நாணயம் – சிறுகதை

நாணயம் – சிறுகதை

 

2012 தகவம் தெரிவில் முதலாவது காலாண்டுக்குரிய சிறுகதையாக தெரிவுசெய்யப்பட்டது.

உலோக நாணயங்களின் இரண்டு பக்கங்களுடன் பரீட்சயப்பட்டதாலோ என்னவோ நாணயம் என்ற இந்த சிறுகதைக்கும் எனக்கு தலை, வால் என இரண்டு உபகதைகள் தேவைப்படுகிறது.

தலை

என்னைஉheadனக்குப்பிடிச்சிருக்கா?”

ஆமாம்

நீயாரையாவதுகாதலித்துஇருக்கிறியா

இல்லை

வழமையானஇந்தமுதலிரவுசம்பாஷணையுடன்அவர்களின்வாழ்க்கைஇனிதேஆரம்பமாகியது.

அவள்மூன்றாம்மாதம்முழுகாமல்இருந்தபொழுதுகணவனுக்குஒருமொட்டைக்கடிதம்வந்தது.

திருமணத்துக்குமுன்பேஉனதுமனைவிதனதுவயிற்றைக்கழுவிப்போட்டுவந்தவள்

தனதுஅதிர்ச்சியைமுற்றுமுழதாகாகவெளிக்காட்டாதுநேராககடிதத்தைமனைவியிடம்கடிதத்தைநீட்டியடி, “ஏன்நீஇதனைமுதலிரவில்எனக்கு  மறைத்தாய்?” எனக்கேட்டான்.

இதுவா. . .நீங்கள்இதுபற்றிஎன்னிடம்கேட்கவில்யே”  எனச்சாதாரணமாகசொன்னபடிஅவள்பாத்திரம்கழுவுவதில்மும்மரமானாள்.

எத்தனைநாள்சொன்னனான். . . இந்தசோப்தண்ணிவேண்டிவராதையுங்கோஎண்டு. கைஎல்லாம்ஒரேஎரிவு

மொட்டைக்கடிதம்; வந்ததைவிடஇந்தப்பதில்மிகவும்அதிர்ச்சியாகஇருந்தது.

நீதான்யாரையும்விரும்பவேஇல்லைஎனச்சொன்னாயே?”

ஆமாம்நான்யாரையும்விரும்பவில்லை

அப்போஎப்பிடிகற்பமானாய்?”

!…அதுவா..ரியூசனுக்குவந்தஒருவாத்தியார். . .அன்றுவீட்டில்வேறுயாரும்இருக்கவில்லை. . .அதுநடந்துவிட்டது. . .அம்மாஅதனைஒருகெட்டகனவாகநினைத்துமறக்கச்சொல்லிவிட்டா. . .நானும்மறந்துஉங்களோடைசந்தோஷமாகவாழுறன்

அதற்குமேல்கணவன்ஏதும்பேசவில்லை. அல்லதுஅவனால்பேசமுடியவில்லை.

வால்tail

மனிதர்களுக்கு எப்பொழுதுமே சிலசமயங்களில் விசித்திரமான ஆசைகள் தோன்றுவதுண்டு.

அவ்வாறே என் இளமைக்காலங்கள் இலங்கையில் கழிந்து கொண்டிருந்த பொழுது இந்தியாவில் ஒரு பிராமணப் பெண்ணைத் திருமணம் செய்து இந்தியாவிலேயே என் பிற்கால வாழ்வு அமைய வேண்டும்

என விருப்பம் இருந்தது.

இந்த நியாயமான அல்லது பைத்தியக்கார யோசனைகளுக்கு ஐயராத்துச் சூழல்களில் எடுக்கப்பட்ட தென்னிந்திய தமிழ்ப் படங்களில் வந்து போன கதாநாயகிகளும் அவர்களது தோழிகளும்; காரணமாய் இருக்கலாம்.

சமாதான ஒப்பந்தங்கள் போல என் இளவயதுக் கற்பனைகளும் கசக்கி எறியப்பட என் தகுதி, படிப்பு, என் மூதாதையரின் பரம்பரைகள் அனைத்தையும் கருத்திற் கொண்டு எனக்கு ஒரு வாழ்வு அமைத்து தரப்பட்டது.

