தாம்பத்தியம் – சிறுகதை

தாம்பத்தியம்  – சிறுகதை

டென்மார்க்கின் சம்மர்காலக் காலைச்சூரியன் கண்ணைத் குத்துவது போல கயல்மொழிக்கு இருந்தது.

எனக்கு அந்தப் பொடியன் சூட் ஆகும் போலை தெரியேல்லை அம்மா

”ஏனடி பிள்ளை அப்பிடிச் சொல்லுறாய்

”எனக்கு அடுத்த வருசம் யூனிவேசிற்றி முடியுதுஇந்த பையனுக்கு அட்வான்ஸ் லெவல் கூட இல்லைசும்மா ஒவ்வீஸ் வேலைதானே?”

”ஆனால் அவன் நல்ல குணமான பிள்ளையல்லோ

நல்லபிள்ளைப்பட்டம் கார் பில்லையும் கறண்ட் பில்லையும் கட்டுமோ அம்மா

*

இன்று பதில் சொல்லியாக வேண்டும். ஆம்அல்லது இல்லை”.

இல்லைஎன்றால் இந்த மூன்று மாதப் பேச்சுவார்த்தைகளுக்கு ஓர் மூன்று நிமிடத்தில் முடிவுகட்டி விடலாம். ஆனால் ஆம்என்றால் அடுத்த முப்பது அல்லது நாற்பது அல்லது அதிகூடியது ஐம்பது வருட தாம்பத்தியத்துக்கு அல்லது சமரசங்களுக்கு அவளும் அவனும் தயாராக வேண்டும்.

வந்த இடம் பெரிய இடம்.

ஊரில் மட்டும் இல்லாது டென்மார்க்கிலும் தலை நிமிர்ந்து நிற்கின்ற குடும்பம் பையனது.

பெண்ணின் தாய் தகப்பனுக்கு எப்படியும் மகள் கயல்விழியை சம்மதிக்க வைத்து இதை முடித்து விட வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார்கள்.

ஆனால் கயல்விழியை சம்மதிக்க வைப்பது தாய் தகப்பனுக்கு பெரிய பாடாய் இருந்தது.

அவள் சொல்லுற உந்த கெமிஸ்றி பிசிக்ஸ் எல்லாம் எங்களுக்கு விளங்காது. நீ ஊரிலை இருந்து கொம்மாவை ஒரு மூண்டு மாதம் கூப்பிடு. கிழவி ஏதும் கதையள் சொல்லி அவளிண்டை மனதை மாத்தும்

அந்த வகையில் கயல்விழிக்கு ஞானோபதேசம் கொடுக்க 3 மாத விசாவிiலை ஏயர்லங்காவிலும் பின்பு ஸ்கண்டினேவியன் எயர்லைனிலும் டென்மார்க் வந்தவர் தான் சுந்தரம் பாட்டி.

சுந்தரம் பாட்டியின் உண்மைப் பெயர் சிவபாக்கியம் என்பது அனேகம் பேருக்கத் தெரியாது. சுந்தரம் தாத்தாவின் மனைவி என்பதால் அவர் அனைவராலும் சுந்தரம் பாட்டி எனவே அறியப்பட்டிருந்தார். எட்டுப் பிள்ளைகளை பெற்ற மகராசி அவர். இந்த எண்பது வயதிலும் தனியே இரண்டு கொத்து ஊற வைத்த அரிசியை, தானே இடித்து வறுத்து அரிக்கும் வல்லமை அந்த அம்மாவுக்கு. அவ்வாறு செய்த கொஞ்ச ஊர் அரிசி மாவையும் பயித்தம் பணியாரத்தையும் பின் வளவில் நின்ற பலாமரத்தில் இருந்து சிறிய கூழம் பலாப்பலத்தையும் பேத்திக்காக டென்மார்க் வரை எடுத்து வந்திருந்தார்.

