நிர்வாண மனிதர்கள் – சிறுகதை

  கணினித் திரைக்கு முன் சுஜித்தா. ஹோலுக்குள் இருந்து நாங்கள் மூவரும் நிர்வாண மனிதர்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். விவாதித்துக் கொண்டிருந்தோம் என்பதனை விட ஒருவரின் கருத்தை மற்றவர்கள் ஆமோதித்துக் கொண்டிருந்தோம். ”அங்கிள்… ஹமோன்… வந்து பாருங்கோ… அப்பா அம்மாவும் வாங்கோ” – சுஜித்தா ஐந்து வயதுப் பெண்ணாக துள்ளினாள். அவள் ஒரு கிராபிக் எஞ்ஜினர். வயது 22. அவள் அமர்ந்திருந்த எனது அறைக்குள் மூவருமே ஓடிச் சென்றோம். எனது கணினியில் பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை கிரகங்களும்… Læs mere நிர்வாண மனிதர்கள் – சிறுகதை

நிழல் வாழ்க்கை – சிறுகதை

நிழல் வாழ்க்கை                     வழமையை விட இந்த வருட வின்ரர் டென்மார்க்கில் கடுமையாகவே இருந்தது. முன்பெல்லாம் வாசல் கதவுக்கு வெளியே படுத்திருக்கும் நாய் போலவே வின்ரர் அமைதியாக படுத்திருக்கும். பனி திட்டு திட்டாக படிந்து போயிருக்கும். ஆனால் இந்த வருடம் கதவைத் திறந்தவுடன் உள்ளே பாய்ந்து வரும் நாய் போல பனியை காற்று வேகத்துடன் அள்ளி வீசிக் கொண்டிருந்தது. வீட்டுக்குள் அதிகமாக அடைந்து இருக்க… Læs mere நிழல் வாழ்க்கை – சிறுகதை

குதிரைவாகனம் பற்றி நூல் அறிமுகமும் ஒர பார்வையும்

q

இந்த மாத ஞானம் மாத இதழில் வெளியாகியுள்ள குதிரைவாகனம் பற்றி நூல் அறிமுகமும் ஒர பார்வையும் டென்மார்க் நாட்டில் மரணப்படுக்கையில் கிடக்கும் ஒருவரது நனவிடைத் தோய்தலாகவும்… சமகால நிகழ்வுகளின் பதிவாகவும்…. வார்க்கப்பட்ட இந்த நாவல் ஈழத்து சமூக வரலாற்றில் ஆறு தசாப்த காலத்தில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கின்ற சமூக மாற்றத்தின் வெட்டு முகம் எனக் கொள்ளத்தக்க தகமை கொண்டது. மரணப்படுக்கையில் இருப்பவர் யாழ். குடாநாட்டின் காரைநகரைச் சார்ந்த வணிகப் பெருமகன் சண்முகத்தாரின் மூன்றாவது தலைமுறையைச் சார்ந்தவர். தாத்தா… Læs mere குதிரைவாகனம் பற்றி நூல் அறிமுகமும் ஒர பார்வையும்

கலாநிதி. கலாமணியின் பூதத்தம்பி – இசைநாடகத்தின் விமர்சனம்

pooththamby1

  சூழ்ச்சியால் வெட்டுண்ட பூதத்தம்பியின் தலையைநிமிர்த்தி வைத்திருக்கின்றது இந்த இசைநாடகம்! –வி. ஜீவகுமாரன் கோயில் திருவிழாக்களுக்கு ஓலைப்பாயையும் எடுத்துச் சென்று, இவ்வாறான இசை நாடகங்களை கண்விழித்து விடிய விடிய பார்த்தது ஒரு காலம். காலம் சென்ற நடிகமணி திரு. வைரமுத்துவின் அரிச்சந்திர மயான காண்டம் இசைநாடகத்திற்கு பின்பு சுமார் 60 தடவைகளில் மேடையேற்றப்பட்ட பூதத்தம்பி இசை நாடகத்தை ஒளி-ஒலி வடிவில் பார்க்கும் சந்தர்ப்பம் இன்று கிடைத்தது. இந்த பூதத்தம்பி இசைநாடகம் 2 மணிநேரம் 10 நிமிடங்களில் 25… Læs mere கலாநிதி. கலாமணியின் பூதத்தம்பி – இசைநாடகத்தின் விமர்சனம்

கோமதி – குறுநாவல்

komathy

என்னுரை: புலம் பெயர் வாழ்வில் பெற்றதை விட இழந்ததே அதிகம் என்ற எனது 25வருடக் கூற்றிற்கு மேலும் ஒரு சாட்சிதான் இந்த வன்னிமகள் கோமதி! _________________________________________   கோமதி இரவு மணி இரண்டே கால். டென்மார்க்; தூங்கிக் கொண்டு இருந்தது. இந்தா. . . இந்தா. . . அவனை வரச்சொல்லுங்கோ. . …இதுக்காகத்தானே. . . வெறிபிடித்து திரிஞ்சவன். . . நடுச்சாமத்தில் கோமதியின் வெறித்தனமான அலறலினால் அரைத்தூக்கத்தில் இருந்த டெனிஷ் நேர்ஸ் இருவரும் திடுக்கிட்டு… Læs mere கோமதி – குறுநாவல்

