வரிச்சுமட்டை வேலிகள் – சிறுகதை

வரிச்சுமட்டை வேலிகள் – சிறுகதை

பொழுது இன்னும் புலரவில்லை.

 சந்திரன்வீடு துரிதமாக இயங்கிக் கொண்டு இருந்தது.

 எல்லோருக்கும் இடையில் மௌனத்திரைகள். பகல் பதினொரு மணிக்கு பலாலியில் இருந்து கொழும்புக்குச் செல்லும் விமாகத்தில் போகப் பதிவாகியிருந்தது. காலை எட்டுமணிக்கு காருக்குச் சொல்லியிருந்தார்கள். காரில் யாழ்ப்பாணத்துக்குப் போய் பின்பு ஆமியின் பஸ்சில் பலாலிக்குப் போகவேண்டும்.

 கார் வர முதல் எல்லா சூட்கேசுகளும் சரியாக இருக்கின்றதா எனப் பார்த்துக் கொண்டார்கள்.

 சந்திரன் முற்றத்து லைற்றைப் போட்டுவிட்டு சிகரட்டைக் கையில் வைத்து ஆழமாக யோசித்துக் கொண்டிருந்தான். ஆந்தப் பெரிய குடும்பத்தை எப்படி இந்தியாவில் கொண்டு போய் செற்றிலாக்குவது என்ற பெரிய கேள்விக்குறிதான் அவன் முன் நின்றது. ஆனாலும் இனியும் இருக்க முடியாது என்ற நிலை வந்த பொழுதுதான் அந்தப் பெரிய சுமையைத் தூக்கி தன் தோளில் போட்டுக் கொண்டான்.

 தனக்கு வேலைக்குப் போகும் பொழுதும் சரி, வரும் பொழுதும் சரி ஏதும் நடந்தால் தன் மூன்று பெண்பிள்ளைகளும் மனைவியும் நடுறோட்டில் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

யாழ்ப்பாண இலஙøகை வங்கிக்கும் கோட்டைக்கும் தூரம் அதிகமில்லை. ஏற்கனவே ஒருநாள் இரவு செல்லும் விழுந்தது தான்.

 சந்திரன் விசுவலிங்கத்தாருக்கும் வேவியக்காக்கும் பிறந்த இரண்டாவது ஆண்பிள்ளை.

 

விசுவலிங்கத்தார் ஆங்கிலகாலத்து ஆமிக்காரர். 58 கலவரத்துடன் அதைவிட்டு விட்டு இலங்கைப் போக்குவரத்து சபையில் வேலைக்கு வந்த பொழுது பரிசவாதம் தாக்கியதால் உயிரை மட்டும் பிடித்துக் கொண்டு, அந்த வீட்டின் நாலு வேலிக்கிடையில் நடக்க கூடிய பலத்தை ஆண்டவன் கொடுத்ததால். . . ஓரளவு தனது வேலைகளை மட்டும் கவனித்துக் கொண்டு வீட்டிற்கு பக்கத்தில் இருந்த மாலுக்குள் தனது வாழ்வின் பெரும் பகுதியை கழித்துக் கொண்டிருந்தார்.

 

புருஷனுக்கு கால் ஊனமாகிப் போனதால் குடும்ப பொறுப்பைக் கையில் எடுத்துக் கொண்டு கடனோ. ..கிடனோ பட்டு குடும்பத்தை ஒரு வழிக்கு கொண்டு வந்தவர் வேவி – வேவியக்கா.

 

மூத்தமகள் விஜயா. திருகோணமலைக் கல்விக்கந்தோரில் புக் கீப்பராக சேர்ந்து இன்று அக்கவுண்ட்டராக உயர்ந்திருந்தார். கணவன் மாவட்டக் கல்வி அதிகாரி. திருகோணமலையில் நல்ல வசதியாக இருக்கிறார்கள்.