எப்பிடிப் பாட்டி நீங்கள் சின்ன வயதிலை…”

அந்தக் காலத்திலை நாங்கள் எதைக் கேட்டனாங்கள்எதைப் பார்த்தனாங்கள்பெரிய அப்புவும் சின்னாத்தையும்; முடிவு எடுத்தினம். அரசடி அம்மனிரை கொடி இறங்கி மூன்றாம் நாள்; சோறு தந்து மண் அறைக்கேக்கை கொண்டு போய் விட்டினம். அடுத்த கொடியேத்தத்துக்கு முதல் மூத்தவன் வந்து விழுந்தான். பிறகென்னஒவ்வொரு நெல்லறுப்புக்கும் பிறகு ஒண்டு பாதி எண்டு வயித்திலை வந்திடும்

கஷ்டமாய் இருக்கேல்லையோ பாட்டி

இதிலை என்ன கஷ்டம்இதுதான் வாழ்க்கை என்ற பிறகு ஏன் கஷ்ட சுகத்தைப் பற்றி ஏன் யோசிப்பான். அடைக்கலமாய் அவரிட்டை என்னை ஆத்தா பிடிச்சுக் கொடுத்த பிறகு எல்லாம் எனக்கு அவர்தான். உனக்கு ஒண்டு தெரியுமோதிரௌபதை சீலையைப் பிடிச்சுக் கொண்டு கிருஷ்ணா கிருஷ்ணா எண்டு கூவேக்கை கிருஷ்ணன் வரேல்லை. ஆனால் சீலையின்ரை கையi விட்டுட்டு அவன்தான் கெதி எண்ட பொழுது கிருஷ்ணன் வந்தான். அப்பிடித்தான் இதுவும்

ஏன் பாட்டி அவர் ஒருநாள் கூட உங்களைக் கோவிக்கேல்லையோஅடிக்கேல்லையோ…”

எல்லாம் தான் நடந்தது. ஆனால் அடுத்தநாளுக்கை எல்லாம் மாறிப் போகும். பசி வந்தால் அழுற பிள்ளை போலத்தான் இந்த கோபமும் படபடப்பும். ஆண் எண்ட பலம் உடம்பிலை இருக்கேக்கை இந்தக் கோபமும் அதிகமாவே உன்ரை தாத்தாக்கு இருந்தது. பிறகு படிப்படியாய் இரத்தம் சுண்ட ஒரு குழந்தைப் பிள்ளை போல மாறிட்டார். உனக்குத் தெரியுமோகடைசி காலத்திலை நான் தான் எல்லாம் கழுவித் துடைச்சது. அப்ப நான் அந்தச் சீவனை ஆம்பிளையாய் பாக்கேல்லை. என்ரை ஒம்பதாவது குழந்தையாய்த் தான் பார்த்தனான்கிழவியின் கண்கள் பனித்தன.

பக்கத்து அறையில் இருந்த தாய் தகப்பனுக்கு கிழவி எப்படியும் கயல்விழியை மாத்திப் போடும் என நம்பிக்கை பிறந்தது.

நீங்கள் ஒருநாளும் அவரைக் கோவிக்கேல்லையோ பாட்டி

”கோவிச்சுத்தான் இருக்கிறன். சட்டியை தூக்கி உடைச்சு இருக்கிறன். கோபமும் மண் சட்டியோடை மண்ணாய் போகும். பாவம்! தன்னிலை பிழையெண்டால் கொஞ்சம் கணக்கவே அண்டைக்கு கள்ளுக் குடிச்சிட்டு பிள்ளையளை மடியிலை தூக்கி வைச்சுக் கொண்டு அழுவர். பிறகு நான் தான் பேசிப்பேசி தலையிலை தேசிக்காய் வைத்து தோய வாக்கிறது. வெறியும் இறங்கிடும் கோபமும் போயிடும்

பாட்டி ஒருநாள் கூட தாத்தா உங்களுக்கு துரோகம் செய்யேல்லையோ….”

கிழவி ஒரு நிமிடம் தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள்.

உன்ரை வயசுக்கு மீறிக் கேக்கிறாய்….தாத்தாவைப் போலை வயல் காணி வைச்சிருக்கிறவைப் பற்றி கணகதையள் வாறது தான். ஆனால் தாத்தாக்கு நான் சரியாய் ஆக்கிப் போட்டனான். அப்பிடித்தான் நடந்திருந்தாலும் எனக்கு தெரிஞ்சு நடந்திருந்தால்தான் கவலைப்பட்டிருப்பன்

எப்பிடிப் பாட்டி உங்களாலை இப்பிடி….” கயல்விழிகளின் கண்கள் விரிந்தது.

