ஞாயிறு 26-04-2015 இலங்கை வீரகேசரி வாரமலரில் வெளியான நேர்காணல்
ஞாயிறு 26-04-2015 இலங்கை வீரகேசரி வாரமலரில் வெளியான நேர்காணல்
பேட்டி கண்டவர் : ரேணுகா பிரபாகரன்.
எத்தனை வயதில் எழுத ஆரம்பித்தீர்கள்?
நான் எனது 28வது வயதில் டென்மார்க் வந்த பொழுது டென்மார்க் அகதிகள் சங்கத்தின் ஆதரவில் குயிலோசை என்ற கையெழுத்துப் பிரதியிலான சிறுசஞ்சிகை ஒன்றை நடத்தினேன். அத்துடன் டென்மார்க்கில் இருந்து வெளிவந்த சஞ்சீவி என்ற இதழிலும் எழுத தொடங்கினேன்.
பின்பு டெனிஸ்கல்வி, தொழில், இரட்டைப் பிள்ளைகள் என சுமார் 20 வருட இடைவெளிக்குப் பின்பாக நான் சஞ்சிகைகளில் எழுதிய அத்தனையையும் இணைத்து எனது 50வயதில் ”யாவும் கற்பனை அல்ல” என்ற தொகுப்பாக வெளியிட்டேன்.
அதே ஆண்டின் பிற்பகுதி என நினைக்கின்றேன் ஞானம் இதழுக்கு ”அனலைதீவு” லேஞ்சு” என்னும் சிறிகதை எழுதினேன். முதன் முதலில் ஒரு சஞ்சிகையில் அச்சு வடிவில் நான் பார்த்த எனது முதல் சிறுகதை அதுதான்.
அதன் பின்பு ”மெல்லத் தமிழ் இனித் துளிர்க்கும்” (இளையோர் கவிதைகளின் தொகுப்பு) தொகுப்பு)இ ”மக்கள் மக்களால் மக்களுக்காக(நாவல்), சங்கானைச் சண்டியன் (10 சிறுகதைகளும் இரண்டு குறுநாவல்களும்), ”இப்படிக்கு அன்புள்ள அம்மா” (டெனிசில் எனது மனைவியார் எழுதிய முயநசடபை hடைளநn அழசவின் தமிழ்வடிவம், ”முகங்கள்” (50 சிறுகதைகளின் தொகுப்பு), கடவுச்சீட்டு நாவல், ”ஜேர்மனிய கரப்பான் பூச்சிகள்” (ஞானம் சஞ்சிகையில் நான் எழுதிய 15 சிறுகதைகளின் தொகுப்பு), ”ஜீவகுமாரன் சிறுகதைகள்” (ஜீவநதியில் நான் எழுதிய 10 சிறுகதைகளின் தொகுப்பு), இதனைத் தவிர 90களின் முற்பகுதியில் (டெனிஸ்-ஆங்கில-தமிழ் மருத்துவ கையேடும் அகராதி ஒன்றையும் டென்மார்க்கில் வெளியிட்டேன்.
உங்களை எழுதத் தூண்டிய சம்பவம் எது?
அது இன்னமும் சிறுகதையாக எழுதப்படாத ஒரு சம்பவம் தான்.
எனது 13வயது வயதில் தினம் தினம் எங்கள் ஊரில் பெரிய மீனைகளை வெட்டி கூறுபோட்டு விற்கும் ஒரு வயதான அம்மா… மிகவும் மலிவாக மீனை விலை கேட்டேன் என்பதற்காக, ”தம்பி சட்டி கழுவி வைத்து விட்டா வந்தாய்;” எனத் தொடங்கி பின்பு ”நண்டு மொறுமொறுக்க பெண்டில் புறுபுறுக்க” என ஏளனமாகவும் என்னைத் திட்டிய அதே அம்மா… அன்று மாலை பஸ் நிiலையத்தில் மற்றைய பெண்களுடன் இருந்து அவர் கதைக்கும் பொழுது தான் கடந்த 5 தினங்களாக 3 மிளகும் 3 மிளகு தண்ணீருடன் இருந்து கந்தசட்டி விரதம் அனுஸ்டிப்பதாகவும் அடுத்த நாள் சூரன் போர் முடிய பாரணை சாப்பாடு கோயிலில் போய்ச் சாப்பிட இருப்பதாக கூறிக் கொண்டு இருந்தா. ஏனக்கு நம்பவே முடியவில்லை. அவரின் தொழிலையும் இறைபக்தியையும் கற்பனை பண்ணிப் பார்க்கவில்லை. அவரின் உலகம் எனக்குள் ஒரு பொறியைத் தந்தது. அதுவே என்னை முதல் முதலில் சிறுகதை எழுதத் தூண்டிய சம்பவம்.
