எங்கெங்கு காணினும்… (சிறுகதை)

”புதிய மண்ணும் புதிய வாழ்வும்” என்ற பெயரில் நான் எழுதி வரும் வார மலருக்கான கட்டுரைகளை இரண்டு மூன்று இதழ்களுக்குப் போதுமானவற்றை முதலிலேயே டென்மார்க்கில் இருந்து அனுப்பி விடுவது என் இயல்பு. எனது எழுத்துகளைக் கௌரவப்படுத்தும் பத்திரிகைகளைக் கடைசி நேர டென்சனுக்குள் இழுத்துச் செல்வதில் எனக்கு என்றுமே உடன்பாடில்லை. ஆயுதங்கள் மௌனமாக்கப்பட்ட போருக்குப் பின்னான இலங்கையையும்…. அதற்கு  போருக்கு முன்னாக புலம் பெயர்ந்த மக்களின் வாழ்க்கையினையும் இணைத்து எழுதிக் கொண்டிருக்கும் தொடர். 25 தொடருக்ளுக்கான… அதாவது அரை… Læs mere எங்கெங்கு காணினும்… (சிறுகதை)

மாதுளம் மொட்டுகள் – சிறுகதை

கொரானா வருவதுற்கு சரியாக ஒன்பது மாதங்களுக்கு முன் தாஜ்மகாலுக்குப் போயிருந்தேன். நீண்ட காலக் கனவு அது. காலையில இளம் சிவப்பு நிறத்திலும் மதியத்தில் வெள்ளை நிறத்திலும் மாலையில் தங்க நிறத்திலும் நிலவு வெளிச்சத்தில் பளிங்கு போல மின்னும் அந்த அதி அற்புத கலைவடிவக் கட்டத்தை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன். மாலையில் ஜமுனை நதிக்கரை வீசும் காற்றை அனுபவித்தபடி அதன் அருகில் அமர்ந்திருந்தபடியும்;… பசும் புற்தரையில் ஒருக்களித்துப்; படுத்தபடியும்… அதன் அழகை அனுபவிக்கும் சுகமே தனி. 16ம்… Læs mere மாதுளம் மொட்டுகள் – சிறுகதை

கரும்புச்சாறும் வெள்ளிவிழாவும் – சிறுகதை

இந்தியாக்கும் இலங்கைக்கும் சிங்கப்பூர் – மலேசியாக்கும்  போகும் பொழுதெல்லாம் எனக்கு மிகவும் பிடித்தது வீதியோரத்தில் விற்கும் கரும்புச்சாறுதான். அதனைச் சுவைக்கும் பொழுது சலரோகம் வந்து இதனைக் குடிக்க குடுத்து வைக்காதவர்கள் தான் போன பிறப்பில் அதிக பாவம் செய்தவர்கள் என நினைத்துக் கொள்வேன்.  என்னை அதிசயிக்க வைக்கும் இன்னோர் விடயம் எப்படி அந்த இயந்திரம் கரும்புத் துண்டில் இருந்து ஒரு துளி இனிப்பையும் விடாது பிழிந்து எடுக்கிறது என்பதுதான். கரும்புச் சக்கையில் எந்த சுவையும் இராது. அது… Læs mere கரும்புச்சாறும் வெள்ளிவிழாவும் – சிறுகதை

கடைக்குட்டியன் – சிறுகதை

”ஐயோ” நிலம் நன்கு வெளிக்காத அந்த அதிகாலைப் பொழுதில் கனகம் அலறிய பொழுது ஊரே கூடியது. கிணற்றினுள் கணபதியின் உயிர் போய்; உடல் மிதந்து கொண்டிருந்தது. அக்கம் பக்கத்தவர் அந்தக் காலைப் பொழுதில் கனகத்தின் குரல் கேட்டு முன் – பின்; வளவு வேலிக்கதியால்களை விலத்தியும் தள்ளியும் கொண்டு உள்ளே வந்து அவனை கிணற்றினுள் இருந்து தூக்கி வெளியில் கொண்டு வந்தார்கள்;. சந்தையில் இருந்து கிழக்காகச் செல்லும் ஒழுங்கைப் பக்கத்தில் இருந்து யாரோ ஒருவரின் இழவுச் செய்தியை… Læs mere கடைக்குட்டியன் – சிறுகதை

கமலி அக்காவும் பாலன் அண்ணாவும்

”தத்தெடுத்து ஒரு பிள்ளையை வளர் எனச் சொல்லிப் பார்த்தன். ”அப்பிடி வளர்த்தால் போலை என்னை மலடி எண்டு சொல்லுறதை நிற்பாட்டிப் போடுவியளோ… என்னையும் இவரையும் நல்ல விசயங்களுக்கு முன்னாலை விடுவியளோ” என எதிர்த்தல்லோ கதைக்கின்றாள்” ”3 மிளகோடையும் 3 மிடறு தண்ணியோடையும் எத்தனை வருசம் கந்தசஷ்டி இருந்திட்டாள.; அந்தக் கடவுளாவது கண் திறக்கவில்லையே” திருமணம் நடந்து அடுத்தடுத்த மாதங்களிலே ” என்னடி… வயிற்றிலை ஒரு புழுப்பூச்சி இல்லையோ?” என தொடங்கிய ஊராரின் அக்கறையும்… விடுப்பும்… ஏளனப் பேச்சுகளும்…… Læs mere கமலி அக்காவும் பாலன் அண்ணாவும்

