நீயா? நானாவும் . நாமும் எங்கள் கருத்துச் சுதந்திரமும்

நான் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் தொலைக்காட்சி நடாத்தும் நீயா? நானா? என்பதாகும்.  குறிப்;பிட்ட ஒரு விடயத்தைப் பற்றி வௌ;வேறு கோணங்களில் பார்வையாளர்களின் கருத்து மோதல்களும், எடுத்துக் கொள்ளப்படும் கருப்பொருளின் துறையைச் சார்ந்த மூவரின் கருத்துகளும் கேட்கப்படும். இவர்கள் பட்டிமன்றதுக்கு நடுவர்கள் போல் செயல்பட மாட்டார்கள். பதிலாக தங்கள் ஆணித்தரமான கருத்துகளை முன் வைப்பார்கள். மொத்தத்தில் இந்த நிகழ்ச்சி வெற்றி தோல்வி என்ற நிலையில் முடிவடையாமல் பார்வைகளிடத்தில் பல எண்ணங்களை தூவிவிட்டுச் செல்லும்.  அவ்வாறு… Read More »

புதுப்பொம்மைகள்

புதுப்பொம்மைகள்  ”எதுக்காக என்னைக் கட்டினியள்?”  இந்த இலையுதிர் காலத்தில் மரங்கள் எல்லாம் இலைகளைக் கொட்டி விட்டு சூனியம் கவ்வி நிற்பது போலவே, அந்தக் கேள்வியின் பின் மூர்த்திக்கும் இந்த இரண்டு நாட்களாக மனதுள் இருள் கவ்வியிருந்தது.  பகற்காலம் குறைந்து இருள் காலம் கூடியிருந்தது போலவே, இந்த இரண்டு நாளும் அவனுள்ளும் ஓர் சரிசமனற்ற நிலை நிலவிக் கொண்டு இருந்தது.  இரண்டு நாட்களாகவே அவனாக அறையினுள் முடங்கிக் கொண்டான். வீட்டில் எந்தச் சாமான் குறைந்தாலும் வாங்கி வந்து ”இந்தா… Read More »

மனதை வலிக்க வைத்த இரண்டாவது தனித்த மரணம்

மனதை வலிக்க வைத்த இரண்டாவது தனித்த மரணம் முதலாவது என்னுடைய மூத்த அதிகாரி. தொழில் நுட்பத்தை கல்லூரி கற்றுத் தந்திருந்தாலும் நகரசபைக்கு வரும் மனிதர்களின் மனநிலைகளை எப்படி அறிந்து அவர்களை ஆசுவாசப்படுத்தி அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வது என எனக்கு கற்றுக் கொடுத்தவர். பென்சன் பெற்ற பின்பும் மனைவி பிள்ளைகளைப் பிரிந்து தனியே வாழ்ந்தவர். பெரி வீடு…வளவு…கார்…எக்ஸ்செற்றா…எக்ஸ்செற்றா… நான் சிங்கப்பூர் போகும் போது கறுத்த றேபண் கண்ணாடி வேண்டி வந்து தரச்சொல்லி இருந்தார். காசை நீட்டினார். வுந்த… Read More »

பரீட்சைத்தாள்களும்; பெறுபேறுகளும்

நான் விரும்பிப் பார்க்கும் தொடர்கள் இரண்டு. ஒன்று மகாபாரதம். மகாபாரத்தின் தெரியாத பல கிளைக்கதைகளை அறியவும் அதன் பிரமாண்டத்தை ரசிப்பதற்காகவும் பார்க்கின்றேன். மற்றது ஒவ்வீஸ் (Office). கணனி உலகத்துடன் சம்மந்தப்பட்ட ஒரு தொழில் நிறுவனத்தின் செயல்பாடுகள்… சூழ்ச்சிகள்… கால் வாருதல்கள்…உலகச் சூழலில் ஒரு நிறுவனம் தப்பித்து வாழ படாதபாடுபடும் பிராயத்தனங்கள் என பல விடயங்கள் என்னை பெரிதும் கவர்ந்திருக்கின்றது. இதில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக அந்த நிறுவனத்தின் ஒரு பிரிவின் இயக்குனராக வரும் விஸ்வநாதன் என்ற சுமார்… Read More »

யாராவது என் நண்பனுக்கு உதவுங்களேன்!

