மாங்கல்யம் தந்துதானே

மாங்கல்யம் தந்துதானே

5

தகவத்தில் காலாண்டு இதழ்கள் தெரிவில் முதலாவது இடத்தைப் பெற்ற சிறுகதை

முப்பது வருடங்களுக்கு பிறகு வன்னிக்கு வந்து எல்லா இடமும் பார்த்துக் களைத்துப் போனம்.

ஒரு மினிவான் பிடிச்சுக் கொண்டு யாழ்ப்பாணம்நல்லூர்நயினாதீவுதிருக்கேதீஸ்வரம்திருக்கோணமலைகதிர்காமம்

இந்த நாலு கிழமையும் எப்படிப் போனது என்றே தெரியவில்லை.

இன்றும் டென்மார்க்கில்  இருக்கிற உறவினருக்கு சாமான்கள் வேண்டிக் கொடுக்க என்று அவரும் பிள்ளையளும் ரவுனுக்குப் போட்டினம்.

நான் கொஞ்சம் ஓய்வாக இருப்பம் எண்டு கதிரையில் இருந்து  இந்த வாரமங்கையர்  மஞ்சரியைப் பிரட்டத் தொடங்கினன்.

திருமணங்கள் என்பது பற்றி இந்த வாரமங்கையர் மஞ்சரியில் ஒரு கட்டுரை வந்திருந்தது.

மாங்கல்யம்தந்துனானேன
மமஜீவனஹேதுனா
தந்தேபத்னாமிஷுபகே
வம்ஜீவஷரதாம்ஷகம்

கட்டுரையை வாசிக்கத் தொடங்கும் பொழுது யாரோ வந்து என் முன்னே நிற்பது போலத் தெரிந்தது.

புத்தகத்தில் இருந்து முகத்தை திருப்பி பார்த்தேன்.

எங்கள் கனககுஞ்சி சித்தப்பாவின் மகள் சுகுணா நின்றிருந்தாள். கையில் அழகான ஒரு பெண் குழந்தை.

கனககுஞ்சி சித்தப்பாவும் சின்னம்மாவும் நேற்றுப் பின்னேரம் வந்து இவளைப் பற்றித்தான் கவலைப்பட்டுக் கொண்டு இருந்து கதைத்தவை. சித்தப்பாக்கு கொஞ்சம் வெறிவேறைஅதுக்காக அவர் சொன்னதுகளிலை உண்மை எதுவும் இல்லாமல் இல்லை.

போராட்டம் அவர்களின் வாழ்க்கையை சின்னாபின்னப் படுத்திதான் விட்டிருந்தது.

சுகுணாக்கு என்ரை மூத்தமகள் டெனியாவின் வயதுதான் இருக்கும். டெனியாக்கு போனவரு,ம்தான்  18 முடிஞ்சு கார்
லைசென்ஸ் எடுக்க வேணும்யூனிவேசிற்றிக்கு போய்வர சுகமாக இருக்கும் எண்டு கார் ஓட்டும் வகுப்புக்கு போய்க்கொண்டு இருக்கிறாள்.

சுகுணாவோஅவளே ஒரு குழந்தை….இப்ப அவளின்ரை கையிலை ஒரு குழந்தை.

என்னவாசிக்கிறியள்

நான்அ வளை ஆயிரம் கேள்விகள் கேட்க முதல் அவளாகவே என்னைக் கேட்கத் தொடங்கினாள்.
கனககுஞ்சித் சித்தப்பா என்னைப் பற்றி நல்லாய்ச் சொல்லியிருக்க வேண்டும். அதுதான் அவள் என்னில் காட்டும் இந்த நெருக்கம்.

மாங்கல்யம்தந்துதானே

சொல்லிவிட்டு அவளைப் பார்த்தேன்.  

இதைத்தான் தாலிகட்டேக்கை குருக்கள் சொன்னவர்அவளாக தன் கதையை சொல்லத் தொடங்கினாள்.

