கட்டியக்காரன்:
வந்தனம்! வந்தனம்!!
எல்லோர்க்கும் வந்தனம்!!
வீடு விட்டு நாடு விட்டு
வீடு விட்டு நாடு விட்டு
தேடிய தேட்டம்…
தோட்டம்… உறவு… அத்தனையும் விட்டு!
தேடிய தேட்டம்…
தோட்டம்… உறவு… அத்தனையும் விட்டு!
பனை போல நின்ற நாம்
பனிக் குளிருக்குள்ளை நடுங்கு கின்றோம்
பனை போல ”நிமிர்ந்து” நின்ற நாம்
பனிக்குளிருக்குள்ளை நடுங்கு கின்றோம்
ஓடி ஓடி உழைக்கின்றோம்
ஒரு காசு மிச்சமில்லை
ஓடி ஓடி உழைக்கின்றோம்
ஒரு காசு மிச்சமில்லை
கண் மூடித் தூங்கி
கண நாளாய் போச்சுது
கண் மூடித் தூங்கி
கண நாளாய் போச்சுது
(மேடைக்கு சின்னப்பு, அன்ன லட்சுமி, சிறிஸ் வருகிறார்கள்)
இவர்கள் மட்டும் விதி விலக்கோ
இவர்கள் மட்டும் விதி விலக்கோ
எங்கள் நாட்டுச் சீவன்கள் தான்
எங்கள் நாட்டுச் சீவன்கள் தான்
சண்டை எண்டு வந்ததுகள்!
சண்டை எண்டு வந்ததுகள்!!
சண்டை இன்னும் தீரவில்லை!
சமாதானமும் வரவில்லை!!
சண்டை இன்னும் தீரவில்லை! – எங்கள் நாட்டில்
சமாதானமும் வரவில்லை!!
கனவு ஒன்று கண்டன்
கனவு ஒனறு கண்டன் – காலையில்
காகம் ஒன்று கத்த
கனவு ஒன்று கண்டன்!
கடிதம் ஒண்டு வரப்போகுது!
கடிதம் ஒண்டு வரப்போகுது!!
=====================================
காட்சி 1 (டென்மார்க்)
சின்னப்பு:
என்ரை பேரு சின்னப்பு..
என்ரை பேரு சின்னப்பு..
இங்கை வந்து
இருபத்தி…ஐஞ்சு வருசம் ஆச்சுது..
இங்கை வந்து
இருபத்தி…ஐஞ்சு வருசம் ஆச்சுது..
ஆடு மாடு கோழி
எல்லாம் வெட்டுற வேலை…
ஆடு மாடு கோழி
எல்லாம் வெட்டுற வேலை…
அன்ன லட்சுமி:
பேருதானே அன்ன லட்சுமி…
பேருதானே அன்ன லட்சுமி…
வீட்டுக்குள்ளை லட்சுமி இல்லை!
வீட்டுக்குள்ளை லட்சுமி இல்லை!
உந்த ஆளைக் கட்டியொரு
பிரி..யோசனமும் இல்லை..
உந்த ஆளைக் கட்டியொரு
பிரி..யோசனமும் இல்லை..
கடனும் வட்டியும்
கட்டி முடி..யுதில்லை..
கடனும் வட்டியும்
கட்டி முடி..யுதில்லை…
வட்டி இப்போ குட்டி போடுது!
வட்டி இப்போ குட்டி போடுது!
கஸ்டத்திலை கழுவித்
துடைக்கிற வேலைக்கு போறன்…
கஸ்டத்திலை கழுவித்
துடைக்கிற வேலைக்கு போறன்…
காலமை 2 மணித்தி… யாலம்
பின்னேரம் 2 மணித்தி…யாலம்
சிறிஸ்:
எனக்குஇவைவைச்சபேரு
சிறீஸ்கந்த சிவராஜா…
எனக்கு இவை வைச்ச பேரு
சிறீஸ்கந்த சிவராஜா…
சிறிஸ் என்று மாத்திப் போட்டன்;
சிறிஸ் என்று மாத்திப் போட்டன்;
I do not like these old names I do not like these old names
அப்பாவும் அம்மாவும்
எப்பவும் சண்டை
அப்பாவும் அம்மாவும்
எப்பவும் சண்டை
காசு சண்டை…
கடன் சண்டை..
