பாவம்… அவள் ஒரு தமிழிச்சி!

செல்வி. சிவகௌரி சச்சிதானந்தன் – செல்வன் இராஜநாயகம் வேலுப்பிள்ளை

இருவரின்  சாத்திரத்திரத்திற்கும்… 9 கிரகங்களின் நிலைகளுக்கும்… 12 இராசிகளின் பார்வைகளுக்கும்;… ஒரே ஊரில் வாழ்ந்தாலும் முப்பாட்டன் வழிகளில் எவர் எவர் வாய்கள் எவர் எவர் செம்புகளில் பட்டது என கொய்கச் சேலைகளால் துல்லியமாகத் துலக்கிப் பார்த்துää ஆராய்ந்து… பல்கலைக்கழகத்தில் ஏதாவது தொடுப்புகள் இருந்ததா என சின்ன சின்ன ஏஜென்ற் வாலுகளிடம் விசாரித்து…  மேலாக அவளின் வீட்டுக்கு வந்து போகும் கட்டாடியார் சின்னையா… முடிதிருத்தும் கார்த்திகேசு… மாவிடிக்கவரும் பாக்கியம் ஆகியோரிடம் எல்லாம் அவளின் குணநலங்களை விசாரித்து நல்லநாள் பெரியநாள் பார்த்து… அவள் திருமதி. சிவகௌரி இராஜநாயகம் ஆகியது 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தேறிய ஒரு மங்கல நிகழ்வு.

இவ்வளவு ஆராய்சிகளையும் பெண்வீட்டார்கள் செய்தார்களோ தெரியாது.

மாப்பிள்ளையின் மாதவருமானம்… சகோதர சகோதரிகளின் பொறுப்புகள்… மேலாக பின்னடியில் எந்தச் சகோதரம்; இராஜநாயத்தின் பெற்றாரை வைத்துப் பார்க்க வேண்டிவரும் என்பதை மட்டும் பார்த்தார்கள். அவ்வகையில் சிவகௌரிக்கு அனைத்துப் பாதைகளில் பச்சை லைற்றுகளே. சிவப்போ… மஞ்சளோ… இல்லாது மூன்று சமிக்ஞை விளக்குகளும் பச்சை விளக்குகளாக அமைந்தது அனைவருக்கும் மிக்க மகிழ்வாக இருந்தது.

இராஜநாயகம் தனது பட்டப்படிப்பைக் களனிப் பல்கலைக்கழகத்தில் நிறைவேற்றி அங்கேயே இளம் விரிவுரையாளராகக் கடமையாற்றத் தொடங்கியிருந்தார். அவர் அதிக காலம் வாழ்ந்ததும் அங்கேயே தான். ஒன்பதாம் வகுப்பில் இருந்து பல்கலைக்கழகம் செல்லும் வரை கற்றதும் கொழும்பு றோயல் கல்லூரியில் தான்.

சிவகௌரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்;; பட்டதாரியாக வெளியேறி வேலைக்காகத் காத்திருந்தாள்.

”அவள் எல்லாம் வேலைபார்த்து எங்களைப் பார்க்க தேவையில்லை… போற இடத்திலை படிக்கேல்லை என்று யாரும் குத்திக்காட்டக் கூடாது என்றுதான் படிக்க விட்டனான்… ஐந்து தலைமுறைக்கு நான் சொத்து சேர்த்து வைத்திருக்கிறன்”.என்றார் சிவகௌரியின் ;அப்பா.

தந்தை சொலே மந்திரமானது.

வேலைதேடும் படலமும் கைவிடப்பட்டது.

இலங்கையில் படித்தும் வேலையில்லாத பட்டதாரிகளின் பட்டியலில் ஒரு எண்ணிக்கை கூடியது தான் மிச்சம்.

ஓன்று கூடினால் என்ன?… குறைந்தால் என்ன?? யாருக்குத்தான் கவலை இந்த நாட்டில் என தனக்குள் சொல்லி தானே சிரித்துக் கொண்டாள்.

“உந்தக் குமரி ஏன்தான் செக்கலுக்கை இருந்து சிரிக்கிறாளோ” அப்பத்தாச்சி சிவகொரியைச் சீண்டää “ஓம்…ஓம்… நீ சின்னமேளக்காரிக்கு இடம் விட்டுக் கொடுத்தது போல நான் இடம் குடுப்பன் என்று நினைத்திடாதை அப்பத்தா” பதிலுக்கு அவளும் எதிர்க்கைணையை விட்டாள்.