இரத்தச் சொந்தங்கள் இலகுவாகவே ஒட்டிக் கொள்கின்றன.

*

தெற்காலை அரசடி கோயில் வாசலிலை நிண்ட நிலையிலைதான் என்ரை தாலிகட்டுநடந்தது.

எங்கடை வீட்டுக்கார ஆக்களும், குமார் வீட்டுக்காரரும் ஒரு ரைக்கறிலை போனனாங்கள்.

வெள்ளிக்கிழமை மத்தியனப்பூசை முடிஞ்ச பிறகு வடக்காலைச் சின்னக்குருக்கள், ”கெதியாய்வாங்கோகெதியாய்வாங்கோஎண்டு கூப்பிட்டு குமாரின்ரை கையிலை தாலிக்கொடியைக் குடுத்து எனக்கு கட்டச் சொன்னவர்.

எங்களுக்கு முன்னாலையும் மூண்டு நாலு ஆக்களுக்கு தாலிகட்டு நடந்தது.

எங்களுக்கு பின்னாலையும் தாலிகட்ட ஆக்கள் காத்துக் கொண்டு இருந்தவை. அவை கோயிலுக்கு முன்னாலை  இருந்த தேர்முட்டிக்கு கீழையும்,இலவமரத்துக்கு கீழையும் கூட்டம் கூட்டமாக காத்துக் கொண்டு இருந்தினம்.

எல்லா மாப்பிளை பொம்பிளையளும் என்ரை வயதொத்த பிள்ளையள்தான்.

தாலிகட்டு முடிஞ்ச ஆக்கள் லாண்ட் மாஸ்டர்களிலும், ரைக்டர்களிலும், மினிவான்களிலும் தங்கடை தங்கடை வீட்டுக்கு போயிட்டினம். சிலர் பெரியகடைப் பக்கம் இருந்த சாப்பாட்டுக் கடைகளுக்குப் போயிட்டினம்.    

அரசடி வைரவர் கோயிலில் நடந்த கடைசிக் கல்யாணம் எங்கடைதான். அடுத்தநாள் சின்னக் குருக்களைக் காணேல்லையாம்.

பிறகு வந்த குருக்கள் தான் எந்தக் கல்யாணமும் செய்து வைக்கமாட்டார் எண்டு கண்டிப்பா சொல்லிப் போட்டார்.

எனக்குக் கல்யாணம் நடக்கேக்கை சரியாக பதினெட்டு வயது முடிஞ்சு 3 நாள்.

குமாருக்கு என்னைவிட ஒரு வயது குறைவு. குமாரின் அப்பாயாரையோ கச்சேரியில் பிடிச்சுகாசுகொடுத்துஅவனுக்கு பதினெட்டு வயதாகிட்டுது எண்டு கள்ளச் சேட்டிவிக்கற் எடுத்தவர். குமார்  என்னைவிட நல்ல வெள்ளையும் உயரமும்.

குமார்வீட்டாருக்கும் எங்கடை வீட்டாருக்கும் தோட்டம் தான் வரும்படி.  கலட்டிப் பள்ளிக்கூடத்திலை படிக்கேக்ககை குமாரை நான் கண்டிருக்கிறன்பிறகு கோயில் திருவிழாக்களிலை அல்லாட்டி இன சனங்களிண்டை கலியாண வீடுகளிலை கண்டிருக்கிறன்மற்றும்படி இப்பிடி அவனுக்கும் எனக்கும் கலியாணம் நடக்கும் எண்டு கனவிலையும் நான் நினைச்சிருக்கேல்லை.

அப்ப சண்டைக்கு கட்டாயம் வரவேண்டும் எண்டு கட்டாய ஆள் சேர்ப்பு நடந்து கொண்டிருந்தது.

