கோமதி – குறுநாவல்
என்னுரை:
புலம் பெயர் வாழ்வில் பெற்றதை விட இழந்ததே அதிகம் என்ற எனது 25வருடக் கூற்றிற்கு மேலும் ஒரு சாட்சிதான் இந்த வன்னிமகள் கோமதி!
_________________________________________
கோமதி
இரவு மணி இரண்டே கால்.
டென்மார்க்; தூங்கிக் கொண்டு இருந்தது.
இந்தா. . . இந்தா. . . அவனை வரச்சொல்லுங்கோ. . …இதுக்காகத்தானே. . .
வெறிபிடித்து திரிஞ்சவன். . .
நடுச்சாமத்தில் கோமதியின் வெறித்தனமான அலறலினால் அரைத்தூக்கத்தில் இருந்த டெனிஷ் நேர்ஸ் இருவரும் திடுக்கிட்டு கண் விழித்தார்கள்.
ஓடிப்போய் கோமதியின் வாட் கதவைத் திறந்த பொழுது கண்ட காட்சி அவர்களை திடுக்கிட வைத்தது.
கோமதி தனது ஆடைகளை அரைகுறையாக கழற்றிய நிலையில் அமைதியில்லாது அறைக்கு குறுக்கும் மறுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.
என்ன நினைச்சவன் என்னைப் பற்றி. . . நான் யாரெண்டு இவனுக்குத் தெரியுமோ. . .
நான் ரெயினிங் எடுத்தனான். . . ஏ 47 இருந்தால் தாருங்கோ இவனைச் சுட்டுப் போட்டு என்ரை இரண்டு பிள்ளையளோடையும் ஊருக்கு போயிடுறன். . . .
கண்களில் கோபம். . . இயலாமை. . . இரண்டும் தெரிந்தது. . . .
உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. . . .
நேர்ஸ் இருவரும் ஓடிப்போய் அவளை ஆறுதலாக அணைத்தார்கள்.
கலைந்திருந்த ஆடையை சீர்செய்து விட்டார்கள்.
ஊருக்கு போயிடுறன். . . . ஊருக்கு போயிடுறன். . . . என்னை கெதியாய் அனுப்புங்கோ. . .
இப்பொழுது கோமதி அழத்தொடங்கி விட்டாள்.
*
கோயில் தீர்த்தம் பார்க்கப் போனவள். . . போராட்டுத்துக்கு என்று வீட்டுக்குத் தெரியாமல் போன பொழுது வயது 16.
போராட்டம் வேண்டாம் என வெறுத்து அதனை விட்டு விலகிப் பின் வீட்டை வந்த பொழுது வயது 19.
இந்த மூன்று வருட காலத்தினுள் போர்ப்பயிற்சி, மருவி உதிர்ந்த ஒரு காதல், வெளியேற முயற்ச்சித்ததால் அனுபவித்த தண்டணைக் காலம். . . . இந்த அஞ்ஞான
வனவாச காலத்தை முடித்துப் போட்டு வீடு வந்த அடுத்த வருடம் தான் டென்மார்க் சம்மதம் கூடி வந்தது.
போராட்டம் நடக்கும் இந்த பூமியிலே பெண்பிள்ளைகளைப் பெத்ததே முன் செய்த பாவம் என நினைத்து வசிக்கும் யாழ்ப்பாண மத்தியில், போராட்டத்துக்கு போய் விட்டு திரும்பிய ஒரு பெண்பிள்ளையை எப்பிடி வைத்திருக்க முடியும்?
ஆமிக்காரன்களுக்கும் சரி, இதர இயங்கங்களுக்கும் அவரவர் பார்வையில் அவள் துரோகி தான்.
கைதானால் அவ்வளவு தான்.
ஆமிக்காம்பில் இருக்கும் அத்தனை பேருக்கும் அன்றைய விருந்து அவளே ஆவாள். அதன் பின்புதான் விசாரணையே ஆரம்பிக்கும். எங்கோ காம்?. . . என்ன என்ன பயிற்;சிகள்?. . . எத்தனை எத்தனை போர்? எங்கே எங்கே கூடுவது? என்ன என்ன திட்டங்கள்?. . . . பதில் தெரிந்ததும் தெரியாதுமான அத்தனை கேள்விகளுக்கும் அவள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
சரியான பதிலைச் சொன்னாலும் சரி. . . சொல்லாவிட்டாலும் சரி. . . அவனவனின் கை விரல்கள் அவள் மீது வேறு வேறு ரூபத்தில் மேயும்.
அதன் பின் ஒரு நடைப்பிணம் தான். . .அல்லது மீண்டும் ஒரு போராளி தான். . .
அவ்வாறு தான் இறைமையும் ஜனநாயகமும் கொண்ட இலங்கையின் சிங்கக்கொடி பட்டொளி வீசிக்கொண்டு பறந்து கொண்டு இருக்கிறது. . . அவ்வாறே மற்றைய மற்றைய கொடிகளும் ஆங்காங்கே. . . .
கோமதி செய்த புண்ணியமோ. . . இல்லை கோமதியைப் பெற்றவர்கள் செய்த புண்ணியமோ டென்மார்க் சம்மதம் வந்து கதவைத் தட்டியது.
மாப்பிள்ளை சுரேன். வயது 28. டென்மாக் போய் 8 வருடம். டென்மார்க்கில் சிற்றிசன் சிப்.. . . நிரந்தர வேலை. . . மேலாக கோமதியின் அதே இருமரபும் துய்ய வந்த சைவ வேளாளர் பரம்பரை. . . இதை விட வேறென்ன வேண்டும்?
நாட்டுநிலைமையையும் கடந்த காலத்தில் கோமதியின் இயக்கத் தொடர்புகளையும் கருத்தில் கொண்டு கல்யாணத்தை சிங்கப்பூரில் வைத்துக் கொள்ளலாம் என முடிவாயிற்று.
19 வயது கோமதியை சுமார் 29 – 30 வயது பெண்ணாக உருமாற்றி, கட்டையாக வெட்டியிருந்த தலைமுடி நெட்டையாக வளரும்வரை காத்திருந்து. . .தாயின் தாலிக்கொடியையும் கழுத்தில் போட்டு, தமக்கையின் பிள்ளையையும் கையில் கொடுத்து கொழும்பு வரை கொண்டு போய் ஏர் லங்காவில் ஏற்றிய பின்புதான் அனைவருக்கும் உயிர் வந்தது.