“அடிக்கழுதை” என அவள் மேல் படாமல் எறிந்த செம்பு உருண்டு போய் கல்யாணத்திற்குப் பலகாரம் சுட்டுக் கொண்டிருந்த ஒருத்தியின் முதுகைப் பதம் பார்த்தது.

***

அவர்களின் திருமணவிழா இருகுடும்பங்களும் ஒருவருக்பொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதனை நிரூபிக்கும் வகையில் அமைந்திருந்தது.

மின்சாரம் ஊருக்கு வராத காலகட்டத்தில் லைற்மிசினை ரைக்ரரில் இழுத்து வந்து ஒருவாரமாக இருவீட்டாரும் அக்கம் பக்கத்தவர்கள் பார்த்து வியக்கும் வகையில் அந்த ஒரு வாரத்தையும்; பௌர்ணமி ஆக்கியிருந்தார்கள்.

பஞ்சாங்கத்தின் படி அது வளர்பிறைக்காலம் மட்டுமே. அதற்காக வளர்பிறைச் சந்திரன் பூரணச் சந்திரானாகி லைற் மிசினுடன் போட்டி போட முடியுமா என்ன?

மாப்பிள்ளை பகுதி மலையகத்தில் பெரிய வியாபாரம் செய்பவர்கள்.

அங்கிருந்து கூடைகூடையாக வந்த அந்தூரியப்பூக்கள் திருமணமண்டபத்தின் அத்தனை கம்பங்களையும் அலங்கரித்திருந்தன.

பெண்கள் வேறு தங்கள் தங்கள் கொண்டைகளுக்கும் எடுத்துக் கொண்டார்கள்.

பெண்பகுதி இலங்கை முழுக்க ரைலிச் சைக்கிளினதும் மலிபன் பிஸ்கட்டினதும் மொத்த ஏஜன்ற்.

பெண் அழைப்பின் பொழுது இரு வீட்டுக்கும் இடையே இருந்த 1 கிலோ மீற்றர்  ஒழுங்கைக்கும் பட்டாசுச் சுரள்களை விரித்து ஊர்வலம் நகர்ந்து செல்லும் பொழுது  அதனை வெடிக்க வைத்து அனைவரையும் அதிசயிக்க வைத்ததையும்… மாப்பிள்ளை அழைப்பின் பொழுது யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற  நாதஸ்வரக ;கோஷ்டிகளை; வரவழைத்து ஒவ்வோர் ஒழுங்கை முகரியிலும் வைத்து தவில் கச்சேரி நடாத்தி வைத்தமையையும் இன்றும் ஊர் பெருமையாகப் பேசிமகிழும்.

”பணம் விளையாடுது” என்று காற்று வாக்கில் கேட்டிருந்த வார்த்தைகளை உண்மையில் ஊரார் அனுபவித்தது அந்த ஒரு கிழமையும் தான்.

பொன்னுருக்கல் கன்னிக்கால் நடுதலில் தொடங்கி 4ம் நாள் சடங்கு வரை பணம் எவ்வாறு பாய்ந்து பாய்ந்து கொண்டிருந்தது என்பதனை ஊர் மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்பட்டது.

சாதாரணமாக மாப்பிள்ளை வீட்டில் நடைபெறும் இரண்டாம் சடங்கும்…  பெண்வீட்டில் நடைபெறும் நாலாம்நாள் சடங்கும் என்பது ஒரு கிடாயை வெட்டியும் வீட்டின் பின்னால் உள்ள மறைவான இடத்தில் இரண்டொரு கல்லோயா சாரயத்துடனும் நடைபெறும் சடங்காக அமையும்.

இங்கேயோ கோயில்களுக்கு நேர்ந்து விட்ட பெரிய கொழுத்த கிடாய்களைக் கூட அதிக விலையில் வாங்கியும் சீமைச்சாரயங்களையும் வரவழைத்துக் கொண்டாடினார்கள்.

”அண்ணை கோயிலுக்கு நேர்ந்து விட்ட ஆடுகளை வேண்டுறது சரியா?”ää தர்மம் தன் விழிகளை உயர்த்தியன.

”என்ன விசர்கதை கதைக்கிறாய். வேள்விக்கு விலைபேற விலையை விட இரண்டு மடங்கு கொடுத்து தானே வாங்கியிருக்கிறம். வைரவருக்கு இலாபம் தானே?”ää பணம் பதில் பேசியது. 

