நாணயம் – சிறுகதை

  2012 தகவம் தெரிவில் முதலாவது காலாண்டுக்குரிய சிறுகதையாக தெரிவுசெய்யப்பட்டது. உலோக நாணயங்களின் இரண்டு பக்கங்களுடன் பரீட்சயப்பட்டதாலோ என்னவோ நாணயம் என்ற இந்த சிறுகதைக்கும் எனக்கு தலை, வால் என இரண்டு உபகதைகள் தேவைப்படுகிறது. தலை ”என்னைஉனக்குப்பிடிச்சிருக்கா?” ”ஆமாம்” ”நீயாரையாவதுகாதலித்துஇருக்கிறியா” ”இல்லை” வழமையானஇந்தமுதலிரவுசம்பாஷணையுடன்அவர்களின்வாழ்க்கைஇனிதேஆரம்பமாகியது. அவள்மூன்றாம்மாதம்முழுகாமல்இருந்தபொழுதுகணவனுக்குஒருமொட்டைக்கடிதம்வந்தது. ”திருமணத்துக்குமுன்பேஉனதுமனைவிதனதுவயிற்றைக்கழுவிப்போட்டுவந்தவள்” தனதுஅதிர்ச்சியைமுற்றுமுழதாகாகவெளிக்காட்டாதுநேராககடிதத்தைமனைவியிடம்கடிதத்தைநீட்டியடி, “ஏன்நீஇதனைமுதலிரவில்எனக்கு  மறைத்தாய்?” எனக்கேட்டான். ”இதுவா. . .நீங்கள்இதுபற்றிஎன்னிடம்கேட்கவில்யே”  எனச்சாதாரணமாகசொன்னபடிஅவள்பாத்திரம்கழுவுவதில்மும்மரமானாள். ”எத்தனைநாள்சொன்னனான். . . இந்தசோப்தண்ணிவேண்டிவராதையுங்கோஎண்டு. கைஎல்லாம்ஒரேஎரிவு” மொட்டைக்கடிதம்; வந்ததைவிடஇந்தப்பதில்மிகவும்அதிர்ச்சியாகஇருந்தது. ”நீதான்யாரையும்விரும்பவேஇல்லைஎனச்சொன்னாயே?” ”ஆமாம்நான்யாரையும்விரும்பவில்லை” ”அப்போஎப்பிடிகற்பமானாய்?” ”ஓ!…அதுவா..ரியூசனுக்குவந்தஒருவாத்தியார். . .அன்றுவீட்டில்வேறுயாரும்இருக்கவில்லை. .… Læs mere நாணயம் – சிறுகதை

ஜேர்மனிய கரப்பான் பூச்சிகள் – சிறுகதை

இது சக மனிதர்களைப் பற்றிய கதையே அல்ல. கரப்பான்களையும் என்னையையும் பற்றிய கதை. கரப்பான் என்ற பெயரைக் கேட்டாலோ அல்லது பார்த்தாலே அருவருப்புக் கொள்ளும் யாரும் தயவு செய்து இதனைப் படிக்க வேண்டாம். காரணம் இதனைப் படிக்க இருக்கும் எவரும் ஒரு நாள் நித்திரையைத் தொலைக்கப் போகின்றார்கள் என்பது உறுதி. ஏற்கனவே கரப்பான்கள் மீது அருவருப்பு உடையவர்கள் எதற்காக ஒருநாள் நித்திரையை வேறு தொலைக்க வேண்டும்:? நான் எனது மனைவி, இரண்டு மகள்களுடன் வசிப்பது டென்மார்க்கில். உலக… Læs mere ஜேர்மனிய கரப்பான் பூச்சிகள் – சிறுகதை

இது இவர்களின் கதை – சிறுகதை

மரணஅறிவித்தல் அகிலம்சிதம்பரநாதன் தோற்றம்: 10-06-1958 இறப்பு: 15-03-2013 பார்வைக்கு : நேற்று கிரியைகளும்தகனமும் : இன்று எனக்குத்தான் இந்த கிரியைகளும் தகனமும். வடிவான பெட்டியுள் என்னை கிடத்தியிருக்கினம். நான் செத்தால் என்ரை முதல் கூறையைத்தான் கட்டவேணும்எ ன்று சொல்லியிருந்தனான். அது போலை வடிவாய் கட்டியிருக்கினம். மகளும் அவரும் வந்துதான் எனக்கு சீலை கட்டினவை. மருமகள்கள் இரண்டு பேருக்கும் பயம் என்று வரவில்லை. அவர் கல்லுப் போலை நிற்கிறார். சந்தோசம் துக்கம் இரண்டையும் வெளியில் காட்டத் தெரியாத சீவன்… Læs mere இது இவர்களின் கதை – சிறுகதை