கோமதியுடன் மாப்பிள்ளையின் தாய் தகப்பன் மட்டும் பயணமானார்கள்.
கோமதியின் தாய்-தகப்பனுக்கோ மற்றைய சகோதரங்களுக்கோ சிங்கப்பூர் வரை செல்லுவதற்கு எந்த வசுNரியும் இருக்கவில்லை.
எவ்வாறு தனித்து வந்து நாம் பிறந்தோமோ, அவ்வாறே தனித்தே அவளின் வாழ்வின் இரண்டாம் அத்தியாயத்தில் காலடி எடுத்து வைப்பதற்காக முகில்களினூடு அவள் பயணப்பட்டுக் கொண்டு இருந்தாள் – எதிர்காலம் பற்றிய ஒரு படபடப்புடன்.
*
„டொக்டர் எனக்கு விசர் எண்டு நினைக்கிறிங்களோ?“
கோமதி சொன்னதை பெண் மொழிபெயர்ப்பாளர் டெனிஷில் டாக்டரிடம் சொன்னார்.
„இல்லை. . .கோமதி. ஆனால் நீங்கள் குழம்பிப் போய் இருக்கிறியள“;.
இப்போது மொழிபெயர்ப்பாளர் டாக்டரிடம் சொன்னதை தமிழில் கோமதியிடம் சொன்னார்.
கோமதி பதில் ஒன்றும் சொல்லவில்லை. . . . கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தாள். . மூச்சு கொஞ்சம் அதிகமாய் அடிவயிற்றில் இருந்து வந்தது. மெதுவாய் எழுந்து யன்னல் பக்கமாய் போய் அந்த எட்டாவது மாடியில் இருந்து கீழே போகும் வாகனங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
நேர்ஸ் போய் கோமதிக்கு பக்கத்தில் நின்று கொண்டாள்.
டாக்டரும், மொழிபெயர்ப்பாளரும் அவளையே பார்த்துக் கொண்டு கட்டிலடியில் நின்றார்கள்.
தீடீரென ஆவேசுNர்துடன் திரும்பி டாக்டரை நோக்கி ஓர் வெறியுடன் வந்தாள். . . .
„ஏன் நான் குழம்பி போயிருக்கிறன் தெரியுமோ?. . . அந்த பொறுக்கியாலை தான். .
. அந்த பொறுக்கியாலை தான். . . இங்கை இருந்து அங்கை வந்த பொறுக்கியாலை தான். . . நான் இயக்கத்திலை இருந்தனான். . . . நாட்டுக்காக போராடினான். . .ஏ கே 47லால் சுடத்தெரியும். . . .இப்ப. . . இப்ப. . . இந்தப் பொறுக்கியாலை. . .
.அவனை நடுச்சந்தியிலை கட்டிப் போடவேணும். . . மொட்டை அடிக்க வேணும். .
.எனக்கு செய்ததை எல்லாம் அவன்ரை கழுத்திலை எழுதி தொங்க போடவேணும். .
.கடைசியிலை கீழை சுடவேணும். . .எல்லாம் பறக்க சுடவேணும். . . . „
கோமதியிடம் இருந்து வார்த்தைகள் ஆவேசமாய் பறந்தது.
டாக்டர் நேர்ஸிடம் நித்திரை ஊசியைப் போடுமாறு கண்ணைக் காட்டிவிட்டு அப்பால் நகர்ந்தார்..;
டாக்கடருக்கு பின்னால் போக வெளிக்கிட்ட மொழிபெயர்ப்பாளரை கோமதி தடுத்தாள்.
„அக்கா அவன் கெட்டவன். . . அவன் கெட்டவன். . . அவன் என்ன என்ன எல்லாம் செய்தவன் தெரியுமோ. . . .“
நேர்ஸ் மொழிபெயர்ப்பாளரை போகச்சொல்லி சைகையால் கூறினார்.
„அக்கா போகாதையுங்கோ. . . நீங்கள் கேட்டுட்டுப் போங்கோ. . .இனியொரு பிள்ளைக்கு இது நடக்ககூடாது. . .ஆனால் இதுகளை அப்பா அம்மாற்றை மட்டும் சொல்லாதையுங்கோ… பாவங்கள். . .பாவங்கள் அதுகள். . . சந்தைக்கை தேங்காய் வித்து கிடுகோலை பின்னி வித்து எங்களை வளர்த்ததுகள். . „
கோமதி அழத்தொடங்கினாள்.
*
கல்யாணக்கூறையுடன் கைகளில் பழத்தட்டையும் பால் ரம்ளரையும் ஏந்திக் கொண்டு தயங்கி தயங்கி அறைக்குள் நுழைந்து. . . அவற்றை கட்டில் தலைமாட்டடியில் வைத்து விட்டு. . . கிட்டவாய் போய் சுரேனின் காலடியில் கும்பிடப் போக. . .
அவளை ஆதரவாகத் தாங்கியபடி அவளை கட்டிலடிக்கு அழைத்துப் போய் இருத்தி.
. .இருவருமாய் பால் பழம் உண்டு, பலகதைகளும் கதைத்து, பின் சுரேன் லைற்றையும் அணைத்து அவளையும் அணைக்க, அந்த அணைப்பில் சுரேனின் அரவணைப்பில் தன்னை இளக்க. . .
இன்னும் பதினைந்து நிமிடத்தில் சிங்கப்பூர் சங்கை விமானநிலையத்தில் இறங்கவுள்ளோம் என்ற பணிப்பெண்ணின் குரல் கேட்க திடுக்கிட்டு முழித்தாள் கோமதி.
என்ன பிள்ளை நித்திரை கொண்டுட்டீரோ. . . போய் முகத்தைக் கழுவிக் கொண்டு மேக்கப் போட்டுக் கொண்டு வாரும். சுரேன் உம்மைப் பார்த்து சொக்கிப் போகவேணும். மாமியார் கூறவும் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு விமானத்தின் பின்புறமாய் இருந்த ஒப்பனை அறையை நோக்கிப் போனாள்.
கனவில் இருந்து அவள் இன்னமும் முற்றாக விடுபடவில்லை. முகத்தை குளிர்ந்த நீரால் நன்கு அலசிக் கழுவினாள்.
சென்றிக்கு நின்ற பொழுது செந்தில்; அவளை வைத்த கண் வெட்டாது பார்த்த பொழுது அவளுடலில் பரவிய அந்த அதேயுணர்வு. . .