சமூகவலைத்தளங்கள் எழுத்தாளர்களுக்கு அச்சுறுத்தலாகவும் சவாலாக இருக்கும் என நினைக்கிறீங்களா?
சொல்லுக்கும் செயலுக்கும் எழுத்துக்கும் வாழ்வுக்கும் எந்த இடைவெளியும் இல்லாது வாழும் ஒரு எழுத்தாளன் என்ற முறையிலும் எந்த ’இசும்’களிலும் என்னை நான் இணைத்துக் கொள்ளாமையும் எந்தக் கட்சி அரசியலிலும் என் எழுத்துகள் புகாமையும் மேற்கொண்ட அச்சுறுத்தலுகளுக்கோ… அன்றில் சவால்களுக்கோ என்னை இழுபு;பதும் இல்லை. நானும் அதனுள் போவதுமில்லை.
அரசியல் சூழ்நிலைகளினால் மாற்றம் பெற்று வரும் இந்த உலகத்தில் குறிப்பிட்ட பக்கம் சார்ந்து தங்களைத் தொலைத்த பல எழுத்தாளர்களின் வாழ்வு எனக்கு முன்னுதாரணமும் முன்னெச்செரிக்கையாகவும் இருந்திருக்கிறது.
அதனால் எனது வாழ்வம் எனது எழுத்தும் தனிவழியில் பயணித்துக் கொண்டு இருக்கின்றது.
எழுத்தாளர்கள் பலரும் கற்பனை சம்பவங்களையே கதையாக்கும் காலத்தில் சமூகப் பிரச்சனைகளை யாதார்த்த பூர்வமாக எழுதத் தூண்டியது எது?
ஒரு கதையின் கரு கற்பனை என்பதில் என்றுமே எனக்கு உடன்பாடு இல்லை. கரு உண்மையானதாகவும் அதனை கோர்க்கும் விதத்தில்தான் கற்பனை கலந்திருக்கிறது என நான் நம்புகின்றேன்.
ஆனால் எந்தக் கருவை முன்னுறுத்தி நாம் கதையினை நகர்த்தப் போகின்றோம் என்பது அல்லது சமூகப் பிரச்சனையை பார்க்கப் போகின்றோம் என்பது ஒரு ஆசிரியரின் கருத்துச் சுதந்திரத்தை அவன் எப்படிப் பயன்படுத்துகின்றான் என்பதனைப் பொறுத்த விடயம். அவன் சமூகத்தின் மீது கொண்ட அக்கறை…. அல்லது கோபம்…. அல்லது வேதனை… மேலாக எவ்வாறு கதையில் அதனை சமநிலையில் நகர்த்திச் செல்கின்றான் என்பதில் கதை உண்மைத் தன்மையை அல்லது நீங்கள் குறிப்பிடும் யாதார்த்த பூர்வமான நடையைப் பெறுகின்றது.
எழுத்தாளர்கள் எனும் அடையாளம் கொண்ட உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் யாது?
முதலில் அவையடக்கம் காரணமாக இதனைக் குறிப்பிடவில்லை. நான் என்னை எழுத்தாளர் என ஒத்துக் கொள்வதற்கு இன்னும் சுமார் பத்து ஆண்டுகள் ஆவது செல்ல வேண்டும் என நினைக்கிறேன். மற்றும்படி எனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர் என்னும் பொழுது ”தீக்குள் விரலை வைத்தால் உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா ” என ஓர் உச்சக்கட்ட உதாரணத்தை எனக்கு காட்டிய கவிஞன் பாரதியையும் 70வரையிலான ஜெயக்காந்தனைக் குறிப்பிட விரும்புகின்றேன்.
