முகம் தெரியாத முகநூல் காதல்கள் – கட்டுரை

முகம் தெரியாத முகநூல் நட்பில்…  அதுவும் ஆண் பெண் என்னும் பொழுது அவர்கள் நடாத்தும் சம்பாசணைகள்  நட்பு என்ற எல்லையைத் தாண்டி… காதல் என்ற எல்லைக்குள் போவது வியப்பு ஒன்றும் இல்லை. சொந்த வாழ்வில் உள்ள வெற்றிடங்களை இந்த கணனித் திரையின் வார்த்தைகள் நிரப்பும் பொழுது மறு முனையுடன் எங்களை அறியாமல் நாங்களே முடிச்சுப் போட்டுக் கொள்வதும் இயல்பாகவே நடந்து விடுகிறது. மேலும் காதல் வாழ்க்கையின் அனுபவம் இல்லாது நேரடியாக திருமணப் பந்தத்தில் இணைந்த ஒரு ஆணுக்கும்… Læs mere முகம் தெரியாத முகநூல் காதல்கள் – கட்டுரை

யாழ்ப்பாணத் தமிழில் பேசும் ஒரு ஜேர்மனிய பெண்ணும் …..

யாழ்ப்பாணத் தமிழில் பேசும் ஒரு ஜேர்மனிய பெண்ணும் இணையத்தளங்களும்… முகநூல்களும்… ஊடகங்களும்…. மிகவும் நல்ல விடயம் தான்! மாற்றுக் கருத்துக்கே இடமில்லை!! ”ல, ள, ழ”வில் கொஞ்சம் இடித்தாலும் எயர்லங்கா பணிப்பெண்களின் தமிழை விடவே நல்லாகவே பேசுகின்றார்!!! மேலாக தமிழை எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கு வேண்டும் என்ற தனது பெருவிருப்பத்தையும் பதிவு செய்கின்றார்!!!! ஆனால் அதனை ஒரு உலக அதிசயம் போல் முகநூல்கள் பெரிது படுத்தும் பொழுது கொஞ்சம் இடிக்கவே செய்கின்றது. அதன் உச்சத்துக் போய்… Læs mere யாழ்ப்பாணத் தமிழில் பேசும் ஒரு ஜேர்மனிய பெண்ணும் …..

புத்தக விமர்சனங்களும் இணையத் தளங்களும். . .வி.ஜீவகுமாரன்

      இலக்கியம்  சார்ந்து  பெருகி வரும் இணயைத்தளங்களின் எண்ணிக்கையும் அவற்றின்ந டுவு நிலைமைகளையும் பார்க்கும் பொழுது சில ஆண்டுகளுக்கு முன் நான் சந்தித்த ஒரு அனுபவத்தை இந்தக் கட்டுரைக்கு முன்னுரையாக வைக்கலாம் என எண்ணுகின்றேன். 2011 வைகாசி 13.  தமிழக தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள வேண்டும்  என்ற ஆவலில் அன்று காரியாலயத்திற்கும் செல்லாமல் ஒருநாள் லீவு போட்டு விட்டு அதிகாலையே எழுந்திருந்தேன். டென்மார்க்கில் வசிக்கும் எங்கள் வீட்டில் இலண்டனில் இருந்து ஐங்கரன் நிறுவனத்தினரால் ஒலிபரப்பபடும்… Læs mere புத்தக விமர்சனங்களும் இணையத் தளங்களும். . .வி.ஜீவகுமாரன்

மானிப்பாய் இந்துக் கல்லூரி – சில ஆட்டோகிராவ்கள்

            (மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பசுமையான நினைவுகளுடன் என்னையும். . .எங்கெங்கோ வாழ்ந்து கொண்டிருக்கும் எனது நண்பர்களையும் இணைத்துக் கொண்டிருக்கும் அந்த வாகீசர் மண்டபம். . . செம்பருத்தி வேலிகள். . . மைதானத்தின் கரையில் நிற்கும்புளியமரம். . .அதன் பின்னால் நடந்து செல்லும் மகளிர் கல்லூரி மாணவிகள். . . இவைகளை உங்களுடன்ஆட்டோக்கிராவ்களாக உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்) பூபாலசிங்கம் மாஸ்ட்டரும் செம்பருத்தி தடியும்; அப்பொழுது நான் ஒன்பதாம் வகுப்பு… Læs mere மானிப்பாய் இந்துக் கல்லூரி – சில ஆட்டோகிராவ்கள்