திருமணம் சிறப்பாக முடிந்து ஒரு வாரத்தின் பின்பு… சிவகௌரியின் உற்றம் சுற்றம் எல்லாம் யாழ்ப்பாணப் புகையிரநிலையத்தில் கூடிநின்று அழுது வழிஅனுப்பினார்கள்.

அந்த வாழ்க்கைப் பயணவண்டி டென்மாக்கில் இவர்களை இறக்கிவிட்டுப் போகக் காலம்  இவர்களைத் தாலாட்டியே வளர்த்தது.

***

ஹோலின் நடுவே தொங்கிக் கொண்டு இருந்த இரண்டு படங்களையும் வைத்த கண்கள் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சிவகௌரி.

முதலாவது கொழும்பு வந்த பின்பு அங்கே பிரபலமான ஸ்ரூடியோவில் சிவகௌரி அமர்ந்திருக்கவும் கோர்ட் சூட்டுடன் இராஜநாயகம் நின்றபடியும் எடுத்த படம்.

இவ்வளவு இளமையாகவும் அழகாகவும் இருந்திருக்கின்றேனா?

தன்னைத் தான் ஆசையுடன் பார்த்துக் கொண்டாள்.

முற்றப் படம் இராஜநாயகத்தாரின் 60வது பிறந்தநாளையும்… 25வது திருமணநாளையும் கொண்டாடிய அன்று மூன்று பிள்ளைகளும் முன்னால் அமர்ந்திருக்க பெற்றாராக அவளும் இராஜநாயமும் பின்னால் நின்று கொண்டு எடுத்துக் கொண்டது.

ஸ்ரூடியோக்காரர்கள் எடுத்த படம் என்பது துலக்கமாத் தெரிந்தது. 

மூன்று பிள்ளைகளும் ஒரளவு தங்கள் கால்களில் தாங்கள் நிற்கும் நிலைய அடைந்து விட்டிருந்ததைப் பார்க்க மனம் பெருமை கொண்டது.

பிள்ளைகளை நினைத்தும் – தன்னையும் இராஜநாயத்தாரையும் கூட நினைத்தக் கொண்டாள். .

இரண்டு படங்களும் ஒரே அளவில் பிறேம் செய்யப்பட்டிருந்தது.

தன் முகத்தை உற்றுப் பார்த்தாள்.

காலம் முகத்தில் கறுப்புக் கோடுகளையும் கன்னமயிர்கள் இடையே வெள்ளைக் கோடுகளையும் போட்டிருந்து.  

***

பட்டப்படிப்பு படித்தும் எவ்வாறு எந்த வேலைக்கும் அனுப்பாது வீட்டுடன் அவளை அவளின் பெற்றார்கள் எவ்வாறு வைத்திருந்தார்களோ… அவ்வாறே டென்மார்க்கில் வீட்டுடன் தன்னையும் தன் பிள்ளைகளையும் கவனிக்கும் தாயுமானவளாய் அவளை இராஜநாயகம் வைத்திருந்தார்;.

ஒருவேளை அகதிகள் போல இவர்களும் டென்மாhர்க்கினுள் வந்திருந்தால்; டென்மார்க் அரசு இவர்களையும் மொழிப்பாடசாலைக்கு செல்… வேலைக்கு செல்… என வற்புறுத்தியிருக்கும்.

ஆனால் உயர்கல்வி கற்ற ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டு டென்மார்க் அரசாங்கத்திடம் எந்த ஒரு நிலையிலும் காசிற்கு கையேந்தத் தேவையில்லாத நிலைமையில் இருந்தமையால் அதுவும் இவள் பற்றி அக்கறைப்படவே இல்லை.

வழமைபோல இவர்களின் பிள்ளைகள் டென்மார்க்கில் பிறந்ததால அவர்களின் வளர்ச்சியில் மட்டுமே டென்மார்க் அக்கறை கொண்டது.

ஆங்கிலம் அறிவு இருவருக்குமே போதியளவு இருந்ததால் பிள்ளைகளின் பாடசாலைகளில் சரி… வேறு எந்தச் சந்தர்ப்பங்களில் சரி… இவர்களுக்கு ஒரு தமிழ் மொழிபெயர்ப்பாளரின் உதவி தேவைப்படவே இல்லை.