எழுத்து உங்களுக்கு என்ன கொடுத்திருக்கு? எதனைப் பறித்திருக்கு?
என்னை ஒரு மனோதத்துவ வைத்தியர் போலப் பாவித்து பலர் தங்கள் சொந்தப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு என்னிடம் ஆலோசனை பெறும் அளவுக்கு என்னால் உதவ முடியக் கூடிய பக்குவத்தை எனக்கு அளித்திருக்கின்றது.
ஞானம், ஜீவநதி என்ற இரு சஞ்சிகைகளின் பரம்பலுக்கு என்னால் உதவக் கூடிய வாய்ப்பைக் கொடுத்திருக்கு.
மிக எளிய தமிழில் காத்திரமான பிரச்சனைகளை முன்வைக்கக் கூடியவன் என்ற கௌரவத்தை தந்திருக்கு.
பல நல்ல இதயங்களின் நட்பை பெற்றுத் தந்திருக்கு.
நினைவு நல்லதாக இருக்கப் பயணப்படுவதால் எழுத்து எதனையும் என்னிடம் இருந்து பறிக்கவில்லை.
கலை இலக்கிய உலகில் நீங்கள் சாதித்தவையும் எட்டப்படாத இலக்குகள் ஏதும் இருப்பின்…..?
இதுவரை கிடைத்த பரிசுகளை சாதனையாக கருதவில்லை. அது அந்த திகதிக்கான ஒரு அங்கீகாரம். இன்றைய சாகித்திய விருது கூட நாளை அந்தத் திகதிக்கான மற்றெருவருடையதே. எதனையும் நோக்கி பயணப்பட வேண்டும் என்ற அபிலாசைகளும் எனக்கில்லை. ஆனால் ஒரு ஒட்டு மொத்த யாழ்ப்பாண சமூகத்தின் வாழ்வினை ஒரு நாவலில் முற்று முழுதாக கொண்டு வர வேண்டும் என்ற இலக்கு என்னுள் உண்டு. அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இது சுமார் நான்கு வருடங்கள் எடுக்கும் என எதிர்பார்க்கின்றேன்.
ஒரு படைப்பாளி என்ற ரீதியில் கலை இலக்கிய துறைகளில் இருக்கும் பெண்கள் தொடர்பாக….?
என் சின்ன வயது தோழியும் ”இப்படிக்கு அன்புள்ள அம்மா” என்ற டெனிஸ் நூலின் ஆசிரியரும் என் மனைவியுமான கலாநிதி ஜீவகுமாரன், தற்பொழுது அவுஸ்pரேலியாவில் வசிக்கும் என்னுடன் ஆங்கில இலக்கியம் கற்ற திருமதி. ரேணுகா தனஸ்கந்தா சிங்கப்பூரின் முன்னணி எழுத்தாளர் கனகலதா என எழுத்தாளர் வரிசை நீண்டு கொண்டே செல்லும். வாசகிகள் வட்டம் என்று பார்த்தால் என் அதிக முகநூல் தோழிகள். சிலர் கொழும்புச் தமிழ் சங்கத்திற்கு வந்திருந்தது மிக்க மன மகிழ்ச்சியைத் தந்தது.
எழுத்து எப்போதாவது உங்களை சலிப்படையவோ எரிச்சலடையவே வைத்திருக்கின்றதா?
நிச்சயமாக இல்லை. எனது ஒரு படைப்பு இன்னோர்; படைப்பு போல் இருக்க கூடாது என்பதில் நான் அதிகம் கவனம் செலுத்துவதால் அதன் அமைப்பு வடிவம் உத்திகள் பற்றி சிந்திப்பதற்கும் ஆராய்வதற்கும் தேடுவதுக்கும் அதிக நேரத்தைச் செலவழிக்கின்றேன். அது எனக்கு மிகவும் உற்சாகத்தை தருகின்றது. அவ்வாறில்லாமல் ஒரே வடிவில் புனைகதை இலக்கியம் படைக்கப் பயணப்பட்டிருந்தால் சிலவேளை சலிப்படைந்திருக்கலாம்.
