சிறந்த ஒரு கலைஞனின் மரணமும்… சின்ன சின்ன கறுத்தப் புள்ளிகளும்……

சிறந்த ஒரு கலைஞனின் மரணமும்… சின்ன சின்ன கறுத்தப் புள்ளிகளும்……

aliyatha kolankal

 

 

 

 

 

அழியாதகோலங்கள் படம் வெளியாகிய பொழுது எனக்கு 16 வயது என்று நினைக்கின்றேன்.

அதிகாலைச் சூரியன் மெது மெதுவாகஎழுந்து வருவதை ஒரே இடத்தில் கமராவை வைத்து படம் பிடித்து

அதன் பின்னணியில் எழுத்தோட்டம் சென்று கொண்டிருந்தது.

ஒரு நல்ல ஒளிப்பதிவாளர் ஒருவரின் படம் என்றுநி னைத்தேன்.

படம் முடிவடைந்த பின்பு நினைத்தேன் சிறந்த ஒரு இயக்குனரின் திரைப்படம் என்று.

மூன்றாம்நாள் அதே திரைப்படத்தை பாடசாலையைக் கட் செய்து கொண்டு காiலை மெற்னி காட்சியை மீண்டும் பார்த்த பொழுதுதான் எழுத்தோட்டடைத்தை நன்கு கவனித்தேன். ஒளிப்பதிவாளரும் அவரேஇயக்குனரும்அவரேஅத்துடன்திரைக்கதை, வசனமும் அவரே என்றுஇ ருந்தது.

சீற்றில் இன்னம்நிமிர்ந்து இருந்து அந்தப் படத்தைப் ஒவ்வொரு பிறம் பிறேமாக பார்த்து ரசித்தேன்.

யார் இந்த பாலு மகேந்திரா எனத்தெரியாமல் எனதுநண்பர்கள், உறவினர்கள் எல்லோருக்குமேஅ ந்தப்படத்தை சிபார்சு செய்தேன்.

எனது பள்ளித்தோழி ஒருவரின்குடும்பத்தினருக்கு, ”அழியாதகோலம்நல்லபடம்போய்ப்பாருங்கோஎன நான் சொன்னதும்…. அடுத்தநாள் அந்தவீட்டு அன்ரி வந்து என்னபடத்துக்குஅனுப்பினனீங்கள்ரீச்சரை ஸ்டுடண்ட் லவ்பண்ணுறதுபிள்ளையளோடைபார்க்கிறபடமாஇது”, என என்னை ஒரு வாங்குவாங்கு விட்டுப்போனதும் இந்தக் கணம் கண் முன் தோன்றுகிறது. அப்பொழுதுதான்யோசித்தேன், ”இனி அன்ரிக்கு கந்தன்கருணையையும்;, திருமால் பெருமையையும் தவிரஎ தையும் சிபார்சு செய்வதில்லைஎ ன்று.

அடுத்து வந்து அசத்தியதுமூன்றாம்பிறை.

கமல் சில்க்  சிமிதாவின்  பொன்மேனி  உருகுதே  என்ற  பாடல் காட்சியை மட்டும் நீக்கியிருக்கலாம் எனது மனது சொன்னபடி தியேட்டரில் இருந்து வெளியேறினேன்.

அதனை பாலுமகேந்திராவே வணிக சினிமாவுடன் தான் செய்த ஒரு சின்ன சமரசம் என பின்பு ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

அதன் பின் அவரின் எல்லாம் படங்களையும் முதல்நாள் முதல் காட்சி வரிசையில் சென்று பார்க்கத் தொடங்கினேன்.

வீடு, சந்தியாராகம்! அதைப்பற்றி சொல்லவே வேண்டாம்.

இடையிடையே சோபாவின் மரணம்மௌனிக்காவுடனான காதல் இப்படிச் செய்திகளும் வந்துபோய்க் கொண்டு போகும்அதில் உள்ள உண்மை பொய்கள் தெரியாததால் அவை எது பற்றியும் பொருட்படுத்தாமல் அவரின் படைப்புகளை மட்டுமே ரசிக்கத் தொடங்கினேன்.      

பின்பு என்னையும் அறியாமல் அவரின் சீடர்களின் படங்கள் என்னைமி கவும் ஈர்க்கத் தொடங்கியது.

2009ல் எனது மற்ற நூல்களின் வெளியீட்டு விழாவுடன், முதன் சிறுகதைத் தொகுப்பானயாவும்கற்பனைஅல்லபற்றி அமுதசுரபி ஆசிரியர் பேராசிரியர். திரு. திருப்பூர் கிருஷ்ணன் பேசிக்கொண்டு இருந்தபோது எனக்கு பக்கத்தில் மேடையில்அ மர்ந்திருந்த அவரின் கை எனது கையை இறுகப்பிடித்தது.

