ஜீவகுமாரன் கதைகளும் – விஷ்ணுவர்த்தினியின் திறனாய்வும் (விமர்சகரும் திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன்)

பிரபல எழுத்தாளர், டென்மார்க்கைச் சேர்ந்த நமது ஜீவகுமாரன் தமிழில் தந்துள்ள சிறுகதைத் தொகுப்பை ‘ஜீவநதி” பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ‘ஜீவநதி” என்ற இலக்கிய ஏட்டின் ஆசிரியர் கலாமணி பரணீதரன், ஜீவகுமாரன் கதைகளுக்கு எழுதிய பதிப்புரையில், கூறுகின்றார்| ‘இன்று உள்ள கதைசொல்லிகளில் ஜீவகுமாரன் தனித்துவமான சிறந்த கதை சொல்லியாகத் திகழ்கின்றார்’ இந்தக் கூற்று எனக்கும் உடன்பாடானதே. காரணம் ஜீவகுமாரன் லாவாகமாக எழுதும் பண்புடையவர் என்பதே எந்த படைப்பும் வெறுமனே கதையொன்றைக் கூறுவதனால் மட்டும் கலைப்படைப்பாக அமைவதில்லை. வேண்டுமானால், நல்ல கருத்துக்களை… Read More »

இன்றைய ஞாயிறு (03-04-05) தினக்குரல் வாரமலரில் வெளியாகிய எனது பேட்டி. நேர்கண்டவர் – நிரோஷா தியாகராசா

இளையவர்களைப் பொறுத்தவரை எழுத்துக்கான சரியான அங்கீகாரம் கிடைக்காமை அவர்களுக்குள் ஒரு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தி விடுகிறது என நான் கருதுகிறேன். ஆனால் சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரை எழுதுவதற்கான சூழல் தானாகவே அமைந்து விடுகிறது. தங்கள் எண்ணங்களை அவ்வப்போது வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். பத்திரிகைகளுக்கு அனுப்பி அதற்காக காத்திருக்கும் மனநிலையை இந்த அவசர  உலகம் அவர்களுக்கு கொடுக்க மறுக்கிறது. என்று கூறுகிறார் எழுத்தாளர் ஜீவகுமாரன். ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜீவகுமாரன் எண்பதுகளில் டென்மார்க்குக்கு… Read More »

ஞாயிறு 26-04-2015 இலங்கை வீரகேசரி வாரமலரில் வெளியான நேர்காணல்

ஞாயிறு 26-04-2015 இலங்கை வீரகேசரி வாரமலரில் வெளியான நேர்காணல் பேட்டி கண்டவர் : ரேணுகா பிரபாகரன்.   எத்தனை வயதில் எழுத ஆரம்பித்தீர்கள்? நான் எனது 28வது வயதில் டென்மார்க் வந்த பொழுது டென்மார்க் அகதிகள் சங்கத்தின் ஆதரவில் குயிலோசை என்ற கையெழுத்துப் பிரதியிலான சிறுசஞ்சிகை ஒன்றை நடத்தினேன். அத்துடன் டென்மார்க்கில் இருந்து வெளிவந்த சஞ்சீவி என்ற இதழிலும் எழுத தொடங்கினேன். பின்பு டெனிஸ்கல்வி, தொழில், இரட்டைப் பிள்ளைகள் என சுமார் 20 வருட இடைவெளிக்குப் பின்பாக… Read More »

‘கடவுச்சீட்டு’’ ஒரு பார்வை – மேமன்கவி-

  ஜீவகுமரானின் ‘கடவுச்சீட்டு’’ ஒரு பார்வை –மேமன்கவி- நண்பர் ஜீவகுமாரனின் ‘கடவுச்சீட்டு’’எனும் இந்த நாவலை அறிமுகம் செய்து வைக்கும் பணி எனக்கு வழங்கியமைக்கு அவருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு, ஒரு நூலை அறிமுகப்படுத்துவது  என்பது அன்றைய நாட்களில் நமக்கு 5 சதத்திற்கு கிடைத்த தமிழ் சினிமாப் பாடல்களின் பிரசுரத்தின் இரண்டாம் பக்கத்தில் அந்த படத்தின் கதைச்சுருக்கம் போட்டு இருப்பார்கள். அப்படியான ஒரு வேலை இல்லை என்று தெரிந்தாலும், ஒரு நூல் வெளியீட்டு அல்லது அறிமுக விழாவில்… Read More »

சிறையுடைப்பு – சிறுகதை

என் பெயர் பஞ்சவர்ணம். ஆனால் என் முதலாளி என்னை அழைப்பது பஞ்சவர்ணம்மா என்றுதான். பெயருக்கு ஏற்றமாதிரி என் நிறம் பஞ்சவர்ணம்அல்ல. தென்னங்கீற்று பச்சை நிறம். கழுத்தில் தெளிவாக தெரியக் கூடிய ஒரு ஆரம். அதனில் என் கழுத்து நோகாத அளவு எடையுள்ள ஒரு சின்ன மணி. மதுரை மீனாட்சி அம்மனின் கையில் நாங்கள் அமர்ந்திருப்பது பற்றி எனக்கு எப்பவுமே ஒரு பெருமை. என் முதலாளியும் மஞ்சள் தலைப்பாகை அணிந்து நெற்றியில் சந்தனமும் பெரிய குங்குமமும் வைத்திருப்பார் வாரத்தின்… Read More »

