ஹொல்பெக் நகரசபை தேர்தல் 2013 – வேட்பாளர் அறிக்கை – 10 கேள்விகளும் – 10 பதில்களும்
ஹொல்பெக் நகரசபை தேர்தல் 2013
வேட்பாளர் அறிக்கை:
10 கேள்விகளும்
10 பதில்களும்
வி. ஜீவகுமாரன்
1.நீங்கள் எவ்வளவு காலமாக இந்த தேர்தலில் நிற்க வேண்டும் என நினைத்திருந்தீர்கள்?
24.01.2013வரை இது பற்றிய கனவே எனக்கு இருந்திருக்கவில்லை.
25.01.2013 அன்று, நேவவழ கடையில் தற்செயலாக சோசல் குடியரசு கட்சியின் பிரதான வேட்பாளரான சினாவை சந்தித்த பொழுது, ”இப்படிக்கு அன்புள்ள அம்மா” நூல் வெளியீட்டுக்கு வந்திருந்த அறிமுகத்தினால் கதைத்துக் கொண்டிருந்த பொழுது, திரு. கங்காதரன் இம்முறைத் தேர்தலில் நிற்கவில்லை என்றும் அவ்விடத்தை நிரப்ப எனக்கு விரும்பமா எனவும் கேட்டுக் கொண்டார்.
அதுபற்றி ஆலோசிக்கின்றேன் என சொல்லி விட்டு ஒரு கிழமையாக அது பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அதன் பின் எனது சம்மதத்தை தெரிவித்தேன்.
2. நீங்கள் அவருடன் கதைத்ததின் பின்பு தேர்தலில் நிற்பது பற்றி முடிவெடுக்க சுமார் 1 கிழமை கால அவகாசம் எடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்;. இந்தக் கால கட்டத்தில் என்ன வகையான எண்ணங்கள் அல்லது திட்டங்கங்களை முன் வைத்து தேர்தலில் நிற்கலாம் என யோசித்துக் கொண்டு இருந்தீர்கள்?
(அ). இந்த தேர்தலில் வென்றால் இந்தப் பணியை செவ்வனே செய்வதற்கு எனக்கு போதியளவு மொழி வளமும், டெனிஷ் மொழியி;ல் விவாதிக்கும் திறனும், நகரசபையின் நடப்புகள் பற்றிய அறிவும், தமிழரிடம் நான் கேட்கும் வாக்கு வெல்லுவதற்குரிய வாய்ப்பைத் தரக்கூடிய ஒரு கட்சியுடன் நான் இணைகின்றேனா என்ற உறுதியும், எனது சொந்த தொழிலையும் மற்றும்; இலக்கிய – மொழிபெயர்ப்பு பணிகளையும்; பாதிக்காதவாறு அடுத்த 4 ஆண்டுகள் இந்த பதவிக்கு நேரம் ஒதுக்க முடியுமா என்பது. இறுதியான பதில் முடியும் என்றிருந்தது.
(ஆ) இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றால் இதனால் கிடைக்கும் வருமானம் அனைத்தும் பொதுச் சேவைகளுக்கு அளிப்பது என்பது.
3. முதலாவது விடயத்தை தேர்தலுக்கு நிற்பவர்கள்; எல்லோரும் யோசிப்பார்கள். இரண்டாவது விடயம் மகிழ்ச்சியாகவும் மிகவும் ஆச்சரியம் தரக்கூடியது ஒன்றாக இருக்கின்றது. இதனைப் பற்றி கொஞ்சம் விளக்மாக சொல்லுவீர்களா?
நிச்சயமாக! 3 விடயங்களை சொல்ல விரும்புகின்றேன்………………
(1). வெளிநாட்டவராகிய எமது சில உரிமைகளுக்கு போராடுவதற்கு அல்லது இலகுவில் பெறுவதற்கு இவ்வாறான பதவிகள் சில வழிகளை திறக்கும். உதாரணமாக திரு. கங்காதரனால் முருகன் கோயிலுக்கு விரைவாக காணி வேண்ட முடிந்ததற்கு காரணம் அவர் எங்கள் பிரதிநிதியாக அங்கு இருந்தமையே. எனவே வெளிநாட்டு மக்களின் ஆதரவில் இந்தப் பணிக்கு என்னால் வரமுடிந்தால் அதனால் கிடைக்கும் வருமானத்தை எந்த வெளிநாட்டவரின் ஆதரவு எனக்கு கிடைக்கின்றதோ அந்த வெளிநாட்டவருடன் வேலை செய்யக் கூடிய அரசியல் பக்கச் சார்பற்ற பொது அமைப்புகளுக்கு வழங்குவது என முடிவு செய்தேன்.