பாவம் செந்தில மனது சொல்லிக் கொண்டது.
இழப்புகள் இயல்பானவை. . . பல தடவை இந்தக் கோட்பாட்டால் அவள் தன்னை தானே தேற்ற முயன்றாலும் செந்திலின் இழப்பு அநியாயமானது என்பதில் அவள் இறுதிவரை உறுதியாகவே இருந்தாள்.
கசப்பான அனுபவங்களை ஒரு தடவை இரைமீட்டி மீண்டும் ஒரு தடவை தன் இயலாமையிடம் தோற்றுப் போக விரும்பாதவளாய், மாமியார் சொன்னமாதிரி தன்னை கொஞ்சம் மிகையாகவே அலங்காரம் செய்து கொண்டு. . . டெலிபோனில் மட்டும் பேசி அறிமுகம் ஆன சுரேனைக் கண்டவுடன் என்ன பேசுவது என்ன கதைப்பது என்ற படபடப்புடன் மீண்டும் தன் ஆசனத்தில் வந்து இருந்தாள்.
சுரேன் இரண்டு நாட்களுக்கு முன்பே டென்மார்க்கால் வந்து ஹோட்டலும் எடுத்து தங்கி. . . கல்யாண ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க. . .தாய், தகப்பன், கோமதி மூவரும் சிங்கப்பூர் வந்திறங்குவதாக ஏற்பாடாகியிருந்;தது.
மாமியார் பழையபடி சுரேனினின் புராணத்தை தொடங்கியிருந்தா. . . எத்தனையோ சம்மதங்கள் வந்தது. . . அதிலும் பல பெரிய சீதன பாதனங்களுடன். . . சுரேனுக்கு கோமதியின் படம் மட்டும் பிடித்திருந்தது. . .மெல்லிய. . .உயரமான. . .நிறமான. .
.பெண் கேட்டு ஒற்றைக் காலில் நின்றவன். . . உமக்குத்தான அந்த அதிஷ்டம். . .
கீறுவிழுந்த இiசுNர்தட்டாய் மாமியார் சொல்லிக் கொண்டிருக்க, இப்போ விமானம் தாளப்பறக்கத் தொடங்கியது.
காதுகள் இரையத் தொடங்கியது.
மாமியாரின் கதைகளுக்கு தன் புன்னகையால் பதிலைச் சொன்னபடி. . .
யன்னலினூடு சிங்கப்பூரின் அழகையும் பார்த்தபடி. . . எங்கையோ பிறந்த தன் வாழ்வு. . . எங்கையோ ஒரு வன்னிக் காட்டுக்குள். . . ஒரு வீரமங்கையின் சாவு. . .
என்ற பெயருடன் முடிந்திருக்க வேண்டிய ஒரு வாழ்வு. . .எங்கோ பிறந்த ஒருவனுடன் இணைக்கப்பட இருப்பதை எண்ணிக் கொண்டு இருக்கு விமானத்தின் முன் சில்லு தரையைத் தொட்டது.
மிக வேகமாக. . .பின் மெதுவாக. . .கடைசியாக ஊர்ந்து விமானம் தன் தரிப்பிடத்திற்கு வந்து சேர. . . தங்கள் ஆசனத்;தில இருந்து அனைவரும் எழுந்து கொண்டார்கள்.
பூமியின் மறுபக்கத்தில் இப்படி ஓர் அழகான உலகம் இருக்கின்றதா என்ற பிரமிப்புடன் கோமதி சிங்கப்பூர் விமானநிலையத்தினுள் நடந்தாள் – மாமன் மாமியருக்குப் பின்னால்.
கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையத்தினுள் கண்ட எந்தப் படைவீரரும் இங்கிருக்கவில்லை.
நாட்டை நினைத்து மனம் வேதனைப்பட்டது.
சீனர். . .தாய்லாந்துக்காரர். . மலேசியர். . .இந்தியர்கள். . .வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் என அனைத்து இனத்தவரையும். . .அதிலும் அவரவரை மதித்து அவர்கள் பாதையில் செல்லுவதைப் பார்க்கும் பொழுது அழகாய்த்தான் இருந்தது.
ஓரிடத்தில் மட்டும் இரண்டு சிங்கப்பூர் பொலிஸ்காரர் நாலைந்து சிங்களப் பெண்களுடனும் ஆறேழு தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்களுடனும் போய்க்கொண்டிருந்தார்கள்.
அவர்களின் முகங்கள் காய்ந்து போயிருந்தன –அழுதிருக்க வேண்டும்.
கோமதி மாமனாரை திரும்பிப் பார்த்தாள்.
„தொழிலுக்கு வந்திருக்குங்கள். . . விசா முடிஞ்சிருக்கும். . . . பொலிஸ்காரங்கள் பிடிச்சு அனுப்புறாங்கள் போலை“
„உங்களுக்கு உந்த உலக விண்ணாளங்கள் எல்லாம் எப்பிடித் தெரியும்?“மாமியார் துருவினார்.
„நீ பேப்பர் படிச்சால் தானே? வேண்டுற வீரகேசரிப் பேப்பரை மாவரிக்கத்தானே நீ பாவிக்கிறனி. . . பாவங்களப்பா உந்தப் பிள்ளையள். . .சிலதுகள் தெரிஞ்சு வாறதுகள். . .சிலதுகள் தெரியாமல் வந்து மாட்டுப்படுறதுகள். . . இனி புது பாஸ்போட்டோடை வருங்கள். . . இல்லாட்டி சவுதிப்பக்கம் வேலைக்குப் போகுங்கள். .
. கடைசியிலை கண்ட கண்ட நோய்கள் வந்து. . .பாவப்பட்ட ஜென்மங்கள். .
.அங்கை மட்டும் விடிவே பிறக்கப் போகுது?“
போராட்டம் என்று திரிந்த கோமதிச் சரி.. . கோயில்கள் விரதங்கள் என்று திரிந்த மாமியருக்குச் சரி. . . மாமனார் சொன்ன இந்தப் பெண்களின் உலகம் புதியதே. . .
விமான நிலையத்தின் வழமையான விசா, சுங்க சம்பிருதாயங்களை முடித்துக் கொண்டு வெளியே வர சுரேன் கையில் ஒரு பூக்கொத்துடன் காத்திருந்தான்.