மற்றது எதனையும் எதிர்பாராது நான் புனைவிலக்கியம் படைப்பதால் எந்த வகையிலம் நான் எரிச்சலடைவதில்லை. மேலும் எரிச்சலடைவது என்பது ஒருவரினுள்ளே எதிர்மறையான சக்தியைத் தோற்றவிக்கும் என்பதால்அதனை பெரும்பாலும் தவிர்த்துக் கொள்கின்றேன்.
ஆம் புன்னகை சக்தியைத் தருகிறது – முகச்சுழிப்பு சக்தியை விரயம் செய்கிறது. ஒருவர் புன்னகைக்கும் பொழுது ஏன் புன்னகைத்தார் என நாம் ஆராய்ந்து எங்கள் சக்தியை வீணடிப்பதில்லை. ஆனால் முகம்சுழிக்கும் பொழுது எங்களையே பல கேள்விகள் கேட்டு எங்கள் சக்தியை நாம் வீணடிக்கின்றோம் அல்லவா.
உங்கள் கதைகளுக்கு கிடைத்த கௌரவங்கள் பற்றி…..
யார் என்ற முன்பின் அறிமுகம் இல்லாது இந்தியாவில் நற்றிணைப் பதிப்பகம் நடாத்திய ப. சிங்காரம் போட்டியில் எனக்கு முதல் பரிசையும் 50.000 இந்திய பணத்தையும் பெற்றுக் கொடுத்த ஒரு தாயுமானவினதும் தந்தையானவளின் வாழ்வைக் காட்டிய ’கடவுச் சீட்டு”.
ஞானம் இதழில் தொடர்ந்து எழுதி வந்த சிறுகதைகளில் 8 கதைகளுக்கு கிடைத்த தகவம் விருதுகள்.
”சங்கானைச் சண்டியனுக்கான” சின்னப்பாரதி விருது
”மக்கள் மக்களால் மக்களுக்காக” நாவலுக்காகவும் மற்றும் ”இப்படிக்கு அன்புள்ள அம்மா” மொழிபெயர்ப்புக்காகவும் இருமுறை கிடைத்த தமிழியல் விருது.
ஓர் எழுத்தாளன் தன்னை பாதிக்கும் விடயங்களை பேசுபவராக இருக்க வேண்டும். ஆனால் இன்று அப்படி இல்லை. பிரச்சனைகளை புறக்கணிக் விட்டு வெறுமனே சிறுகதை எழுதுவது நியாயம் தானா?
நியாயம் இல்லைத் தான். ஆனால் நீங்கள் சொல்லும் நியாயங்கள் சாரி… கருத்துச் சுதந்திரகள் சரி அந்த அந்த நேரங்களில் சமூக மற்றும் அரசியல் விடயள்களும் தீர்;மானிக்கிறது.
அது எவ்வாறு கரு வடிவம் கொண்டாலும் அதில் உள்ள உண்மைத் தன்மைத் தான் அதனை அழகிய குஞ்சுகளாக உருவெடுக்க வைக்கும்.
அவ்வாறில்யாயின் மலட்டு எருதுகளையே கவிஞர்களும் எழுத்தாளர்களும் மீண்டும் மீண்டும் செக்கில் பூட்டும் துர்பாக்கிய நிலையே எங்கள் இலக்கிய உலகிற்கு அமையும்.
வீரியமான வித்துகள் விதைக்கப்பட வேண்டும்.
இறுதியாக இன்றைய இளம் எழுத்தாளர்குக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்.?
எழுத்து என்பது ஒரு அழகியல் சார்ந்த வடிவம். அதில் பயணம் செய்ய ஆழ்ந்த அறிவும் வாசிப்பும் மிக அவசியம். இதனை புதிய தலைமுறையினர் பழக்கப்படுத்டுதிக் கொள்ள வேண்டும். அவர்களுடன் நானும் தொடர்ந்து கைகோத்துக் கொண்டு பயணிக்க வேண்டும்.
Outstanding post, you have pointed out some fantastic points, I as well think this is a very great website. kbfceeaabfgfffkg