குண்டு போட்ட பூமிக்கு குண்டு போட வராதீர்கள்! (தாளலயம்)

கட்டியக்காரன்: வந்தனம்! வந்தனம்!! எல்லோர்க்கும் வந்தனம்!! வீடு விட்டு நாடு விட்டு வீடு விட்டு நாடு விட்டு   தேடிய தேட்டம்… தோட்டம்… உறவு… அத்தனையும் விட்டு! தேடிய தேட்டம்… தோட்டம்… உறவு… அத்தனையும் விட்டு! பனை போல நின்ற நாம் பனிக் குளிருக்குள்ளை நடுங்கு கின்றோம் பனை போல ”நிமிர்ந்து” நின்ற நாம் பனிக்குளிருக்குள்ளை நடுங்கு கின்றோம் ஓடி ஓடி உழைக்கின்றோம் ஒரு காசு மிச்சமில்லை ஓடி ஓடி உழைக்கின்றோம் ஒரு காசு மிச்சமில்லை  … Read More »

தோன்றாத்துணை – சிறுகதை

தோன்றாத்துணை –வி. ஜீவகுமாரன் ஜானு என்னை விட்டுப் போகும் வரை அம்மன் கோவில் திருவிழா தொடங்கி விட்டால் பகல் நேரத்தில் சண்டியனை எனது வீட்டில் காண்பது அரிதாகி விடும். மாமிச சாப்பாட்டிற்காக மாமிசம் சமைக்கும் பக்கத்து வீடுகளுக்கு அல்லது சந்தையடிக்கு வலது புறமாக இருக்கும் அசைவ உணவுக் கடைக்கு அல்லது மீன் சந்தைப் பக்கமோ ஓடிவிடும். பொழுதுபடும் பொழுதுதான் வீடு திரும்பும். சிலவேளை ஊர் நாய்களுடன் கடிபட்டு அணுங்கி கொண்டு வந்து என் காலடியில் அல்லது ஜானுவின்… Read More »

என்றும் அன்புடன்… ( சிறுகதை)

”இனிமேலும் காதல் என்கின்ற ஒரு பெயரில் உங்களை நான் ஏமாற்றிக் கொண்டு இருக்கவில்லை. நான் உங்களை விட்டு பிரிந்து போகும் நேரம் வந்து விட்டது என்பதனை நன்கு உணர்கின்றேன். நீங்கள் இனியொரு தடவை உங்கள் வேலையிடத்திலோ…அல்லது குடும்ப நிகழ்ச்சிகளிலோ… அல்லது உங்கள் வயதான தாய் தந்தையர்கள் பார்க்கும் ஒரு பெண்ணையோ திருமணம் செய்து உங்களை நம்பி வரும் அந்தப் பெண்ணுக்கு என்னில் செலுத்திய காதலின் அளவின் ஒரு துளியைக் கூட குறையாமல் செலுத்தி நீங்களும் சந்தோசமாக இருந்து… Read More »

இன்ரசிற்றி ரிக்கற்றின் விலை 1500 (சிறுகதை)

மதெர்ஸ்டே – 10-05-2015 நேற்று நடு இரவு விமானநிலையத்தில் நான் வந்திறங்கியது தொடக்கம் இன்று அதிகாலை நான் யாழ்.தேவி ஏறும் வரை என் முகநூல்பக்கங்கள் அனைத்தும் அன்னையர் தின வாழ்த்துகளால்நிறைந்திருந்தன. ஆங்கிலம் . தமிழில் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட படங்கள்…சித்திரங்கள்…வாசகங்கள்….. அன்னை அல்லது அம்மா என்று வரும் சினிமாப்பாடல்களின் இணைப்புகள்…. சொந்த தாயார்களின் படங்கள்…மேலாக நாளை வெளியாக இருக்கும் தமிழ்நாட்டின் ’அம்மா’என விழிக்கப்படும் முன்னால் முதல்வருக்கான வழக்கின் தீர்ப்பிற்கான வாழ்த்துகளும் வேண்டுதல்களும் என நிறைந்திருந்திருந்தது. ஆங்காங்கே…”உங்க… Read More »