அன்னதானம்

அன்னதானம்அன்னதானம் போருக்குப் பின்பு மக்களின் பக்தி அதிகரித்து விட்டதோ என நான் நினைப்பதுண்டு. வானுயர்ந்த ஆஞ்சனேயர்… சிவன்… திருவிழாக்கள். கவனிக்கப்படாது இருந்த எத்தனையோ ஆலயங்களின் மீள் புனருத்தானங்களும்… கும்பாபிசேங்களும்… வருடத்தின் அத்தனை நாட்களிலும் லவுட் ஸ்பீக்கர்களில் காலையில் முதல் வணக்கம் எங்கள் முருகன் தொடங்கி இரவில் காலத்தால் மறையாத காதல் பாடல்கள் வரை போய்க் கொண்டிருக்கும். பகலில் முழுத் திரைப்படங்கள்… இடைக்கிடை திரைப்பட நகைச்சுவைகள். பாவம் பரீட்சைக்கு செல்லும் மாணவ மாணவிகள். தான் தோன்றிப் பிள்ளையார் என்று… Læs mere அன்னதானம்

’இப்படிக்கு அன்புள்ள அம்மா’ – DRAMA

எனது மனைவி திருமதி. கலாநிதி ஜீவகுமாரனால் டெனிஷ் மொழியில் எழுதப் பெற்ற உரைவீச்சுக் கவிதை வடிவில் அமைந்த Kærlig hilsen mor நாவலின் ஒரு பகுதியை அதன் வெளியீட்டு விழாவன்று நாடகமாக்கி சுமார் 600 பார்வையாளருக்கு சமர்ப்பித்திருந்தேன். இதே நூல் ’இப்படிக்கு அன்புள்ள அம்மா’ என என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பின்பு அது ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் ஹிந்தியிலும் வெளியாகியது. இந்த விழாவிற்கு முன்னுரை எழுதிய டென்மார்க்கின் மிகச் சிறந்த கவிஞர் Benny Andersen நேரில் வந்து வாழ்த்திப்… Læs mere ’இப்படிக்கு அன்புள்ள அம்மா’ – DRAMA

தாய் – தந்தை – மகள் : வி. ஜீவகுமாரன்

ஹோட்டலை விட்டு வெளியேற இன்னும் சரியாக ஒரு மணித்தியாலமே இருந்தது. அறையுள் உள்ள பொருட்களில் ஒன்றைக் கூடத் தவற விடாமல் எடுத்து சூட்கேசினுள் வைத்துக் கொண்டிருந்தேன். சூட்கேசினுள் 23 கிலோவும் கைப்பையுள் 7 கிலோவும் வேறு இருக்க வேண்டும். அல்லது கோயில் வீதியில் சாமான்களைப் பரப்பி வைத்து தரம் பிரிப்பது போல விமான நிலையத்தில் போராட வேண்டும். இப்போதெல்லாம் மலிந்த விலையில் ரிக்கற் விற்கும் விமான சேவை நிறுவனங்கள் இந்த எக்ஸ்ரா எடையில் பணம் கறக்க முயற்சிக்கின்றார்கள்.… Læs mere தாய் – தந்தை – மகள் : வி. ஜீவகுமாரன்

குதிரைவாகனம் பற்றி நூல் அறிமுகமும் ஒர பார்வையும்

q

இந்த மாத ஞானம் மாத இதழில் வெளியாகியுள்ள குதிரைவாகனம் பற்றி நூல் அறிமுகமும் ஒர பார்வையும் டென்மார்க் நாட்டில் மரணப்படுக்கையில் கிடக்கும் ஒருவரது நனவிடைத் தோய்தலாகவும்… சமகால நிகழ்வுகளின் பதிவாகவும்…. வார்க்கப்பட்ட இந்த நாவல் ஈழத்து சமூக வரலாற்றில் ஆறு தசாப்த காலத்தில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கின்ற சமூக மாற்றத்தின் வெட்டு முகம் எனக் கொள்ளத்தக்க தகமை கொண்டது. மரணப்படுக்கையில் இருப்பவர் யாழ். குடாநாட்டின் காரைநகரைச் சார்ந்த வணிகப் பெருமகன் சண்முகத்தாரின் மூன்றாவது தலைமுறையைச் சார்ந்தவர். தாத்தா… Læs mere குதிரைவாகனம் பற்றி நூல் அறிமுகமும் ஒர பார்வையும்