 

விசுவலிங்கத்தாருக்கு கால்கள் இயலாமல் போன பின்பு, அடுத்த இரண்டு ஆண்பிள்ளைகளும் தான் வேவியக்காவின் இரண்டு கால்கள். சந்திரன் பாங்கில் வேலை செய்து கொண்டு குடும்பத்தைக்

கவனிக்க. . . . இளையவன் நெருங்கிக் கொண்டிருந்த தன் உயர்கல்வியையும் தூக்கி எறிந்து விட்டு கப்பலுக்குபøபோய் குடும்பத்தையே ஒரு கரைக்கு கொண்டு வந்தவன். இன்று அவன் டென்மார்க்கில்.

 

அவன்தான் தமையனுக்கு எழுதியிருந்தான், ”ஆகப் பிரச்சனையெண்டால் எப்படியும் இந்தியாவுக்கு வாங்கோ. நான் வாறன். நான் டென்மார்க்கிலை எண்டைக்குமே ஒரு சங்கானையானாக வாழும்வரை

உங்களை இந்தியாவில் வைத்துக் காப்பாற்ற முடியும்” என்று.

 

கடைக்குட்டி திலகம். இருபது வயதை நெருங்கி விட்ட பெண் பி;ள்ளை. ஆனால் வேவியக்காக்குப் பிறந்த மூன்றாவது ஆண்பிள்ளை என ஆனைக்கோட்டை மாமிமாரும், சங்கானை அன்ரிமாரும் கூப்பிடுவார்கள். அவ்வளவு துணிச்சல்காரி.

 

இத்தனை பேரையும் சந்திரன் இன்று கொழுமøபுகøகு கூட்டிச் சென்று அதால் இந்தியாவுக்கு கொண்டு செல்லப் போகின்றான்.

 

எரிந்து வந்த சிகரட்நுனி கையைச் சுட்டபோதுதான் தனக்குள் யோசித்துக் கொண்டிருந்ததை விட்டு விட்டுத் திரும்பிப் பார்த்தான்.

 

அவன் மனைவி மூன்று பெண் குழந்தைகளையும் வெளிக்கிடுத்திக் கொண்டு இருந்தாள். அவளையுமறியாமல் அன்றில் அவளிக் கட்டுப்பாட்டுக்குள் நிற்க முடியாது கண்கள் பொல பொல என்று கொட்டிக் கொண்டு இருந்தது. விக்கி விக்கி அழுதாள் குழந்தைகள் பயப்பிடும் என்ற எண்ணம் ஓர் புறமும், தனது தாய் தகப்பன் சகோதரங்களை விட்டு விட்டு போக வேண்டும் என்ற கவலைகள் மறு புறமும் அவளை வாட்டியது.

 சந்திரனுக்குத் தெரியும் மனைவியின் நிலை. ஆனாலும் மௌனம் காத்தான்.

 ”சரி பிள்ளை அழாதை. . . நாங்களும் வாறம் தானே” வாசற்படிக் கட்டில் வெளிக்கிட்டபடியே இருந்தபடி விசுவலிங்கத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

 ”இல்லை மாமா. . .அப்பா அம்மாக்கு ஏதும் நடந்தால். . .” சந்திரனின் மனைவியால் ஆமலும் அடக்க முடியவில்லை. சந்திரன் எதுவும் சொல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

 அவ்வேளையில் ஓர் கற்பூரக்கட்டியுடன் வந்த தாயாரைப் பார்த்து ”எங்கை போறியள்” என்றான்.

 ”அம்மாளாச்சிக்கு ஓர் கற்ப?ரம் கொழுத்திப் போட்டு. . . ” சொல்லி முடிக்க முதலே வேவியக்கா விம்மத் தொடங்கினா.

 வீட்டிற்கு நாலு வீடு தள்ளி இருந்த வெளியில் நின்ற அரசமரத்தின் கீழ் ஓர் கல் வந்து, பின் சூலம் வந்து, பின் ஓர் அம்மன் சிலையைப் பிரதிஷ்டை செய்து அதுவே அம்மன் கோயிலாக மாறிய அத்தனை நிகழ்வுகளிலும் வேவியக்காவின் பங்களிப்பு அதிகம்.