„என்ரை ராசாவைப் பார்த்து எத்தினை வருசமாச்சு. . „, என்றபடி தாய் மகனைக் கட்டியணைத்து கொஞ்சியழும் வழமையான படலம் முடிய கோமதியைப் பார்த்து „ஹலோ“, என்றான் சுரேன்.
கோமதியும் பதிலுக்கு „ஹலோ“சொல்லிக்கொண்டாள்.
பின்பு என்ன?. . . நாலு பேரையும் ஏற்றிக் கொண்டு சிங்கப்பூரின் வீதிகளில் டக்ஸி மிதக்கத் தொடங்கியது.
அந்திபடும் நேரம் என்றாலும் இயற்கையும் செயற்கையும் சேர்த்து சிங்கப்பூரை பச்சைப் பசேல் என காட்டிக் கொண்டிருந்தது. வீதியெங்கும் வண்ண வண்ண நிறங்களில் காகிதப்பூக்கள். .
„தமிழீழம் அமையும் பொழுது யாழ்ப்பாணம் குட்டிச் சிங்கப்பூராகும்“, என மூத்த போராளி ஒருவன் சொல்லும் போது, „அப்போத வன்னி என்னவாகும்“, எனக் கேட்க வாய் குறுகுறுக்கும் – ஆனால் அடக்கி கொள்வாள்.
„மௌனித்திரு“என்பதன் அர்த்தத்தை இயக்கத்திக்கு போன பின்புதான் கோமதி அதிகமாக அறிந்திருந்தாள்.
தாய்-தகப்பன்-மகனின் சம்பாஷணைகளிலும். . .நினைவுகளின் பின்னசைவுகளில் மூழ்கியிருந்தவளையும் சுமந்து வந்த டக்ஸி மெதுவாய் கொண்டு வந்து சிறங்கூன் வீதியில் காளி கோயிலுக்கு கிட்டவாக அமைந்திருந்த ஹோட்டல வாசலில் நிறுத்தியது.
அவளுக்கு தன் கண்களையே நம்பமுடியவில்லை.
டக்ஸியால் இறங்க முடியாதளவு சனக்கூட்டம். . . நல்லூர்த் திருவிழா போல. . அனைத்தும் இந்தியர்கள். . .பாக்கிஸ்தான்காரர். . .பங்களாதேஷ்காரர். .
.இடைக்கிடை சில சிங்கள முகங்கள். . .
அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறைதினம் ஆதலால் சிங்கப்பூரில் வேலைக்காக வந்து வெவ்வேறுபகுதிகளில் வாழும் அனைத்து தென்கிழக்காசிய நாட்டவரும் கூடும் இடம் அது.
கடிதங்களைப் பெற. . கடிதங்களை அனுப்ப. . .காசுப்பரிமாற்றம் செய்ய. . ஊருக்குப் போக சாமான்கள் வேண்ட. . .கிழமைக்கு ஒரு தடவை சந்திக்கும் காதலர்கள் நாள் முழுக்கச் சுற்றித் திரிய. . .நல்ல மரக்கறி மீன்வகைகளை வேண்ட. . .
புல்வெளிகளிலும், பார்களிலும் கூடியிருந்து கதைக்க. . .தண்ணியடிக்க. .
.தேவைப்பட்டால் உடலின் உபாதைகளைக் குறைக்க இருபது வெள்ளியில் இருந்து இருகூறு வெள்ளிகள் வரை வயதுக்கும் தரத்திற்கும் ஏற்றமாதிரி . . .
முஸ்தபா சொப்பிங் சென்ரரை மையமாகக் கொண்டு சுமார் ஒரு மைல் சுற்றளவுக்கு இந்த ஞாயிற்றுக்கிழமைத் திருவிழா நடைபெறும். சுமார் காலை பத்து மணிக்குத் தொடங்கி அடுத்தநாள் அதிகாலை இரண்டுமணி வரை இந்த திருவிழா நீடிக்கும்.
இந்த சனக்கூட்டத்துள் ஒரு டக்ஸிப் பிடிப்பது என்றால் அன்று ஒரு லாட்டரி சீட்டு விழுந்ததற்குச் சமன்.
எனவேதான் கோமதி ஆட்கள் இறங்க முன்பே பலர் டக்ஸியைச் சூழ்ந்து
கொண்டார்கள்.
அவர்களை ஏதோ டெனிஷில் திட்டியபடி சுரேன் எல்லோரின் பெட்டிகளையும் கீழே
இறக்கி விட்டு டக்ஸியை அனுப்ப முதலேயே ஓர் இந்தியப் பையனும் அவன்
சீனக்காதலியும் டக்ஸினுள் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள்.
கோமதிக்கு சுரேன் பேசியது கெட்ட வார்த்தையாகத்தான் இருக்க வேண்டும் என ஊகித்தாலும் எதுவுமே கேட்காமல் தனது சூட்கேசுடன் ஹோட்டலினுள் நுழைந்தாள்.
சுரேன் தகப்பன் தாயின் சூட்கேசை வேண்டிக் கொண்டான்.
சுரேன் முன்னதாகவே ஒழுங்கு செய்திருந்த ஒரு அறையினுள் கோமதியும் அவன் பெற்றோரும் தங்குவதாக ஏற்பாடு. பக்கத்து அறை சுரேனுடையது.
„இன்னும் இரண்டு நாளைக்கு அபு;பா, அம்மாவுடன் தான் நீர் தங்கவேணும்“
„இப்ப நான் கேட்டேனா“என்னுமாப் போல் நிமிர்ந்து பார்த்தாள். அவளுடன் கூடவே பிறந்த குறும்பு அவனைப் பார்த்து வாயால் சுளித்து விட்டு சுரேனின் பெற்றோரின் அறையுனுள் நுழைந்து கொண்டாள்.
*
அடுத்த நாள் கலியாணத்திற்காக சாமான்கள் வேண்டுவதிலேயே அதிக நேரம் கழிந்தது.
கோமதிக்கு கூறைச்சேலை. . . திருமணத்துக்கான நகைகள். . .
தாய்க்கு இரட்டை வடச்சங்கிலி. . . என்றே அன்றைய நாள்pன் பெரும்பகுதி ஓடிக்கொண்டிருந்தது.