சீட்டு சண்டை…
வட்டி சண்டை…
I do not like these I do not like these
பிற்ஸாகடையிலைவேலை
பிற்ஸா கடையிலை வேலை
“Take away” I like that “Take away” I like that
சின்னப்பு:
படிக்காமல் விட்டுட்டு
எங்களைக் குறை சொல்லாதை!
படிக்காமல் விட்டுட்டு
எங்களைக் குறை சொல்லாதை!
பேஸ்புக்குக்கை பேந்தி பேந்தி
கண்டதென்ன மிச்சமடா
பேஸ்புக்குக்கை பேந்தி பேந்தி
கண்டதென்ன மிச்சமடா
கொம்மா பக்கத்து மூளை தானே உனக்கு!
கொம்மா பக்கத்து மூளை தானே உனக்கு!!
அன்ன லட்சுமி:
இழுக்க வேண்டாம்
இழுக்க வேண்டாம்
என்னை மட்டும் இழுக்க வேண்டாம்
என்னை மட்டும் இழுக்க வேண்டாம்
இங்கை வந்த புதிசிலை
இங்கை வந்த புதிசிலை
பழஞ்சோத்துக்கை பட்டரை
போட்டு குழைச்சு உருட்டியடிச்சு தின்டனிங்கள்;
பழஞ்சோத்துக்கை பட்டரை
போட்டு குழைச்சு உருட்டியடிச்சு தின்டனிங்கள்;
மறக்க வேண்டாம்!
மறக்க வேண்டாம்!!
பழசையெல்லாம் மறக்க வேண்டாம்!
பழசையெல்லாம் மறக்க வேண்டாம்!
சிறிஸ்:
தொடங்கீட்டினம்
தொடங்கீட்டினம்
சண்டை பிடிக்க தொடங்கீட்டினம்
சண்டை பிடிக்க தொடங்கீட்டினம்
இனி இஞ்சை எப்பவும்
மகாபாரத யுத்தம் தான்
இனி இஞ்சை எப்பவும்
மகாபாரத யுத்தம் தான்
சின்னப்பு:
இந்த சண்டையை வைச்சு
இந்த சண்டையை வைச்சு
கொம்மா ஒரு சீலை
வேண்டாமல் விடமாட்டா!
கொம்மா ஒரு சீலை
வேண்டாமல் விடமாட்டா!!
அன்ன லட்சுமி:
எனக்காகவோ கட்டுறன்
எனக்காகவோ கட்டுறன்
Pயசவலக்கொரு சீலை கட்டவேணும் கண்டியளோ…
Pயசவலக்கொரு சீலை கட்டவேணும் கண்டியளோ…
பெருமையெல்லாம் ஆருக்கு
பெருமையெல்லாம் ஆருக்கு
சின்னப்பு பெண்டிலெண்டு
சொல்லிக்காட்ட வேண்டாமோ!
சின்னப்பு பெண்டிலெண்டு
சொல்லிக்காட்ட வேண்டாமோ!
சிறிஸ்:
கொஞ்சம் பொறுங்கோ
கொஞ்சம் பொறுங்கோ
காட் ஒன்று வந்திருக்கு!
காட் ஒன்று வந்திருக்கு!
அப்பற்றை தங்கச்சி பெட்டை
பெரியபிள்ளை ஆயிட்டுதாம்
அப்பற்றை தங்கச்சி பெட்டை
பெரியபிள்ளை ஆயிட்டுதாம்
தாய் மாமன் முறைக்கு
தண்ணி வாக்க வரட்டாம்
தாய் மாமன் முறைக்கு
தண்ணி வாக்க வரட்டாம்
அன்ன லட்சுமி:
நானும் ஊரைப் பாத்து
இருபத்… தைஞ்சு வருசமாச்சு
நானும் ஊரைப் பாத்து
இருபத்… தைஞ்சு வருசமாச்சு
சிறிஸ்:
போறதில்லை ஒண்டு மில்லை
போறதில்லை ஒண்டு மில்லை
போய் என்ன சொல்லுறது?