பொட்டு – திருமதி. கலாநிதி ஜீவகுமாரன்

சென்றமாதம் ஒரு பிறந்த தின விழாவிற்கு குடும்பமாகச் சென்றிருந்தோம். என் மகளும் என் கூட வந்திருந்தாள். நெடுநாட்களாக என்னைக் காணாத என் நண்பி என்னிடம் வந்து கதைத்தாள். ”இவள் என் மகள்” என அறிமுகப்படுத்தினேன். ”ஆ… அப்படியா? நான் முன்பு இவாவைக் கண்டனான். ஆனால் உங்கள் மகள் என நினைக்கவில்லை” என்றாள். ”ஏன்?… எனக்கு புரியவில்லை” என விழித்தேன். ”இல்லையடி… அவள் வட்டமாக குங்குமம் வைத்திருக்கின்றாள்” இது அவள். ”கல்யாணம் ஆகினால் வைக்கிறது தானே” இது நான்.… Læs mere பொட்டு – திருமதி. கலாநிதி ஜீவகுமாரன்

ஞானம் 200வது நேர்காணல் தொகுப்பில் இடம்பெற்ற எனது நேர்காணல்.

jeevainterview

1)  ஓர் இலக்கிய வாதியாக தங்களை உருவாக்கிய குடும்பச் சூழல், இளமைப்பருவம், கல்வி போன்ற விபரங்களை முதலில் தாருங்கள். வாசகர்கள் அனைவருக்கும் இப்பேட்டியை எடுக்கும் திரு.ஞானசேகரனுக்கும் எனது பணிவான வணக்கங்கள். ஆரம்பத்திலேயே “ஓர் இலக்கியவாதி” என்ற அடைமொழியைத் தவிர்த்து இலக்கியத்திலும் அதன் வெவ்வேறு வடிவங்களிலும் மிகவும் ஈடுபாடு கொண்டவன் என்ற வகையில் இதனை ஆரம்பிக்கின்றேன். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சங்கானையில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தில் தான். அப்பப்பா மிகப் பெரிய ஒரு வியாபாரி எனக்… Læs mere ஞானம் 200வது நேர்காணல் தொகுப்பில் இடம்பெற்ற எனது நேர்காணல்.

”இப்படிக்கு அன்புள்ள அம்மா”. – ஒரு பார்வை – திரு. தம்பிராஜா பவானந்தராஜா

ஜேர்மனியில் வசிக்கும் எனது முகநூல் நண்பர் திரு. தம்பிராஜா பவானந்தராஜாவின் பார்வையில் ”இப்படிக்கு அன்புள்ள அம்மா”.”. திருமதி கலாநிதி ஜீவகுமாரன் அவர்களால் டேனிஷ் மொழியில் எழுதப் பட்டு திரு ஜீவகுமாரன் அவர்களால் தமிழிலில் மொழிபெயர்க்கப் பட்ட இப்படிக்கு அன்புள்ள அம்மா .என்னும் கதையை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது . இந்தக்கதை பற்றிப் பலரும் தமது கருத்துக்களையும் விமர்சனங்களையும் பகிர்ந்திருந்தாலும் .எனக்கும் இந்தக் கதை மிகவும் பிடித்திருந்ததால் எனது கருத்துக்கள் சிலவற்றையும் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்… Læs mere ”இப்படிக்கு அன்புள்ள அம்மா”. – ஒரு பார்வை – திரு. தம்பிராஜா பவானந்தராஜா

சண்டியனும் சண்டிக்குதிரையும் – சிறுகதை

விமானம் இலங்கையில் இருந்து டென்மார்க்கிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தது. அவள் தவறியது தொடக்கம் நேற்று மாலை எங்கள் வீட்டு முற்றத்தில் நடந்த அனைத்தையும் மனது சுய விசாரணணை நடாத்திக் கொண்டுவந்தது * நீயில்லாது விட்டால் இந்த உலகமே இல்லை என்றிருந்து…. நீயும் நானும் வாழ்ந்தது போல எவரும் வாழவில்லை என்றிருந்து…. நீயில்லாத உலகத்தில் இயற்கை சீக்கிரமாக என்னை அழைத்துக் கொண்டு போய்விடும் என்றிருந்து… பூவுடனும் பொட்டுடனும்… மார்பில் வந்த ஒரு சிறுகட்டியுடனும்… அவள் போன பின்பு அவள்… Læs mere சண்டியனும் சண்டிக்குதிரையும் – சிறுகதை

இதற்காகத்தானா (?) –சிறுகதை.

இந்த 34 வருடத்தினுள் என்னவெல்லாமோ மாறி விட்டது. ஒரு டென்மார்க் நாணயத்தின் பெறுமதி இலங்கை நாணயத்திற்கு 4.50ல் இருந்து 22.50 ஆகிவிட்டது. பாவித்த ஒரு சோடா அல்லது பியர் போத்தலைத் திருப்பிக் கொடுத்தால் அன்று கடைகளில் 1 குறோனைத் திருப்பித் தருவார்கள்;. இப்போது  1 – 1½குறோன்கள் தருகிறார்கள். ஆம்…அது இலங்கைப் பெறுமதிக்கு 4.50ல் இருந்து 33.75 ஆகியிருந்தது. அப்போது நாங்கள் இந்த நாட்டிற்கு வந்த காலம். றோட்டின் கரையில் கிடக்கும் ஒரு போத்தலை எடுத்து கடையில்… Læs mere இதற்காகத்தானா (?) –சிறுகதை.