சின்ன சின்ன கோபங்கள்… சின்ன சின்ன அழுகைகள். . .மனைவியின் கோபத்தை சாப்பாட்டில் காட்டுதல் என சின்ன சின்ன பகிஸ்கரிப்புகள் என்பதைத் தாண்டி அடுத்த இருபது ஆண்டுகள் வாழ்க்கையும் இதே சின்ன சின்ன விடயங்களுடன் இனிதேதான் சென்றது.

எனக்கு பென்ஷன் வயதுக்கு இன்னும் பத்து ஆண்டுகள் இருந்த பொழுது அந்த தென்னிந்தியக் கனவுகள் மீண்டும் வரத் தொடங்கின.

தற்பொழுதைய கனவு தென்னிந்தியப் பெண்களாய் இருக்கவில்லை – மாறாக காணி நிலத்துடன் ஒரு வீடு. . .  அங்கே என் அந்திமக் கால வாழ்வு. . . கோயில்கள். . . குளங்கள். . . எக்ஸ்செற்றா. . எக்ஸ்செற்றா. . .

பிள்ளைகள் இரண்டு பேரும் திருமணமாகி வெளிநாட்டுக்குச் சென்ற பின்பு இலங்கையில் அமைதியான சூழ்நிலை நிலவுகின்றது என்ற பயங்கர அமைதியில் யாழ்ப்பாண வாழ்வு எனக்குப் பெரிதாக சுவைக்கவில்லை.

காலையிலும் மாலையிலும் குறைந்தது இரு தடவை யாராவது இரண்டு தென்னிலங்கை வியாபாரிகள் எங்கள் வீட்டின் வாசலில் ஏதோ ஒரு பொருளை விற்பதற்காக வந்து நிற்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்லி அவர்களை அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். கொழும்புக் கோட்டையின் அழகுக்கு “லாபாய்…லாபாய்..”, என்ற குரலும் சேர்த்தே மெருகூட்டுகிறது என்று சொல்லி வந்த எனக்கு யாழ்ப்பாண வீதிகளிலும், நல்லூர் வெளிவீதிகளிலும் இதனைக் கேட்ட பொழுது ஏனோ ஜீரணிக்க கஷ்டமாய் இருந்தது.

இந்திய இடம் பெயர்வு பற்றி ஆலோசனை செய்ய இவையுமே காரணங்களாய் இருந்தன.

1.18 பில்லியன் சனத்தொகை கொண்ட இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் இந்தக் கிழமும் மனுஷியும் கரை ஒதுங்க எனக்கு இந்தியாவில் யாரோ ஒருவரின் உதவி தேவைப்பட்டது. எனக்குத் தெரிந்தவர்கள், இடம் பெயர்ந்து அங்கு நிரந்தரமாக வாழ்பவர்கள், மண்டபத்தில் குடியிருப்பவர்கள் என சுமார் நூறு பேரைத் தெரிந்திருந்தாலும் மாணிக்கவாசகர்தான் என் கண்முன் நின்றார்.

மாணிக்கவாசகர் பழுத்த சைவர். நல்லூர் தேர்த்திருவிழா ஒன்றில் தான் அவர் அறிமுகமானார். பின்பு அவரின் பழக்கம் எனக்கு ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியிலும் தொடர்ந்தது. சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடு இல்லாது சைவப் பணி செய்பவர் என அனேகமானோரிடம்; அறிமுகமாகி இருந்தார்.

அவரையே தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

“வணக்கம். . .சொல்லுங்கள்” என ஆரம்பித்து “எனது இளைய மகனுக்கும் விசா கிடைத்து விட்டது.

அவர்; மனைவி பிள்ளைகளுடன் மார்கழியில் போக உள்ளார்;. அவ்வாறாயின் அவரின் வீட்டையே வாங்குவது பற்றி பரிசீலிக்கலாம். அது நல்ல முடிவு என உங்கள் பாரியாருக்கும் தோன்றினால் நீங்கள் அவருடனேயே பேசிக்கொள்ளலாம்” என்பதுடன் முதற்கட்டப் பேச்சு வார்த்தை முடிந்தது.