”யூ ஆர் பிளஸ்ட்எனஆங்கிலத்தில்சொன்னார்.

அச்சமயம் அவர் ஒரு கிறிஸ்தவர் என எனக்குத் தெரியாது.

பின்புஎன்னிடம்சொன்னார், ”உங்கடை புக்ஸ்சை எனது மாணவர்களுக்கு கொடுக்கின்றேன். அவங்க குறம்படம் எடுப்பாங்கள்என்று. அதன் பின் என்ன நடந்தது என எனக்குத் தெரியாது. பின்புநான் சென்னைக்குப் போன தருணங்களில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் எனக்கு கிட்டவில்லை.

கடைசியாக சென்ற வருடம்கர்ணன் தனது தவப்பலன்கள் எல்லாத்தையும் தாரைவார்த்துக் கொடுத்தது போலதலைமுறைகள்படத்தைகொடுத்திருந்தார்.

வியாபாரரீதியாக அது பெரிய வெற்றி அடையாது என தெரிந்திருந்தும் அடுத்த சந்ததிக்குதனது ஒரு சொத்து என்ற வகையில் அதனைக் கொடுத்திருந்தார்.

இனித்தான் அது பேசப்படும் என்பது வேறு

அவரின் வாழ்வில் அவர் செய்த நல்ல காரியம்ஒ ன்று : சினிமாவுடனானச மரசங்கள் இருந்தாலும் பாலாவெற்றிமாறன்சீனுசாமிராம் என்று அவரது மாணவர்களும் மாணவர்களின் சீடர்களும் என ஆல் போட்ட விழுதுகளாக பரந்து நிற்கின்றார்கள்திரையுலம் ஒரு ஆரோக்கிய வளர்ச்சியைக் காண ஆரம்பித்துள்ளது.

அடுத்தது அவர் நிறுவிய பயிற்சிப்பட்டறை.

ஒரு தூர நோக்கில் வாழ்ந்து….  படுக்கையில் உழன்று கொண்டு இராமல் நிறைவான ஒரு மரணத்தை அவர் தழுவியுள்ளார்.

அத்துடன் முடிந்திருந்தால் அனைத்தும் சுபம் என மங்கள காட் போட்டு திரைப்படம் முடிந்தது போல் அவர் வாழ்வு முடிந்திருக்கும்.

ஆனால் நடந்து இரு நிகழ்வுகள் நடக்காமல் இருந்திருக்கலாம் என எனதுமனம் சொல்லிக்கொண்டு இருக்கின்றது.

ஓன்று : மௌனிக்கா விவகாரம்!

பாலுமகேந்திராஅவர்களின்பேட்டிமூலமாகஅவர்சொன்னவிடயங்கள்:

மௌனிகாவின்பேரன்பு

மௌனிகாவும் என் மனைவிதான். இந்த இடத்தில் மௌனியைப் பற்றியும், எனக்கும் அவளுக்குமான உறவு பற்றியும் நான் கொஞ்சம் விரிவாகப் பேச வேண்டியிருக்கிறது.

மௌனிக்கும் எனக்குமான உறவு ஒரு நடிகைக்கும், டைரக்டருக்குமான படுக்கையறை சம்பந்தப்பட்ட உறவு என்றுதான் பலர் நினைப்பார்கள்.

ஆனால் உண்மை அதுவல்ல.ஏ றக்குறைய இருபது வருஷங்களுக்கு முன்ஆரம்பித்த உறவுஅது. இனியும் எதையும் நான் மறைப்பதற்கில்லை.

ரொம்பவும்உ டைந்து போன ஒரு தருணத்தில் நான் உங்க கூடவே இருந்திரட்டுமா? என்று கண்கலங்கி நின்ற, அந்த சின்னப் பெண்ணுக்குப் புரியும்படி புத்திமதிசொல்லி அந்த உறவை நான் முளையிலேயே கிள்ளிப் போட்டிருக்க வேண்டும்ஏனோ அதை நான் செய்யவில்லை.

அந்த அபலைப் பெண்ணின் கேள்விக்குப் பின்னே இருந்த வேதனை, அவமானம், வலி அனைத்தையும் நான் அறிவேன்.

புத்தி பூர்வமாக வாழாமல், உணர்வு பூர்வமாக மட்டுமே வாழத் தெரிந்த என்னை அது வெகுவாகப் பாதித்தது. அதன் விளைவு தான் எனக்கும் மௌனிக்குமான உறவு.

 இவ்வளவு வேதனைப்படுகிற நீங்கள் ஏன் உங்கள் வாழ்வை இத்தனைச் சிக்கலாக்கிக் கொண்டீர்கள்?