 வீட்டின் எந்த நல்லது கொட்டது என்றாலும் முதல் நேர்த்தி அம்மனுக்குத் தான். நேர்த்தியின் பருமன் ஓர் கற்பூரக்கட்டி தொடக்கம் பொங்கல் வரை பருமனில் மாறுபடும்.

 ”இப்ப இருட்டுக்கை வேண்டாம். கார் வந்த பிறகு எல்லாழும் போய்க் கும்பிட்டிட்டு போகலாம் தானே” என சந்திரன் சொன்ன போது அதைத் தட்ட ஏலாமல் வீட்டிற்குள் திரும்பிப் போகவிருந்த வேவியக்காவின் கவனத்தை ஒழுங்கையடியில் குலைத்த நாய்களின் சத்தம் திருப்பியது.

 சந்திரன் கதிரையிலிருந்து எழுந்து பார்த்தான்.

 ஒழுங்கையில் இரண்டொரு அரிக்கன் லாம்கு விளக்குகள்.

 ”அன்ரியாக்களும் ஆசையம்மாக்களும் வருகினம் போலை கிடக்கு” – அவை முறையே வேவியக்காவின் இளைய சகோதரியும் மூத்த தமக்கையும். அவர்களுக்கு நாட்டை விட்டு வெளிக்கிட துணிவுமில்லை. . . பணமும் இல்லை.

 ஆனாலும் தiயிடி என்னும் முன்னே காலடியில் வந்திருக்கும் சகோதரங்களை விட்டு விட்டு. . . .

வேவியக்கா பிரமை பிடித்தது போல் நின்றா.

 ”என்னப்பா திகைச்சுப் போய் நிக்கிறாய். நானும் என்ர சகோதரங்களை விட்டுட்டு இந்த பச்சை மண்ணுகளுக்காக வெளிக்கிட்டிட்டன் தானே” என சந்திரனின் பிள்ளைகளைக் கையுள்ளும் மடியிலும் வைத்தபடி சமாதானப்படுத்தினார் விசுவலிங்கத்தார்.

 ”அப்பாக்கு ஆமியிலை இருந்ததாலை மனதிலை நல்ல இறுக்கம்” என நினைத்தபடி தேத்தண்ணியை ஊற்றி வந்து அனைவருக்கும் கொடுத்தாள் திலகம்.

 ”அன்ரி ஆட்களுக்கும் ஊத்து” இது அடைத்த குரலில் வேவியக்கா.

 அன்ரியாக்கள், அக்கம், பக்கம், சந்திரனோடு வளர்ந்த சின்ன வயதுச் சினேகிதங்கள், திலகத்தின் பள்ளித் தோழிகள். . . . என சற்றே நிலம் வெளித்த அந்த முற்றத்தில் கதிரைகளிலும், வாங்கிலும்,

நிலத்திலுமாக உட்கார்ந்திருந்தார்கள்.

 யாரும் எவருடன் அதிகம் பேசவில்லை.

 

”அப்ப இனி தார் வீட்டைப் பாக்கிறது” அக்கறையுடன் மாகாதேவன் சந்திரனிடம் கேட்டான்.

சந்திரன் ஓர் தரம் விரக்தியாகச் சிரித்தான்.  

 

அதன் அர்த்தம் மகாதேவனுக்குப் புரிந்தது.

 

”அன்ரியவை பார்ப்பினம்.. . . ஆனால் அவையும் வெளிக்கிட்டிட்டால். . . அவ்வளவு தான்”

மகாதேவன் மௌனமானான்.

மகாதேவன் போல் முற்றத்தில் இருந்த அனைவரும் ஏதும் கேட்டு . . அல்லது கதைத்து. . .அந்த மௌனத்தை கலைக்க விரும்பினாலும். . . .எதைக் கேட்பது. . .அல்லது எதைக் கதைப்பது. . . . என்ற ஆழ்மன ஆராச்சிகள் எல்லாம் அங்கு நிலவிய மௌனத்திடம் தோற்று நின்றன.