யாராவது என் நண்பனுக்கு உதவுங்களேன்! “கற்புடைய முகநூல் காதலி வேண்டுமாம்! பின்பு அவளையே திருமணம் செய்ய வேண்டுமாம்” ஜமதக்கனி என்று மாமுனி இருந்தார். அவரது மனைவி சிறந்த பதிவிரதை. தினமும் தண்ணீர் கொண்டுவர ஆற்றுக்கு போவாள். தண்ணீர் கொண்டு வர குடம் கொண்டு போகமாட்டாள். ஆற்று மணலையே குடமாக செய்து, அதில் தண்ணீர் கொண்டு வருவாள். ஒரு நாள், தண்ணீர் எடுக்க ஆற்றுக்கு போனபோது, கந்தர்வன் ஆகாயத்தில் இரதத்தில் அந்த வழியாக போய் கொண்டிருந்தான். அவனது உருவம்… Read More »

நான் அவனில்லை – சிறுகதை (சித்திரை 2024 ஜீவநதியில் வெளியானது)

”மிஸ்ஸிங் ஹோமா?… நவ் ஸ்றெயிற் கொனற்றெட் ரு யுவ ஹோம். லிபற மொபில்! இன்ரெநெற் கோலிங்…லோ கோஸ்ற்… ஹய் குவாலிட்டி…” தொலைக்காட்சியில் விரல்கள் ரம்ளருள் நனைய தண்ணீரைப் பரிமாறும் பையன்… மூக்கைத் தேய்த்தபடி ஒடர் எடுக்கும் சர்வர்;… இவர்களுக்கு எந்தவித மாறுபாடுபாடில்லாத ஒரு சாப்பாட்டுக் கடையில் அமர்ந்திருந்தேன் பத்து வருடத்துக்கு முன்பு நானும் லாவண்யாவும் சந்திக்கும் அதே யாழ்ப்பாண பஸ்ஸ்ராண்ட் முன்னுள்ள சாப்பாட்டுக்கடை. கடையின் தோற்றம் முற்றாகவே மாறியிருக்கின்றது. அவ்வாறே முன்பிருந்தவர்களும் கல்லாப்பெட்டியில் அமர்ந்திருக்கவில்லை. நாலு முழவேட்டியுடனும்… Read More »

ஊமை உறவுகள் – சிறுகதை

ஓரு மாதத்தின் முன்புதான் அன்னத்தின் மூத்தமகள் ராணி பெரியவளாகி இருந்தாள். அண்டை அயல்கள் கொண்டு வந்த நல்லெண்ணையிலும், உழுத்தம் மாவிலும், முட்டையிலும் இரண்டு ரின்கள் நிறைய முட்டைமா செய்தது போக எஞ்சியிருந்த முட்டைகள் பங்குனி வெயிலில் பழுதாகிப் போய் விடும் என்பதற்காக பக்கத்து வீட்டுப் பூரணத்திடம் இருந்த அடைக்கோழியை வாங்கி குஞ்சுக்கு வைத்ததில் தேறியவை ஏழு. காகம் தூக்கியது, பூனை பிடித்தது, கிணற்றுள் விழுந்தது. . . .என விசாவை முடித்துக் கொண்டவை போக மிகுதி மூன்று.… Read More »

முகம் தெரியாத முகநூல் காதல்கள் – கட்டுரை

முகம் தெரியாத முகநூல் நட்பில்…  அதுவும் ஆண் பெண் என்னும் பொழுது அவர்கள் நடாத்தும் சம்பாசணைகள்  நட்பு என்ற எல்லையைத் தாண்டி… காதல் என்ற எல்லைக்குள் போவது வியப்பு ஒன்றும் இல்லை. சொந்த வாழ்வில் உள்ள வெற்றிடங்களை இந்த கணனித் திரையின் வார்த்தைகள் நிரப்பும் பொழுது மறு முனையுடன் எங்களை அறியாமல் நாங்களே முடிச்சுப் போட்டுக் கொள்வதும் இயல்பாகவே நடந்து விடுகிறது. மேலும் காதல் வாழ்க்கையின் அனுபவம் இல்லாது நேரடியாக திருமணப் பந்தத்தில் இணைந்த ஒரு ஆணுக்கும்… Read More »