தாம்பத்தியம் – சிறுகதை

டென்மார்க்கின் சம்மர்காலக் காலைச்சூரியன் கண்ணைத் குத்துவது போல கயல்மொழிக்கு இருந்தது. ”எனக்கு அந்தப் பொடியன் சூட் ஆகும் போலை தெரியேல்லை அம்மா” ”ஏனடி பிள்ளை அப்பிடிச் சொல்லுறாய்” ”எனக்கு அடுத்த வருசம் யூனிவேசிற்றி முடியுது… இந்த பையனுக்கு அட்வான்ஸ் லெவல் கூட இல்லை…சும்மா ஒவ்வீஸ் வேலைதானே?” ”ஆனால் அவன் நல்ல குணமான பிள்ளையல்லோ” ”நல்லபிள்ளைப்பட்டம் கார் பில்லையும் கறண்ட் பில்லையும் கட்டுமோ அம்மா” * இன்று பதில் சொல்லியாக வேண்டும். ”ஆம்” அல்லது ”இல்லை”. ”இல்லை” என்றால்… Læs mere தாம்பத்தியம் – சிறுகதை

நானும் எனது மரணமும் – சிறுகதை

செக்கல் நேரம். ”உனக்காகத்தான் கொஞ்ச நாட்களாக உன் முன்னாலும் பின்னாலும் திரிந்து கொண்டிருக்கின்றேன்” கண்களில் அழைப்பு! அமைதியான அழைப்பு!! ஆக்கிரோசம் இல்லாது அரவணைக்கும் அழைப்பு!!! என்னுடைய பிறப்பு எவ்வாறு என்னால் தீர்மானிக்கப்படவில்லையோ… என் வாழ்வு எப்படி என்னால் தீர்மானிக்கப்படவில்லையோ… அவ்வாறே என் இந்த மரணமும் என்னால் தீர்மானிக்கப்படவில்லை. ஐம்பத்தியொன்பது வயதில் தொண்ணூற்று ஐந்து வயது வயதுவரை வாழ்ந்த களைக்கு, கடவுளாய் எனக்கு தந்திருக்கும் வரம் தான் என்னருகில் நிற்கும் இந்த மரணம். மிக அருகில்… மிக மிக… Læs mere நானும் எனது மரணமும் – சிறுகதை

மாங்கல்யம் தந்துதானே

தகவத்தில் காலாண்டு இதழ்கள் தெரிவில் முதலாவது இடத்தைப் பெற்ற சிறுகதை முப்பது வருடங்களுக்கு பிறகு வன்னிக்கு வந்து எல்லா இடமும் பார்த்துக் களைத்துப் போனம். ஒரு மினிவான் பிடிச்சுக் கொண்டு யாழ்ப்பாணம்… நல்லூர்… நயினாதீவு… திருக்கேதீஸ்வரம்… திருக்கோணமலை…கதிர்காமம்… இந்த நாலு கிழமையும் எப்படிப் போனது என்றே தெரியவில்லை. இன்றும் டென்மார்க்கில்  இருக்கிற உறவினருக்கு சாமான்கள் வேண்டிக் கொடுக்க என்று அவரும் பிள்ளையளும் ரவுனுக்குப் போட்டினம். நான் கொஞ்சம் ஓய்வாக இருப்பம் எண்டு கதிரையில் இருந்து  இந்த வாரமங்கையர் … Læs mere மாங்கல்யம் தந்துதானே

இடைவெளி

எனக்கு இப்போது ஆறு கால்கள். நாலு சிறிய சக்கரத்தில் உருட்டிச் செல்லும் இந்த கை வண்டியை நேற்றுத்தான் நகரசபை எனக்குத் தந்தது. இரண்டு வருடமாய் நகரசபையுடன் இதற்கு பெரிய இழுபறி. இப்போது தான் அது எனக்கு கிடைத்திருக்கு. கடைகளுக்குள் உருட்டிச் சென்று எனக்கு மட்டும் தேவையான வீட்டுச் சாமான்கள் வேண்டுவதற்கு இந்த வண்டி வசதியானது. எனது குடியிருப்பும் இந்த பெரிய அங்காடிக் கட்டடத்திற்கு பின்னாகவே உண்டு. இதனுடனேயே லிவ்ற்றுக்குள் சென்று ஐந்தாம் மாடியில் உள்ள வீட்டுக்குள் சாமான்களைக்… Læs mere இடைவெளி

ரணம் – சிறுகதை

என் மனைவி மாமிசம் ஏதும் சாப்பிடுவதேயில்லை. இலங்கையில் இருக்கும் வரை மாட்டிறைச்சியைத் தவிர அனைத்து இறைச்சி வகைகளையும் நான் சாப்பிட்டிருக்கின்றேன். . . .இல்லை அது தவறு. . . பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் களவாக ஒருநாள் சக மாணவர்களுடன் படத்திற்குப் போய் விட்டு வரும் பொழுது ஐந்துலாம்படிச் சந்தியில் உள்ள சாப்பாட்டுக் கடையில் கொத்துரொட்டி சாப்பிட்டேன் என்பது ஞாபகம் இருக்கிறது. சாப்பிட்டபிறகுதான் தெரிந்தது – அதில் மாட்டிறைச்சி கலக்கப்பட்டிருந்தது என்று. கையை வாய்க்குள் விட்டு வாந்தியா… Læs mere ரணம் – சிறுகதை