மாங்கல்யம் தந்துதானே

தகவத்தில் காலாண்டு இதழ்கள் தெரிவில் முதலாவது இடத்தைப் பெற்ற சிறுகதை முப்பது வருடங்களுக்கு பிறகு வன்னிக்கு வந்து எல்லா இடமும் பார்த்துக் களைத்துப் போனம். ஒரு மினிவான் பிடிச்சுக் கொண்டு யாழ்ப்பாணம்… நல்லூர்… நயினாதீவு… திருக்கேதீஸ்வரம்… திருக்கோணமலை…கதிர்காமம்… இந்த நாலு கிழமையும் எப்படிப் போனது என்றே தெரியவில்லை. இன்றும் டென்மார்க்கில்  இருக்கிற உறவினருக்கு சாமான்கள் வேண்டிக் கொடுக்க என்று அவரும் பிள்ளையளும் ரவுனுக்குப் போட்டினம். நான் கொஞ்சம் ஓய்வாக இருப்பம் எண்டு கதிரையில் இருந்து  இந்த வாரமங்கையர் … Læs mere மாங்கல்யம் தந்துதானே

சிறந்த ஒரு கலைஞனின் மரணமும்… சின்ன சின்ன கறுத்தப் புள்ளிகளும்……

          அழியாதகோலங்கள் படம் வெளியாகிய பொழுது எனக்கு 16 வயது என்று நினைக்கின்றேன். அதிகாலைச் சூரியன் மெது மெதுவாகஎழுந்து வருவதை ஒரே இடத்தில் கமராவை வைத்து படம் பிடித்து அதன் பின்னணியில் எழுத்தோட்டம் சென்று கொண்டிருந்தது. ஒரு நல்ல ஒளிப்பதிவாளர் ஒருவரின் படம் என்றுநி னைத்தேன். படம் முடிவடைந்த பின்பு நினைத்தேன் சிறந்த ஒரு இயக்குனரின் திரைப்படம் என்று. மூன்றாம்நாள் அதே திரைப்படத்தை பாடசாலையைக் கட் செய்து கொண்டு காiலை மெற்னி… Læs mere சிறந்த ஒரு கலைஞனின் மரணமும்… சின்ன சின்ன கறுத்தப் புள்ளிகளும்……

3 செய்திகளும் 30 இணையத்தளங்களும்

  இந்தவார இணையத்தளங்களில் அனேகமாக இடம் பெற்றிருந்த 3 செய்திகள் 1. வட மகாணத்தில் பாலியல் உறவுகள் – கலாச்சாரச் சீழிவுகள் பெருகின்றன. 2.கட்டாய ஆள்சேர்ப்புக்கு பயந்து நிகழ்ந்த திருமணங்கள் முறிந்து போகும் அபாயங்கள். 3.விதவைகளுக்கான புலம் பெயர் மக்களின் உதவியும் கருத்தாடல்களும். இந்த 3 செய்திகளும் பரபரப்பாக பல இணையத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இவை மூன்று செய்திகளாக இருந்தாலும் போருக்குப் பின்பான நிதர்சனம் என்னும் நூலில் கோர்க்கப்பட்ட 3 கறுத்த அல்லது வெள்ளை மணிகளாகவே… Læs mere 3 செய்திகளும் 30 இணையத்தளங்களும்

இடைவெளி

எனக்கு இப்போது ஆறு கால்கள். நாலு சிறிய சக்கரத்தில் உருட்டிச் செல்லும் இந்த கை வண்டியை நேற்றுத்தான் நகரசபை எனக்குத் தந்தது. இரண்டு வருடமாய் நகரசபையுடன் இதற்கு பெரிய இழுபறி. இப்போது தான் அது எனக்கு கிடைத்திருக்கு. கடைகளுக்குள் உருட்டிச் சென்று எனக்கு மட்டும் தேவையான வீட்டுச் சாமான்கள் வேண்டுவதற்கு இந்த வண்டி வசதியானது. எனது குடியிருப்பும் இந்த பெரிய அங்காடிக் கட்டடத்திற்கு பின்னாகவே உண்டு. இதனுடனேயே லிவ்ற்றுக்குள் சென்று ஐந்தாம் மாடியில் உள்ள வீட்டுக்குள் சாமான்களைக்… Læs mere இடைவெளி

முகநூல்களிலும் இணையத் தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஏன் இந்த ஒப்பாரி?

முகநூல்களிலும் இணையத் தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஏன் இந்த ஒப்பாரி? யுவன் சங்கர் ராஜா என்ற ஒரு இந்தியப் பிரஜை இந்து மதத்தில் இருந்து இஸ்வாமிய மதத்துக்கு மதம்மாறி விட்டார் என்பதற்கு ஏன்தான் இத்தனை ஒப்பாரி என்று எனக்குப் புரியவே இல்லை. அவரின் தொழில் காரணமாக அவர் அறியப்பட்டிருக்கின்றார். அவரின் தொழிலுக்குரிய சம்பளத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ வழங்குவபர்கள் ரசிகர்கள். அவ்வளவுதான்! மற்ற அனைத்து விடயங்களும் அவரின் சொந்த விடயங்களே. அவர் ஒன்றும் உலகத்தை உய்விக்க வந்த வழிகாட்டி இல்லையே.!!… Læs mere முகநூல்களிலும் இணையத் தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஏன் இந்த ஒப்பாரி?

ஹொல்பெக் நகரசபை தேர்தல் 2013 – வேட்பாளர் அறிக்கை – 10 கேள்விகளும் – 10 பதில்களும்

ஹொல்பெக் நகரசபை தேர்தல் 2013 வேட்பாளர் அறிக்கை: 10 கேள்விகளும் 10 பதில்களும் வி. ஜீவகுமாரன்   1.நீங்கள் எவ்வளவு காலமாக இந்த தேர்தலில் நிற்க வேண்டும் என நினைத்திருந்தீர்கள்? 24.01.2013வரை இது பற்றிய கனவே எனக்கு இருந்திருக்கவில்லை. 25.01.2013 அன்று, நேவவழ கடையில் தற்செயலாக சோசல் குடியரசு கட்சியின் பிரதான வேட்பாளரான சினாவை சந்தித்த பொழுது, ”இப்படிக்கு அன்புள்ள அம்மா” நூல் வெளியீட்டுக்கு வந்திருந்த அறிமுகத்தினால் கதைத்துக் கொண்டிருந்த பொழுது, திரு. கங்காதரன் இம்முறைத் தேர்தலில்… Læs mere ஹொல்பெக் நகரசபை தேர்தல் 2013 – வேட்பாளர் அறிக்கை – 10 கேள்விகளும் – 10 பதில்களும்

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?

இலக்கியச் சர்ச்சைகள், இலக்கியவாதிகளை அங்கீகரிக்கும் அல்லது புறம் தள்ளும் நிகழ்வுகள் அனைத்தையும் உள்ளடக்கி ”போட்டிகள்” என்ற தலையங்கத்தில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று ஏனோ பல நாட்களாக என் மனதுக்குள் ஓர் எண்ணம் இருந்து கொண்டே வந்தது. போட்டிகள் என்பதன் அர்த்தம் தோற்பது அல்ல என்ற கருத்துப்பட எழுதுவதற்கு ஏற்ற முன்னுரை தேடிக்கொண்டு இருந்த பொழுது அண்மையில் ஒரு நாள் விஜய் தொலைக்காட்சியில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியை மாலைத் தேனீருடனும்… Læs mere உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?