வளர்ந்த மகனை ‘அவர்’ என விழித்துப் பேசிய மாணிக்கவாசகத்தாரின் பண்பு எனக்குப் பிடித்திருந்தது.

பின்பு அடுத்த அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் அவரின் மகன் சத்தியசீலனுடனேயே நடைபெற்றது. சத்தியசீலன் பேசுவது மிகவும் இனிமையாக இருக்கும். ‘அங்கிள’; என்றும், ‘மாமா’ என்றும், சிலவேளை ‘அண்ணா’ என்றும் தன்னை என்னுடன் அவனாக இணைத்துக் கொண்ட பொழுது வீட்டின் விலையில் பெரிதாக பேரம் பேச முடியவில்லை. தொலைபேசியில் இந்தியவிலையில் இருபத்தி ஐந்து இலட்சத்துக்கு ஒத்துக் கொண்டு முதலில் நான் தனியே சென்னை அண்ணா விமானநிலையத்தில் போய் இறங்கினேன்.

சத்தியசீலன் எனக்காக விமானநிலையத்தில் காத்திருந்தான்.

கார் சென்னைவீதிகளில் மிதந்து சென்றது – சென்னை அழகாய்த்தான் இருந்தது.

ரொம்பவும் மாறியிருந்தது. கூவப்பகுதியில் குடியிருந்த மக்களை காணவில்லை. அதிக இடங்களில் கலைஞரும் மகனும்; கை காட்டிக் கொண்டு நின்றார்கள்.

சத்தியசீலனின் வீடு சின்ன அளவான வீடு. வெளி முற்றத்தில் துளசி, ரோஜா, நந்தியாவட்டைப் பூக்கள்.

பெரிய ஒரு மாமரம.; செவ்விளனி மரங்கள் வேறு.

வாசலில் சத்தியசாயி பாபா கை கூப்பி வரவேற்றுக் கொண்டு நின்றார்.

இந்த கிழவனுக்கும் கிழவிக்கும் ஏன் பெரிய மாடமாளிகை.

அக்கம் பக்கம் மலையாள, தெலுங்கு வீடுகள். ஆனால் அனைவரும் நன்கு தமிழ் பேசுவார்களாம்.

சத்தியசீலனின் மனைவி நன்கு சமைத்து உணவு பரிமாறிளாள்.

வெய்யிலின் வெட்காரம் குறையத் தொடங்கிய பொழுது மனையியுடன் மாணிக்கவாசகர் வந்திருந்தார். கொஞ்சம் இளைத்திருந்தார். ஆனால் அவரின் குரலில் கம்பீரம் குறையவில்லை.

வெளியே நின்ற மாமரத்தில் கீழ் இரண்டு கதிரைகளைப் போட்டுக் கொண்டு இருந்து பேசிக்கொண்டு இருந்தோம்.

எனக்கு யாழ்ப்பாண வீட்டின் முற்றமும் மாமரமும் தான் நினைவுக்கு வந்தது.

மனைவிக்கு வீட்டை விந்நு விட்டு இந்தியாவுக்கு போவதை விட எங்கள் முற்றத்து மாமரத்தை விட்டுச் செல்வதுதான் பெரிய கவலையாக இருந்தது. அடிக்கடி சொல்லுவாள், “நோர்வேயிலும் டென்மார்க்கிலும் எங்கை அதுகள் மாமரத்தைக் கண்டதுகள். லீவுக்கு வரக்கை அந்த மூன்றையும் மாறி மாறி உந்த ஊஞ்சலிலை வைச்சு ஆட்ட வேணும்”. மூத்தவளின் இரண்டு பிள்ளையையும் இளையவளின் சின்னவனையும் பற்றித்தான் எப்பவுமே கதை. நான் போய் இங்கும் பெரிய மாமரம் நிற்குது என்னும் பொழுது நிச்சயமாக அவள் சந்தோஷப்படுவாள்.