ஒவ்வொரு  குடும்பத்திலையும்  இருந்து பதினெட்டு வயதுக்கு வந்த பொடியோ பொடிச்சியோ கட்டாயமாக இயக்கத்தில் சேரவேண்டும் எண்டு சொல்லிச்சினம். தாரும்மீறமுடியாது. ஒண்டிலை  தலைமறைவாகிவேறைஇடங்களுக்குபோகவேணும். இல்லாட்டி எனக்கும் குமாருக்கும் அண்டைக்கு நடந்த மாதிரி ஒரு கலியாணம் கட்டி புருஷன் பெஞ்சாதி ஆகவேணும்.

அண்டைக்குப் பின்னேரம் போல அக்கம் பக்கத்து வீட்டாக்கள் எங்கடை வீட்டுக்கு வந்தவை.

குமார் வீட்டாக்கள் கொழுக்கட்டை அவிச்சுக் கொண்டு வந்திருந்தவை.

அம்மா முறுக்கும் வடையும் சுட்டு தேத்தண்ணியும் வைத்துக் கொடுத்தவா.

ஐயா பின்வளவுக்கை இருந்து கள்ளுக் குடிஞ்சுப் போட்டுபச்சை மண்ணுக்கு கலியாணம் செய்து வைச்சிட்டன்”  எண்டு அழுது கொண்டு இருந்தவர்

தம்பி மட்டும் சந்திக்கடையில் பத்துப் பதினைந்து பலூன்கள் வேண்டிக் கொண்டு  வந்து தானே ஊதி எங்கடை வீட்டுச் சுவரிலும் வாசல் படலையடியிலும் தொங்க விட்டிருந்தவன்.

அதுதான் எங்கடை கலியாணவீடு.  

*

அண்டைக்கு இரவு வழமை போல அம்மாவோடையே படுப்பேன் என குசினிக்கை நிண்டு சின்னம்மாவோடை அடம்பிடிச்சன். அவன் இரவில் அவன்ரை வீட்டை போயிட்டு பகலில் எங்கடை வீட்டை வந்து நிக்கட்டும் எண்டு. அம்மாசரி, சின்னம்மாக்கள் சரிதாரும் நான் சொன்னதைக் கேக்கேல்லை.

கடைசியாய்  அம்மா  தந்த  பால்கிளாசை கையிலை வேண்டிக் கொண்டு எங்கடை தலைவாசலை ஒட்டியிருந்த சாமி அறைக்கை போனன். அது ஒண்டு தான் எங்கடை வீட்டை கதவு போட்ட ஒரே ஒரு அறை.

அவன் ரவுசரை மாத்திப் போட்டு சரம் கட்டியிருந்தான்.

அம்மா தந்து விட்ட பாலை அவனிடம் நீட்டினன்.

அதை வேண்டி மடக்கு மடக்கு எண்டு குடிச்சான்.

அம்மா சொன்னமாதிரி எனக்குப் பாதி தரேல்லை. எனக்கும் அவன்டை எச்சியைக் குடிக்க வேண்டும் எண்டு விருப்பமிருக்கேல்லை.

பிறகு கொஞ்ச நேரம் என்னைப் பாத்துக் கொண்டு பேசாமல் இருந்தான்.

பிறகு தோட்டத்துக்கு மருந்து அடிக்கிறதுக்கும், இறைப்புக்கும் காலைமையோடை போக வேண்டும் எண்டு  சொல்லிக்கொண்டு இருந்தான்.

பிறகு வெள்ளணையோடை படுத்தால்தான் கோழிகூவேக்கை எழும்பலாம் எண்டு சொன்னான்.

நானும் ´உம்´ கொட்டிக் கொண்டு இருந்தேன்.

சரிவாபடுப்போம்எண்டான்.

நான் அவனை நிமிர்ந்து பாத்தன்.

அவனே மூலையில் கிடந்த பாயைவிரிச்சுப் போட்டு ரண்டு தலாணியளை பக்கம் பக்கமாகப் போட்டான்.

எனக்கு பயம் பிடிச்சுட்டுது.

நீங்கள் அங்கை படுங்கோநான் இங்கை படுக்கிறன் எண்டன்.

