ஜீவகுமாரன் கதைகளும் – விஷ்ணுவர்த்தினியின் திறனாய்வும் (விமர்சகரும் திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன்)
பிரபல எழுத்தாளர், டென்மார்க்கைச் சேர்ந்த நமது ஜீவகுமாரன் தமிழில் தந்துள்ள சிறுகதைத் தொகுப்பை ‘ஜீவநதி” பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
‘ஜீவநதி” என்ற இலக்கிய ஏட்டின் ஆசிரியர் கலாமணி பரணீதரன், ஜீவகுமாரன் கதைகளுக்கு எழுதிய பதிப்புரையில், கூறுகின்றார்|
‘இன்று உள்ள கதைசொல்லிகளில் ஜீவகுமாரன் தனித்துவமான சிறந்த கதை சொல்லியாகத் திகழ்கின்றார்’
இந்தக் கூற்று எனக்கும் உடன்பாடானதே. காரணம் ஜீவகுமாரன் லாவாகமாக எழுதும் பண்புடையவர் என்பதே எந்த படைப்பும் வெறுமனே கதையொன்றைக் கூறுவதனால் மட்டும் கலைப்படைப்பாக அமைவதில்லை. வேண்டுமானால், நல்ல கருத்துக்களை அல்லது யதார்த்த சித்தரிப்புக்களைப் பாராட்டப்படலாம். ஆனால் அவ்விதமான கதைகள் அந்த நிலையில் மாத்திரம் ஒரு சில காலத்துக்கு நின்று பிடிக்கும்.
ஆயினும், காலத்தை வெல்வதற்கு அத்தகைப் படைப்புக்கு அத்தியாவசியமாக வடிவம் தேவை. அதனால் தான் உருவமும், உள்ளடக்கமும் இணைந்த ஒன்றே கலைப்படைப்பாக்க கொள்ளபபடுகின்றது.
இந்த நூலில் நூலாசிரியர் என்ன கூறுகின்றார் என்பதையும் நாம் கவனித்தல் வேண்டும்.
29 வருடங்களாக டென்மார்க்கில் வசித்து வுரம் ஜீவகுமாரன் இவ்வாறு கூறுகின்றார்
‘இந்த மண்ணில் இருந்து பெற்றவையை இந்த மண்ணுக்கே எழுத்து வடிவத்தில் கொடுக்கும் பயணத்தின் ஓரு தரிப்பிடந்தான் இந்தச் சிறுகதைத் தொகுப்பு” என்கின்றார்.
எனவே, தெளிவான அவரது கூற்று நமக்கு இந்தத் தொகுப்பில் எதனை நாம் எதிர்ப்பார்க்கலாம் என்பதையறிந்து கொள்கின்றோம்.
இத்தொகுப்பில் இடம்பெறும் கதைகள் அத்தனையையும் ‘ஜீவநதி” பிரசுரித்துள்ளது. அச்சஞ்சிகையின் வாசகர்களுக்கு ஜீவகுமாரனும், அவருடைய கதைகளும் நன்கு பரிச்சயமானவை. ஜீவகுமாரன் கதைகள் எவ்வாறு கலைப்படைப்பாக அமையக் கூடும் என்பதை இளையதிறனாய்வாளரின் கணிப்பு நமக்கு உதவுகின்றது.
மன உணர்வுகளைப் புரிந்து ஒரு உளவியல் பட்டதாரிப் பெண்ணின் பார்வை, சம்பரதாயமான கணிப்புக்களின் வித்தியாசமான பரிணாமத்தை நமது திறனாய்வு வளர்ச்சிக்கு அளிக்கின்றது.
பரணீதரன் விஷ்ணுவர்த்தினிகவனிக்கத்தக்க ஒரு சிறுகதை ஆசிரியர் என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஒரு பெண் திறனாய்வாளர் அன்றைய சூழலில் நடப்பு உலக விவகாரங்ளை எவ்வாறு பாhர்க் கின்றார்கள் என்பதை அறிந்து கொள்வது அவசியமாகின்றது.
விஷ்ணுவர்த்தியின் பின்வரும் அவதானிப்புக்களை நான் எனது பார்வையாளர்களும் ஏற்றுக் கொள்கின்றோம்.
‘ஜீவகுமாரன் தனது சிறுகதைகளைச் சொல்லில் சொல்லும் விதத்தில் உயிரோட்டம் நிறைந்துள்ளது. தான் கூறவந்த விடயங்களை, இலகுவான மொழி நடையில் அடிமட்ட வாசகர்களும் விளங்கிக்கொள்ளும் விதமாக சொற்களைப் பிரயோகித் துள்ளார். ஒரு சில சிறுகதையினை வாசிக்கத் தொடங்கியவுடன் ஒரே மூச்சில் முழவதையும் வாசித்து விடவேண்டும் என்ற விறுவிறுப்பு கதை சொல்லும் போக்கில் காணப்படுகின்றது. இந்நூலில் உள்ள சிறுகதைகளின் இறுதியில் காணப்படும் திருப்பமானது இவ்வாறு தான் அமையும் என வாசகரால் ஊகிக் முடியாத அளவிற்கு வித்தியாசமான திருப்பு முனையாக அமைந்துள்ள’ விஷ்ணுவர்த்தியின் மற்றுமொரு அவதானிப்பும் எனது பார்வையாக அமைகின்றது.