ரொம்ப நேரம் கோயில்கள், வெளிநாடுகளில் மதமாற்றங்கள் பற்றி நாங்கள் இருவரும் கதைத்துக் கொண்டே இருந்தோம். இலங்கைப் பிரச்சனைகள் பற்றிக் கலந்துரையாடினோம். கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி இருவருமே சாடினோம். பக்தி என்பது வியாபாரமாக்கப்பட்டு விட்டது என்பதில் இருவருக்குமே மாற்றுக் கருத்து இருக்கவில்லை.

நேரம் போவது தெரியாமல் போய்க் கொண்டு இருந்தது.

திடீரென பள்ளிவாசல் ஒன்றில் இருந்து “அல்லாகு. . அக்பா”; என்று ஒலிபெருக்கியின் அவர்களது வழிபாட்டுக்கான அழைப்புக் குரல் ஒலித்தது.

“இது எனக்குரிய இடம் இல்லையோ” என மனதுள் ஒரு தயக்கம்.

“மசூதி ஏதாவது பக்கத்தில் உண்டா” என கேட்க…வழமையான புன்சிரிப்புடன், “பயப்பிடாதீர்கள். . .மாலையில் இங்கு பாங்கும் கேட்கும். காலையில் சுப்பிரபாதமும் கேட்கும்” என்றார் மாணிக்கவாசகர்.

மனது கொஞ்சம் சமாதானப்பட்டது.

“பாங்கு” என்பது என்றோ நான் கேட்டு மறந்த சொல்லு. மாணிக்கவாசகர் இன்னமும் மறக்காமல் இருக்கின்றார் என அவரை என் மனம் வியந்த்து.

மீண்டும் திருக்கேதீஸ்வரம், திருவானைக்கா, திருக்கோணேஸ்வரத்துள், திருக்கழுங்குன்றத்துள் சென்றோம்.

இரவு பத்துமணிவரை பேசிக் கொண்டே இருந்தோம். இடைக்கிடை சத்தியசீலனும் எங்கள் சம்பாசணையில் கலந்து கொண்டான்.

“பெருமைக்காக சொல்லவில்லை. அவருக்குச் சத்தியசீலன் என பெயர் வைத்தாற் போல அவர்; வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்;”. அதனை பெருமையாகவே சொல்லிக் கொண்டார். மேலும், “அவராக கட்டி வாழ்ந்த இந்த வீட்டின் சத்தியத்தையும் பெருமையையும் நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் தான் முப்பது இலட்சம் பெறுமதியான இந்த வீட்டை உங்களுக்கு இருபத்தைந்து இலட்சத்துக்கு தந்தவர்;”.

மனத்தினுள் மாணிக்கவாசகர் இன்னும் ஒருபடி உயர்ந்து சென்றார்.

நான் எனது நன்றியைத் தெரிவிக்க வழிதெரியாமல் சங்கடத்தில் நெளிந்தேன்.

 

*

அடுத்த நாள் வெள்ளிக் கிழமை.

மிகச் சுருக்கமாக இந்திய முத்திரையிடப்பட்ட தாளில் வீடு கைமாறியது.

நானும் சத்தியசீலனும் வாங்குபவராயும் விற்பவராயும் கை எழுத்து இட்டுக் கொண்டோம். சாட்சிக் கை எழுத்தாக சத்தியசீலனின் சத்தியபாபா பஜனைக்குழவில் இருந்த ஒருவர் ”ஓம்! சாய்ராம்”, என பாபாவை வேண்டியபடியே கையெழுத்து இட்டுக் கொண்டார். இன்னெருவர் சபரிமலைக்குச் செல்ல மாலை அணிந்திருந்தார்; – ”சரணம் ஐயப்பா” என நாடியிலும் நெஞ்சிலும் தனது வலக்கரத்தால் தொட்டுக் கொண்டு கை எழுத்திட்டார்.

என் மனம் புட்டபத்தியையும் சபரிமலையையும் ஒன்றாக வணங்கியது.

