மனதை வலிக்க வைத்த இரண்டாவது தனித்த மரணம்

மனதை வலிக்க வைத்த இரண்டாவது தனித்த மரணம்

மனதை வலிக்க வைத்த இரண்டாவது தனித்த மரணம்

முதலாவது என்னுடைய மூத்த அதிகாரி.

தொழில் நுட்பத்தை கல்லூரி கற்றுத் தந்திருந்தாலும் நகரசபைக்கு வரும் மனிதர்களின் மனநிலைகளை எப்படி அறிந்து அவர்களை ஆசுவாசப்படுத்தி அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வது என எனக்கு கற்றுக் கொடுத்தவர்.

பென்சன் பெற்ற பின்பும் மனைவி பிள்ளைகளைப் பிரிந்து தனியே வாழ்ந்தவர். பெரி வீடு…வளவு…கார்…எக்ஸ்செற்றா…எக்ஸ்செற்றா…

நான் சிங்கப்பூர் போகும் போது கறுத்த றேபண் கண்ணாடி வேண்டி வந்து தரச்சொல்லி இருந்தார்.

காசை நீட்டினார். வுந்த பின்பு வாங்கிக் கொள்கின்றேன் என்று சொன்னேன்.

என்னை விமானநிலையத்தில் கொண்டு சென்று வழி அனுப்பியும் வைத்தார்.

அடுத்த நான்கு நாட்களின் பின்பு அவர் வீட்டுப்பூனை அமையற்றுத் திரிவதை அக்கம் பக்கத்தினர் அவதானித்து இருக்கிறார்கள்.

யன்னலால் எட்டிப் பார்த்த பொழுது சோபாவில் இருந்தபடியே அவர் உலகை விட்டுப் பிரிந்திருக்கின்றார்.

கோடைட காலம் ஆதலால் உடல் துர்நாற்றம் வீசத் தொடங்கி இருக்கின்றது.

நான் திரும்பி வந்த பொழுது எல்லாமே முடிந்திருந்தது.

மனைவியும் பிள்ளைகளும் சொத்தைப் பங்கு போட்டிக் கொண்டு இருந்தார்கள்.

மனம் வலித்தது.

இப்போதும் அந்த றேபன் கண்ணாடியை நான் அணிந்து கொண்டு திரிகின்றேன் – அவர் நினைவாக.

இப்போது இரண்டாவது!!

ஒரு கிழமைக்கு முன்பாக…..

ஒரு தமிழர்…

சட்டப்படி திருமணமாகியிருந்தாலும் தாம்பத்தியம் இல்லாமல் பிரமச்சாரியாய் வாழ்வைத் தொடர்ந்தவர்.

அவருக்கு இருந்த ஒரே குறைபாடு அவருக்கு வஞ்சமாக யோசிக்கத் தெரியாது.

அவரின் அறீவீனம் பலருக்கு முதலாகி இருக்கிறது. அவரைக் கடன்காரன் ஆக்கி இருந்தது.

பத்து எண்கள் கொண்ட அவரின் அடையாள அட்டையின் மதிப்பு அவருக்கே தெரியாது வாழ்ந்தவர். தெரிந்தவர்கள் அதனைப் பாவித்துக் கொண்டார்கள்.

இவரும் தனியே தன் மரணத்தை தழுவியிருக்கின்றார்.

உலகத்துக் தெரியும் பொழுது காடாத்து முடிந்திருக்க வேண்டிய நாள்.

மனதை வலிக்க வைத்த இரண்டாவது தனித்த மரணம் இது!!

மே மாத மரணம் என்னும் பொழுது இன்னமும் வலிக்கின்றது!!!

இந்தியா இலங்கையில் என்னதான் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வந்தாலும் பிணங்கள் தனியே தூங்குவதில்லை.

ஹொல்பெக் வைத்தியசாலையில் வரும் ஞாயிறு 11-05-2013 அன்று காலை 10 மணிக்கும் 12 மணிக்கும் இடையில் ஒரு மடம் ஆகி ஒருவனும் ஆகி என பட்டினத்தார் பாடல் பாடி சுண்ணம் இடித்து அவரை அடக்கம் செய்யப் போகின்றோம்.

இப்போ அவருக்கு சொந்தங்கள் அதிகம்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

  (To Type in English, deselect the checkbox. Read more here)

(Spamcheck Enabled)

Scroll To Top