விளையாடுறியாஎண்டு என்னை முழிசிப்பார்த்தான்.

எனக்கு குடல் நடுங்கியது.

எதுவுமே பேசாமல் போய்ப் பக்கத்திலை படுத்திட்டுன்.

பிறகு எல்லாமே அவன் நினைச்சபடிதான்!

கடைசியாக அவன் நித்திரையாய்ப் போனான்.

நான் அழுதுகொண்டு அம்மாக்கு கிட்டவாய்ப் போய் அவாவை எழுப்பாமல் அவாவின் சீலைத் தலைப்பை கையால் பிடித்துக் கொண்டு படுத்திட்டன்.

வெயில் என் முகத்தில் பட்டு எழும்பிய பொழுது அவன் எழும்பித் தோட்டத்து போய்விட்டான்.

அம்மாதான் தேத்தண்ணி வைச்சு குடுத்து அனுப்பினவாவாம்.

*

பிறகு பிறகு நான் எழும்பிப் போய் அம்மாவோடை படுக்கிறேல்லை.

கொஞ்சமாய் கொஞ்சமாய் எல்லாம் பழகிப் போச்சுது.

அம்மாவும் எவ்வளவோ புத்தி சொன்னவாதானும் என்ரை வயதிலைதான் கலியாணம் கட்டினவாவாம்ஆளால் ஐயாவை விரும்பிக் கட்டிணதாலை அவருக்குப் பயய்பிடேல்லையாம்.

குமாருக்கு  பகல்  முழுக்க  தங்கடை  காணியில் வேலை இருக்கும்குமாருக்கும் தேப்பனுக்கும் காலைமைச் சாப்பாடும் மத்தியானச் சாப்பாடும் அவை வீட்டை இருந்தே போகும். பின்னேரத்திலை வந்து குளிச்சுப் போட்டு ஊர் உலாத்தல். ஊர்த் துலாவாரங்கள். இரவிலை எங்கடை வீட்டிலை சாப்பாடும் படுக்கையும் நானும்

ஒரு மாதம் இப்படியே போச்சுது.

எனக்கு வீட்டுக்கு விலக்கு தள்ளிப் போய் இருந்தது.

பயந்துபோய் அம்மாட்டைச் சொன்னன்.

சிரித்தபடியே கணபதிப் பரியாரிட்டை கூட்டிக் கொண்டு போனா. கையைப் பிடித்து பார்த்துவிட்டுவைச்சிருக்கப்போறியளோஇறக்கி வைக்கப்போறிளளோஎண்டுகேட்டார்.

அம்மா, “வாயிலைவருகுதுஎண்டு பரியாரியைக் கோபமாய்ப் பார்த்து சொல்லிப்போட்டு என் கையைப் பிடித்து இழுக்காத குறையாக இழுத்துக்கொண்டு வீட்டை வந்திட்டா.

எனக்கு என்ன சொல்லுறது, செய்யுறது எண்டு எதுமே தெரியவில்லை.

பின்னேரம் குமார் தோட்டத்தாலை வர அம்மாவே அடுத்த மூண்டு நாலுமாதம் கவனமாய் இருக்க வேண்டும் எண்டு புத்திசொன்னா.

அவன் சைக்கிளை எடுத்துக் கொண்டு போயிட்டான்.

செக்கல்படுறவேளையிருக்கும்.

குமாரின்ரை ஐயா, அம்மா, தமக்கைமார் இரண்டு பேரும் வீட்டை வந்தினம்.

அம்மா சந்தோஷமாய் இராசவள்ளிக் கிழங்கு செய்து வைச்சிருந்தவா. அதைக் கொண்டு போய்க் குடுத்தா.

தாரும் எடுக்கிற மாதிரித் தெரியேல்லை.

இனிப்பான செய்தி எண்ட படியாலை தான் இனிப்பாய் செய்து இருக்கிறாள்;” என ஐயா குந்தில் இருந்து கொண்டு சொன்னார்.