அன்று மாணிக்கவாசகர் ஊரில் இருக்கவில்லை. அவர் கனடாவில் இருந்து வந்த ஒரு குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றிருந்தார். வரும் பொழுது எனக்கு திருப்பதியில் இருந்து லட்டு வேண்டி வந்திருந்தார்.

அன்று பின்னேரம் அனைவரையும் அழைத்துக் கொண்டு சரவணபவானுக்கு இரவு உணவு சென்றேன் – எனது நன்றியறிதலைத் தெரிவிக்கவும் அடுத்த தடவை வரும் பொழுது சத்தியசீலன் குடும்பம் பயணம் செய்து விடுவார்கள் என்பதாலும் நான் ஏற்பாடு செய்த பிரியாவிடை விருந்துபசாரம் என அதனைச் சொல்லலாம்.

மிக மகிழ்ச்சியாக கழிந்த வாழ்நாட்களில் ஒன்றாக அதனை எண்ணிக் கொண்டேன்.

அன்று நடுநிசியே எயர்லங்காவில் என் இலங்கைப் பயணம்.

அனைவருமே விமானநிலையத்துக்கு வந்து என்னை வழியனுப்பி வைத்தார்கள்.

சத்தியசீலனையும் மாணிக்கவாசகரையும் இறுகவே தழுவி விடை பெற்றுக் கொண்டேன்.

என் அந்திமகால வாழ்வுக்கு கடவுள் நல்ல வழியைக் காட்டி விட்டார்கள் என எண்ணிக் கொண்டு இருந்த பொழுது விமானம் மெதுவாக ஓடு பாதையில் ஓடத் தொடங்கி மேல் எழுந்தது.

 

*

இன்றும் வெள்ளிக் கிழமை.

அதிகாலை விமானத்தில் நானும் மனைவியும் சென்னைக்கு வந்திருந்தோம்.

குடிவரவு மற்றும் சுங்க அதிகாரிகள் இருபகுதியினருமே ஒரேயொரு கேள்வியைத்தான் கேட்டார்கள்.

”அடிக்கடி வருகிறீர்கள். . .என்ன வியாபாரமா?”

”இல்லை” எனத் தலையாட்ட முதல், ”எங்களையும் கவனியுங்கப்பா” என்ற தொனியில் ஒரு மிரட்டல் இருந்தது எனக்கு ஆரோக்கியமாக படவில்லை.

”தமிழ் மட்டும் தான் இங்கு செம்மொழி ஆகியிருக்கிறது”, மனம் சொல்லிக் கொண்டது.

இனி சென்னைதான் எல்லாமே எமக்கு என்றபடியால் தேவையான எல்லாவற்றையும் கையுடன் எடுத்து வந்திருந்தோம். அதனினுள் எந்த வியாபாரச் சாமான்களும் இல்லாதபடியால், ”சரி..சரி. . .போங்கள்” என்று விட்டு இலண்டனில் இருந்து வந்திருக்கும் ஒரு குடும்பத்தை நோக்கிப் போனார்கள்.

மூன்று வாகனச் சாரதிகளிடம் பேரம் பேசிக் களைத்து நாலாவது வந்தவனின் வாகனத்தில் ஏறினோம்.

”பார்த்தியா. . .சூளைமேட்டுக்காரன்களுள்ளை ஒற்றுமையில்லை எண்டு சிலோன்காரன்களுக்கு காட்டிட்டாய்…

பின்னேரம் உன்னை பார்த்துக் கொள்ளுறம் மச்சி”  என்ற அவர்களின் சண்டைக்கான இழுப்பை பெரிது பண்ணாமல் எமது வாகனம் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தது.

அடுத்த மாதமுற்பகுதியில் மற்றைய சாமான்கள் கடற்கப்பலில் வந்து விடும். நாங்கள் எல்லாவற்றையும்

ஒழுங்கு செய்த பின்பு மூத்தவளும் இளையவளும் நோர்வேயில் இருந்தும் டென்மார்க்கில் இருந்தும் தங்கள் குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்க வருவதாக சொல்லியிருந்தார்கள்.

மனைவி காரின் கண்ணாடியில் முகத்தை ஒட்ட வைத்துக் கொண்டு சென்னையை ரசித்துக்; கொண்டு வந்தாள்.