 

இந்த நெருக்கடியில் சந்திரனின் மூன்று பிள்ளைகளும் அவனின் ஒன்று விட்ட தமைக்கையின் மகளும் கதைத்துக் கொண்டிருந்ததைக் கேட்க அனைவரின் கண்களிலும் கண்கள் கலங்கின.

 ”எங்கை போறியள்”

 ”இந்தியாக்கு”

 ”ஏன்”

 ”இஞ்சையிருந்தால் ஆமி சுட்டுப் போடும்”

 ”அப்ப என்னையும் கூட்டிக்கொண்டு போங்கோ”

 ”நீ உங்கடை அப்பா அம்மாவோடை வா”

 “எங்கடை அப்பா அம்மா அங்கை வந்து வேலை செய்ய ஏலாது. உங்களுக்கு உங்கடை சித்தப்பா வெளிநாட்டிலை இருந்து காசு அனுப்புவார். எங்களுக்கு காசு அனுப்ப தாருமி;ல்லை”

 அந்த சின்ன வாயில் எத்தனை பெரிய வார்த்தைகள். அது கூடியிருந்தவர்களின் நரம்புகளை இராவி அறுத்தது.

 அவைகள் கதைக்கும்; எந்த உண்மைகளையும் தாங்கும் நிலையில் சந்திரன் இல்லை.

 “இந்தா நிஷா. . .ஐஞ்சு ரூபா. . .நாங்கள் போன பிறகு நீ சொக்கிலேற் வேண்டிச் சாப்பிடு”

சந்திரன் பேச்சின் திசையைத் திருப்பினான்.

 நேரத்தைப் பார்த்துக் காண்ட சந்திரன் தங்கச்சியாரிடம், “திலகம் வா. எல்லாத்தையும் எடுத்து வெளியில் வைப்பம்” என்றவாறு எழும்ப, “ஏன் அவளை. . . நாங்கள் எடுத்து வைப்போம் தானே” என அனைவரும் எழ அங்கிருந்தவர்கள் மத்தியில் ஓர் கலவரம் படர்ந்தது – செத்த வீட்டில் பிரேதம் எடுக்க முதல் ஓர் கலவரம் படருமே. . . அது போல. . . ..

 முகங்கள் ஒன்றை ஒன்று சந்திக்க மறுத்தன. யாருக்கு கார் ஆறுதல் கூறுவது?

 விசுவலிங்கத்தார் மட்டும் அவ்வளவு நடக்க முடியாததால் எழும்பாமல் இருக்க, மற்றைய எல்லோரும் தலைவாசலுக்குள் போய் சந்திரன் குடும்பத்தினர் அனைவரின் கைகளைப் பிடித்தபடி விம்மினார்கள்.

 அப்போ வேவியக்கா “எங்கே என யாரோ கேட்க”, அனைவரின் கண்களும் அவரைத் தேடியது.

 அறை, தலைவாசல், குசினி எங்கும் வேவியக்காவைக் காணவில்லை.

 ஓர் சின்னப் பரபரப்பு.

 “அம்மா!. . . அம்மா!!” என்றவாறு சந்திரன் பின்வளவுப்பக்கமும் கக்கூஸசடிப் பக்கமும் போய்ப் பார்த்தான்.

 வேவியக்கா பின்வளவில் நின்ற தென்னைமரத்தைப் பிடித்தபடி வளவு முற்றiயும் பார்த்துக் கொண்டு நின்றா.

 “என்னம்மா. . . நேரம் ஆகுதல்Nலூ. . . “

 “இல்லையடா. . . .” என்று ஏதோ சொல்ல எடுத்தாலும் சொல்லத் தெரியவில்லை.

மூக்கை உறிஞ்சியபடி கண்களை முழங்கையால் துடைத்தபடி வீட்டுக்குள் வந்த வேவியக்காவை நேர் கொண்டு பார்க்கும் வலு அங்கு யாருக்கும் இருக்கவில்லை.

 இந்த இக்கட்டை சந்திரனின் சிறியதாய் மகன் சுரேசின் குரல் உடைத்தது.

