கார்த்திகை மாதம்! கார்காலம்!! அந்திமாலை!!! செக்கச் சிவந்த வானம்!!!! கார் மேகங்களுக்குப் பிரசவலி குளிர்காற்று கூச்சலிடுகின்றது. காது மூக்கு வாய் எங்கும் கடித்துக் குதறும் கொடும் காற்று. நான் நடக்கின்றேன் நடக்கின்றேன் நடந்து கெண்டே இருக்கின்றேன் மூங்கிலில் இசையை மீட்டி விட்டவன் மூச்சுக் காற்றாய் எங்கும் இருப்பவன் மகரந்த துகள்களைக் பரப்பி விடுபவன் மண்ணிலே சக்தியை …

இலையுதிர்காலம் Read more »

கோடை. நான் நடக்கின்றேன் நடக்கின்றேன் நடந்து கொண்டே போகின்றேன். அம்மியில்லை உரலில்லை ஆட்டுக்கல் ஏதுமில்லை ஈக்குப்பிடி பிடித்துக் கூட்ட வளவில்லை. தண்ணியள்ள கிணறில்லை விறகெரிக்க அடுப்பில்லை. குனிஞ்சு நிமிர்ந்து வேலை பார்க்க நேரமில்லை. என் உடலை வியாதிகள் விலை பேசிவிட்டன பிறசர் அழுத்த சலரோகம் துரத்த பிடி பிடி எனக் காலன் பின்னால் துரத்த நான் …

கோடை – திருமதி. கலாநிதி ஜீவகுமாரன் Read more »

ஹோட்டலை விட்டு வெளியேற இன்னும் சரியாக ஒரு மணித்தியாலமே இருந்தது. அறையுள் உள்ள பொருட்களில் ஒன்றைக் கூடத் தவற விடாமல் எடுத்து சூட்கேசினுள் வைத்துக் கொண்டிருந்தேன். சூட்கேசினுள் 23 கிலோவும் கைப்பையுள் 7 கிலோவும் வேறு இருக்க வேண்டும். அல்லது கோயில் வீதியில் சாமான்களைப் பரப்பி வைத்து தரம் பிரிப்பது போல விமான நிலையத்தில் போராட …

தாய் – தந்தை – மகள் : வி. ஜீவகுமாரன் Read more »

டென்மார்க்கின் மிகச் சிறந்த கோடைகாலம் இதுதான் என அனைவரும் மகிழ்ந்த அந்த வருட கோடை காலம் கடந்து போக…. பச்சை இலைகள் பழுப்பு இலைகளாகி… அவைகள் உதிர்ந்து மரங்கள் நிர்வாணமாகும் காலத்தில் தான் இவர்களின் பெற்றோர்கள் டென்மார்க்கில் கால் வைத்தார்கள். இந்த இருபத்தியாறு வருடங்களில்; டென்மார்க்கும் இருபத்தியாறு கோடைகளையும், இலையுதிர்வுகளையும், பனி மழைகளையும்;, இலைதளிர்களையும் கண்டு …

நோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன். Read more »

aa

22-07-2018 ஞாயிறு தினக்குரலுக்கு எழுத்தாளர் ஜீவகுமாரன் நேர்காணல் புலம் பெயர்ந்த ஈழத்து எழுத்தாளளில் குறிப்பிடப்பட வேண்டிய ஒருவர் வி. ஜீவகுமாரன். யாழ்ப்பாணம் சங்கானையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், டென்மார்க் நகரசபை ஒன்றில் புவியியல் சார்ந்த கணிணிப் பகுதியின் முழுநேரப் பொறுப்பாளராயும் , டென்மார்க் அரச நூலகத்தின் தமிழ் பகுதி பொறுப்பாளராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் கடமை புரிந்து …

22-07-2018 ஞாயிறு தினக்குரலுக்கு எழுத்தாளர் ஜீவகுமாரன் நேர்காணல் Read more »

    60 ஆண்டுகள் இலக்கியப் பரப்பில் கொக்குவில் ஸ்டேசனில் இருந்து நயாகரா வரை பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு ஆளுமையின் சிறப்பிதழுக்கு 10 ஆண்டுகள் மட்டும் கடற்கன்னியின் அருகே வாசம் செய்து கொண்டும் பயணித்துக் கொண்டும் இருக்கும் எனது இந்தக் கட்டுரை அதிகப் பிரசங்கத்தனமோ நானறியேன். ஆனாலும் எழுத வேண்டும் என்றொரு உந்தலினால் ஒத்து ஊதுபவனின் …

உவமானம் + உவமேயம் = திரு. அ.முத்துலிங்கம் + 60 Read more »

  தமிழ்மாதம் என சிங்கப்பூர் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட சித்திரை மாதம் முழுக்க தமிழ் நிகழ்வுகள் சிங்கப்பூரின் வெவ்வேறு பிரதேசங்களில் அரங்கேறிக்கொண்டிருந்தன. 08.04.2017 சனிக்கிழமை மாலை 6.00 மணி. உமறுப்புலவர் மண்டபத்தின் வாசலில் சிவகாமியின் சபதம் நாட்டிய நாடக பதாகை வரவேற்றது.. உலகத் திருமறையின் நாயகன் திருவள்ளுவர் மண்டப வாசலில் அமர்ந்திருந்தார். அவரின் கையில் இருந்த ஏட்டில் …

எரிந்த தீயில் விரிந்த கனல் – சிவகாமியின் சபதம் – ஒரு பார்வை. – வி. ஜீவகுமாரன் Read more »

கிழக்கில்…. மிகவும் நன்றாக ஞாபகம் இருக்கின்றது. கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முதல்… இரண்டாம் அல்லது மூன்றாம் வகுப்பு என நினைக்கின்றேன். பள்ளிக்கூட வாசலில் இருந்த கிட்டிணரண்ணையின் கடையில் பெரிய போத்தல்களை இந்த பொரிவிளாங்காய்கள் நிறைத்திருக்கும். பெரித்த அரிசி… அல்லது பொரித்த சோளம்… அல்லது பொரித்த இறுங்குடன் சீனிப்பாகையும் சிவத்த நிறச்சாயத்தையும் சேர்த்து பெரிய தோடம்பழ அளவில் …

பொரிவிளாங்காய் – சிறுகதை Read more »

  கணினித் திரைக்கு முன் சுஜித்தா. ஹோலுக்குள் இருந்து நாங்கள் மூவரும் நிர்வாண மனிதர்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். விவாதித்துக் கொண்டிருந்தோம் என்பதனை விட ஒருவரின் கருத்தை மற்றவர்கள் ஆமோதித்துக் கொண்டிருந்தோம். ”அங்கிள்… ஹமோன்… வந்து பாருங்கோ… அப்பா அம்மாவும் வாங்கோ” – சுஜித்தா ஐந்து வயதுப் பெண்ணாக துள்ளினாள். அவள் ஒரு கிராபிக் எஞ்ஜினர். …

நிர்வாண மனிதர்கள் – சிறுகதை Read more »

நிழல் வாழ்க்கை                     வழமையை விட இந்த வருட வின்ரர் டென்மார்க்கில் கடுமையாகவே இருந்தது. முன்பெல்லாம் வாசல் கதவுக்கு வெளியே படுத்திருக்கும் நாய் போலவே வின்ரர் அமைதியாக படுத்திருக்கும். பனி திட்டு திட்டாக படிந்து போயிருக்கும். ஆனால் இந்த வருடம் கதவைத் திறந்தவுடன் …

நிழல் வாழ்க்கை – சிறுகதை Read more »