என் பெயர் உஞ்சு. (சிறுகதை)

என் பெயர் உஞ்சு. எங்கள் வீடு… வீட்டோடு சேர்ந்த ஒரு பூனை… நாலைந்து கோழிக்குஞ்சுகள்… வீட்டின் பின் கொட்டிலில் கட்டியிருக்கும் ஒரு கிடாய் ஆடு… இரண்டு மறியாடுகள்.. மூன்று குட்டியாடுகள் எல்லோருக்கும் நான்தான் எப்போதும் காவல். எனது வீட்டு எஜமான் சுத்தக் கஞ்சன். இரவு வேளைகளில் நாலைந்து வீடுகளுக்கு கேட்கக் கூடியவாறு கோப்பையை திண்ணையில் தட்டி, ”உஞ்சு…உஞ்சு…” என மிகப் பலத்த சத்தத்துடன் கூப்பிடுவார். எங்கு நின்றாலும் ஓடிப் போவேன். கோப்பையில் ஒரு சோற்றப் பருக்கை கூட… Read More »

கீழேயுள்ள வரிகளை வாசித்தபடி …பாடலைக் கேளுங்கள்!

https://www.facebook.com/video.php?v=866388456711864&set=vb.100000221526493&type=2&theater இன்று வெள்ளிக் கிழமை! நான் கோயிலுக்குப் போகவில்லை – ஆனால் மனதுக்கு ஏதோ நிம்மதியைத் தரும் இந்த பாடலை என்னிடம் சேர்ந்த அந்த என்னையும் கடந்த சக்திக்கு நன்றிகள்!கீழேயுள்ள வரிகளை வாசித்தபடி … பாடலைக் கேளுங்கள்!ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க! ஜனனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை இயற்கையின்… Read More »

டென்மார்க் – சிறுகதை

‘வெளிநாட்டுக்குப் போனால் எங்கடை கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்திடும்”… ‘மூலைவீட்டு கணபதிப்பிள்ளையின்ரை பேரன் போய் மூண்டு வருசத்துக்கிடையிலை மூண்டு சகோதரிகளையும் கரையேத்திப் போட்டான்”… ‘இதொரு வாழ்வோ. . . இயக்கப் பொயெளோடை நிண்டு கதைச்சால் ஆமிக்காரன்களுக்குப் பயம். . . ஆமிக்காரன்களோடை கதைத்தால் இயக்கத்துக்குப் பயம்”… இந்த கனவுகள் அல்லது தப்பித்தல்களுக்குரிய காரணங்களுடன் நாட்டை விட்டு அகதி என்ற அவப்பெயரிலும். . . புலம் பெயர்ந்தவர்கள் என்ற கௌரவப் பெயரிலும். . . .இங்கு நாம் உண்ணல், உறங்கள்கள்,… Read More »

காக்க… காக்க… சிறுகதை

புதுமைப் பித்தனின் ”கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்;” என்ற கதையை எனது பதினைந்து வயதில் வாசித்ததில் இருந்தே எப்போதும் ஒரு பயம் இருந்து கொண்டே வந்தது… ரியூசனுக்கு என்று வீட்டில் சொல்லி விட்டு, மனோகரா தியேட்டரில் போய் 10 மணி காலைக்காட்சியையும், அக்காமாருடன் வந்து மூலைகளில் உட்கார்ந்திருக்கும் அண்ணாமாரையும் கடைக்கண்களால் ரசிக்கும் பொழுது ”கடவுள் என் பக்கத்தில் வந்து இருந்து எப்படி ரியூசன் போகுது என்று கேட்டால் என்ன சொல்வது?” என்ற பயம்தான் அது. எனது ஐம்பதாவது வயதில் இருந்து… Read More »

ஜீவநதியில் வெளியாகிய எனது நேர்காணல்

1)புலம் பெயர்ந்து வாழும் நம்பிக்கைகுரிய எழுத்தாளர்களுள் ஒருவராகக் குறிப்பிடப்படும் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பப் பின்னணி பற்றியும் படைப்பிலக்கியத்தில் நீங்கள் ஈடுபாடு கொள்ளத் தொடங்கியமை பற்றியும் சுருக்கமாகக் கூறுவீர்களா? நான் சாதாராண ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். சராசரி தமிழ்ப் பெற்றோர்கள் போல கல்வி ஒன்றே குடும்ப நிலையை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையில் என் தந்தையார் நோய்வாய்ப்புபட்ட போதும் கல்வி தடைப்படக் கூடாது என்ற பெருவிருப்பத்தில் என் தாயார் வட்டிக்கு வட்டி எடுத்து என்னையும்… Read More »