 “அன்ரி. . .ஒழுங்கேக்கை கார் வந்திட்டுது” என அவன் சொன்ன போது வேவியக்கா அவனைக் கட்டிக் கொண்டு பலத்த குரலில் அழத்தொடங்கினா.

 “வேவி. . . போற நேரத்தில் அழக்கூடாது . . . அழக்கூடாது. . . “ எல்லோரும் வேவயிக்காவை சமானப்படுத்த முயன்று தோற்றுப் போனார்கள்.

 வேவியக்கா தன்னைத் தானே அடக்க முடியாது தவித்தா.

 அப்போது சந்திரன் சற்றுக் கோபமாக, “இண்டைக்குப் போனால் போனலை தான். . . நானும் செத்து பிள்ளையள் நடுத்தெருவுக்கு வந்த பிறகு வள்ளத்திலை போங்கோ” என அதட்டினான்.

 “சநøதிரன் போகேக்கை சந்நோஷமாய் வெளிக்கிட வேணும். . .நீ பொறு. . .திலகம் வந்து அம்மான்ரைக் கையைப் பிடி” என யாரோ ஒருத்தர் சொல்ல திலகமும் அழுதபடி வந்து தாயின் கைகளைப் பிடித்தாள்.

 அன்ரியின் மகன் சுரேஸ் விசுவலிங்கத்தினாரின் கைகளைப் பிடித்து முன்படியில் இருந்து கவனமாகத் எழும்ப உதவி செய்ய மற்றவர்கள் பெட்டிகளை தூக்க அனைவரும் தலைவாசலில் இருந்து முற்றத்துக்கு இறங்கினார்கள்.

 வேவியக்கா தன்னை அடக்க முடியாது தவித்தாலும் திலகம் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

 “அம்மா கற்பூரம் எங்கை” மெதுவாக கேட்க கைகளைத் திறந்து காட்டினா. கைமுட்ட விளைவு கற்பூரம்.

 “50 வருசமாய் வோட்டுப் போட்டவையும் வாழவைக்கேல்லை. . . வந்து வந்து காசு கேட்க குடுத்த 25 இயக்கங்களும் வாழ வழி செய்யேல்லை. . . . எல்லாரையும் நம்பினதை விட நாங்கள் போராடியிருக்க வேணும். . . ..” என நிதர்சனமான ஓர் உண்மையை கூட்டத்தில் இருந்து யாரோ சொன்னார்கள்.

 நொந்து போயிருந்த மனங்களை அது சற்றுக் குத்தியது.

 யாரும் பேசாது ஒழுங்கையில் இறங்கினார்கள்.

 வீட்டு வாசலுடன் இருந்த பொதுக்கிணற்றடி. . .அப்பால் பிள்ளைகள் விளையாடும் விளாhத்தியடி. . .

சிறயதாய் வீடு. . .பெரியன்ரி வீடு என்று ஒழுங்கை நீண்டு வந்து இடையில் பெரிய வளவில் ஒன்றில் நின்ற அம்மாளாச்சியின் அரசடியில் நின்றது.

 ஒவ்வோன்றையும் தாண்டிவர வேவியக்காக்கு மனத்திலும் உடலிலும் அதிக பலம் தேவைப்பட்டது.

 தினசரி நூறு தடவைக்கு மேல் நடந்து வெறும் கால்களுடன் நடந்து திரியும் ஒழுங்கை தான் அது. ஆனால் இன்று மட்டும் ஒழுங்கையில் இருந்த சரளைக் கற்கள் அதிகமாகவே குத்தியது.

 இப்போது அனைவரும் கோயிலடியில் நின்றார்கள்.

 “அம்மா கற்பூரத்தைக் கொறுத்துங்கோ” எனச் சந்திரன் சொல்ல வேவியக்கா தன் கைநிறைய வைத்திருந்த விளைவு கற்பூரத்தை வாசல் கற்கள் மீது வைத்தா. வேவியக்கா கொழுத்தி கொழுத்தியே அதிக கருமை பெற்ற கல்லு அது.