சுரேனின் தாய் தனக்கும் ஊரில் இருக்கும் தனது இன சனங்களுக்கு என்று முன்னின்று வாங்கிய அத்தனை பொருட்களுக்கும் டென்மார்க்கின் குறோன்கள் விசா காட் மூலமாக சிங்கப்பூரின் வெள்ளியாக மாறிக் கொண்டிருந்தது.
„நீர் என்ன விருப்பமோ வேண்டும்“, என சுரேன் பலமுறை வற்புறுத்திய பொழுதும் வேண்டாம் என்ற தலையாட்டல்தான் கோமதியின் பதிலாக இருந்தது.
மாறாக சுரேனின் தாயோ சிறங்கூனின் எந்தக் கடையையும் விட்டு வைக்கவில்லை –சீனக்காரரின் நகைக்கடைகள் தொடக்கம் மூன்று எடுத்தால் பத்து வெள்ளி என கூக்குரலிடும் வட இந்தியர்களின் கடைகள் வரை இதில் அடங்கும்.
பிளேனிலை ஆளுக்கு இருபது கிலோதான் விடுவாங்கள் என்ற சுரேனின் தகப்பனின் எச்சரிக்கையும் தாய் கேட்டது போல தெரியவில்லை.
கோமதி எதையும் வேண்டுவதில் ஆர்வம் காட்டாது கடைகளில் காணப்படும் சின்னப் பொம்மைகளை மட்டும் ஆசையாக பார்த்து தடவிக் கொண்டு நின்றாள்.
„வேண்டித் தாறதோ“, என சுரேன் சிரித்தபடி கேட்க, அதே புன்முறுவலுடன் வேண்டாம் எனத் தலையாட்டி விட்டு அப்பால் நகர்ந்து கொள்வாள்.
என்ரை மருமகளுக்கு கலியாணத்துக்கு முதலே குழந்தைப் பொம்மையிலை ஆசை வந்திட்டுதாக்கும் என்ற „ஏ“ஜோக்கை ஏனோ அவளால் பெரிதாக ரசிக்க முடியவில்லை.
கோமதியின் உலகம் என்றைக்குமே சின்னதாகத் தான் இருந்தது.
ஊர்ப் பள்ளிக்கூடம். . . காலையிலும் மாலையிலும் கும்பிட்டுச் சொல்லும் சின்ன அம்மன் கோயில். . . வருடத்திற்கு ஒரு தடவையோ அல்லது இருதடவையோ யாழ்ப்பாணத்துக்குப் போய் ஒரு படம் பார்த்து சுபாஸ் கபேயில் ஐஸ் கிறீம் குடித்து.
. . அதே மாதிரி வருடத்து ஒரு தடவை வரும் நல்லூர் தேர். . . சன்னதிக்கு வண்டி கட்டிப் போய் வைக்கும் பொங்கல். . .
எப்பவும் எதிலுமே அவள் பெரிதாக ஆசைப்படவில்லை. . . வாழ்க்கையுடன் போராடி அதன் வெற்றி தோல்வியில் விழுந்தெழும்பாமல் வாழ்க்கையின் வழியிலேயே வாழ்ந்து பழகியிருந்தாள். சக மாணவிகள் பத்து பாடத்துக்கும் ஓடி ஓடி ரியூசன் எடுத்த பெறுபேறுகளை அவள் விளையாட்டுத்தனமான இருந்தபடியே பெற்றிருந்தாள்.
அவளின் அந்த திறமைதான் அவளை போராட்டத்துக்குள் இழுக்கவும் காரணமாய் இருந்தது. விரும்பியே போனாள். . .விருப்பம் விடுபட்ட போது தானே வெளியேறினாள்..
. எதற்க்கும் சலசலக்கவில்லை.
இப்பவும் ஓர் அழகிய பொம்மையை கையில் எடுத்து. . . அதனை அiசுNர்து அதன் கண்களை வெட்டவைத்து. . . அதற்கு தானும் கண் வெட்டி. . சின்னதாக சிரித்து. .
.
மாமானார் எட்டவாக நின்று கோமதியை பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.
மொத்தத்தில் அன்றைய பொழுது சிறங்கூன் வீதியில் இருந்த அனைத்து கடைகளுக்குள்ளும் கழிந்தது.
ஹோட்டலுக்கு வந்து சேர நடந்த களையில் கையும் காலும் நன்கு நோக அடுத்தநாள் காலையில் தன் கழுத்தில் ஏற இருக்கும் தாலி. . . தன் வாழ்வை சுரேனிடம் அர்ப்பணிக்க இருக்கம் இனிமையான நினைவுகள் என சற்று வேளையுடன் கோமதி அயர்ந்து விட்டாள்.
*
காலைப்பொழுதின் கலகலப்பு என்பது கிழக்காசிய நாடு எல்லாவற்றிக்கும் ஒன்று தான். அது சிங்கப்பூராய் இருந்தால் என்ன? . . .சிதம்பர கோயில் மேல்மாடவீதியாய் இருந்தால் என்ன?. . . .
சுரேன், கோமதி, சுரேனின் பெற்றோர்கள் அதிகாலையிலேயே எழுந்து ஆயத்தமாகி விட்டார்கள்.
உற்றார், சுற்றார் இல்லாது பணக்கார அகதிகளாய் ஐரோப்பபாவிலும், கனடாவிலும், அவுஸ்திரேலியாவிலும் இருந்து வந்து நடாத்தப்படும் இந்த திருமணங்களில் பால் அறுகு வைத்தல், தோயவார்த்தல், மாப்பிள்ளை வீட்டு அழைப்பு, நாலாம் சடங்கு என்ற சம்பிருதாயங்கள் பல சுருக்கப்பட்டு தாலி கட்டும் வைபவம் ஒன்றுதான் நிறைவாக அமைவது.
சுரேனின்; தூரத்து உறவுகள் என மலேசியாவில் இருந்து வந்த குடும்பங்கள், வீடியோகாரன், கமராக்காரன் என காலை 7 மணிக்கே எல்லோரும் ஹோட்டலில் கூடியிருந்தார்கள்.
பெண்ணையும் மாப்பிளையையும் தனித்தனியே படம் பிடித்துக் கொண்ட பின்பு சுரேனின் உறவினர்கள் கோமதியின் பெற்றார் ஸ்தானத்தில் நின்று அவளைக் கூட்டிக் கொண்டு முதல் காரில் கற்பகவிநாயகர் கோயிலுக்குப் போனார்கள்.
