ஜீவகுமாரன் கதைகளும் – விஷ்ணுவர்த்தினியின் திறனாய்வும் (விமர்சகரும் திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன்)

பிரபல எழுத்தாளர், டென்மார்க்கைச் சேர்ந்த நமது ஜீவகுமாரன் தமிழில் தந்துள்ள சிறுகதைத் தொகுப்பை ‘ஜீவநதி” பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ‘ஜீவநதி” என்ற இலக்கிய ஏட்டின் ஆசிரியர் கலாமணி பரணீதரன், ஜீவகுமாரன் கதைகளுக்கு எழுதிய பதிப்புரையில், கூறுகின்றார்| ‘இன்று உள்ள கதைசொல்லிகளில் ஜீவகுமாரன் தனித்துவமான சிறந்த கதை சொல்லியாகத் திகழ்கின்றார்’ இந்தக் கூற்று எனக்கும் உடன்பாடானதே. காரணம் ஜீவகுமாரன் லாவாகமாக எழுதும் பண்புடையவர் என்பதே எந்த படைப்பும் வெறுமனே கதையொன்றைக் கூறுவதனால் மட்டும் கலைப்படைப்பாக அமைவதில்லை. வேண்டுமானால், நல்ல கருத்துக்களை… Læs mere ஜீவகுமாரன் கதைகளும் – விஷ்ணுவர்த்தினியின் திறனாய்வும் (விமர்சகரும் திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன்)

இன்றைய ஞாயிறு (03-04-05) தினக்குரல் வாரமலரில் வெளியாகிய எனது பேட்டி. நேர்கண்டவர் – நிரோஷா தியாகராசா

இளையவர்களைப் பொறுத்தவரை எழுத்துக்கான சரியான அங்கீகாரம் கிடைக்காமை அவர்களுக்குள் ஒரு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தி விடுகிறது என நான் கருதுகிறேன். ஆனால் சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரை எழுதுவதற்கான சூழல் தானாகவே அமைந்து விடுகிறது. தங்கள் எண்ணங்களை அவ்வப்போது வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். பத்திரிகைகளுக்கு அனுப்பி அதற்காக காத்திருக்கும் மனநிலையை இந்த அவசர  உலகம் அவர்களுக்கு கொடுக்க மறுக்கிறது. என்று கூறுகிறார் எழுத்தாளர் ஜீவகுமாரன். ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜீவகுமாரன் எண்பதுகளில் டென்மார்க்குக்கு… Læs mere இன்றைய ஞாயிறு (03-04-05) தினக்குரல் வாரமலரில் வெளியாகிய எனது பேட்டி. நேர்கண்டவர் – நிரோஷா தியாகராசா

ஞாயிறு 26-04-2015 இலங்கை வீரகேசரி வாரமலரில் வெளியான நேர்காணல்

ஞாயிறு 26-04-2015 இலங்கை வீரகேசரி வாரமலரில் வெளியான நேர்காணல் பேட்டி கண்டவர் : ரேணுகா பிரபாகரன்.   எத்தனை வயதில் எழுத ஆரம்பித்தீர்கள்? நான் எனது 28வது வயதில் டென்மார்க் வந்த பொழுது டென்மார்க் அகதிகள் சங்கத்தின் ஆதரவில் குயிலோசை என்ற கையெழுத்துப் பிரதியிலான சிறுசஞ்சிகை ஒன்றை நடத்தினேன். அத்துடன் டென்மார்க்கில் இருந்து வெளிவந்த சஞ்சீவி என்ற இதழிலும் எழுத தொடங்கினேன். பின்பு டெனிஸ்கல்வி, தொழில், இரட்டைப் பிள்ளைகள் என சுமார் 20 வருட இடைவெளிக்குப் பின்பாக… Læs mere ஞாயிறு 26-04-2015 இலங்கை வீரகேசரி வாரமலரில் வெளியான நேர்காணல்

வீடு – சிறுகதை

வீடு – சிறுகதை ஏதாவது ஒரு கோயிலின் ஒலிபெருக்கியில் இருந்து கேட்கும் சுப்பிரபாத ஒலியுடன் காலைப் பொழுது புலர்வது போலவே இன்றும் புலர்ந்திருந்தது. இன்று அது பின்வளவு வைரவ கோயிலில் இருந்து என்பதால் அதிக சத்தமாய் இருந்தது. உயரப் பனையில் நாலு லவுட்ஸ்பீக்கர் கட்டியிருந்தார்கள் – நாலு திசையையும் பார்த்தபடி. காகம் வேறு கரைந்து கொண்டு இருந்தது. ”மைக்காரனின் அம்பிளிபயருக்குள் தண்ணியைக் கொண்டு போய் ஊற்றினால்தான் அடுத்த பத்து நாளும் பிள்ளைகள் ஒழுங்காக படிக்க முடியும்”குசினிக்கு பின்னால்… Læs mere வீடு – சிறுகதை

வரிச்சுமட்டை வேலிகள் – சிறுகதை

பொழுது இன்னும் புலரவில்லை.  சந்திரன்வீடு துரிதமாக இயங்கிக் கொண்டு இருந்தது.  எல்லோருக்கும் இடையில் மௌனத்திரைகள். பகல் பதினொரு மணிக்கு பலாலியில் இருந்து கொழும்புக்குச் செல்லும் விமாகத்தில் போகப் பதிவாகியிருந்தது. காலை எட்டுமணிக்கு காருக்குச் சொல்லியிருந்தார்கள். காரில் யாழ்ப்பாணத்துக்குப் போய் பின்பு ஆமியின் பஸ்சில் பலாலிக்குப் போகவேண்டும்.  கார் வர முதல் எல்லா சூட்கேசுகளும் சரியாக இருக்கின்றதா எனப் பார்த்துக் கொண்டார்கள்.  சந்திரன் முற்றத்து லைற்றைப் போட்டுவிட்டு சிகரட்டைக் கையில் வைத்து ஆழமாக யோசித்துக் கொண்டிருந்தான். ஆந்தப் பெரிய… Læs mere வரிச்சுமட்டை வேலிகள் – சிறுகதை

புலம் பெயர் வாழ்வும் தமிழ்க் கல்வியும்

புலம் பெயர் வாழ்வும் தமிழ்க் கல்வியும் இன் முற்பகுதியில் இலங்கைப் பிரச்சனை காரணமாக அகதிகளாக மேலைநாடுகளுக்கு இடம் பெயர்ந்து வாழத் தொடங்கிய குடும்பங்களும் உள்ளங்டகும் இடம்பெயர்ந்தவர்களும் தமிழ்க் கல்வியும் மேற்கல்வி அல்லது உயர்தொழில் புரிவதற்காக ஆங்கிலம் பேசும் நாடுகளுக்குச் சென்ற கல்விமான்களின் குடும்பங்கள் அனேகமானவை தம்மையும் அந்த நாட்டு ஆங்கில கனவான்களாக பாவித்து அந்த நாட்டுக் கலாச்சாரத்திற்கு ஏற்ப வாழ ஆரம்பித்ததாலும் ஆங்கிலம் பேசுதல் தமிழ் மக்களிடையே ஒரு கௌரவ அடையாளப்படுத்தலாக அன்றைய சமுதாயத்தில் அமைந்திருந்ததாலும் தம்… Læs mere புலம் பெயர் வாழ்வும் தமிழ்க் கல்வியும்