 நெருப்புக் குச்சியைத் தட்டி அதைக் கொளுத்தி விட்டுஇ “இனி எப்ப ஆச்சி உன்னைக் காணப் போறன்” எனத் தலையில் அடித்துக் கொண்டு குழறத் தொடங்கினா.

 கற்பூரம் ஏற்றி வைத்த கற்கள் கூடக் கதறத் தொடங்கியது.

 “அம்மா அழாதையுங்கோ. . . அழாதையுங்கோ. . . “ எனத் திலகம் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதாள்.

 “விடடி என்னை. . .எல்லாருமாய் என்னை என்ரை ஆச்சியிற்றை இருந்து கொண்டு போகப் போறியள்.

அவாவோடை கொறு;சம் இருக்க விடடி”, திலகத்தின் கைப்பிடியில் இருந்து திமிறிக் கொண்டு கோயில் வாசலில் ஒப்பாரி வைத்தபடி குந்தியழுதா.

 “மனுஷி போய்ச் சேர முதலே செத்துப் போடும் போலை கிடக்கு” கூட்டத்தினிடையே ஒரு குசுகுசுப்பு.

 அப்போது ஒழுங்கை முகரியில் நின்ற கார் உரத்துக் N;hர்ன் அடித்தது. இது வேவியக்காவின் உயிரை உலுக்கியது போன்றிருந்தது.

 அதேவேளை ஒழுங்கை முகரியில் கேட்ட குரல் அனைவரின் கவனத்தை அதியமாகத் திருப்பியது.

 “தெத்தெரி. . . தெத்தெரி . . . தெதரி. . .தெரி. . .தெரியேல்லை. . . .

தெத்தெரி. . . தெத்தெரி . . . தெதரி. . .தெரி. . .தெரியேல்லை. . . .” என்றவாறு தெத்தெரிக் குருடன் தனது தடியைத் தட்டிக் தட்டிக் கொண்டு வந்தான்..

 ஊத்தை உடுப்பு. . . உடம்பை மறைக்க இடுப்பில் ஓர் சின்னத் துண்டு துணி. . . ஒரு கையில் தடி. . .மறுகையில் தேத்தண்ணீர்க் குடிக்க பால் ரின் பேணி. .. அதனுள் சில சில்லறைகள். . . .கக்கத்தினுள் இரண்டொரு ஊத்தை உடுப்புகள். . ..

 தெத்தெரி. . . தெத்தெரி என அவன் கூவிப் பிச்சை எடுப்பதால் அவன் பெயரே தெத்தெரியாகி விட்டது.

 

பருத்திதுறை தொடக்கம் கொடிகாமம் வரை யாழ்க்குடாநாட்டில் பல ஊர்கள் அவனுக்கு அத்துப்படி. ஒவ்வோர் ஊர்களிலும் ஓர் தங்கு மடம். ஆவ்வகையில் சங்கானையில் அவனுக்கு ஆதரவு வேவியக்கா வீடு.

 

“குருடன் வாறான். முழிவிளத்துக்கு கூடாது” எனக் கூட்டத்திடையே ஓர் சரசரப்பு. . .

 

கோயிலடியிலøவழமைக்கு மாறாக அந்தக் காலைவேளையில் அதிகமாய் ஆட்கள் நின்ற அசுமாத்தத்தை நன்கு உணர்ந்த தெத்தெரி, “என்ன விசேசமாக்கும்” என அவன் கேட்க

“அது சந்திரன், வேவியக்காவை; இந்தியாக்குப் போகினினம்” என அங்கிருந்தவர்கள் சொன்னார்கள்.

 

“வேவியக்கை. . .வேவியக்கை. . .நீ போறியோ. . . .இனி நான் தார் வீட்டை தங்கிறது. . . .

சந்திரனைக் கொண்டு என்ரை செத்தவீடு செய்வன் எண்டியே.. . . இப்ப நீயும் போகப்போறியோ”

 

வேவியக்காவின் உடம்பு முழுக்க குளிர்ந்து கொண்டு வந்தது.

 

“வேவியக்கை இனி தார் எனக்கு குளிக்க வாக்கிறது. . . . என்ரை காசுகளை எண்ணித் தாறது. . .” எனத் தொடர்ந்தான்.