நாணயம் – சிறுகதை

  2012 தகவம் தெரிவில் முதலாவது காலாண்டுக்குரிய சிறுகதையாக தெரிவுசெய்யப்பட்டது. உலோக நாணயங்களின் இரண்டு பக்கங்களுடன் பரீட்சயப்பட்டதாலோ என்னவோ நாணயம் என்ற இந்த சிறுகதைக்கும் எனக்கு தலை, வால் என இரண்டு உபகதைகள் தேவைப்படுகிறது. தலை ”என்னைஉனக்குப்பிடிச்சிருக்கா?” ”ஆமாம்” ”நீயாரையாவதுகாதலித்துஇருக்கிறியா” ”இல்லை” வழமையானஇந்தமுதலிரவுசம்பாஷணையுடன்அவர்களின்வாழ்க்கைஇனிதேஆரம்பமாகியது. அவள்மூன்றாம்மாதம்முழுகாமல்இருந்தபொழுதுகணவனுக்குஒருமொட்டைக்கடிதம்வந்தது. ”திருமணத்துக்குமுன்பேஉனதுமனைவிதனதுவயிற்றைக்கழுவிப்போட்டுவந்தவள்” தனதுஅதிர்ச்சியைமுற்றுமுழதாகாகவெளிக்காட்டாதுநேராககடிதத்தைமனைவியிடம்கடிதத்தைநீட்டியடி, “ஏன்நீஇதனைமுதலிரவில்எனக்கு  மறைத்தாய்?” எனக்கேட்டான். ”இதுவா. . .நீங்கள்இதுபற்றிஎன்னிடம்கேட்கவில்யே”  எனச்சாதாரணமாகசொன்னபடிஅவள்பாத்திரம்கழுவுவதில்மும்மரமானாள். ”எத்தனைநாள்சொன்னனான். . . இந்தசோப்தண்ணிவேண்டிவராதையுங்கோஎண்டு. கைஎல்லாம்ஒரேஎரிவு” மொட்டைக்கடிதம்; வந்ததைவிடஇந்தப்பதில்மிகவும்அதிர்ச்சியாகஇருந்தது. ”நீதான்யாரையும்விரும்பவேஇல்லைஎனச்சொன்னாயே?” ”ஆமாம்நான்யாரையும்விரும்பவில்லை” ”அப்போஎப்பிடிகற்பமானாய்?” ”ஓ!…அதுவா..ரியூசனுக்குவந்தஒருவாத்தியார். . .அன்றுவீட்டில்வேறுயாரும்இருக்கவில்லை. .… Read More »

யாழ்ப்பாணத் தமிழில் பேசும் ஒரு ஜேர்மனிய பெண்ணும் …..

யாழ்ப்பாணத் தமிழில் பேசும் ஒரு ஜேர்மனிய பெண்ணும் இணையத்தளங்களும்… முகநூல்களும்… ஊடகங்களும்…. மிகவும் நல்ல விடயம் தான்! மாற்றுக் கருத்துக்கே இடமில்லை!! ”ல, ள, ழ”வில் கொஞ்சம் இடித்தாலும் எயர்லங்கா பணிப்பெண்களின் தமிழை விடவே நல்லாகவே பேசுகின்றார்!!! மேலாக தமிழை எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கு வேண்டும் என்ற தனது பெருவிருப்பத்தையும் பதிவு செய்கின்றார்!!!! ஆனால் அதனை ஒரு உலக அதிசயம் போல் முகநூல்கள் பெரிது படுத்தும் பொழுது கொஞ்சம் இடிக்கவே செய்கின்றது. அதன் உச்சத்துக் போய்… Read More »