இராஜநாயகத்தார் மட்டும் வேலை இடத்தில் டெனிஷ் மொழி தெரிந்திருப்பது பிரத்தியோக நன்மை என்பதனால் மாலை வகுப்புகளுக்கு சென்று தன்னை வளர்த்துக் கொண்டார்.

சிவகௌரிNயுh அதே மாலைப்பொழுதுகளில்  விதம் விதமான சமையல்கள் செய்து பழகியபடியும் பிள்ளைகளையும் கணவணையும் பராமரித்தபடியும் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டாள். 

மொழி என்பது என்றுமே அவளுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கவில்லை.

”சாமான் வண்டிலில் சாமான்களை எடுத்து வந்து கவுண்டரில் கொடுத்து விட்டு கிறடிக்கார்டைக் கொடுத்தால் சாமான் வேண்டியாயிற்று. பிறகு எதுக்கு அவரின் காசை வீணாக்கி டெனிஷ் படிக்க வேணும்?”

”ஆங்கிலம் என்றாலும் பரவாயில்லை. 26 எழுத்து. டெனிசில் 29 எழுத்து. அத்தனையின் உச்சரிப்பும் தொண்டைக்கை குளிசையைப் போட்டு விட்டு விழுங்க முடியாமல் தத்தளிப்பது போல. ஐயா சாமி… ஆளை விடு”

”பக்கத்தே இருக்கும் துருக்கி கடைக்காரனிடம் போதியளவு மரக்கறி வாங்கலாம். அவனுக்கே டெனிசில் பேச வராத பொழுது எனக்கேன் டெனிஷ்? கத்தரிக்காய்; கொஞ்சம் முகிழ்ப் பக்கத்தால் பழுதாகிப் போயிருந்தால் மொழி தெரியாத அவனிடம் பேரம் பேசி என்னால் வாங்க முடிகின்ற பொழுது… டெனிஷ் என்ன டெனிஷ்? கத்தரிக்காய் டெனிஷ்!”

”மாதம் ஒரு முறை வரும் கொலண்ட் மீன்காரனிடம் தமிழில் பேரம் பேசி… போனமுறை எடையில் ஏமாற்றிப் போட்டீர்கள் என்று தமிழில் சண்டை பிடிப்பதில் உள்ள சுகம் டெனிஷில் எங்கே இருக்கப் போகிறது?”

ஊரில் பொன்னாலையில் இருநது நடந்து வரும் சின்னம்மா கிழவியையும்… பாஷையூரில் இருந்து வரும்; சைக்கிளில் வரும் சீமோன் கிழவனையும் மனம் நினைத்துப் பார்க்கும். மீனின் காதுச் செட்டையை விரித்து காதுப்பூ சிவப்பாய் இருக்கா?… அல்லது வெளிறி இருக்கா எனப்பார்க்கும் பொழுதுää ”பிள்ளை நீயே எல்லாத்தையும் நாறப்பண்ணிப் போடுவாய்” என அவர்கள் செல்லமாய் கடிவதில் உள்ள சுகம் என்றுமே அவளைத் தாலாட்டும். தனது கல்யாணத்திற்கு கூட பெற்றாhகளுக்கு பெரிய விருப்பம் இல்லாத போதும் அவர்கள் இருவருக்கும் கலியாணக்காட் கொடுத்து வரவேற்றிருந்தாள். நாலாம்நாள் சடங்கிற்கு அடுத்த நாள் சீமோன் கிழவன் அறக்குழா மீனையும் சின்னம்மாக்கிழவி நீலக்கால் நண்டையும் காசு வாங்காமல் கொடுத்துச் சென்றிருந்தார்கள்.

பிள்ளைகள் மட்டும் தமக்குள் டெனிஷில் பேசிக்கொள்ளும் பொழுது அதனை விளங்கிக் கொள்வது கஷ்டமாய் இருக்கும். ஆனாலும்ää ”எதுக்காக அதுகளின் விவகாரங்களில் நான் போய் மூக்கை நுழைக்க வேண்டும். சில விடயங்களில் காது கேட்காமல்… அல்லது காது குடுக்காமல் இருந்தால் தான் வாழ்வின் சிலதுகளை எட்டமுடியும் – தோமஸ் அல்வா எடிசின் போல”ää தனக்;குள் நினைத்து தானே சிலவேளை ’கிளுக்’கெனச் சிரித்துக் கொள்வாள்.

இது அவளுடன் கூடப் பிறந்தது.

அப்பத்தாச்சி செம்பால் எறிந்தது நினைவுக்கு வந்தது.