போய் என்ன சொல்லுறது?
என்ன வேலை செய்யுறம் எண்டால்
என்ன போய் சொல்லுறது.
சின்னப்பு:
சிம்பிளடா…
சிம்பிளடா…
இருபத்தைஞ்சு வருசம்
இறைச்சி வெட்டின அனுபவம்…
இருபத்தைஞ்சு வருசம்
இறைச்சி வெட்டின அனுபவம்…
டாக்டர் எண்டு சொல்லுறன் – நான்
டாக்டர் எண்டு சொல்லுறன்
அன்ன லட்சுமி:
நான் மட்டும் குறைவோ
நான் மட்டும் குறைவோ
சுகாதார அதிகாரி
சுகாதார அதிகாரி
சுளையாய் சம்பளம்
25 ஆயிரம் குறோன்கள்
சுளையாய் சம்பளம்
25 ஆயிரம் குறோன்கள்
சுன்னாகத்து காரிக்கு
சுக்கிரதிசை அடிச்சதெண்டு
சுன்னாகத்து காரிக்கு
சுக்கிரதிசை அடிச்சதெண்டு
சனம் சொல்லப்போகுது
சனம் சொல்லப்போகுது
சிறிஸ்:
Old style Old style நான்
Computer programmer Computer programmer
Hard disk, Software, Sql, Sql, Java, CV2 அத்தனையிலும் Expert நான்
Expert நான்
காரும் வீடும் கொம்பனி தந் திருக்கு…
காரும் வீடும் கொம்பனி தந் திருக்கு…
அன்ன லட்சுமி:
வேலைக்காரியும் தந் திருக்கு
என்று
எடுத்து விடடா என் மகனே!
எடுத்து விடடா என் மகனே!
சிறிஸ்:
எடுத்து விடுறன்
எடுத்து விடுறன்
வெட்டியோடி வெண்டு விடுவம்!
வெட்டியோடி வெண்டு விடுவம்!!
சின்னப்பு:
கடவுள் தான்
காக்க வேணும்!
கடவுள் தான்
காக்க வேணும்!!! (அவர்கள் பயணமாகின்றார்கள்)
======================================================
காட்சி 2 (இலங்கை)
தந்தை:
முள்ளி வாய்க்கால் வேதனைகள்
முற்றாய் இன்னும் தீரவில்லை!
முள்ளி வாய்க்கால்; வேதனைகள்
முற்றாய் இன்னும் தீரவில்லை!!
மூத்தவள் குந்தீ ட்டாள்
மூத்தவள் குந்தீ ட்டாள்
தாய்:
பூக்கிற மரம் பூக்கும்;
காய்க் கிற மரம் காய்க்கும்;
பூக்கிற மரம் பூக்கும்;
காய்க் கிற மரம் காய்க்கும்;
தந்தை:
கொண்ணர் வேறை வாறார்
கொண்ணர் வேறை வாறார்
கொமேட் ரொலிலற் ஒன்று
கட்டட்டாம்
கொமேட் ரொலிலற் ஒன்று
கட்டட்டாம்
தாய்:
அண்ணிக்கு எல்லாமே மறந்து போச்சுதாம்
அண்ணிக்கு எல்லாமே மறந்து போச்சுதாம்
கால் மடிச்சு இருக்க நாரீக்கை நோகுதாம்
கால் மடிச்சு இருக்க நாரீக்கை நோகுதாம்
மகள்:
மச்சானும் அங்கையல்லோ பிறந்து வளர்ந்தவர்
மச்சானும் அங்கையல்லோ பிறந்து வளர்ந்தவர்
அவருக்கும் கஸ்டம் தானே
குந்தி எழும் புறது
அவருக்கும் கஸ்டம் தானே
குந்தி எழும் புறது
தாய்:
கரிசனை யைப்; பாரடி
கரிசனை யைப்; பாரடி
மச்சானிலை
கரிசனை யைப்; பாரடி
மகள்: (தகப்பனைப் பார்த்தபடி)
பாருங்கோ அம்மாவை…
பாருங்கோ அம்மாவை…
தந்தை:
காலமும் நேரமும்
கூடி வந்தால்
எல்லாமே கூடி வரும்
எல்லாமே கூடி வரும்
தாய்:
அங்கை பாருங்கோ
அங்கை பாருங்கோ
அண்ணை யாக்கள் வருகினம்
அண்ணை யாக்கள் வருகினம்
(எல்லோரும் வருகிறார்கள்)
சிறிஸ்:
Nej,,, Nej,,, Meget Varme
தகப்பன்:
தம்பி என்ன சொல்லுறார்?
