும் எம் வாழ்வின் பெருமைகளை எவ்வாறு எண்ணி வியப்பது?
கோபத்தில் தொலைபேசியில் ஒருவருடன் பேசமுடியாது. . குரலைத ; தாழ்த்தி இரகசியம் பேச முடியாது. . .காதலியுடன் றோட்டால் நடந்து போக முடியாது. . . தனிப்பட்டு ஒருவருக்கு ஒரு தகவல்களை நம்பி அனுப்பி வைக்கமுடியாது. நண்பன் பகைவன் ஆகும் பொழுது அதன் 1000 பிரதிகளும ; வெளியே போகும். “அப்பிடி நான் சொன்னேனா” என எதிர்காலத்தில் யாரும் யாரையும் கேட்க முடியாது. Pen-driveவை எடுத்துக் காட்டுவார்க்கள். மொத்தத்தில்எதையும் இன்று பதிவு செய்யலாம். அடுத்த வினாடி ஆயிரம் ஆயிரம் பேருக்கு அனுப்பிவிட்டு SIM காட்டை கழற்றிஎறிந்து விட்டு போய்க் கொண்டு இருக்கலாம். அல்லது மின்னஞ்சல் விலாசத்தை மாற்றலாம்.
எதையும் பின்பு கண்டு பிடிக்கலாம். ஆனால் போன மானம்? மரியாதைகள்??
எந்த தகவல் பரிமாற்றத்திற்கும் குறைந்த பட்சம் ஒருநேர்மை இருக்க வேண்டும். அதாவது ஒரு கருத்தைசொல்பவர் அல்லது ஒரு தகவலை அனுப்புவர் குறைந்தபட்சம் தனது உண்மையான பெயரை அறிவிக்க வேணடும்.அல்லது மொட்டைக் கடிதத்திற்கும் இதற்கும் வேறுபாடுஇல்லாது போய்விடும்.
அண்மையில் தமிழ் அமைப்பு என பயனிலையில் முடியும் இரண்டுஅமைப்புகளிடம் இருந்து மின்னஞ்சல்கள் வந்து என்னிடம் சிலகருத்துகளும் கேட்கப்பட்டிருந்தன. கணனியில் பதில் எழுவதை விடதொலைபேசியில் பதில் சொல்வது இலகுவென அவர்களின் தொலைபேசி எண்ணைக் கேட்டு எழுதியிருந்தேன். இன்று வரை பதில்கள இல்லை.எதற்காக இந்த திரைமறைவுச் சம்பாஷணைகள் அல்லது பதுங்குகுழிதாக்குதல்கள் என எனக்கு விளங்குவதே இல்லை.
புனைபெயரில் கவிதை கதைகள் எழுதுவது ஒரு காலத்தில் அதிகமாக இருந்த்து. இன்று இணையத்தளங்களின்பின்னூட்டங்களில் சொன்று பார்த்தால் பட்சி, கிளி, பாம்பு, புலியன், சிங்கன், கரடியன், நரியன் என ஒரு மிருகக்காட்சிசாலையே அணிவகுத்து இருக்கும். கேட்டால் “எப்பொருள் யாயர் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள்காண்பதரிது” என்று மைலாப்பூரில் பிறந்து 1440 குறள்களைச் சொல்லிவிட்டு கன்னியாகுமரியில் சிலையாக காற்றுவாங்கியபடி நிற்கும் அந்த மனிதரை துணைக்கு இழுக்கின்றார்கள்.
சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரைச் சொத்து என்று சொல்லி வைத்ததாலோ என்னவோ சாருநிவேதிதாஜெயமோகன் தொடக்கம் எங்கள் இலங்கை எழுத்தாளர்கள் வரை நடாத்தும் இணையத்தள யுத்தங்களில் பாவிக்கப்படும்
வார்த்தைப் பிரயோகங்கள் சில சமயங்களில் வரம்புமீறியாகவையாக இருத்தல் கண்கூடு. அச்சமயம் திரைப்படங்களுக்கு“யு”, “எ” போன்ற சான்றிதழ்கள் வழங்கப்படுவது போல இந்த கட்டுரைகளுக்கும் ஏன் வழங்கப்படக் கூடாது எனஎன்னுள் நினைத்துக் கொள்வேன்.
ஒரு இலக்கிய நண்பரிடம் இது பற்றிக் கலந்துரையாடிய பொழுது இது தான் இன்றைய றென்ட் என்று கூறி சில பெண்கவிஞர்களின் கவிதைகளைக் கையில் தந்தார். அதன் பின் எதுவும் சொல்ல முடியவில்லை.
தற்பொழுது, “விரும்பமில்லாவிட்டால் விலகிப் போ” என்ற கோட்பாடே எனக்குப் பொருந்துகிறது.
ஆனாலும் எதிர்காலம்பற்றி பயம் அல்லது கவலை இருந்து கொண்டுதான் இருக்கிறது.
Dear Jeeeva kumaran !
vanakkam.Read the artile- very nice- As per the present condition ,many articles are eligible for “A”certificate as you rightly said-
தற்பொழுது, “விரும்பமில்லாவிட்டால் விலகிப் போ” என்ற கோட்பாடே எனக்குப் பொருந்துகிறது.-i am not agree with the stand-we have to resist/oppose /struggle with wrong things.
No other way- It is not so easy-
“”எதிர்காலம்பற்றி பயம் அல்லது கவலை””it shows your honest heart- your INTELLECTUAL HONESTY afraid of the situation- we have no other way but to struggle- The history taught this only sofar-
I am regularly getting your amil and read all yours. good things you r doing – I am happy-
At far distance,loving mother country and its Tamil launguage is a wonderful thing really- i am proud of you- salute bro…do good and write good..continue-
In tamil nadu ,in literary world ALL DIFFERENCES /FIGHTS/MUDSLING ARE happening with caste based views and political opinion- The “Hinduism” done a great thing in India that is “Casteism”—
-Vimala vidya- Namakkal -Tamil nadu –