கணவனும் பிள்ளைகளும் புரியாமல் விழிப்பார்கள்.

***

இந்த இருபத்தைந்து வருடத்திலும் டெனிஷ் மொழி தெரியாதது எந்த இடத்திலும் சிவகௌரிக்கு ஒரு குறைபாடாக இருக்கவே இல்லை.

நிரந்தர வசிப்பிட விசா இருந்தமையால் இலங்கைக் கடவுச்சீட்டுடன் இராஜநாயகத்தாருடன் உலகம் முழுக்கச் சுற்றி வர எந்தத் தடையும் இருக்கவில்லை.

மிகுதி அனைத்தையும் இராஜநாயகத்தாரே கவனித்துக் கொண்டார்.

வங்கி அலுவல்கள்… அது சம்மந்தமான மின்னஞ்சலில் பரிமாற்றங்கள்…. அனைத்தையும் கவனித்துக் கொள்ளும் உரிமம்… இத்தியாதி இத்தியாதி…..எல்லாம் இராஜநாயகத்தின்  பொறுப்புத் தான்.;.

ஒரு காலத்தில் முத்திரை ஒட்டி அதன் மேல் சொந்தக் கையெழுத்துக்களால் உறுதி செய்யப்பட்ட தஸ்தாவேஜ்யுகளை கையெழுத்திட்டு அனுப்பும் வழமை தற்பொழுது ஒவ்வொருவருக்குமான இலத்திரனியல் எண்களால் உறுதி செய்யும் முறைமைக்கு உலகம் மாறியிருந்தது.

வங்கியில் கடன் பெற… வீடு வாங்க – விற்க… பயணச் சீட்டுகளை வாங்க… மேலாக ஒன்லைனில் சூதாட…  இத்தியாதி இத்தியாதிகளுக்கு இந்த இலத்திரனியல் எண்களுக்கு இந்த உலகம் மாறிவிட்டிருந்தது.

அவை பற்றிய எந்தக் கவலைகளும் சிவகௌரிக்கு இருக்கவில்லை.

தூக்கி வைத்தால் தானே பாரம்…. 

அனைத்தையும் இராஜநாயகத்தாரே கவனித்துக் கொண்டார்.

இராஜநாயகமும் பிள்ளைகளும் ‘ஓய்வு நேரம்… ஓய்வு நேரச்செயற்பாடுகள்’ என்று பல விடயங்களைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுது கூட சிவகௌhரியின் கைகள் அடுத்த நாள் சமையலுக்காக கீரையைக் கிள்ளி சுத்தம் செய்து கொண்டிருக்கும்.

“ஏனம்மா… அப்பாவைப் போலை… எங்களைப் போலை நீ ஒரு பேஸ்புக்; எக்கவுண்ட வைச்சிருக்கலாம் தானே…; கொஞ்சமாவது உனக்குப் பொழுது போகும் அல்லவா”

எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது மகள் கேட்டாள்.

“போடி… நீங்களும் உங்கடை முகநூலும்… முதுகு நூலும்…. பிறந்தநாளுக்கும் திருமண நாளுக்கும் ‘லைக்’ போடுறதுக்கும்… செத்த வீட்டுக்கு ‘றிப்’ போடுறதுக்கும்… என்ரை நேரத்தை நான் ஏன் வீணடிக்க வேண்டும்?… அதுவும் நான் செத்தபிறகு எவனவன் எனக்கு ‘றிப்’ போடுவான் எனத் தெரியாமல் ஏனடி என்ரை நேரத்தை நான் பாழடிப்பான்… நீங்கள் நாலு பேரும் வைச்சிருக்கிறது போதும்… ஏதாவது நல்லது கெட்டது என்றால் எனக்குச் சொல்லிவீங்கள் தானே”

அத்துடன் முகநூல் சம்பாசணை முடிவுக்கு வந்தது.

ஆனால் இராஜநாயத்தார் தூக்கத்திற்குப் போகும் முன்பு எப்பொழுதும் முகநூல்… வாட்ஸ்வப்… வைபர்… இன்ரiகிறாம் என்பவற்றுடன் வீதிவலம் வந்து நடையைச் சாற்றிய பின்பே கைத்தொலைபேசியை அணைப்பார்.

ழூழூழூ

வழமையாக வேலை சம்மந்தமாக ஐரோப்பாவுக்குள் இராஜநாயத்தார் தனியே சென்று வருவதுண்டு.