தம்பி என்ன சொல்லுறார்??
அன்னலட்சுமி:
கரியான வெட்கையாம் – பிள்ளைக்கு
சரியான வெட்கையாம்
தாய்;:
மோர் கொஞ்சம்
பிள்ளைக்கு கரைச்சு தரட்டோ?
மோர் கொஞ்சம்
பிள்ளைக்கு கரைச்சு தரட்டோ??
சிறிஸ்:
Nej… Nej…. Nej… Nej…..
தகப்பன்:
அடி பிள்ளை
நாயைப் பிடிச்சுக் கட்டு!
நாயைப் பிடிச்சுக் கட்டு!!
சின்னப்பு:
NEJ எண்டால்
வேண்டாம் எண்டு டெனிசிலை சொல்லுறது
வேண்டாம் எண்டு டெனிசிலை சொல்லுறது
மகள்:
அப்ப ஓமெண்டால் பூனை
எண்டோ டெனிசிலை சொல்லுறது?
அப்ப ஓமெண்டால் பூனை
எண்டோ டெனிசிலை சொல்லுறது?
அன்னலட்சுமி:
குறும்புக்கார மருமகள் – என்ரை
குறும்புக்கார மருமகள்
பக்கத்து வீட்டுக்காரர்:
வாங்கோ வாங்கோ
எல்லோரும் வாங்கோ
சொந்த பந்தம் சேர்ந்திருக்கு!
சொந்த பந்தம் சேர்ந்திருக்கு!!
(எல்லோருக்கும் தேனீர் கொடுக்கப்படுகிறது)
நிலத்தில் கொட்டி விட அன்னலட்சுமி முறையாக துடைக்கிறா
பக்கத்து வீட்டுக்காரர்:
என்ன மாதிரி சுப்பரவு!
என்ன மாதிரி துப்பரவு!!
ஊரிலை ஒருத்திக்கும்
இப்பிடித் துடைக்க தெரியாது
இப்பிடித் துடைக்க தெரியாது
சின்னப்பு:
சுகாதார அதிகாரி – அவா
சுகாதார அதிகாரி
சுத்தமாய் இல்லாட்டி
துலைச் செடுத்துப் போடுவாள்
சுத்தமாய் இல்லாட்டி
துலைச் செடுத்துப் போடுவாள்
தகப்பன்:
மச்சான் என்ன செய்யுறியள்?
மச்சான் என்ன செய்யுறியள்??
சின்னப்பு:
தங்கச்சி உங்களுக்கு சொல்ல வில்லையோ?
தங்கச்சி உங்களுக்கு சொல்ல வில்லையோ?