வட பழனியை காரில் இருந்தபடியே சுற்றி வந்தாள்.

கோடம்பாக்க மேம்பலத்தில் கார் ஏறி இறங்கும் பொழுது குழந்தை போல குதூகலித்தாள்.

”பொறு. ..பொறு…எல்லாம் ஆறுதலாக பார்க்கலாம். ..பி;ள்ளைகள் வர எல்லா கோயில்களுக்கும் போய்வரலாம்”

எங்கள் சந்துக்குள் கார் நுழைந்த பொழுது அங்கு பெரிய பிரச்சனை நடந்து கொண்டு இருப்பது போலத் தெரிந்தது.

போன மாதம்; வந்த போது இருந்த தெரு போல அது தெரியவில்லை.

ஒரே புழதியாக இருந்தது.

எங்கள் வீட்டுக்கு முன்னால் கார் சென்று நின்ற பொழுது முற்றத்தில் நின்ற மாமரமும் இரண்டு செவ்விளனியும் தறித்து விழுத்தப்பட்டிருந்தது.

எனக்கு ’திக்’ என்று இருந்தது.

பக்கத்து வீpட்டு மலையாள வீட்டின் அரைவாசிக்கு மேல் இடிக்கப்பட்டிருந்தது.

தெலுங்கு வீட்டின் கூரையை கழற்றிக் கொண்டு நின்றார்கள்.

பரபரப்புடன் என்ன என்று விசாரித்தேன்.

”கோட்டின் தீர்ப்பு மசூதிக்கு சார்பாக தீர்ந்துவிட்டதாம்”  யாரோ சொன்னார்கள்.

”அயோத்தி தீர்ப்பு இருபக்கத்துக்கும் சார்பாக தானே தீர்ந்த்து” நான் சொல்லி முடிக்க முதல். . .

”ஓரு நூவு சிங்களன்னுட்டாவு. இதி மசூதி ஜகா. . தீனி தொங்கதனங்கா பத்திராலு சூமெச்சி. . .இகஇகட இலஇலு கட்டி உண்டாரு. . .நீ ஊருக்காரு நின்னி ஏமாறிச்சினாடு. . .நன்னி ஏமாறிச்சினாடு” தெலுங்குகாரி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு இருந்தாள்.

(என்னையா சிறிலங்காகாரன் நீ.. ..இந்த நிலம் மசூதியின்ரை…கள்ளப் பத்திரம் காட்டி கட்டியிருக்கிறான். உன்ரை ஊர்க்காரன் உனக்கு நாமம் போட்டுட்டான். . .எங்களுக்கும் தான்)

”அவ்வட அடிக்கிறா எண்டு இவ்விட இடம் கொடுத்தா இவ்விட அநியாயம் செஞ்சி ஓடிட்டான்” – இது மலையாளக்காரியின் புருஷன்.

எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் விளங்கத் தொடங்கியது.

மனைவிக்காரி, ”என்னப்பா… என்னப்பா”, என குடையத் தொடங்கினாள்.

”கொஞ்சம் பொறுக்குறியா?” என அவளின் மீது எனது எரிச்சலை கொட்டியபடி காரை மாணிக்கவாசகர் வீட்டை திருப்பினோம்

மாணிக்கவாசகர் முன்விறாந்தையில் இருந்தார்.

அவரின் முகம் கொஞ்சம் கறுத்திருந்தது.

”உங்கடை மகன் என்ன செய்தவர் எண்டு பார்த்துக் கொண்டு தானே இருந்தனீங்கள்”

தங்தை, மகன் இருவர் மீதான என் குற்றச்சாட்டு இது.

”அவசரப்படாதையுங்கோ.. .தம்பி வீட்டைத் தானே விற்றவர். மசூதியின்ரை காணியை உங்களுக்கு விற்கேல்லைத் தானே” திருமதி. மாணிக்கவாசகர் வந்து சொல்ல மாணிக்கவாசகர் மௌனமாக அமர்ந்திருந்தார்.

(முற்றும்)

 

 

 

 

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)