சிறிது நேரம் கழித்து சுரேனின் காரும் பின்னால் சென்றது.
முன்பே ஆயத்தம் செய்து கொண்டிருந்தபடி ஐயர், மணவறை, மேளகாரர், அனைத்தும் கோயிலடியில் தயார் நிலையில் இருந்தது.
பின்பு அனைத்தும் சொல்லி வைத்தது போல நடைபெறத் தொடங்கியது.
ஓமம் வளர்த்தல் – தாரைவார்ப்பு –தாலி கட்டுதல் – சுரேனின் கையைப் பிடித்துக் கொண்டு மேடையைச் சுற்றல் – பால்பழம் உண்ணல் – அறுகரிசி போடல் – கடைசியாக குருக்களுக்கு தம்பதியராய் தட்சணை கொடுத்தல் என அனைத்தும் நன்கு நிறைவேறியது.
ஒவ்வொன்றும் நடைபெற்ற பொழுது கோமதி தாய், தகப்பன், சகோரங்கள், சின்ன வயது தோழிகள் அனைவரையும் நினைத்து கண் கலங்கினாள்.
சின்ன வயதில் இருந்தே காண்பவைகள் மனத்தின் எங்கோ ஒரு மூலையில் சின்ன சின்ன படச்சுருள்களாய் பதிந்துவிட. . . .அவைகள் நிறைவேறும் போது அவற்றை பெரிய படமாக்கி ஹோலில் மாட்டி வைக்க மனம் ஆசைப்படும். ஒரு பெண்ணுக்கு தனது சாமத்திய வீடு பற்றித் தொடங்கும் கனவுகள். . .திருமணம். . .வளைகாப்பு. . .
பிள்ளைப்பேறு. . .பிள்ளையின் முதலாவது பிறந்தநாள் என வளர்ந்து கொண்டே போகும்.
அவ்வாறே திருமணக் கனாக்களும் – திருமணநாள் பற்றிய கனவுகளும்.
எண்பத்திமூன்றுக் கலவரத்திற்கு பின்னர் நடந்த பல வெளிநாட்டு உள்நாட்டுக் கல்யாணங்களில் பெரும்பாலும் டெவலப்பண்ணாத படச்சுருள் கதைதான் – காகிதத்தில் பதியாத கற்பனை நாவல்கள் தான். இதற்கு கோமதியும் விதிவிலக்கல்ல.
அதுதான் கண்ணைத் தழும்ப வைக்கும் இந்தக் கண்ணீர் துளிகள்.
கோயில் மண்டபத்திலேயே மத்தியான சாப்பாட்டுக்கு ஒழுங்கு செய்திருந்தபடியால், மதிய சாப்பாடு முடிந்ததும் மலேசியா உறவினர்கள் விடைபெற்றுக் கொண்டார்கள்.
எல்லாம் ஒரு கனவுபோல நாலைந்து மணியாலத்துள் நிறைவேற கோமதி கனகவேலு கோமதி சுரேனாக சுரேனுடனும், சுரேனின் பெற்றோருடனும் ஹோட்டலுக்கு திரும்பிய பொழுது பின்னேரம் இரண்டு மணியாகி இருந்தது.
வெளியில் வெய்யில் நன்கு எறித்துக் கொண்டிருந்தது –யாழ்ப்பாண காண்டவன வெயில் போல்.
கோமதி நீர் இனித் தம்பியின்ரை அறைக்குப் போம். நாங்கள் எங்கடை அறைக்குப் போறம்
கோமதிக்கு இந்தப் பகலில் சுரேன் அறைக்குப் போக பெரிய தயக்கமாய் இருந்தது.
இரவு ஆகட்டும். அப்புறம் போறனே. . . இப்ப உங்களோடை இருக்கிறன். . . .
என்ன சின்னப் பிள்ளை போலை. . .நாளையிண்டைக்கு நீங்கள் இரண்டு பேரும் தானே டென்மார்க்குப் போய் ஒண்டாக வாழப்போறியள். . .இப்ப என்ன கூச்சம். . . .
ஆனால் கோமதிக்கு என்னவோ தனியே அவன் அறைக்குள் போக கூச்சமாய் இருந்தது.
தயங்கியபடியே நின்று கொண்டிருந்தாள்.
„என்ன யோசித்துக் கொண்டு நிற்கிறீர். வாருமன் அறைக்குள்ளை. . . „, சுரேன் தான் அறைக்கு வெளியே வந்து கூப்பிட்டான்.
அவன் இப்பொழுது பட்டு வேட்டியில் இருந்து சாரத்துக்கு மாறியிருந்தான். சேட்டு இல்லாது வெறும் மேலுடன் நிற்பதைப் பார்க்க கோமதிக்கு என்னவோ போலிருந்தது.
கோமதி தயங்கி தயங்கி உள்ளே போனாள்.
„கதவைப் பூட்டும் . ரூம் போய்; வந்தாலும் வருவான். . „,கூறிக்கொண்டே குளிர்சாதனப் பெட்டியினுள் இருந்து ஓர் பியர் ரின்னை எடுத்து உடைத்து. .
.அதிலிருந்து பீறும் நுரையை வாயை வைத்து உறுஞ்சினான்.
கோமதிக்கு அடிமனதில் ஒரு பயம் எழுந்தது.
தயங்கியபடியே கதவைச் சாத்திப் போட்டு கதவு நிலையோரத்துடனே நின்றாள்.
„என்ன ஒற்றைக்காலில் தவம் செய்கிறீh. கூறைச்சீலையை கழட்டுமன். . . „
„ஓம் . . . .“ , மெதுவாய் தலையாட்டினாள்.
„நீங்கள் ஒருக்கா வெளியிலை போனீங்களெண்டால் நான் உடுப்பு மாத்திடுவன்“
சுரேன் மெல்லியதாய் சிரித்துக் கொண்டான்.
கோமதிக்கு அவனின் சிரிப்புக்கு அர்த்தம் விளங்கவில்லை.
„நான் உம்மை சீலையை மாத்தச் சொல்லேல்லை. . . சீலையை கழட்டச் சொன்னனான். . . .“
கோமதிக்கு திக் எண்டது!