வரிச்சுமட்டை வேலிகள் – சிறுகதை

பொழுது இன்னும் புலரவில்லை.  சந்திரன்வீடு துரிதமாக இயங்கிக் கொண்டு இருந்தது.  எல்லோருக்கும் இடையில் மௌனத்திரைகள். பகல் பதினொரு மணிக்கு பலாலியில் இருந்து கொழும்புக்குச் செல்லும் விமாகத்தில் போகப் பதிவாகியிருந்தது. காலை எட்டுமணிக்கு காருக்குச் சொல்லியிருந்தார்கள். காரில் யாழ்ப்பாணத்துக்குப் போய் பின்பு ஆமியின் பஸ்சில் பலாலிக்குப் போகவேண்டும்.  கார் வர முதல் எல்லா சூட்கேசுகளும் சரியாக இருக்கின்றதா எனப் பார்த்துக் கொண்டார்கள்.  சந்திரன் முற்றத்து லைற்றைப் போட்டுவிட்டு சிகரட்டைக் கையில் வைத்து ஆழமாக யோசித்துக் கொண்டிருந்தான். ஆந்தப் பெரிய… Read More »

நேற்றும் இன்றும் : குத்துவிளக்கும் சுகி.சிவமும்

சரியாக 7 வருடங்களுக்கு முன்பு டென்மார்க் என்ற சிறுகதையில் எள்ளல் நடையில் பின்வருமாறு எழுதியிருந்தேன். தங்கமணியும் சிவதம்புவும் தங்கள் மகளின் சாமத்திய வீட்டுக்கு வருபவர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்காக குத்து விளக்கும் இதர பல பொருட்களும் வேண்டுவதற்காக சிங்கப்பூருக்கும் இந்தியாக்கும் சென்றிருந்தார்கள். (இந்த இடத்தில் இது என்ன குத்துவிளக்கு கலாச்சாரம் என இலங்கை-இந்திய வாசகர்கள் திகைக்க வேண்டாம். பெயின்ற் மணம் மாறாக ஒரு பிளாஸ்ரிக் பையில் நாலைந்து காய்ந்த வெற்றிலையுடன் கொஞ்சம் சீவல் பாக்கும் ஒரு எழுமிச்சைப் பழமும்… Read More »

புதுப்புலவு – சிறுகதை

புதுப்புலவு(1979ம் ஆண்டு ஆகஸ்ட் கலவரத்தின் பொழுது எழுதப்பட்டது)   ‘தனியனுக்கு மதம் பிடிச்சு றோட்டுக்கு வந்து கடையள் எல்லாம் உடைச்சு எறியுதாம்”  ‘வெருண்டு ஓடட்டும் எண்டு ரயரைக் கொழுத்திப் போட,அதையும் தூக்கிப் புத்தகக் கடைக்கு மேலை எறிஞ்சு போட்டுதாம். கடை பத்தி எரியுது.”  ‘உந்தச் சனியனுக்கு வருஷத்துக்கு ஒருக்காவாவது மதம் வருகுது”  _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _… Read More »

மணமகள் தேவை

நல்லூரைப் பிறப்பிடப்மாகவும் இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட உயர் சைவ வேளாளார் குலத்தில் பிறந்து,  மனைவியை இழந்து, பிள்ளைகளின்றி தனியே வாழும்  40 வயதான ஒரு பொறியியளாருக்கு இலங்கையைச் சேர்ந்த விதவையான,பிள்ளைகள் அற்ற தமிழ் பேசும் ஒரு மணப்பெண் வேண்டும். மணப் பெண்ணின் வயது  35  தொடக்கம்  45 வரையில்  இருப்பது விரும்பத்தக்கது. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: கல்யாணமாலை திருமணசேவை நிறுவனம் * இராகுலனின் இந்த மணப்பெண் அறிவித்தல் பலவிதமாக பல இடங்களில் அலசப்பட்டது. குறிப்பாக, பிறந்தநாள்… Read More »

என்னைச் சபிப்பவர்கள் சபிக்க!

என்னைச் சபிப்பவர்கள் சபிக்க! நான் புல்லாய் புழுவானாய் மீண்டும் பிறக்க வேண்டும் என்று!! எனது பள்ளிக் காலத்தில் ஒரு கடிதம் வரும் ”இதே போல் எழுதி அடுத்த தினங்களுக்குள் பத்துப் பேருக்கு அனுப்பினால் நீங்கள் பரீட்சையில் சித்தி அடைவீர்கள்”என்று. இப்பொழுது சுமார் 40 வருடங்களுக்கு பின்னால் இதனை வேறுவடிவத்தில் சந்தித்து இருக்கின்றேன். இந்த படத்தில் உள்ள சுவாமிகளையோ…அவர் காட்டும் பக்தி நெறிகள் பற்றியதல்ல எனது விமர்சனம்! ஆனால் 21ம் நூற்றாண்டில் பேஸ்புக்குடனும் இன்ரநெற்றுடனுமா சீரடிசுவாமிகள் திரிகிறார் உங்களைக்… Read More »