ஒரு தடவை சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் கூட தனியே சென்று வந்தார்.

மற்றும்படி எந்த வெளிநாட்டுப் பயணமும் சிவகௌரியுடன் தான்.

சென்ற ஞாயிறு மாலை சென்றவர்.

இந்த வெள்ளி இரவு வந்திருக்க வேண்டும்.

ஆனால் வரவில்லை.

அவர் போகும் பொழுது ஏதோ ஒரு நாட்டின் அல்லது ஊரின் பெயரை சொன்னவர்தான் – ஆனால் சிவகௌரிக்கு அது ஞாபகத்தில் இல்லை.

வியாழன் இரவு வரை பேசிக் கொண்டுதான் இருந்தவர்.

ஆனால் வெள்ளி  காலை “உங்களுக்கு என்ன சாப்பாடு செய்து வைக்க?” எனக் கேட்பதற்காக சிவகௌரி அழைத்த பொழுது தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாது இருந்தது.

சரி… அவர் மாலையே வரட்டும்… தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தபடி அவருக்குப் பிடித்த குழல் பிட்டும் வெந்தயக் குழம்பும்…வௌ;வேறு வகையாக மரக்கறிப் பொரியல்களும் செய்து வைத்துக் காத்திருந்தாள். 

அவர் வரவில்லை.

மீண்டும் மீண்டும் அழைத்தாள்.

பிள்ளைகளும் அழைத்துப் பார்த்தார்கள்.

”உங்கள் தொலைபேசி அழைப்பை அவரால் ஏற்க முடியவில்லை. பின்பு முயற்சிக்கவும்” லைக்காப் பெண் பதில் சொல்லிக் கொண்டு இருந்தாள்.

வேலையிடத்தை எக்காரணத்தாலும் சனி ஞாயிறுகளில் தொடர்பு கொள்ள முடியதில்லை.

ஐந்துநாள் வேலைப்பளுவையும் இரண்டு நாள் குடும்பத்தினனான மகிழ்ச்சியையும் டெனிஷ் மக்கள் கலந்து கொள்ள விரும்புவதே இல்லை.

சனியும் ஞாயிறும் மெதுவாகவே நகர்ந்தன.

இரண்டு நாளும் நீண்ட இரவுகள் ஆகின.

திங்கள் காலை பிள்ளைகளின் உதவியுடன் அவரின் வேலையிடத்துக்கு தொடர்பு கொண்டாள்.

” 60 வயதாகிய காரணத்தால் அவர் போன கிழமையுடன் தன் விருப்பத்தின் பெயரில் ஓய்வுகால விடுப்பெடுத்துக் கொண்டு எங்கள் கம்பனியில் இருந்து விலகிவிட்டாரே!”

”அப்படி எல்லாம் செய்யலாமா?”

”ஆமா… புதுச்சட்டத்தின் படி அவருக்கு தற்சமயம் வந்த வருமானத்தின் 80வீத சம்பளம் அவரின் 67 வயது வரை கிடைக்கும். இங்கு சாதாரணமாகவே நல்லாய் வாழ அந்தபஇ பணம் போதும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் அவர் இலட்சாதிபதி போல வாழலாம்”

பிள்ளைகள் கல்லாய்ச் சமைந்தார்கள்.

சிவகௌரியால் எதுவும் பேச முடியவில்லை.

அடுத்தது என்ன?

எங்கே விசாரிப்பது??

நகரசபையிலா???

பொலிஸிலா????

முதலில் நகரசபையுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள்.

”எவருக்கும் தன்னைப் பற்றிய தகவல்களைப் பரிமாற்றம் செய்ய வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்”

மகனிடம் இருந்து தொலைபேசியை பிடிங்கிää ”ஐ ஆம்  ஹிஸ் வைவ்” என சிவகௌரி உரத்துக் கத்தினாள்.

”நொற் மோர்… சொறி”

நகரசபை அமைதியாகப் பதில் அளித்தது.

அவள் நின்றிருந்த நிலம் அதிர்ந்தது.

நேரடியாக நகரசபைக்கு சிவகௌரியும் பிள்ளைகளும் சென்றார்கள்.

