புத்தக விமர்சனங்களும் இணையத் தளங்களும். . .வி.ஜீவகுமாரன்
இலக்கியம் சார்ந்து பெருகி வரும் இணயைத்தளங்களின் எண்ணிக்கையும் அவற்றின்ந டுவு நிலைமைகளையும் பார்க்கும் பொழுது சில ஆண்டுகளுக்கு முன் நான் சந்தித்த ஒரு அனுபவத்தை இந்தக் கட்டுரைக்கு முன்னுரையாக வைக்கலாம் என எண்ணுகின்றேன்.
2011 வைகாசி 13. தமிழக தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் அன்று காரியாலயத்திற்கும் செல்லாமல் ஒருநாள் லீவு போட்டு விட்டு அதிகாலையே எழுந்திருந்தேன். டென்மார்க்கில் வசிக்கும் எங்கள் வீட்டில் இலண்டனில் இருந்து ஐங்கரன் நிறுவனத்தினரால் ஒலிபரப்பபடும் கலைஞர் ரி. வி. மட்டுமே உண்டு. முதல்நாளே தேர்தல் ஆணையகம் முதலில் தபாலில் அளிக்கப்பட்ட வாக்குகளும் பின்பு கணனியில்ப தியப்பட்டவாக்குகளும் வெளியாகும் என அறிவித்திருந்தார்கள். எனவே எனது காலைச்சாப்பாடும் ரீ. வி. க்கு முன்னேதான்.
தமிழகத் தேர்தல் முடிவு எதுவும் இந்திய வெளியுறவுக் கொள்ளையில் எந்த மாற்றமும் கொண்டு வரப் போவதில்லை என்ற எண்ணம் எனக்குள் வலுப்பெற்று இருந்தாலும் வாக்கு வங்கியை நிரப்ப வடிவேலு என்ற ஒரு நகைச்சுவை நடிகரை பாவிக்க வேண்டிய தேவை திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு வந்து விட்டதே என்ற ஒரு பரிதாப உணர்வும் இருந்தது. மேலாக டென்மார்க்கின் அதிகமான நிறுவனங்களில் கணனித்துறையினை நம் தமிழ்நாட்டு உறவுகள் நிறைத்திருக்க அதே தமிழ்நாட்டுப் பிரச்சாரத்துக்கு ”கப்டன் என்பவன் தண்ணியில் கப்பலைச் செலுத்துபவன் – தண்ணியில் மிதப்பவன் இல்லை” எனவடிவேலுசொல்லவும்முன்னாள்தகவல்தொலைத்தொடர்பு மந்திரி தயாநிதிமாறன்கு லுங்கி குலுங்கி சிரிக்க தமிழகத்திதன் தலைவிதியை எந்தச் சீனச்சுவரில் முட்டி மோதுவது என வேதனைப்பட்டேன். இலங்கையில் இனப்படுகொலை நடந்திருக்குது. வேறு என்னஎ ன்னவெல்லாமோ நடந்திருக்கு ஆனால் இப்படியான ஒரு தேர்தல் பிரச்சாரம் நடந்திருக்கவில்லை என்பதில் மிக்க மகிழ்ச்சி.
இனி விடயத்திற்கு வருவோம். முடிவுகள் வரமுதல் முன்ணனியில் யார் யார் நிற்பது என்ற விபரங்கள்வரத் தொடங்கியது. பின் இறுதி முடிவுகள் வரத் தொடங்கியது. வடிவேலுக்கும் தி.மு.க.விற்கும் காலம் சரியில்லை என எண்ணத் தொடங்க முதல் தேர்தல் ஒளிபரப்ப நிறுத்தப்பட்டு வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தொடங்கியது கலைஞர் தொலைக்காட்சி தமிழ்நாடு முழுக்க மின்சார வெட்டோ, அல்லது வாக்கு எண்ணும் அத்தனை கணனி இயந்யதிரங்களிலும் வைரஸ்பிடித்துவிட்டதா என்ற ஐயப்பாட்டுடன் எனது கணனியில் இந்திய இணையத்தளங்களுக்கு சென்று பார்வையிட்டேன்.
உதயசூரியன்கடலினுள்மறைந்துகொண்டுஇருந்தான்!
இரட்டைஇலைகள்துளிர்த்துக்கொண்டுஇருந்தது!!