இனிப்போ கசப்போ எண்டு நாங்கள் அல்லோ சொல்லவேணும்குமாரின் அம்மா சொல்ல ஐயாக்கும் அம்மாக்கும் முகம் கறுத்துப் போனதைக்கண்டன்.

எனக்கு உண்மையிலை என்ன சொல்லினம் எண்டு உடனை விளங்கேல்லை. பிறகு கதைச்சு கதைச்சுக் கொண்டு போகத்தான் எல்லாம் விளங்கிச்சு.

பால்குடி மாறாததுகள் பிள்ளையைப் பெத்துக் கொண்டு என்ன செய்யப் போகுதுகள்” – இதைத்தான் திருப்பிச் திருப்பிச் சொல்லிச்சினம்.

அவங்கள் பிடிச்சுக் கொண்டு போகாமல் இருக்கத்தான் கலியாணம் கட்டி வைச்சனாங்களே தவிர பிள்ளைப் பெறவே கலியாணம் கட்டி வைச்சனாங்கள்” – இதையும் திருப்பிச் திருப்பிச் சொல்லிச்சினம்.

ஐயாவும் அம்மாவும் அழுது அழுது கதைச்சாலும் கடைசிவரை விட்டுக்குடுக்கவே இல்லை.

எனக்கு எல்லாம் பயமாய் இருந்தது.

குமார் ஒண்டும் பறையாமல் சாய்மணைக் கதிரையில் சப்பாணி கட்டிக் கொண்டு இருந்தான்.

கடைசியாய் பிள்ளை பிறக்கும் வரை அவன் ங்களோடையோ இருக்கட்டும் என கூட்டிக்கொண்டு போட்டினம்.

அவனும் எதுவும் சொல்லாமல் தாய் தேப்பனுக்குப் பின்னாலை போட்டான்.

கூட்டிக் கொண்டு போகேக்கை அவை சொன்ன ஒண்டுதான் இப்பவும் வலிக்குது,

“உன்ரை உந்த வலசுப் பெட்டைக்கு பிள்ளை பெக்கவோ கட்டித்தந்தனாங்கள். அந்தக் கோதாரி விழுவாங்களிட்டை இருந்து காப்பாற்றத்தானே கட்டித்தந்தனாங்கள்எண்டு.

பேந்தென்ன?

பிள்ளை பிறக்கும்வரை அவன்சரி, அவன்ரைவீட்டார்சரி எங்கடை வீட்டை வாறேல்லை. கோயில்களிலை கண்டால் கதைப்பான். ஏதாவது நல்லசாப்பாடு ங்கடை வீட்டிலை செய்தால் ஐயா கொண்டு போய்த் தோட்டத்திலை குடுத்திட்டுவருவார்.

இது ஊருக்கைதாருக்கும் தெரியாது. தெரிஞ்சால் அவனைக் கொண்டு போயிடுவினம் எண்டு ஐயாஅம்மாவும் மூச்சுவிடேல்லை.

கடைசியாய் அவனையே உரிச்ச மாதிரி ஒரு பொம்பிள்ளைப் பிள்ளைவந்து பிறந்திச்சு.

ஆஸ்பத்திரியிலை வந்து பாத்தான்.

தூக்குங்கோவன்எண்டன்.

இல்லைவீட்டை வரத்தூக்கிறன்எண்டான்.

ஆஸ்பத்திரியிலை இருந்து துண்டு வெட்ட முதலே நாட்டிலை சண்டையும் பெரிசாத் தொடங்கிட்டுது.

*
எல்லாமே  கனவு மாதிரிப் போட்டுது.

கிட்டத்தட்ட மூண்டு மாதம் கடுமையான சண்டை.

அது முடிஞ்சுபோனாலும் இடம் பெயர்ந்து வந்த சனங்கள் கணக்க எங்கடை தோட்ட வெளியலுக்கையும் வெறும் காணிகளுக்கையும் தான்.

கஷ்டம் எண்டது எல்லாருக்கும் தான்.