(2). எனக்கான ஆதரவின் பெரிய பகுதியை இங்குள்ள தமிழ் மக்களிடம் நான் வேண்டி நிற்பதால் எனக்கு கிடைக்ககூடிய வருமானத்தின்; அளவின் பெரும் பகுதி இலங்கையில் துன்புறும் எங்கள் மக்களுக்காகவே இருக்கும். அதே போல இங்கு தமிழையும் எங்கள் கலாச்சார விழுமியங்களையும் நாம் நாம் சார்ந்த இந்து, கிறிஸ்தவ சமயவழிகாட்டலையும் காப்பாற்றும் வகையில் முன்னெடுக்கும் திட்டங்களுக்கும் அந்த உதவி சென்றடையும்.
எங்கள் கலாச்சார விழுமியங்களைக் காப்பாற்றுவதன் மூலமே எங்கள் இளைய சந்ததிக்கு நாங்கள் நல்ல வழிகாட்டிகளாக இருக்க முடியும். அத்துடன் வளர்ந்து வரும் இளைய சந்ததியின் ஆக்கபூர்வமான பணிகளுக்கும் இந்த நிதியின் ஒரு பகுதி ஒதுக்கப்படும்.
(3). இலங்கையில் நடந்த போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதில் புலம் பெயர்ந்த தமிழர்களின் உதவி நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்பட்டது என்பதனை அனைவரும் அறிவார்கள். ஆனால் இன்று முன்னிருந்த நிலையிலும் தாழ்வான ஒரு நிலையில் இலங்கையில் தமிழினம் நிற்கும் பொழுது அந்த மக்களுக்கு போதிய உதவிகள் கிடைப்பதில்லை. பொதுமக்களான நாம் தான் அதனைச் செய்ய வேண்டும். மேலும் எதிர்வரும் காலங்களில் மக்களுக்காக சேவை செய்ய வருபவர்களுக்கு நான் செய்யும் இந்தச் சிறியபணி ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றேன்.
4.நல்ல விடயம் தான். ஆனால் இதனை நீங்கள் நேரடியாகச் செய்யாமல் ஏன் இங்குள்ள பொது அமைப்புகள் மூலம் செய்ய விரும்புகின்றீர்கள்?
(அ). இது பணமும் நம்பிக்கையும் சார்ந்த விடயம். மேலாக தனிப்பட்ட ஒருவர் நேரடியாக உதவி செய்யும் பொழுது தனது உறவுகள், தனது கிராமம் என சொந்த விடயங்கள் தலைதூக்குவதற்கு சந்தர்ப்பம் உண்டு. ஆனால் எங்களில் பலர் அங்கத்தினராய் உள்ள ஒரு அமைப்பின் மூலம் செய்யும் பொழுது அது பலரின் ஒத்த கருத்துடன் இன்னமும் சுதந்திரமாகவும் ஜனநாயக முறையுடனும் நடைபெறும் என நம்புகின்றேன்.
(ஆ). இந்த தேர்தலில் பெயரளவில் ”நான் எனது ஓய்வு நேரத்தை செலவிட்டு நிற்கின்றேன்”; எனச் சொன்னாலும் இதில் உண்மையில் முன்னிற்பது ”மக்களுக்கு உதவி செய்வது என்ற கோட்பாடு” தான். எனவே மக்களின் ஆதரவுடன் அது வெற்றி பெறும் பொழுது அந்த உதவிகள் எவ்வாறு மற்றவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்று மக்களே தீர்மானிப்பது தான் நியாயமும் ஜனநாயக தார்மீகமும் ஆகும்.