சுருதிபேதம்

அக்கினியை வலம் வந்து முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக நடைபெறும் திருமணமானாலும் சரி… பிதா,  சுதன்,பரிசுத்த ஆவியின் பெயரால் இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்திருப்போம்என தேவாலயத்தில் செய்யப்டும் திருமணமானாலும் சரி… ‘‘அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாவின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்”என்ற குரான் வாசகத்தைச் சொல்லியபடி ஆரம்பிக்கும் திருமணங்கள் ஆனாலும்சரி…. எந்தச் சமய சடங்குகளும் தேவையில்லை…அதில் நம்பிக்கை இல்லை என்றுவிட்டு சட்டத்தின் சாட்சியாக நகர மண்டபங்களில் செய்யப்படும்திருமணங்கள் ஆனாலும்சரி…. உனக்கு நானும் எனக்கு நீயும் உண்மையாக வாழ வேண்டும் என்ற… Read More »

சொல்லாத சேதிகள்… (சிறுகதை)

ரோகிணி: போனமாதம்;தான் எங்கள் இருபத்தைந்தாவது திருமணநாள் மிகச் சிறப்பாக நடந்தது. எல்லாவற்றையும்; ரஞ்சனிதான் முன்னின்று நடத்தினவள். அப்பிடி ஒரு விழாவாக எங்களுக்கும் சொல்லாமல் தன்னுடைய பாடசாலை நண்பர்களுடனும் நண்பிகளுடன் சேர்ந்து அதனைச் செய்திருந்தாள். யாரின் கண்கள் பட்டதோ தெரியாது இந்த ஒரு மாதமும் எனக்கு மனம் சரியே இல்லை. ரஞ்சனி எங்களுக்கு பத்து வருடம் பிந்தி பிறந்த தெய்வக் குழந்தை. ஒரே குழந்தை. போகாத கோயில்கள் இல்லை…பார்க்காத வைத்தியங்கள் இல்லை…. அந்தப் பத்து வருடமும் ஒவ்வொரு மாதமும்… Read More »

இரண்டு கண்கள் – சிறுகதை

இது ஜீவகுமாரனின் சிறுகதையா? அல்லது ஜீவகுமாரனின் கதையா என்பது அல்ல கேள்வி. அவரின் இரண்டு கண்களிலும் ஒரேவேளையில் எவ்வாறு இரண்டு வௌ;வேறு பெண்கள் தோன்றினார்கள் என்பது தான் கேள்வி. ஒருவர் கோயிலில் பூக்கட்டிக் கொண்டு… மற்றவர் சந்தையில் மீன் விற்றுக் கொண்டு.. இது அதிசயம் தான். நாம் அறிந்திராத அல்லது அனுபவித்த ஒன்றைச் சந்திக்கும் பொழுதுதானே அதனை அதிசயம் என்று சொல்லுகின்றோம். * நாகரத்தினம்! இந்தப் பெயர் ஆண்களினுடையதா அல்லது பெண்களினதுடையதா என்ற ஆராய்ச்சி எனக்கு அறிவு… Read More »

வயதுக்கு…. (சிறுகதை) – வி. ஜீவகுமாரன்

”என்ரை பிள்ளைக்கு எனக்கு விரும்பிய மாதிரி சாமத்திய சடங்கு செய்து பார்க்கிறதுக்கு எவ்வளவு கனவோடை இருக்கிறன் தெரியுமே. ஏன்தான் இந்த கண் கெட்ட கடவுள்கள்; கண்களைத் திறக்குதுகள் இல்லையோ தெரியாது. இங்கை இருக்கிற எல்லா தெய்வங்களுக்கும் என்ன குறைவிட்டனான் சொல்லுங்கோ பார்ப்பம்?” ”ஓமக்கா… இந்த நாட்டிலை எங்கடை பிள்ளைகளின்ரை கலியாணங்கள்; எங்கடை விருப்பத்தின்படி நடக்குமோ இல்லையோ தெரியாது. ஆனால்… சாமத்தியச் சடங்கு மட்டும்தான் எங்கடை விருப்பத்தின்படி நடக்கும்” ”அப்பிடிச் சொல்லுங்கோ பராசக்தி அன்ரி…அதுவும் வாயை மூக்கை பொத்தினால்… Read More »