நானும் என் எழுத்துகளும்… இன்னமும் எழுத்தாளர் ஜீவகுமாரன் என்ற அங்கீகாரத்தை மற்றவர்கள் எனக்கு கொடுத்தாலும்…வெறுமே ஜீவகுமாரனாக இந்த எழுத்துலகில் சுமார் 8 ஆண்டு காலம் மிகத்தீவிரமாக எழுதிவரும் ஒரு நல்ல வாசகன்தான் நான். அறிவு தெரிந்த காலம் தொடக்கம் எனது பிறந்த ஊரான சங்கானையில் இயங்கி வந்த 10 நாடக மன்றங்கள்…நாடகப் போட்டிகள் என்பன எனக்குள் …

நானும் என் எழுத்துகளும் – வீரகேசரியில் இருவாரங்கள் தொடராக வெளிவந்த கட்டுரை Read more »

திரையில் அந்த நான்கு இளைஞர்களையும் பொலிஸ்காரர்கள் பச்சை பனை மட்டையால் விளாசித்தள்ளும் போது பார்த்துக் கொண்டு இருந்த எனக்கே உடல் படபடத்தது என்றால் அந்தக் குற்றவாளிகள்…இல்லையில்லை…. குற்றவாளிகளாகப் பதிவு செய்ய பொலிசார் முயன்று கொண்டிருந்த அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும். சிலவேளை கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு காதுகளை மூடிக்கொண்டும்…சிலவேளைகளில் காதுகளை திறந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டும் …

நானும் எனது திருமணமும் – சிறுகதை Read more »

எல்லாமுமாய் இருந்து பின் எதுவுமே இல்லை என்பது போல உணரும் பொழுதுதான் வாழ்க்கையின்… இல்லையில்லை… என் வாழ்க்கையின் அர்த்தமே விளங்கின்றது! ஆம்! 18 வருடங்கள்… வீட்டை விட்டு ஓடிப்போய் இயக்கத்துள் சேர்ந்த பொழுது வயது 22. இப்போ எல்லாம் முடிந்து புனர்வாழ்வு அது இது என்ற பெயரில் ஆறு வருடங்கள் மேலும் ஓடி… நேற்று விடுதலையாகி …

போராட்டம் – சிறுகதை Read more »

ஒரு வளரும் வடலியை வாழ்த்திய வளந்த அந்த ஒற்றைப் பனை! செங்கை ஆழியான்!! இயல்விருந்து மறந்து போன இலங்கை எழுத்தாளன்!!! வாடைக்காற்று – வாசனையும் மக்களின் வாழ்வும்… காட்டாறு – பிரதேச வாசனையும் மக்களின் எழுச்சியும்… இரவின் முடிவில் – தொழிலாளர் குடும்பங்களின் அன்றாடப் போராட்டங்கள்… எனது 9ம் 10ம் வகுப்புகளில் என் மனதில் பதிந்து …

செங்கை ஆழியான்!! Read more »

நிவேதாவும் நானும்! – சிறுகதை – வி. ஜீவகுமாரன் காகிதத்திற்கு கிட்டவாக பேனை நுனியைக் கொண்டு செல்லும் பொழுதே கண்கள் கலங்கிக் கொண்டு வருகின்றன. கை விரல்கள் நடுங்கின்றன. இவ்வாறு ஒரு நிலை வராமல் இருப்தற்காகவே கடந்த மூன்று நாட்கள் பொறுத்திருந்தேன். ஆனால் எதுவும் மாறவில்லை. நிவேதாவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. நானும் இராகுலனும் …

நிவேதாவும் நானும்! Read more »

கடந்து செல்லும் 2015! நெருங்கி வரும் 2016!! மீண்டும் ஒரு தடவை வாணவேடிக்கைகள்… சாம்பெயின் போத்தல்களின் உடைப்புகள்… புதிய பாத்திரத்தில் நடுநிசியில் பால் காச்சி சுவாமிக்கு படைக்கும் புலம் பெயர் புதிய கலாச்சாரம்… இந்த ஆண்டு வெள்ளிக்கிழமையில் புதுவருடம் பிறப்பதால் அனைத்துக் கோயில்களிலும் மக்கள் திரள…கணனிகளை புத்தாண்டு வாழ்த்துகள் நிறைக்க… 2016 ஆண்டு பிறக்க இருக்கின்றது. …

கடந்து செல்லும் 2015! நெருங்கி வரும் 2016!! Read more »

விடியல் (சிறுகதை) நேரம்: இரவு 11:00 காலம்: 31-12-2015 என் பெயர் பாஹீரா. டென்மார்க்கில் இருந்து கட்டார் சென்று பின் அங்கிருந்து இலங்கைக்கு செல்லவிருக்கின்ற கட்டார் விமானத்தில் ஜென்சுடன் அமர்ந்திருக்கின்றேன். ஊகூம்…. இதே விமானநிலையத்திற்கு எட்டு வருடத்திற்கு முதல் ஆஸிமாவுடன் பாஹீரா ஆஸிமா வாக வந்திறங்கினான். ஆஸிமா என்றால் பாதுகாவலனாம்! எத்தனையோ நாட்கள் இதனை நினைத்து …

விடியல் (சிறுகதை) Read more »

தவம் : சிறுகதை சரியாக பதின்மூன்று வருடங்களுக்கு பிறகு டென்மார்க்கில் இருந்து ஜேர்மனில் வசிக்கும் தேவராஜா அண்ணையைப் பார்க்க இன்று போயிருந்தேன். அன்று 13-11-2002 இன்று 13-11-2015 திகதிகள் கூட ஏதோ சொல்லி வைத்த மாதிரி அமைந்திருக்கின்றது. 13-11-2002 அன்று எனது மகள் ரேணுகா, தேவராஜா அண்ணையின் மகன் கோபி, சுவீடனில் வசிக்கும் என் நண்பனின் …

தவம் : சிறுகதை Read more »

சாகித்திய மண்டலப் பரிசு (சிறுகதை) இந்தக் கதையின் முடிவை நீங்கள் தீர்மானித்து விட்டால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல. இலக்கிய உலகத்தைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கின்றீர்கள் என்று உங்கள் தோள்களை நீங்களே தட்டிக் கொள்ள வேண்டும். * ”இந்த ஆண்டு சாகித்தியப்பரிசு உங்கள் மகன் கணேசனுக்குத்தான்;” ஐவரும் ஒருமித்துச் சொன்ன பொழுது என்னால் நம்ப முடியவில்லை. …

சாகித்திய மண்டலப் பரிசு (சிறுகதை) Read more »

சின்னத்தங்கமக்கா – சிறுகதை எனக்கு என்னைப் பற்றி யோசிக்கும் பொழுதெல்லாம் ஐரிஸ் எழுத்தாளர் ஜேம்ஸ் ஜோய்ஸின் ஞாபகமும் அவர் எழுதிய ”வெள்ளம்” என்ற சிறுகதையும் ஞாபகத்திற்கு வந்து வந்து போகும். அந்தச் சிறுகதையில் வரும் பேராசியர் மிகவும் தற்பெருமை கொண்டவர். அவரை விட ஏழையான… ஆனால் அவரை விட மிகவும் அழகான அவர் மனைவியின் மனத்தில் …

சின்னத்தங்கமக்கா சிறுகதை Read more »