ஒரு வருடத்திற்கு முன்பே சொந்த விருப்பத்தின் பெயரில் இருவருமே தனித்தனியே பிரிந்து செல்ல விண்ணப்பித்திருந்தது… சென்ற மாதம்வரை அவர்கள் தங்கள் முடிவில் மாற்றம் இல்லை எனத் தெரிவித்திருந்ததால் இருவரும் பிரிந்து செல்ல முற்று முழுதாக மாவட்ட குடும்ப நீதிமன்றம் சம்மதித்திருந்தது… மேலாக தனது சொந்த தகவல்களை எவருக்கும் பரிமாறக்கூடாது என இராஜநாயத்தார் நகரசபையிடம் கேட்டுக் கொண்டது… எல்லாவற்றிற்கும் மேலாக பிள்ளைகளின் மீதான பெற்றார் உரிமை எதிர்காலத்தில் சிவகொளரிக்கு மட்டும் தான் உறுதிப்படுத்தப் பட்டிருந்தது என அனைத்து விபரங்களையும் நகரசபை பொறுமையாக தாயக்கும்; பிள்ளைகளுக்கும் விளங்கப்படுத்தியது.

”நான் எதுக்கும் விண்ணப்பிக்கவும் இல்லை… சம்மதிக்கவும் இல்லை…” சிவகௌரியின் குரல் கம்மியது.

”நல்ல காலம் அவர் ஏதாவது பெரிய வங்கிக் கடன்களை எடுத்து உங்களின் தலையில் கட்டிவிட்டுப் போய் விடவில்லை என்பதனை நினைத்து ஆறுதல் படுங்கள்”

”அம்மா! ’அப்பா’ …  இல்லையில்லை…  ’அந்தப் பொறுக்கி’ உங்கடை இரகசிய எண்கள் கொண்ட காட்… உங்கடை இமெயில் எல்லாத்தையும் வைத்து இதைச் செய்து விட்டுப்  போயிருக்கிறார்… அதையும் ஒரு வருசத்துக்கு முதலே பிளான் பண்ணிச் செய்து கொண்டிருந்திருக்கிறார்…. அவர் இங்கை திரும்பி வந்தாலும் சரி… திரும்பி வரவிட்டாலும் சரி… அவர் எங்கை என்ன செய்து கொண்டிருக்கிறார்… என்று எதுவுமே இவர்கள் இனிச் சொல்ல மாட்டார்கள். காரணம் இப்போ நீங்கள் அவரின் மனைவியோ நாங்கள் பிள்ளைகள்  என்பதற்கான எந்த உரிமையும் உங்களுக்கும் இல்லை. எங்களுக்கும் இல்லை… கவலைப்படாதையுங்கோ… நாங்கள் மூவரும் உங்களுக்கு இருக்கிறம்”

பிள்ளைகள் மூவரும் அவளை அரவணைத்துக் கொண்டார்கள்.

சிவகௌரிக்கு உடல் நடுங்கிக் கொண்டு வந்தது. உதடுகள் துடிப்பது போல இருந்தது.

நடுக்கத்தைக் குறைக்க தாலியினை இருகரங்களாலும் பிடித்துக் கொண்டாள்.

அடுத்த கணமே பெருங்குரலில் கதறி அழத்தொடங்கிளாள்.

காவலுக்கு வாசலில் நின்ற இரு பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் உள்ளே ஓடி வந்தார்கள்.

நகரசபை ஊழியர்களும்… நகரசபை மண்டபத்தில் நின்;றிருந்த மற்றைய மற்றைய நாட்டு மக்களும் திடுக்கிட்டு கவலையுடன் சிவகொளரியை பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

அவர்களின் இடையே கட்டாடி சின்னையர்… முடிதிருத்தும் கார்த்திகேசு… மாவிடிக்கவரும் பாக்கியம்… பொன்னாலையில் இருந்து நடந்து வரும் சின்னம்மா கிழவி… பாஷையூரில் இருந்து வரும்; சைக்கிளில் வரும் சீமோன் கிழவன்… வீட்டிற்கு அருகேயுள்ள டெனிஷ் மொழியே தெரியாத துருக்கிக்காரன்;…. மாதம் ஒரு முறை வரும் கொலண்ட் மீன்காறன்… பாக்குரலில் வெற்றிலையை இடித்தபடி வெள்ளைச் சேலையுடன் அப்பாச்சி என அத்தனை வெள்ளாந்தி மனிதர்களும் நிற்றிருப்பது போல இருந்தது சிவகௌரிக்கு.

அக்கணமே இன்னும் மேலும் மேலும் கதறிக் கதறி அழுத்தொடங்கினாள்.

அவளை அடக்க யாராலும் முடியவில்லை.