எனக்கு என்ரை சின்னனோடையே பொழுது போகும்.

ஐயா ஏதோ பின்னேரத்திலை கொண்டுவரும்.

வயித்தைகாய விடாமல் பாத்துக் கொண்டார்.

குமார் இந்த மூண்டு மாதமும் வீட்டை வரவும் இல்லைபிள்ளையைப் பார்க்கவும் இல்லை.

ஏதோ காம்புகளிலை ஆக்களுக்கு உதவி செய்யுறானாம் எனஅவையின்ரைஆக்கள்சொல்லிச்சினம்.

நாங்களும் நம்பினம்.

ஆனால் கடைசியிலை எல்லாமே பொய் எனத் தெரிய வந்துது.

எங்களைச் சுத்தியிருந்தவை… அவங்கடை ஆக்கள்… எல்லாமே பொய் சொல்லிப் போட்டினம்…. இல்லாட்டி மறைச்சுப் போட்டினம்.

இயக்கம் விழுந்து கொண்டிருக்கேக்கையே அவனை தாய்தேப்பன் கலியாணம் பேசி வெளிநாட்டுக்கு அனுப்பி போட்டினமாம்.

எங்களாலை என்ன செய்ய ஏலும்?

பிள்ளையும் என்னையும் அகதி எண்டு ஐயா பதிஞ்சு போட்டு வந்திருக்கிறார். தாங்களில்லாக் காலத்திலை கொஞ்சமாவது எனக்கும் என்ரை பிள்ளைக்கு ஏதாவது காசு வரும் எண்டு.

*

சுகுணா சொல்லி முடித்த போது எனக்கு மனம் எல்லாம் பாரமாய்ப் இருந்தது.

சுகுணாவின் குழந்தை நான் இருந்த கதிரையை சுற்றித் தவழ்ந்து கொண்டு இருந்தது.

ஏன் அன்ரி நீங்கள் கவலைப்படுகிறியள்அதுதான் என்ரை தலைவிதி எண்டால் ஆர் என்ன செய்யுறது?”

சுகுணா உறுதியாகவே சொன்னாள்.

நான் உங்களைக் கவலைப்படுத்த வேணும் எண்டு சொல்லேல்லை அன்ரிஉங்களுக்கு சொன்னால் கொஞ்சம் எனக்கு ஆறுதலாய் இருக்கும் போலை இருந்தது

அவள் என்ன உறுதியாய் இருந்தாள்.

சுகுணா அவர் இப்ப வீட்டிலை இல்லைபின்னேரம்போலை வா! அவரிட்டை வேண்டி உனக்கு கொஞ்சம் காசு தாறன்

இல்லை அன்ரிநான் காசுக்காக வரேல்லைநீங்கள் வந்திருக்கிறியள் எண்டு ஐயா அம்மா சொல்லிச்சினம். பார்த்திட்டு உதிலை கொஞ்சம் முருங்கைஇலை பிடிங்கி கொண்டு போவம் எண்டு வந்தனான்

சொல்லி விட்டு குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்தபடி வீட்டின் முன்புறம் நின்ற முருங்கை மரத்தடியை நோக்கிப் போனாள்.

மடியில் கிடந்த மங்கையர் மஞ்சரியுள் தலை மீண்டும் தாழ்ந்தது.

மாங்கல்யம் 9 இழைகளை உடையது.

மேன்மை, ஆற்றல், தூய்மை, தெய்வீகநோக்கம், உத்தமகுணங்கள், விவேகம், தன்னடக்கம், தொண்டு, வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன.

இவற்றை ஒரு பெண் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் மாங்கல்யம் அமைக்கப்பட்டதாக காயத்ரி மந்திரம் குறிப்பிடுகிறது

எனக்கு தொடர்ந்து வாசிக்க முடியாமல் இருந்தது.

பிள்வளவில் போயிருந்து சுகுணாவிற்காக அழவேணும் போல இருக்குது

(யாவும்கற்பனைஅல்ல)

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)