காரணம் மௌனியின் பேரன்புதான். ‘நீங்க எனக்குத் தாலிகட்ட வேண்டாம். உங்ககாசு, பணம், சினிமா எதுவும்எ னக்குவேண்டாம். உங்கள்மூலமாக ஒரு குழந்தைகூடவேண்டாம். நீங்கள் என்னருகில் இருங்கள். அது போதும்!’ என்று சொல்லும் ஒரு ஆத்மாவை நான்எ ப்படி உதறித்தள்ளுவது?

தன் இளமைக்காலத்தை எனக்காக, என்னுடன்ப கிர்ந்து கொண்டவளை எப்படிஉதற? என் உறவு காரணமாகப்பழிச்சொல், அவமானம்அடைந்தவள்அவள்.

நான் வேலை இன்றி இருந்த மாதங்களில், தான் மட்டும் மாங்குமாங்கென்று உழைத்து, பொருளாதார ரீதியாகவும் என்னைத் தாங்கிப் பிடித்தவள்.

இந்த செவ்வாய் கூட எனக்காக மாங்காடு அம்மன் கோயிலுக்கு வீட்டிலிருந்தே நடந்துபோய், அங்கப் பிரதட்சணம் செய்திருக்கிறாள். ஒரு பெண்ணின் பூரணமான அன்பையும் அழுத்தமான பக்தியையும் உணர்ந்தவர்களால் எங்கள் உறவைப் புரிந்து கொள்ளமுடியும்.

இருபது வருடங்கள், தன்னுடைய எல்லாவற்றையும் எனக்காக அர்ப்பணித்துவிட்டு இப்போது 35 வயதாகும் மௌனியை எப்படி நான் தூக்கிப் போடுவது?

அதேசமயம், என் அகிலாவை நான் எந்தக்காலத்திலும் எவளுக்காகவும் விட்டு விலகியவன் அல்ல. அவளை நான் ஆத்மார்த்தமாக, ஆழமாகநேசிக்கிறேன். ன்றாவது ஒரு நாள், என் நெஞ்சில் நிறைந்து வழியும்
ன்பை
, பொங்கிப் பிரவாக மெடுக்கும் பாசத்தை அகிலா புரிந்து கொண்டால்எ னது இறுதி மூச்சு நிம்மதியாகப் பிரியும்!

மௌனிகாவைத்திருமணம்செய்துகொண்டீர்களா?

என் சுக துக்கங்களில் பங்கு கொண்டு நல்ல துணையாக, நல்லசிநேகிதியாக, சமயங்களில் தாயாகக்கூட என்னைப் பாதுகாக்கிற பெண்ணை சினிமாவட்டாரத்தில்,பாலுமகேந்திரா வெச்சுகிட்டிருக்கிற பொண்ணுஎன்று கொச்சையாகக் குறிப்பிடுவதை என்னால் சகிக்க முடியவில்லை.

அதனால் 1998ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அவளுடன் நான் அடிக்கடி செல்லும் ஒரு சிவன்கோயிலில் வைத்துத் தாலி கட்டினேன்மௌனி கழுத்தில் இருப்பது நான் கட்டிய தாலிதான்.

இந்தப் பேட்டி திரு. பாலுமகேந்திரா கொடுத்திருந்தது. வரிக்குவரி மாறாமல் பிரதி எடுத்து தந்துள்ளேன்.

இதில் உள்ள நியாயம் அநியாயம் பற்றி எனது கருத்தை முன் வைக்க இந்தக் கட்டுரை எழுதவில்லை.

சொல்லிப்போவதுதிருமணவீடு!
சொல்லாமல்போவதுமரணவீடுஎன்பார்கள்!!

இங்கு  மௌனிக்கா மரண வீட்டுக்கு வருவதற்கு மறுப்புத் தெரிவித்ததும் பின்பு அவர் இயக்குனர்சங்கம் வரைவந்து பைசல் பண்ணப்பட்டதும் மிகவும் மனதுக்கு வேதனையானவிடயம்.

மரணவீட்டுக்கு வர மறுப்புத் தெரிவித்தவர்கள் மௌனமாகவே இருந்திருந்தால் மௌனிக்காவின்; வரவு மிகச்சிறிய விடயமாக இருந்திருக்கும்.

இன்று எத்தனையோ ஆயிரம் வோல்ட்லைற் போட்டு படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. பத்திரிகைகளில் அது ஒரு பிரத்தியோகச் செய்தியாகவும் மரண வீட்டைப் பார்க்கவந்தவர்களுக்கு மெல்லுவதற்கு அவல் கொடுத்தது போலவும் இருக்கிறது.