„என்ன சொல்லுறிங்கள். . . .இந்தப் பகலிலை. . . .“
„அதுக்கு என்ன? நான் உம்மைப் பார்க்க வேணும். . . நீர் என்னைப் பார்க்க வேணும். . . அப்பிடித் தான் டென்மார்க்கிலை. . . . .“
„ஐயோ என்னாலை முடியாது“, என்றவாறு கதவைத் திறக்கப் போன கோமதியின் கையை சுரேனின் கை வந்து கெட்டியாகப் பிடித்தது.
„பிளீஸ். . .பிளீஸ். . .விடுங்கோ. . .விடுங்கோ. . . „ , கோமதியின் கெஞ்சல் எதுவும் சுரேனிடம் எடுபடவில்லை. . . .
அவனாகவே அவளை பிறந்தமேனியாக்கினான்.
பின் தனக்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டான்.
வன்னிக்காட்டுக்குள் திரியும் காட்டுப் பன்டிகள் மரவெள்ளித் தோட்டங்களை நாசம் செய்து போட்டுப் போவது போலை. . . . . .தன்னை அவன் நாசம் செய்து போட்டான் போல இருந்தது.
விமானத்;தில் வரும் பொழுது கண்ட முதல் இரவின் கனவுகள் அந்த முதல் பகலில் கரைந்து கொண்டு இருந்தது.
கூறைச்சேலையினால் அவள் பிறந்த உடம்பை போர்த்தி விட்டு மீண்டும் ஒரு பியரை உடைத்துக் கொண்டு சுரேன் போய் கதிரையில் உட்கார்ந்து கொண்டான்.
அவள் நடுங்கி கொண்டு படுத்திருந்தாள. . . .
„ஏன் நடுங்கிக் கொண்டு இருக்கிறீர்? இதிலை என்ன இருக்கு? குளிருதா. . . எயர்
கொண்டிசனைக் குறைச்சு விடட்டா. . . இல்லை போர்த்து விடட்டா. . . .“, என்று அவன் கிட்ட வந்த பொழுது தன்னை போர்த்தியிருந்த கூறைச்சேலையை இன்னமும் இறுக்கிப் பிடித்திருந்தாள். . . .
உதை விடும். . . இந்த பெட்சீற்றாலை போரும் என கூறைச்சேலையை வழுக்கட்டாயமாக பறித்து இழுத்துப் போட்டு மீண்டும் அவளை பிறந்த மேனியாய் பார்த்துக் கொண்டே பெற்சீற்றால் தன்னையும் அவளையும் போர்த்;திக் கொண்டான். .
. .
சென்றிக்கு நின்ற தன்னை மீண்டும் ஒரு காட்டுப் பன்றி மறுபுறத்தால் வந்து குதறுவது போல அவள் உணர்ந்தாள்.
குமுறும் நெஞ்சுNர்தில் இருந்து எழுந்து வந்த கவலைகள் எல்லாம் அவள் கண்கள வழியே வழிந்தோடியது.
இது தான் கல்யாணமா? இது தான் தாம்பத்தியமா? ஆண்கள்; எல்லோரும் இப்படியா? அப்பாவும் இப்படியா அம்மாவை கொடுமைப்படுத்தி நான் பிறந்தனான்?
விடை தெரியாத கேள்விகளை மனம் அடுக்கி கொண்டு போனது. . . .
சுரேன் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருந்தான்.
அவன் வியர்வையில் பியர் மணத்தது.
அது அவளின் வயிற்றைக் குமட்டியது.
மெதுவாக எழும்பி தன் உடுப்புகளை எடுத்துக் கொண்டு குளியறையினுள் போனாள்.
மேல் பைப்பைத்; திறந்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டு நின்றாள்.
சுவரில் இருந்தும் அவள் கண்களில் இருந்தும் நீர் ஓடிக்கொண்டே இருந்தது.
*
குளித்துக் கொண்டு இருக்கும் பொழுது சுரேன் எழும்பும் சுNர்தம் கேட்டது.
„கடவுளே“, என அவள் வாய் முணுமுணுத்துக் கொண்டது.
குளியறைத் தாழ்;ப்பாளை தான் நன்றாகப் போட்டு இருக்கின்றேனா எனப்பார்த்துக் கொண்டாள்.
தலையில் கொட்டும் தண்ணீரும் கண்களில் கொட்டும் கண்ணீரும் அவளைக்கு ஒரு ஆறுதலைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
„என்ன குளிச்சுக் கொண்டு நிக்கிறீர். . .இப்ப பின்னேரம் 7 மணியாய் போச்சு.
போய் சாப்பிட்டுட்டு வரவேணும். அம்மாக்களுக்கும் பசியாய் இருக்கும்.“
ஓம் வாறன் எனச் சொல்லக் கூட தெம்பில்லாமல் அல்லது விருப்பமில்லாது தன்னை முற்று முழதாக மறைக்க கூடிய ஓர் பஞ்சாபியை அணிந்து கொண்டு வெளியில் வந்தாள்.
„நல்ல நித்திரை கொண்டிருக்கிறீர் போலை. . . கண் எல்லாம் சிவத்துக் கிடக்கு. . .
„
„ஓம்“எனப் பொய்யாகத் தலையாட்டினாள்.
„எல்லாம் பிடிச்சுதோ. . .“
இது என்ன அருவருப்பான கேள்வி.
இதுக்கு என்ன பதிலை நான் சொல்லுறது – மனம் தன்னைத் தானே கேட்டுக் கொண்டது.
“ஓம்”என்பது போல தலையாட்டினாள்.
“அது தானே பார்த்தனான். என்னைப் பிடிக்காமல் இருக்குமோ. . .”,அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தன் முகத்தை அவள் முகத்துக்கு கிட்டவாக கொண்டு போனான்.
“இனிமேல் இதெல்லாம் பகலிலை வேண்டாம். . .”,கண்ணை மூடிக்கொண்டு சொன்னாள்.
சுரேனின் கைப்பிடி நழுவியது.
குளிப்பதற்காக அவன் குளியலறைக்குள் போனான்.
கோமதி யன்னலைத் திறந்து வெளியே பார்த்தாள். . . .
சாடையாக இருட்டத் தொடங்கியிருந்தது.
வேலையாள் வீட்டுக்கு போவோரும், மரக்கறி வேண்டிக் கொண்டு போவோரும், காளி கோயில் வாசலில் நின்றும் – உள்ளே போய் கும்பிடுகிறவர்களும், அன்னியோன்னியமாய் கைகளைக் கோத்தபடி செல்லும் சீனத் தம்பதியர்களும், புருஷன் முன்னே செல்ல தாங்கள் பின்னே செல்லும் தமிழ் நாட்டு பெண்களுமாக அந்த மாலை அழகாய்த்தான் இருந்தது.