முதலிலை அப்போதிக்கரி
இப்ப இவர் டாக்குத்தர்;
முதலிலை அப்போதிக்கரி
இப்ப இவர் டாக்குத்தர்;
ஓப்பிரேசன் செய்யுற டாக்குத்தர்;
தாய்:
ஒப்பிரேசன் எண்டால்
இரத்தம் எல்லாம் பார்க்க வேணும்
ஒப்பிரேசன் எண்டால்
இரத்தம் எல்லாம் பார்க்க வேணும்
அன்னலட்சுமி:
பிறிச்சுக்கை இருந் தெடுத்தால்;
இரத்தம் எல்லாம் வராது
பிறிச்சுக்கை இருந் தெடுத்தால்;
இரத்தம் எல்லாம் வராது
பக்கத்து வீட்டுக்காரர்:
என்ன இவா சொல்லுறா?
என்ன இவா சொல்லுறா??
சின்னப்பு:
பொறுங்கண்ணை பொறுங்கண்ணை
அது
போஸ்மோட்டம் பற்றி யண்ணை
பொறுங்கண்ணை பொறுங்கண்ணை
அது
போஸ்மோட்டம் பற்றி யண்ணை
(மெதுவாக மனைவியிடம்):
அடக்கி வாசி
அடக்கி வாசி
கதை எல்லாம் கந்தலாகும்
கதை எல்லாம் கந்தலாகும்)
சிறிஸ்:
அம்மாக்கு கொஞ்சம் அனுபவக் குறைவு
அம்மாக்கு கொஞ்சம் அனுபவக் குறைவு
பக்கத்து வீட்டுக்காரர்:
தம்பி வாழ்க்கை எப்பிடி?
தம்பி வாழ்க்ககை எப்பிடி??
சிறிஸ்:
Take away எல்லாம்
கலக்கி போடுவன்
Take away எல்லாம்
கலக்கி போடுவன்
மகள்:
என்னமச்சான் Take away?
என்னமச்சான் Take away?
சிறிஸ்: (தன்னை சுதாகரித்து கொண்டு)
அது இப்ப உள்ள
புது ரெக்கினிக்கு…
அது இப்ப உள்ள
புது ரெக்கினிக்கு…
Computer Technician of København of University
Computer Technician of København of University
அனைவரும்:
ஆகா.. ஆகா..
பெரிய படிப்புத்தான்
பெரிய படிப்புத்தான்
தந்தை:
நேரம் ஆகுது
நேரம் ஆகுது
சாப்பிடுவோம் வாங்கோ
சாப்பிடுவோம் வாங்கோ
சின்னப்பு: (மனைவியிடமும் மகளிடமும்)
பக்கத்து வீட்டுக்கார னோடை
பக்குவமாய் இருக்க வேணும்!
பக்கத்து வீட்டுக்கார னோடை
பக்குவமாய் இருக்க வேணும்!!
ஆப்பை இழுத்து விட்டால்
அரோகரா! அரோகரா!
ஆப்பை இழுத்து விட்டால்
அரோகரா! அரோகரா!
காட்சி : 3
(சாமத்திய வீட்டுக் காட்சி)
============================================ காட்சி : 4
மகள் ஒளிக்கும் கடிதத்தை தந்தையார் கண்டு பிடிக்கின்றார்.
தந்தை:
இஞ்ச கொண்டு வா
இஞ்ச கொண்டு வா
என்ன அது என்ன அது
சிறிஸ்:
ஊழஅpரவநச pசழபசயஅ
ஊழஅpரவநச pசழபசயஅ
மகள்:
கோயில் நோட்டீசு
கோயில் நோட்டீசு
தந்தை:
எங்கையோ இடிக்குது!
எங்கையோ இடிக்குது!!
கடிதத்தை வேண்டி படிக்கின்றார்:
ஓல்போ அம்மன்
கேர்ணிங் பிள்ளையார்
பிரண்டா அம்மன்
வையின் அம்மன்
சுனபோ அம்மன் துணை…
நல்ல பக்தியான…
பொடியன் போலை கிடக்குது!
நல்ல பக்தியான…
பொடியன் போலை கிடக்குது!
அம்மனிலை நல்ல
பக்தி போலை கிடக்கு!!