கன்டோஸ் – சிறுகதை – வி. ஜீவகுமாரன்

கன்டோஸ் – சிறுகதை – வி. ஜீவகுமாரன் டென்மார்க் தமிழ்க் கடைகளில் இலங்கையில் விற்கப்படும் கன்டோஸைக் காணுவேன் என நான் கனவில் கூட கற்பனை; பண்ணியிருக்கவில்லை. கன்டோஸ்என்ற பெயராலே அந்த வகைச் சொக்கிலேற்றை அறிந்திருந்தேன். அல்லது தட்டையானதும் இறுக்கமானதும் இலகுவில் உருகக்கூடியதுமான சொக்கிலேற் வகைகள் எல்லாம் கன்டோஸ் எனவே நினைத்திருந்தேன். டென்மார்க்கிற்கு வந்தபின்பு ரொம்ஸ், மாபோ, றீற்ரா ஸ்பொட் கம்பனிகளின் சொக்கலேட்டுகள் போன்றன அறிமுகமாகிய பொழுது தான் கன்டோஸ் என்பது ஒரு நிறுவனம் சூட்டிய பெயர் என… Read More »

வீடு – சிறுகதை

வீடு – சிறுகதை ஏதாவது ஒரு கோயிலின் ஒலிபெருக்கியில் இருந்து கேட்கும் சுப்பிரபாத ஒலியுடன் காலைப் பொழுது புலர்வது போலவே இன்றும் புலர்ந்திருந்தது. இன்று அது பின்வளவு வைரவ கோயிலில் இருந்து என்பதால் அதிக சத்தமாய் இருந்தது. உயரப் பனையில் நாலு லவுட்ஸ்பீக்கர் கட்டியிருந்தார்கள் – நாலு திசையையும் பார்த்தபடி. காகம் வேறு கரைந்து கொண்டு இருந்தது. ”மைக்காரனின் அம்பிளிபயருக்குள் தண்ணியைக் கொண்டு போய் ஊற்றினால்தான் அடுத்த பத்து நாளும் பிள்ளைகள் ஒழுங்காக படிக்க முடியும்”குசினிக்கு பின்னால்… Read More »

ஆண்… சிறுகதை

”இன்னும் என்ன உங்களுக்கு வேணும்” அந்த அதிகாலையில் அவளின் அவல ஒலி இருட்டான குடோனின் சுவர்களில் பட்டுத் தெறித்தது. இரண்டு கைகளாலும் தலைகளில் அடித்துக் கொண்டாள். அரிசியை சாக்கில் ஓட்டை போட்டு அதிலிருந்து விழுந்த அரிசியைக் கொறித்துக் கொண்டிருந்த இரண்டொரு எலிகள் சாக்குகளுக்கு பின்;னால் அமைந்திருந்த தம் பொந்துகளுள் ’கீச்’சு.. ’கீச்’சுக்கென்று ஒலி எழுப்பியபடி போய் ஒளிந்து கொண்டன. எல்லாம் முடிந்தவனான அவன் எழுந்து காறித்துப்பியபடி எதுவுமே பேசாமல் வெளியேறினான். திகைப்பு விடுபடாத நிலையில் அழுதபடி கலைந்திருந்த… Read More »

வேட்டை

வன்னி மண்ணை மூன்று குறுநில மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த காலம். முல்லை, நெய்தல், மருதம் என இயற்கை மண்ணின் வளத்தைப் பிரித்து வைத்ததையே தம் பிரதேசத்து எல்லையாகக் கொண்டு அவர்கள் ஆண்டு கொண்டிருந்தார்கள். குறிஞ்சியும் பாலையும் அங்கிருக்கவில்லை. முல்லைக்கே உரிய அழகு காடும் காடுசார்ந்த பிரதேசங்களும் என்றாலும் இயற்றைகயுடன் சேர்ந்து கொத்து கொத்தாக மலர்ந்து சிரிக்கும் காட்டுவாசிப் பெண்களும்தான். கருகுமணியும் பாசிக்கயிறும் சேர்த்துக் கொண்டு திரியும் இந்த காட்டுவாசிகளின் கூட்டத்தில் செம்பருத்தி கொஞ்சம் வித்தியாசமானவள். வயது ஈரெட்டு.… Read More »

சங்கானைச் சண்டியன்

(பாகம் 1)   கிறிஸ்த்துவிற்கு முன், கிறிஸ்த்துவிற்கு பின் என்பது போல இலங்கையில் ஆயுத போராட்டத்திற்கு முன். . .ஆயத போராட்டத்திற்குப் பின். . .மேலும் ஆயதங்கள் மௌனமாகி விட்ட காலம் என மூன்று காலகட்டங்களாக பிரித்துக் கொள்ளமுடியும். அவ்வகையில் இது ஆயுத போராட்டத்திற்கு முன்னான கதை!   அனைத்துத் தொகுதிகளிலும், ”எங்களையே அனுப்புங்கள். . . உங்களுக்கு தனித்தமிழ்நாட்டைப் பெற்றுத் தருவோம்”, என தமிழர்கூட்டணியினர் வாக்குறுதியளித்து பாராளுமன்றம் சென்ற கால கட்டத்தில் நடந்ததாக புனையப்பட்ட கதை!!… Read More »