எடியே கொம்மா சரிநீ சரி எது சமைச்சாலும் செய்தாலும் அளந்து அளந்து நிறுத்துத் தான் செய்யிறியள். ஆனால் எங்களுக்கு எல்லாம் கை அளவு தான். அதை நாங்கள் நம்பி வாழ்க்கை நடத்தினம். நீங்கள் நம்ப மாட்டன் என்கிறியள். பொடியன் படிக்குமோபெட்டை படிக்குமோபடிச்சால் வேலை கிடைக்குமோவேலை போனால் வீட்டு வாடகை கட்டலாமோ எண்டு பயந்து பயந்து தான் தாலி கட்டுறியள். பிள்ளைக்கு குண்டிக்கு கட்டுற துணிக்கும் கணக்கு போட்டுத் தான் பிள்ளை பெறுகிறியள். நாங்கள் அப்பிடியே? சட்டியிலை கிடந்ததுகளை வழிச்சு உருட்டித் திண்டுண்டு நிலா வெளிச்சத்திலை படுத்து எழும்பினனாங்கள். எட்டுப் பிள்ளையளைகளை பெத்து வளத்தனாங்கள். எதையாவது யோசித்தனாங்களோ சொல்லு பார்ப்பம்

கிழவி மடக்கிப் போட்டுது” – பக்கத்து அறையில் இருந்த பெத்தவை இரண்டும் மகிழ்ந்தன.

பாட்டிதாத்தாவை உங்களுக்கு கொஞ்சம் எண்டாலும் தெரியும். ஆனால் முன்பின் தெரியாத ஒருத்தனோடை… ”

எப்பிடி கட்டிலில்லை போய் படுக்கிறது எண்டு கேட்கிறியோகயல்விழி ஓம் எனத் தலையாட்டினாள்.

ஏன் ஆச்சி அதை அப்பிடி நினைத்துப் பாக்கிறாய்;. உன்னை அவனும் அவனை நீயும் அன்பாக அரவணைக்கிறது என்று மட்டும் நினை. மிகுதியை உன்ரை உடம்பும் அவன்ரை உடம்பும் தாங்களே பார்த்துக் கொள்ளும்.

கயல்விழி கிழவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

ஒரு நாளைக்கு உந்த வெயில் போறதுக்கிடையிலை பின்னாலை இருக்கிற கடலுக்கை கொஞ்சம் கொஞ்சமாய் நடந்து போ. காலிலை இருக்கிற சூடு தலைக்கு வாறது தெரியும். கடைசியில் தலையை முக்கி குளி. உடம்புச்சூடு முழுக்க தீர்ந்து போகும். அப்பிடித்தான் தன்ரை ஆம்பிளையோடை ஒரு பொம்பிளை வைக்கிற உறவு

”உண்மையாவோ பாட்டி

அப்பிடி இல்லாட்டி நீ பிறந்திருக்க மாட்டாய். அந்தப் பொடியன் பிறந்திருக்க மாட்டான்

அன்று இரவு முழுக்க கயல்விழியும் சுந்தரம் பாட்டியும் கதைத்துக் கொண்டே இருந்தார்கள்.

ஆனால் கிழவி சொன்ன அனைத்தையும்கயல்விழியின் மனம் ஏற்றுக் கொண்டதைப் போல கிழவிக்குத் தெரியவில்லை.

கயல்விழிக்கு கண்கள் நித்திரைத் தூக்கத்தினால் சிவப்பதைக் கண்ட பாட்டி நாளைக்க பேசுவோம்என அவளை அனுப்பி விட்டு தரையிலேயே சீலையின் முந்தானையை விரித்து கொண்டு படுத்துக் கொண்டாள்;.

*

சுந்தரம் கிழவிக்கு அன்றிரவு முழுக்க தூக்கம் வரவில்லை.

சுந்தரத்தாரின் நினைவும் கயல்விழி அவர்களின் தாம்பத்திய வாழ்வு பற்றி கேட்டவையும் அவளை தூங்கவிடாமல் பிரட்டிக் கொண்டு இருந்தது.

எட்டாவது பிள்ளை பிறந்த சில நாட்களில் தான் அது நடந்தது.

திருவிழாவுக்கு ஊருக்கு வந்த சின்னமேளக்காரி மேடையில் ஏறும் பொழுது தடக்கி விழுந்த போது ஏற்பட்ட கால் முறிவால் இவர்கள் ஊரிலேயே தங்க வேண்டியதாய் போயிற்று. சுந்தரத்தார்தான் அச்சமயம் கோயில் மணியகாரர் என்பதால் அவர்கள் வீட்டில் வைத்தே வைத்தியம் பார்த்தார்கள்.