5. இந்த தேர்தலில் நீங்கள் வெற்றியடைந்தால் இதில் கிடைக் கூடிய பொருளாதார அளவு சுமாராக எவ்வளவு இருக்கலாம்?
அடிப்படை ஊதியமாக வரிக்கு முன்பாக 66.000 குறோன்களும் பின்பு அவரவர் என்ன குழுவில் அங்கம் வகிக்கின்றார்களோ அதற்கேற்ப அதனளவு மாறுபடும். கட்டாயம் ஏதாவது ஒரு குழுவில் அங்கம் வகிக்கும் தருணத்திலும் Holbæk Forsyning நிர்வாகசபை பதவி கிடைத்தால் அதற்கும் சேர்த்து மொத்தமாக வருட ஊதியமாக 60.000 கிடைக்க வாய்ப்புண்டு. அவ்வகையில் ஒரு வருடத்துக்கு வரிக்கு முன்பாக 126.000 குறோன்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இதிலிருந்து வரிப்பணம் போக மிகுதியாக கிடைக்கும் பணத்தை நான் மேற்சொன்ன திட்டங்களுக்காக பயன்படுத்தலாம்.
6. இந்த வரவு–செலவு–வரிக்கணக்குகளை எவ்வாறு மக்களுக்கு சமர்ப்பிக்க யோசித்து இருக்கின்றீர்கள்?
எனக்கு என்று ஒரு மாதாந்த வருமானம் ஏற்கனவே உண்டு. இத்துடன் நகரசபையால் ஒரு வருமானம் வரும் போது அதன் தேறிய வருமானம் எவ்வளவு என அங்கீகாரம் பெற்ற ஒரு கணக்காளரை வைத்து வருடாந்தம் கணக்குப் பார்த்து அந்த தேறிய முழு வருமானமும் கணக்காளரின் அறிக்கையும் எனது வரவு செலவுகள் முழுக்க என்னுடன் இணைந்து செயலாற்றும் அமைப்புகளிடம் கையளிக்கப்படும். அத்துடன் எனது இணைய தளத்தில் ஒவ்வொரு ஆண்டும் பதிவேற்றப்படும்.
அதன் பின்பு அந்த வருடம் என்ன என்ன செயல்திட்டங்களுக்கு பணத்தை வழங்குவது என அவர்களுடன் கலந்தாலோசித்து அனைவருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் அவரவர்கள் கையில் அந்த தொகை ஒப்படைக்கப்படும். அத்துடன் ஒவ்வோர் ஆண்டின் முடிவிலும் அந்த ஆண்டு நகரசபையில் எடுத்த முக்கிய முடிவுகள், அதில் எனது அனுபவங்கள் பற்றி தெரிவிப்பேன். இது எமது இளம் சந்ததிக்கு பெரிதும் உதவும்.
7. நீங்கள் வழங்கும் உதவி சரியான வழியில் சரியான இடத்துக்குசென்றடைந்துள்ளதா என எவ்வாறு கண்டு கொள்வீர்கள்?
எங்கள் அன்றாட குடும்ப வாழ்வு நிகழ்வுகள் போல எல்லாமே நம்பிக்கையின் அடிப்படையிலும் நேர்மையில் அடிப்படையிலும் தான் நடைபெற வேண்டும். அதனை சரியான வழியில் சமர்ப்பிப்பது அந்த அந்த அமைப்புகளின் கடமை. அதனை அவர்கள் எனக்கு தெரிவிக்கும் பொழுது அதுவும் இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தொடர்ந்து 4 வருடங்கள் இவ்வாறு நடைபெறும் பொழுது 4 வருடங்களின் முடிவில் முழுப்பலனின் ஒரு முழுத்தோற்றத்தையும் மக்கள் பார்க்க கூடியதாக இருக்கும்.
8. நீங்கள் இவ்வளவு சிரமமான பணியை எந்த பொருளாதார இலாபமும் இல்லாமல் செய்கின்றேனே என்று எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் களைப்பட மாட்டீர்களா?