‘ஒவ்வொரு சொல்லையும் பொருத்தமாகத் தெரிந்தெடுத்த, கட்டுக்கோப்பான மொழிநடை மூலம் சிறகதையில் ஜாம்பவானாக உலா வருகின்றார் ஜீவகுமாரன் அவர்கள். ஒரு மனிதனின் ஆளுமை என்பது புறத்தோற்றமன்று. மனிதர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பட்ட ஆளமைக் கோலங்கiளால் பின்னப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரின் வெவ்வேறுபட்ட மனஉணர்வுகளை அவர்கள் எவ்வாறான ஆளமையுள்ளவர்கள என்பதைத் தீர்மானிக்கினற்ன’.
விஷ்ணுவர்த்தினியின் மேற்கோள்களை நான் அதிகம் எடுத்துக் கூறுவதற்கு இரண்டு காரண்ங்கள். ஒன்று உளவியல் சார்ந்த அவரது பார்வை எனது பர்வையுடன் ஒத்துப்போவது. இரண்டு நமது புதிய பெண் திறனாய்வாளர்களில் அவர் தனித்துவமாகத் திகழ்கின்றார்.
இன்னும் இரண்டு மேற்கோள்கள் ‘ஒவ்வொரு கதையையும் நகர்த்திச் செல்லும் விதமும், அதில் கையாளப்பட்டும் சொல்லாட்சிகளும், சிறுகதைகளும் மேலும் வலுவூட்டுவனவாக அமைந்துள்ளன. கதை களின் நிகழ்களங்களிற் ஏற்ப சொற்கள் கையானப்படுள்ளன.”
‘தான் கூறவந்த விடயங்கள் சிலவற்றை நேரிடையாக் கூறாமல், குறியீட்டுப் பாங்கான வகையில் சொற்கள், வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பிலுள்ள. பெரும்பாலான கதைகளில் சிந்தனையோட்டங்கள் ஒரே மாதிரியான தன்மை கொண்டு காணப்படுகின்றன’.
‘சிறுகதை இலக்கியத்தைப் பொறுத்த வரையில கதையோட்டம் முழவதிலும் ஒரு சீர்த் தன்மை பேணப்படவேண்டும். என்பதும் முக்கியமான தாகும். ஜீவகுமாரனின் சிறுகதைகள் யாவற்றிலும் எடுத்துக்கொண்ட மையக் கருப்பொருளை ஒட்டியதால் சிறுகதையிக் முக்கியமாக கூறுகள் யாவும் அமைந் திருப்பதோடு, அக்கூறுகள் யாவும் ஒரு சீர்த்தன்மை யோடு பேணுவதையும் காணக்கூடியதாகவுள்ளது. ஆற்றொழுக்கமான நடையில் சென்று கொண்டிருக்கும் ஒவ்வொரு சிறுகதையின் முடிவிலும் காணப் படும் திருப்பமானது சிறுகதைகள் பற்றிய ஜீவகுமாரனின் புரிதலுக்குச் சாட்சியமாக விளங்குகின்றன.
புதிய பரம்பரையினரில் ஒருவரான நவீனத்துவ அறிவடுடன் எழுத்தாளர்களின் கதைகளைப் பகுப்பாய்வு செய்கின்றனர் என்பதை இதுவரை கண்டோம். ஜீவகுமாரனின் கதைகள் அவருடைய நோக்கத்தை முழமையாக நிறைவேற்றுகின்றன என்பதனை நாம் காண்கின்றோம்.
இக்கதைகள் மூலம் நாம் இலக்கியத்தைச் சுவையாகப் பெற்றுக்கொள்கின்றோமா? யாழ்ப்பாணத்தின் செழுமைமிகு நாளாந்தப் பேச்சு வழக்கில் இலக்கியச் சுவையைக் காண்கின்றோம். சிறுகதை எழுதப்படும் முறையில் இலக்கியச் சுவையை ரசிக்கின்றோம்.
படிப்பினை, சமூகப் பயண்பாடு சொல்லாமலே உணர்த்தப்பட்டுகின்றன. இவை ஜீவகுமாரன் கதைகள் தமிழில் எழுதப்படும் எழுத்துத்துறையில், உலகானுபவம் ஒப்பீடு, அதிகம் சொல்லப்படாத விஷயங்களை நேர்த்தியான பரிவர்த்னை செய்யும் பாங்கு, அனைத்தும் சிறப்படைகின்றன.
சரி, இக்கதையைப் பற்றி உமது திறனாய்வு எங்கு இருக்கின்றது. கதைகளின் கருப்பொருள்களையும், கதைப் பொருள்களையும் கூறாமல் வருவது சம்பிரதாயமான திறனாய்வாக இல்லையே என்று நீங்கள் என்னை கேட்கலாம்.
உண்மைதான் சம்பிரதாயமான முறைகள் எல்லாம் மாறிவிட்டன. கதைகளின் உள்ளடக்கத்தை வரவேற்பதுடன் நிறுத்துகிகொள்கின்றன. விபரமாக அதனை எடுத்துக் கூறுவது அவசியமில்லை. வாசகர்களால் தாமே தமது அனுபவ ரீதியாகப் பொருள் கொண்டு விளங்கிக்கொள்வதே சிறப்பு. அவரவர் ரசணை அவர்வரக்கே உரியது.
என்னைப் பொறுத்தமட்டில் ஜீவகுமாரனை மனிதாபிமானமுள்ள ஓர் உலக மனிதனாகக் காண்கின்றேன். அவருடைய கதைகள் மூலம் புதிய அனுபவங்களைக் கற்பனையாகத் தன்னும் சுவைக்க முடிகின்றது. பிறநாடுகளில் வாழும், ஈழத்தில் பிறந்தவர்களில் எழுத்து என்னை, எனது இன்றைய நிலைப்பாட்டில், எனக்கு முதிர்ச்சி அனுபவத்தையும் பரிவர்த்தனை செய்கின்றன.
Skriv et svar