ழூழூழூ

வீடு அமைதியாக இருந்தது – சுடலைக்குப் போனவர்கள் திரும்பிவரும் வரை நிலவும் அமைதி போல.

யாரும் யாருடனும் பேசவில்லை.

சிவகௌரி சோபாவில் குடங்கிப் படுத்துக் கொண்டு சுவரில் மாட்டியிருந்த அந்த இரண்டு படங்களையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வெறுமை – அமைதி – நிசப்தம்.

பிள்ளைகளால் தாயைப் போல் அமைதியாக இருந்திட முடியவில்லை.

இராஜநாயத்தாரின் முகநூலை கிண்டத் தொடங்கினார்கள்.

இன்று காலை தொடக்கம் கடந்த சில வருடங்களுப் பின்னால் வரை.

பல பதிவுகள்… பல நண்பர்கள்… பல நண்பிகள்… இடியப்பச்சிக்கலின் நுனியை எங்கே போய்த் தேடுவது?

மூவரின் நீண்ட போராட்டத்திற்குப் பின்பு மகளின் கண்கள் விரிந்தன.

இராஜநாயத்தார் என்ன பதிவு போட்டிருந்தாலும்… எத்தனை பேர் ‘லைக்’ போட்டிருந்தாலும்… ஒரு பெண் முதலாவது ‘லைக்’ போட்டிருந்தாள்.

மலேசியத் தமிழ்ப் பெண் ஒருத்தி.

அவளின் முகநூலில் தெரிந்தோ தெரியாமலோ பிள்ளைகளும் அவளுடன் நண்பர்களாய் இருந்தார்கள்.

அவளின் பக்கத்தில் பதிவாகியிருந்த சொந்தப் புகைப்படங்களில் பலவற்றில் இராஜநாயகத்தார்.

தொழில் விடயமாக இராஜநாயகத்தார் மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் சென்ற பொழுது எடுத்த படங்கள் – தனியாகவும் – இணைந்தும்.

மூன்று பிள்ளைகளும் சில மணிநேரம் மௌனித்து இருந்தார்கள்.

பின்பு ஹோலுக்கு வந்தார்கள்.

சிவகௌரி இப்போதும் சோபாவில் குடங்கிப் படுத்துக் கொண்டு சுவரில் மாட்டியிருந்த அந்த இரண்டு படங்களையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அம்மா….”

“பசிக்குதா…. “

பிள்ளைகளுக்கு கண்கள் கலங்கின.

“அப்பா எங்களை எல்லாம் விட்டுட்டு வேறு யாரையாவது கட்டிக் கொண்டு போயிருக்கலாம் அல்லவா”

சிவகௌரி பத்திரகாளியாக எழுந்தாள்.

“உங்கள் மூண்டு பேரையும் கொல்லிப் போடுவன்… எப்பிடி அப்பாவைப் பற்றி இப்படி கீழ்த்தரமாக யோசிக்கிறிங்கள்… அந்த மனுஷக்கு ஏதோ தீராத வியாதி வந்து எங்களை எல்லாம் கஷ்டப்படுத்தக் கூடாது எண்டு எங்கேயோ கண்காணத தேசத்துக்குப் போட்டுது என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறன்…. நீங்கள் இப்பிடி வந்து அம்மாவிட்டை கேக்கிறியளே… என்ரை வயித்திலையா நீங்கள் வந்து பிறந்தீங்கள்”

பிள்ளைகளால் எதுவம் பேசமுடியவில்லை.

மூவரும் ஒரு ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

இதற்கு மேல் அம்மாவை திருத்த முடியாது என்பதால் குறைந்த பட்சம் அவாவை தொந்தரவு செய்ய வேண்டாம் என தீர்மானித்துக் கொண்டார்கள்.

மூன்று பிள்ளைகளும் இராஜநாயகத்தாரையும் அந்தப் பெண்ணையும் தங்கள் நண்பர்கள் வட்டத்தில் இருந்து நீக்கி இருந்தார்கள்.

***

சிவகௌhரி கைப்பையுடன் துருக்கிக் கடையை Nநூக்கிப் போய்க் கொண்டு இருந்தாள் – வீட்டில் பிள்ளைகள் நிற்பதால் நல்ல சமையல் செய்வதற்காக.

வீதி எங்கும் தெரிந்த தெரியாத முகங்கள்.

இயல்பான அல்லது வலிந்திழுத்த புன்னகைகள்… தலையாட்டகள்…

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)