 

ஆதிகாலையில் இருந்து அடிமனத்துள் இருந்து ஆட்டிக் கொண்டிருந்த ஓர் பூதாகாரம் மேலே மேலே எழுந்து வந்து கொண்டிருந்தது.

 “எனக்குத் தான் கண்ணில்லை. .. . நீயும் கண்ணை மூடிக்கொண்டு போறியோ” தெத்தெரி தொடர்ந்தான்.

 பெத்த பிள்ளைகள் நாலுடன் பெறாத பிள்ளையா அவனையும் வளர்த்த வேவியக்காவின் மனம் இப்போது அதிகமாய் தள்ளாடியது.

 “தெத்தெரி நான் போகேல்லையடா. . .உனøனையும் இந்த அம்மாளாச்சியையும் விட்டுட்டு நான் போகேல்லையடா. . . .” எனக் குமுறிக் கொண்டு எழுந்த வேவியக்கா அப்படியே மயங்கிச் சாய்ந்தா. திலகம் கைத்தாங்கலாக பிடித்து தனது மடியில் வைத்துக் கொண்டாள்.

 சந்திரன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தான். ஆவன் மனது பதைபதைத்தது.

 “தள்ளி நில்லுங்கோ. . .கொஞ்ற;சம் காத்துப்படட்டும். . .” என கூட்டத்தை விலக்கி யாரோ தண்ணி தெளித்தார்கள்.

 அப்போது ஓர் கையை கோயிலடித் தென்னையிலும் மறு கையை கைத்தாங்கலாக சுரேசன் பிடிக்க நின்றிருந்த விசுவலிங்கத்தார் “சந்திரன் இஞ்சை வா” எனக் கூப்பிட்டார்.

 சநøதிரன் தகப்பனுக்கு கிட்டவாகப் போனார்.

 “சந்திரன். . .நான் சொத்தியெண்டாலம் உன்னோடை வாற தையிரியம் எனக்கிருக்கு. . .

ஆனால் கொம்மாக்கு எந்த தைரியமும் இல்லை. . .. அவள் இந்தியாக்கு வந்தாலும் ஒரு நடைப்பிணமாய் தான் இருக்கப் போறாள். . . வீடு. . .வளவு. . . சொந்தங்கள். . . .அக்கம். . .பக்கம். . .இந்தக் கோயிலடி. . . எண்டு வரிச்சுமட்டை கட்டின வேலியள் மாதிரி கட்டுப்பட்டு இருக்கிறா. இப்ப ஏதோ ஒரு மட்டைச்சரி கயிற்றைச் சரி நீ கழட்டினாய் எண்டால் முழுவேலியும் பாறிப்போகுமடா”

 தகப்பன் சொல்லுவதில் உள்ள நியாயங்களை சந்திரன் மௌனமாக கேட்டுக் கொண்டு நிற்க விசுவலிங்கத்தாரே தொடர்ந்தார்.

 “நீ பிள்ளையளோட போ. . . திலகத்தையும் இஞ்சை ஆமிக்காரருக்கை வைச்சிருக்கேலாது. . . அவளையும் கூட்டிக் கொண்டு போ. . . .நாங்கள் எப்பிடியோ இஞ்சை காலத்தைக் கடத்திப் போடுவம்”

 தகப்பன் சொன்னவற்றிக்கு சந்திரன் எதுவும் எதிர்த்துக் கதைக்கவில்லை.

 வரிச்சுமட்டை வேலிகளின் பலங்களையும் பலவீனங்களையும் அவன் நன்கு அறிவான்.

 “காரைப் போகச் சொல்லுங்கோ. . . நாளைக்குப் போகலாம்” எனச் சுற்றி நின்றவர்களிடம் சொல்லி விட்டு தாய்க்கு கிட்டவாகப் போனான்.

 “அம்மா வீட்டை வாங்கோ. . . .போவம்” எனக் கூறிய பொழுது முதன் முதலாக சந்திரனின் குரல் தழதழத்தது.

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)