தெத்தெரி… தெத்தெரி – சிறுகதை
“தெத்தெரி… தெத்தெரி…தெத்தெரி… தெரி… தெரி… தெரியேல்லை…தெத்தெரி… தெத்தெரி…தெத்தெரி… தெரி… தெரி… தெரியேல்லை…” ’ தெத்தெரிக் குருடன்’ டென்மார்க்கிற்கு வந்தது போல இருந்தது. சிவமணி திடுக்கிட்டு எழுந்தார். பகல்நேரத் தூக்கத்தில் இருந்து எழும்பிய திகைப்பில் தெத்தெரிக் குருடனும் டென்மார்க் செஞ்சிலுவைச் சங்கத்தின் அகதி முகாமுக்கு வந்து விட்டானோ என்றும்… எப்படி வந்தான் என்ற வியப்புடனும்; சுற்றும் முற்றும் …