அடுத்த வருடம் கலைஞர் தொலைக் காட்சிக்கு சந்தா கட்டுவதில்லை என்ற முடிவுடன் தொடர்ந்து கணனி முன் இறுதி முடிவுவரை உட்கார்ந்திருந்தேன்.
மனம் கேட்காமல் அன்று மாலையில் மீண்டும் கலைஞர் தொலைக் காட்சியை அழுத்த கலைஞர் திருவாருர் தொகுதியில் 50.000 வாக்குவித்தியாசத்தில் வென்ற செய்தியும் கௌத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வென்ற செய்தியும் இடம் பெற்றுக்கொண்டு இருந்ததே தவிர இறுதிவரை அ.தி.மு.க. வென்ற செய்தியோ, தி.மு.க. மூன்றாம் இடத்திற்குத ள்ளப்பட்ட செய்தியோ இடம்பெறவில்லை. இந்த நடுநிலை செல்வி. ஜெயலலிதா முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட செய்தியை தணிக்கை செயயப்பட்டு ஸ்டாலின் மூன்று நாட்களுக்கு வாக்காளருக்கு நன்றி சொல்லப் புறப்பட்டிருக்கம் செய்தி தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்த முன்னுரையுடன் புத்தக விமர்சனங்களும் இணையத்தளங்களின் நடுநிலையும் பற்றிய எனது கட்டுரையை முன்வைக்கலாம் என நினைக்கின்றேன்.
நல்ல விமர்சனம் என்றால் எழுத்தாளன் பார்க்காத வேறு ஒரு தளத்தில் அல்லது கோணத்தில் இருந்து அவனின் படைப்பை பார்க்கும் திறமையும், அதனின்றும் சில உண்மைகளையும் வெளிக்கொணரும் ஆற்றலும், ஒரு எழுத்தாளனின் படைப்பை எதிர்காலத்தில் புடம் போடும் வல்லமையும் உள்ளனவையே நல்ல விமர்சனங்கள் என வரைவிலக்கணங்கள் கூறுகின்றன.
ஒரு படைப்பின் கரு, அமைப்பு, சொற்கள்–வாக்கியங்களின் அளவும் தேவையும், அழகியல், மொழியியல், அரசியல்கோட்பாடுகள்– தத்துவங்கள், என பல்வேறுபட்ட பகுதிகளின் வாயிலாக அது விமர்சனப்பார்வைக்குள் உள்புகுத்தப்படும்.
அழகியலை தம் விமர்சனப்பார்வையில் வைப்போர் முன்பு வந்த பிரபலமான படைப்புகளையும் அவைதரும் அனுபவங்களையும் அளவுகோலாகாக வைத்து மதிப்பீடு செய்வார்கள். இதில் சுந்தரராமசாமி, க.நா. சுப்பிரமணியன், வெங்கட்சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் நின்கின்றனர்.
மார்க்சீச அடிப்படையில் தம் விமர்சனப் பார்வைகளை முன் வைத்தவர்கள் என வானமாமலை, கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரைக் குறிப்பிடலாம்.
மொழியியலை அடிப்படையாக வைத்து நாகார்ஜனன், தமிழவன் ஆகியோர் பிரபலமானவார்கள்.
இந்த அடிப்படைகள் அல்லது இவ்வாறு பிரிவுகள் என்று உள்ளன என்றே தெரியாமல் எத்தனையோ வாசகர்கள் தங்கள் நுகரும் திறனால் பல நல்ல விமர்சனங்களை முன் வைத்து வருகின்றார்கள். இருப்பினும் விமர்சனங்கள் பலவற்றில் பாராட்டும் பண்பு மட்டும் மேலோங்கியும்;, தவறுகளைசு ட்டிக்காட்டும் தன்மை அறிவு அற்றும்; போகும் பொழுது ஒரு நூலை வேண்டி வாசிக்கச் செல்லும் வாசகன் சிலசமயம் ஏமாற்றம் அடைவது மனத்துக்கு நெருடலான விடயமாக அமைவதுண்டு.
அவ்வாறாகவே இலக்கியச் செய்திகளை தாங்கி வரும் இணையத்தளங்கள் சரி, பத்திரிகைகள் சரி இந்த விமர்சனங்களுக்கும் வெளியீட்டு விழாக்களுக்கு கொடுக்கும் முன்னுரிமை அல்லதுபு றக்கணிப்பு சில நல்ல படைப்புகளை வாசகரை சென்றடைய விடாமலும், தரம் குறைந்த படைப்புகளை வாசகர்களின் கையில் திணித்து விட்டுப் போகும் அபாயநிலை இனறு உண்டு.