இதில்சம்மந்தப்பட்டஅனைவரும்நடந்தநிகழ்ச்சிக்காக, அவர்களின் மனச்சாட்சி அவர்களுக்கு சொல்வதை கேட்கும் காலம் வரும் பொழுது நிச்சயம் மனம் வருந்துவார்கள்.

 அடுத்தது கைக்குண்டு விவகாரமும் ஈழத்துப் போராளியும்

நான் அறிந்த திரு. பாலுமகேந்திரா மட்டக்களப்பில் பிறந்து அங்குகல்விகற்று இருந்தாலும் தனது 11ம் 12ம் கல்வியை வட்டுக்கோட்டையில் உள்ள யாழ்ப்பாண தனியார் கல்லூரியில் கற்றார். அங்கு படிப்பதற்காக எனது  ஊரான சங்கானையில் உள்ள ஒரு வைரவ கோயிலைப்பராமரிக்கும் சைவர்கள் வீட்டில் தங்கி இருந்து அங்கு சென்று வந்திருக்கின்றார்.

இதனைத் தவிர அவர் தனது இளம் வயதில் எந்தப்போராட்டத்திலும் அல்லது இயக்கத்திலும் கலந்து கொண்டதாக நான் அறிந்திருக்கவில்லை.

இனிவிடயத்துக்குவருவோம் –  மரணவீட்டுக்கு அஞ்சலி செலுத்த வந்த இயக்குனர் திரு. கௌதமன் மற்றும் திரு. சீமான் இருவரும் அறுபதுகளில் திரு. பாலுமகேந்திரா அவர்கள் குண்டுவீசிய ஒரு போராளி என குறிப்பிட்டது பல இலங்கைத்தமிழர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காரணம் போராளி என்பதற்கு இலங்கை மக்களிடையே உள்ளவரைவிலக்கணம் வேறு.

இலக்கியப் போராளி என்று சொல்லுங்கள்திரைத்துறை போராளி என்று சொல்லுங்கள் அது வேறுஆனால் ஒரு புரட்சிப் போராளி என்பவன் இறுதிவரை களப்பணி செய்வனே போராளி. அல்லது களத்தில் நின்று வெளியேனாலும் வெளியேறிய மண்ணில் நின்று களத்திற்கான பணியை செய்திருந்தால் அவன்போராளிஅல்லது அதுசம்பந்தமான ஒருபடைப்பையாவது முன்வைத்திருக்க வேண்டும். இன்று பல களப்போராளிகள் இலக்கியப்போராளிகளாக இருப்பதுகண்கூடு.

எல்லோருக்கும் தமிழ் உணர்வு இருக்கலாம்ஆனால் எல்லோரும் போராளியாக சித்தரிக்கப்பட வேண்டியதில்லையே.

மிகப் பெரிய ஒரு கலைஞனை…. திரையுலகப் போராளியை விடுதலைப் போராளியாக காட்ட முனைவது அவருக்கு செலுத்தும் அவமரியாதையாகும்.

திரு. காசிஆனந்தன்சொன்னார், பக்கத்தில் இருந்த பாலுமகேந்திரா மறுக்கவில்லை என்று பல விவாதங்கள் முகநூல்களிலும் வலம் வருகின்றன. இதில் உள்ள உண்மைத்தன்மை அல்லது பொய்த்தன்மையைத் தாண்டி இந்த செய்தியால் திரு. பாலுமகேந்திரவின் புகழ் எவ்வளவு தூரம் உயரப் போகின்றது என்பது என்னளவில் கேள்விக்குறியே!

திரு. பாலுமனேந்திவின் அடையாளச்சின்னம்…
அவரதுதிரைத்துறையே!….
திரைத்துறையே!!….
திரைத்துறையே!!!
வேறுஎதுவும்இல்லை.

ஆயுதங்கள் மௌனமாக்கப்பட்ட பின்பு இலங்கை விடுதலைப் போராட்டம்மாவீரர் வரலாறுகள் என ஆயிரக்கணக்கான மலிவுப்பதிப்புகள் வெளிவந்து அதன் அட்டைப்படங்கள் வெயிலிலும் மழையிலும் மதராசு பட்டினத் தெருக்களில் நிறம்மாறிக்கிடந்த பொழுதும், சுவரொட்டிகளை மாடுகளும் ஆடுகளும் வாயால் உரசி உரசி தின்று கொண்டிருந்த பொழுதும் இதற்காகத்தானா போராடினீர்கள் என மனம்நொந்தேன்!

அவ்வாறே இன்றும்

இதுக்காகத்தானா பாலுமகேந்திரா உன் வாழ்வும் மரணமும் என மனம் கவலை கொள்கின்றது.

 

1 Comment on “சிறந்த ஒரு கலைஞனின் மரணமும்… சின்ன சின்ன கறுத்தப் புள்ளிகளும்……

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)