சின்னப்பு:
தம்பியின்ரை பக்தி எல்லாம்
உங்களுக்கு தெரியாது
தம்பியின்ரை பக்தி எல்லாம்
உங்களுக்கு தெரியாது
கொடி ஏறத் தொடங்கினால்
இரவு முழுக்க இறங்காது
கொடி ஏறத் தொடங்கினால்
இரவு முழுக்க இறங்காது
பக்கத்து வீட்டுக்காரன்:
என்ன என்ன சொல்லுறியள்?
என்ன என்ன சொல்லுறியள்??
சின்னப்பு:
கொடி ஏறத் தொடங்கினால
தீர்த்தம் …. தீர்த்தம்…
தீர்த்தம் வரை இறங்காது!.
கொடி ஏறத் தொடங்கினால
தீர்த்தம் …. தீர்த்தம்…
தீர்த்தம் வரை இறங்காது!.
(மெதுவாக)
வந்திட்டான் பாவி!
வந்திட்டான் பாவி!!
தந்தை:
பொறுங்கோ பொறுங்கோ
கோயில் நோட்டீசை வாசிப்பம்.
கோயில் நோட்டீசை வாசிப்பம்.
”மருதனாமடத்து மாம்பழமே!
பலாலி பலாப்பழமே
வசவிளான் வாழைப்பழமே
பெரியவிளான் பேரீச்சம் பழமே
மல்லாக மாதுளம் பழமே
தெல்லிப்பழை தேனே
சங்கானைச் சக்கரையே
கல்லுண்டாய் கற்கண்டே”…
எல்லாம் போட்டுத்தான்
பஞ்சாமிருதம் செய்யினம்
பக்கத்து வீட்டுக்காரன்:
படியுங்கோ…
படியுங்கோ….
பூசைக்கு நேரமாகுது
பூசைக்கு நேரமாகுது
சின்னப்பு: சிறிஸிடம்
அட சிறியே..
பூஜை நடக்க போகுதடா
பூஜை நடக்க போகுதடா
தந்தை: (கடிதத்தை தொடருகிறார்)
எனக்கு உன் அப்பாவை பார்க்க பிடிக்கவில்லை
நாறல் மீனை பூனை பார்ப்பது போலப் பார்க்கின்றார்
கொம்மாவின் ஆந்தைக் கண்கள் என்னைப் பயமுறுத்துகின்றது.
பக்கத்து வீட்டுக்காரன்:
கதை என்ன மாறுது?
கதை என்ன மாறுது??
தந்தை கடிதம் தொடர்கிறார்:
எனக்கு உன் காதலை மறக்க முடியவில்லை
இன்றிரவு தோட்டத்திற்கு வா
சம்மதம் எண்டால்
கிணற்று வாளியை நிமிர்த்து வை!
இல்லாவிட்டால் கவிட்டு வை!
தாய்:
ஐயையோ ஐயையோ
பச்சை மண்ணை
பாழாக்கி போட்டானே! – என்ரை
பச்சை மண்ணை
பாழாக்கி போட்டானே!
அன்னலட்சுமி:
அழ வேண்டாம் அண்ணி!
அழ வேண்டாம் அண்ணி!
பிள்ளை நீ சொல்லு
பிள்ளை நீ சொல்லு
என்ன நடந்தது
என்ன நடந்தது
சின்னப்பு: சிறிஸிடம்
கிணத்து வாளியை
என்ன நீ செய்தனி!
என்ன நீ செய்தனி!!
பக்கத்து வீட்டுக்காரன்:
பொறுங்கோ பொறுங்கோ
டென்மார்க்கிலை இருந்து
ஆரோ வருகினம்;
டென்மார்க்கிலை இருந்து
ஆரோ வருகினம்;
புதிதான ஒருவர் டென்மார்க்கில் இருந்து வருகிறார்:
சின்னப்பு… சின்னப்பு…
சேதி தெரியுமோ
சேதி தெரியுமோ
எங்கடை கோழிப்பற்றியை
இழுத்தல்லோh மூடிப்போட்டங்காள்!
அக்கா அக்கா
அன்ன லட்சுமி அக்கா!