பெருகி வரும் புத்தக வெளியீடுகளுக்கு ஈடு கொடுக்கக்கூடிய வகையில் இல்லாவிட்டாலும் அதற்கு சற்றுக் குறைந்தளவாவது விமர்சனங்களை முன்னிலைப் படுத்தக்கூடிய ஒரு இணையத்தளம் எம்மிடத்தில் இல்லாதது ஒரு வறட்சியான நிலையே.
இலக்கிய இணையத்தளங்களில் விமர்சனங்கள் இடம்பெற ஆசிரியர்களோ, பதிப்பகத்தினரோ குறைந்தது இரண்டு பிரதிகளை அனுப்பும் பொழுது நாங்கள் அதன் விமர்சனத்தை பிரசுரிப்போம் என இணையத்தளங்கள் அறிவிப்புச் செய்து கொண்டு இருக்கும் பொழுதும் அதனை இணையத்தளங்களுக்கு அனுப்பாமல் இருப்பது ஆசிரியர்களின், பதிப்பகத்தினரின் குறையாகும். அந்தக் குறையை ஆசிரியர்களும் பதிப்பகத்தினரும் தங்கள் கவனத்தில் எடுக்கவேண்டும்.
அவ்வாறு ஒருபடைப்பு அனுப்பப்படும் பொழுது ஒரு இணையத்தளத்தின அல்லது பத்திரிகையின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு சார்பாக இல்லாத போதும் அதன்மீது நேர்மையான ஒரு விமர்சனத்தை வைக்கும் நேர்மைத்தன்மையை இன்றையபத்திரிகை உலகமும் இணையத்தளங்களும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஒருஎ ழுத்தாளரின் மீது ஒரு பத்திரிகைக்கும் இணையத் தளங்களுக்கும் உள்ள நெருக்கம் அல்லது விலக்கம் எதுவும் இல்லாது ஒரு நடுநிலையான தன்மையை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும். அஃதில்லையாயின் நல்ல பல படைப்புகள் இருட்னினுள்ளும் வியாபாரச்சந்தையின் நெருக்கடியிலும் போட்டி போட வலுவில்லாமல் போகும் அபாயம்உண்டு. இதில் உங்கள் படைப்புகளும் அடங்கலாம்;.
இதனை உணர்ந்து இலக்கியப் பணிசெய்யும் இணையத்தளங்கள் செயற்படவேண்டும் என்ற என் பணிவான வேண்டுகோளை முன்வைக்கின்றேன். இன்றைய சில இணையதளங்களில் வெளிவந்த விமர்சனங்களை வாசித்து விட்டு அந்த நூல்களை வேண்டி வாசிக்கும் பொழுது வாசகர்களுக்கு ஏமாற்றம் ஏற்படும் ஆயின், எதிர்காலத்தில் இந்த தவறு சரி செய்யப்படுமாயினும் ”ஓநாய்வருகிறது” என்ற ஒரு நம்பகமில்லாத தன்மையை வாசகர்களுக்கு ஏற்படுத்தி விடும். இந்த தவறை இனிமேல் செய்யாமல் இருப்போம் என நம்புவோமாக.
இந்தக் கட்டுரை எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய என் விமர்சனம் இல்லை – பதிலாக பத்திரிகைகளின் இணையத்தளங்களின் நடுவுநிலை பற்றி என் விமர்சனம் என என் சக எழுத்தாளர்கள் விளங்கிக் கொள்வார்கள் என நினைக்கின்றேன்.
அஃதில்லையாயின்;… கலைஞர் ரி.வி. மட்டும் பார்க்கும் என் நண்பன் ஒருவன் அண்மையில் நடந்த தேர்தலில் தி.மு.க. கழகம் அதிக வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது என இன்றும் நம்பிக் கொண்டு இருப்பது போன்ற ஒரு நிலைதான் எம் படைப்புகளுக்கும் ஏற்படும்.
அன்புடன்
வி. ஜீவகுமாரன்
– நினைவுநல்லதுவேண்டும் –
Skriv et svar