சிறந்த ஒரு கலைஞனின் மரணமும்… சின்ன சின்ன கறுத்தப் புள்ளிகளும்……

          அழியாதகோலங்கள் படம் வெளியாகிய பொழுது எனக்கு 16 வயது என்று நினைக்கின்றேன். அதிகாலைச் சூரியன் மெது மெதுவாகஎழுந்து வருவதை ஒரே இடத்தில் கமராவை வைத்து படம் பிடித்து அதன் பின்னணியில் எழுத்தோட்டம் சென்று கொண்டிருந்தது. ஒரு நல்ல ஒளிப்பதிவாளர் ஒருவரின் படம் என்றுநி னைத்தேன். படம் முடிவடைந்த பின்பு நினைத்தேன் சிறந்த ஒரு இயக்குனரின் திரைப்படம் என்று. மூன்றாம்நாள் அதே திரைப்படத்தை பாடசாலையைக் கட் செய்து கொண்டு காiலை மெற்னி… Læs mere சிறந்த ஒரு கலைஞனின் மரணமும்… சின்ன சின்ன கறுத்தப் புள்ளிகளும்……

3 செய்திகளும் 30 இணையத்தளங்களும்

  இந்தவார இணையத்தளங்களில் அனேகமாக இடம் பெற்றிருந்த 3 செய்திகள் 1. வட மகாணத்தில் பாலியல் உறவுகள் – கலாச்சாரச் சீழிவுகள் பெருகின்றன. 2.கட்டாய ஆள்சேர்ப்புக்கு பயந்து நிகழ்ந்த திருமணங்கள் முறிந்து போகும் அபாயங்கள். 3.விதவைகளுக்கான புலம் பெயர் மக்களின் உதவியும் கருத்தாடல்களும். இந்த 3 செய்திகளும் பரபரப்பாக பல இணையத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இவை மூன்று செய்திகளாக இருந்தாலும் போருக்குப் பின்பான நிதர்சனம் என்னும் நூலில் கோர்க்கப்பட்ட 3 கறுத்த அல்லது வெள்ளை மணிகளாகவே… Læs mere 3 செய்திகளும் 30 இணையத்தளங்களும்

முகநூல்களிலும் இணையத் தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஏன் இந்த ஒப்பாரி?

முகநூல்களிலும் இணையத் தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஏன் இந்த ஒப்பாரி? யுவன் சங்கர் ராஜா என்ற ஒரு இந்தியப் பிரஜை இந்து மதத்தில் இருந்து இஸ்வாமிய மதத்துக்கு மதம்மாறி விட்டார் என்பதற்கு ஏன்தான் இத்தனை ஒப்பாரி என்று எனக்குப் புரியவே இல்லை. அவரின் தொழில் காரணமாக அவர் அறியப்பட்டிருக்கின்றார். அவரின் தொழிலுக்குரிய சம்பளத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ வழங்குவபர்கள் ரசிகர்கள். அவ்வளவுதான்! மற்ற அனைத்து விடயங்களும் அவரின் சொந்த விடயங்களே. அவர் ஒன்றும் உலகத்தை உய்விக்க வந்த வழிகாட்டி இல்லையே.!!… Læs mere முகநூல்களிலும் இணையத் தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஏன் இந்த ஒப்பாரி?

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?

இலக்கியச் சர்ச்சைகள், இலக்கியவாதிகளை அங்கீகரிக்கும் அல்லது புறம் தள்ளும் நிகழ்வுகள் அனைத்தையும் உள்ளடக்கி ”போட்டிகள்” என்ற தலையங்கத்தில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று ஏனோ பல நாட்களாக என் மனதுக்குள் ஓர் எண்ணம் இருந்து கொண்டே வந்தது. போட்டிகள் என்பதன் அர்த்தம் தோற்பது அல்ல என்ற கருத்துப்பட எழுதுவதற்கு ஏற்ற முன்னுரை தேடிக்கொண்டு இருந்த பொழுது அண்மையில் ஒரு நாள் விஜய் தொலைக்காட்சியில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியை மாலைத் தேனீருடனும்… Læs mere உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?