”எக்ஸ்ரா கிளீனிங் ஒண்டு கொல்பெக்கிலை வருகுது
எக்ஸ்ரா கிளீனிங் ஒண்டு கொல்பெக்கிலை வருகுது”
இரண்டு மணித்தியாலம்.
இரண்டு மணித்தியாலம்.
ஒரு மணித்தியாலத்திலை முடிக்கலாம்.
ஒரு மணித்தியாலத்திலை முடிக்கலாம்.
டே சிறிஸ்!
Take awayவிட இந்த வேலையை எடன்!
Take awayவிட இந்த வேலையை எடன்!
நல்ல காசு இருக்கு!
நல்ல காசு இருக்கு!!
அனைவரும் தலைகுனிகிறார்கள்
தாய்:
அண்ணா அண்ணி
அண்ணா அண்ணி
குண்டு போட்ட பூமியிலை
குண்டு போட்ட பூமியிலை
வெந்து போன நெஞ்சிலை
வெந்து போன நெஞ்சிலை
ஏமாந்தது போதும் – நாங்கள்
ஏமாந்தது போதும்
தகப்பன்: (ஊர் அனைவரும்!)
வாங்கோ.. வாங்கோ…
வறண்ட பூமிக்கு வாங்கோ!
கூழை குடியுங்கோ… குத்தாட்டம் போடுங்கோ
கூழை குடியுங்கோ… குத்தாட்டம் போடுங்கோ
அத்தோடை கிளம்பி அப்பிடியே போங்கோ!
அத்தோடை கிளம்பி அப்பிடியே போங்கோ!
எங்கள் மண்ணை இனியொருக்கா
ஏமாத்தி போட வேணாம்!
எங்கள் மண்ணை இனியொருக்கா
ஏமாத்தி போட வேணாம்!
கட்டியக்காரன் அரங்கிற்கு வருகின்றான் (மிகவும் ஆக்கிரோசமாக பேசவேண்டிய வசனங்கள்)
எந்த முனிவன் போட்ட சாபம்
எந்த முனிவன் போட்ட சாபம்
எங்கள் இனம் எங்கள் இனம்
என்றுமே அடிமையாய்
எங்கள் இனம் எங்கள் இனம்
என்றுமே அடிமையாய்
58 தொடக்கம்
58 தொடக்கம்
சிங்களவனிட்டை குட்டுப்பட்டு
சிங்களவனிட்டை குட்டுப்பட்டு
சிறையுக்கை வெட்டுப்பட்டு
சிறையுக்கை வெட்டுப்பட்டு
குடித்த பால் எல்லாம்
குருதியாய் ஒடவே
குடித்த பால் எல்லாம்
குருதியாய் ஒடவே
83ல் இனத் துவேசம்
99ல் இன அழிப்பு
83ல் இனத் துவேசம்
99ல் இன அழிப்பு
போதுமையா போதுமையா…
எங்கள் மக்களை விட்டு விடுங்கள்!
போதுமையா போதுமையா…
எங்கள் மக்களை விட்டு விடுங்கள்!
தமிழன் என்ற சொல்லி சொல்லி
தமிழiனைக் கொல்லாதையுங்கோ!
போய் வாங்கோ போய் வாங்கோ
கட்டார் Qatar ஏயர்வேஸ் காத்திருக்கு!
போய் வாங்கோ போய் வாங்கோ
கட்டார் Qatar ஏயர்வேஸ் காத்திருக்கு!
அனைவரும்:
எங்கள் இனம் நிமிர்ந்து நிற்கும்!
எங்கள் இனம் நிமிர்ந்து நிற்கும்!!
கைகளைத் தட்டுங்கள்
கைகளைத் தட்டுங்கள் – உங்கள்
கைகளைத் தட்டுங்கள்
கைகளைத் தட்டுங்கள்
எங்கள் இனம் நிமிர்ந்து நிற்கும்!
எங்கள் இனம் நிமிர்ந்து நிற்கும்!!