சுந்தரத்தின் மனைவியிடம் சின்னமேளக்காரரை வீட்டுக்கு அணைப்பது நல்லதில்லை என பலர் சொல்லியும் இருவரும் கேட்கவில்லை.

அன்று சிவபாக்கியம் வீட்டுக்கு விலக்கு.

சுந்தரத்;தார் வீட்டின் முன் விறாந்தையில் படுத்திருந்தார். இரவு வெளிக்கு செல்வதற்காக சிவபாக்கியம் எழுந்து வந்தாள்.

அவள்; கண்ட காட்சி அவரை அதிர வைத்தது.

சின்ன மேளக்காரி சுந்தரம் படுத்திருந்த இடத்திற்கு கிட்டவாக இரவில் அணியும் மெல்லிய ஆடையுடன் அவரைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

சுந்தரத்தார் எந்த ஆட்ட அசைவும் இன்றி படுத்திருந்தார்.

அவர் தூங்கிக் கொண்டு இருந்தாரா? அல்லது தூங்கியது போல நடித்துக் கொண்டு இருந்தாரா? இன்றுவரை சுந்தரம் கிழவிக்கு அதற்குப் பதில் தெரியவில்லை.

தண்ணி குடிக்க எழும்பி வந்தனான்என அந்தச் சின்னமேளக்காரி தடக்கி தடக்கிச் சொன்னது இன்றும் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

இதுவும் சேர்ந்ததுதான் எங்கள் தாம்பத்தியம் என கயல்விழிக்குச் சொல்லமுடியாது

சுந்தரம் பாட்டி தூக்கமின்றி தவித்துக் கொண்டு இருந்தார்.

இந்த நினைவுகள் வரும் நாட்களில் அவரால் நன்கு தூங்கமுடிவதில்லை. இந்த சம்பவத்துக்கு பிறகும் பத்தொன்பது வருசம் குடும்பம் நடத்திதான் சுந்தரத்தாரை நல்ல வடிவாய் பாட்டி வழி அனுப்பி வைத்தவள். செத்த வீட்டுக்கு எட்டுப் பிள்ளையளும் வெளிநாட்டிலை இருந்து வந்து எல்லாம் வடிவாகச் செய்தவர்கள். அதுவரை அவர்கள் கிழவனுக்கு கிழவியும். கிழவிக்கு கிழவனும் தான்.

சுந்தரத்தார் வந்து கிழவியின் தலைமாட்டிலை உட்கார்ந்தார். பேத்தி என்ன சொல்லுறாள்

உங்கடை பேத்தி நான் சொல்லுறதைக் கேப்பாள் போலை தெரியேல்லை. பி. எச். டீ பட்டம் வைச்சிக்கிற அளவுக்கு அதுகளுக்கு வைரம் பாய்ஞ்ச மனம் இல்லை. எல்லாம் காத்தடிச்சால் முறிஞ்சு போற கறிமுருங்கையள்…”

என்ன மாமி நித்திரையிலை கதைக்கிறியள்அறைக்கை நல்ல கட்டில் போட்டிருக்கு போய் படுக்கலாமேமருமகன் சொல்ல கிழவி தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள்.

கதைச்சுக் கொண்டு இருந்த அசதியிலை இதிலை படுத்திட்டன்

சுந்தரத்தாரை தன் கண்களில் இருந்து அகலவிடாமல் பாட்டி அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள்.

*

தம்பி நீ என்ன சொல்லுறாய்? டெலிபோனிலையும் கதைச்சாச்சு…. நேரிலும் பார்த்து கதைச்சாச்சு” ”ஆனால் உது சரிவரும் போலை தெரியேல்லை அம்மா” ”ஏனப்பு

கட்டினாலும் நான் என்ரை வேலையிடத்திலை நல்ல புரோமசனுகள் எடுத்து, ஒரு நல்ல நிலைக்கு வரும்வரை பிள்ளை பெத்துக் கொள்ளாமல் வாழ வேணுமாம் எண்டு கயல் சொல்லுறா

தாய்க்காரி தன் மகனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

(முற்றும்)

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

*

(Spamcheck Enabled)