இல்லை என்றே நினைக்கின்றேன். 1986ல் டென்மாhர்க்கில் வந்தது தொடக்கம் ”குயிலோசை” என்ற கையெழுத்து சஞ்சிகையை ஒரு வருடமாக 12 மாதமும் நாமே எழுதி நாமே 300 பிரதிகள் அச்சடித்து நாமே அதனை இணைத்துக் கட்டி கார் வசதி இல்லாத காலத்தில் டென்மார்க் முழுக்க உள்ள அகதிகள் பாடசாலைகளுக்கு விநியோகித்தது தொடக்கம் எத்தனையோ பணிகளை எத்தனையோ மக்களுக்கு எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் இன்றுவரை செய்தி வந்திருக்கின்றேன். அதின் ஒரு பரிணாமம் தான் இது என்றே பார்க்கின்றேன்.
9. நீங்கள் இந்த தேர்தலுக்காக எந்த வகையில் உங்களைத் தயார் செய்து கொண்டு இருக்கின்றீர்கள்?
புதிதாக நகரசபைக்கு வர விரும்பும் வேட்பாளர்களுக்கு என நகரசபையால் மே மாதம் 22ம் திகதியும் 30ம் திகதியும் நடாத்திய பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். புதிய வேட்பாளர்களில் 95 வீதமானோர் கலந்து கொண்ட ஒரு பயன்மிக்க வகுப்பு. இது கொல்பெக் நகரசபை பற்றிய ஒரு முழப்படத்தையும் எதிர்காலத் திட்டங்களையும் மனதில் பதிய உதவி செய்தது. இதனை கொல்பெக் மேயரும்; உயர் அதிகாரிகளும் நடாத்தினார்கள். பலருடன் அறிமுகம் செய்யும் சந்தர்ப்பமாயும் அமைந்தது.
தவிரவும் சோசல் குடியரசு கட்சியினர்; சனி ஞாயிறு தினங்களில் நடாத்தும் முழுநாள் வகுப்புகளிலும்;, கிழமைநாட்களில் நடாத்தும் பகுதி நேர வகுப்புகளிலும் கலந்து கொண்டு வருகின்றேன். இவை எனக்கு எதிர்காலத்தில் மிகவும் நன்கு உதவும் என்று நம்பிக்கை உண்டு.
அத்துடன் இதர வேட்பாளர்களுடன் சேர்ந்து கட்சியின் பிரச்சார அலுவல்களில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றேன்.
10. இறுதியாக இந்த தேர்தலின் வெற்றி அல்லது தோல்வி உங்களை எப்படி மகிழ்ச்சியுற செய்யும்? அல்லது பாதிக்கும்?
இதில் வெற்றி பெற்றால் இவ்வாறான முன்னெடுப்புக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவு இனிவரும் காலங்களில் டென்மார்க் மட்டுமன்றி மற்றைய நாடுகளில் அரசியலுக்கு வருவபவர்களுக்கும் இது போன்றன ஒரு முன்னுதாரணமாகும். இலங்கைக்கான அவர்களின் சிறு சிறு பங்களிப்பு நிச்சயம் இலங்கையில் வாழும் எங்கள் உறவுகளின் வாழ்க்கைக்ககு மிகப் பெரிய உதவியாகும்.
அதன் ஆரம்பம் டென்மார்க்கின் ஒரு நகரசபைத் தேர்தலில் முன்வைக்கப்பட்ட ஆரோக்கியமான சிந்தனைக்கு எம் மக்கள் கொடுத்த ஆதரவில் இருந்து ஆரம்பமாகி இருக்கின்றது என மகிழ்வடைவேன்.
மேலும் இதனை நான் தனிப்பட்ட வெற்றி அல்லது தோல்வியாகப் பார்க்கப் போவதில்லை. இதில் வெற்றி பெற்றால் இங்குள்ள மக்களின் ஆதரவுடன் அங்குள்ள மக்களுக்கு உதவ முடிந்ததே என பெரிதும் மகிழ்சி அடைவேன். மாறாக நான் தோற்றியுற்றால்; நான் முன்வைத்த ஒரு திட்டத்துக்கு மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை என எண்ணிக் கொள்வேன்.
Skriv et svar