தன் வயதை ஒத்த ஓர் வடநாட்டுப் பெண்ணும், அவள் கணவனும் என்ன அன்னியோன்னியமாய் கதைத்துக் கொண்டு போகிறார்கள். . . அவர்களின் தாம்பத்தியமும் என்னுடையது போலவா இருக்கும்? . . . சுரேன் வந்தது தொடக்கம் ஏன் என்னுடன் எதுவும் அன்னியோன்னியமாய் கதைக்கவில்லை? . . . எயர்போட்டில் வந்து இறங்கியது தொடக்கம் இப்போவரை எல்லாம் நேர அட்டவணை போட்டுக் கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறமாதிரி இருந்தது.
சுரேன் குளித்து முடித்து வெளியில் வந்தாயிற்று.
“வாரும் அம்மாக்களை கூட்டிக் கொண்டு சாப்பிடப் போவம். . . “
*
நால்வரும் இறங்கி றோட்டோரமாய் நடக்கத் தொடங்கினார்கள்.
எப்பிடிப் பிள்ளை நல்லாய் நித்திரை கொண்டீரோ. . . கண்ணெல்லாம் சிவந்து போய்க் கிடக்கு.
தான் பெரிய அர்த்தம் பொதிய கேள்வி கேட்ட திருப்தியில் புன்முறுவலித்தார் சுரேனின் தாய்.
“ஓம்”, எனத் தலையாட்டினாள். மனது மட்டும் இல்லையென மறுதலித்தது.
“சுரேன் எங்கை போறாய். . . . இதுதானே கோமளா விலாஸ். .. .”
“உதிலை மரக்கறிச் சாப்பாட்டு மட்டும் தான் கிடைக்கும். . . வேறை எங்கையாலும் பார்ப்பும். . .”
“டே உனக்கு இண்டைக்கு தாலி கட்டின நாளடா. . . மச்சம் எல்லாம் சாப்பிடக்கூடாது”
“உந்த விசர் கதையளை விடுங்கோ. . . மத்தியானம் சாப்பிட்ட மரக்கறியே எனக்கு செமிக்கேல்லை. . .எனக்கு ஏதாவது நொன்-வெஜ்யும் ஒரு கூல் பியரும் அடிச்சால் தான் சாப்பிட்ட மாதிரி இருக்கும்”
சுரேனை ஓர் புழப்பூச்சியைப் பார்ப்பது போல கோமதி பார்த்தாள்.
“நீர் என்ன சொல்லுறீர்?”, கோமதியைப் பார்த்து சுரென் கேட்டான்.
“எனக்கு மாமியைப் போலை மரக்கறி தான்.”
“ஓகே. . . இரண்டும் உள்ள இடமாய் போவம். . . “, சுரேனின் தந்தை சமரசம் செய்தார்.
“நீ டென்மார்க்கு போய் நல்லாய் மாறிட்டாயடா. . . முந்தி உந்த கோயில் குளம் எண்டு ஒண்டும் விடமாட்டாய். . .”
“அது அங்கை. . . இப்ப டென்மார்க்கிலை அதுக்கேத்த மாதிரி. . . .”
“அப்ப வெள்ளிக்கிழமையிலை என்ன செய்யுறனி”
“வெள்ளிக்கிழமையிலை தான் களைப்பையே ஆத்துறது. . .வேலையாலை வந்து நல்லா குளிச்சு வெளிக்கிட்டு வெளியிலை போய் சாப்பிட்டுட்டு. . . சில வேளை பாருக்கு இல்லாட்டி டிஸ்கோக்கு போறது. . . “
கோமதிக்கு திக் என்றது.
“ஏதடா. . . டெனிஷ்காரரோடை ஆடுற இடமோ?”
“உங்களுக்கு தெரியுது. . . அங்கை எல்லா நாட்டு ஆக்களும் வருவினம். . .தனிய. .
.அல்லது. . .குடும்பமாக. . . . ஜஸ்ற் ஜாலி தான்”.
கோமதியை மட்டும் உதுகளுக்கு கொண்டு போகிடாதை. . .
“வை நொற். . . விரும்பினால் அவாவும் வரலாம். . .நோ புறப்ளம். . .”
“தம்பி. . . இவ்வளவு நாளும் நீ விளையாட்டாய் இருந்திருக்கலாம். இப்ப குடும்பகாரன். அந்த பொறுப்போடை இனிமேலும் நடக்க வேணும் கண்டியோ. . .”
கதைத்தபடியே மூலையில் இருந்த சைவ-அசைவ உணவகத்துக்கு வந்தார்கள்.
சுரேன் மட்டும் பெரிய பாதிக்கோழி வறுவலையும் பெரிய கிளாசில் பியரையும் அனுபவித்துச் சுவைத்துக் கொண்டிருக்க, கோமதியின் கைகள் தோசையை தன்பாட்டில் பிசைந்து கொண்டு இருந்தது.
“என்ன பிள்ளை யோசனை. . .வடிவாய் சாப்பிட வேணும்”
கோமதி தலையாட்டினாள்.
ஆனாலும் வாய் கையை மறுதலித்தது.
நேரம் போய்க்கொண்டு இருந்தது.
சுரெனின் சாப்பாட்டு தட்டு கோழி எலும்புகளால் நிறைந்திருந்தது.
முகத்தில் வடிந்த வியர்வையைத் துடைத்தபடி பியரையும் குடித்தபடி டென்மார்க் கதையளை சொல்லிக் கொண்டு இருந்தான்.
சுரேனின் பெற்றோர்கள் அவற்றை ரசித்து கேட்ட அளவுக்கு கோமதியால் அவன் கதைகளில் ஒட்ட முடியவில்லை.
அன்றைய பகல் ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் அவன் கதைகளில் அவளால் ஒட்டியிருக்க முடியுமோ என்னவோ?
*
சாப்பாடு முடிய நால்வரும் காலாற நடந்து விட்டு ஹோட்டலுக்கு வரும் பொழுது இரவு 10 மணியாகி ஆகிவிட்டது.
ஐயர் இண்டைக்கு முதலிரவுக்கு நல்லநாள் என்று சொன்னவர் என சுரெனின் தாயார் கோமதியின் காதில் மெதுவாக சொன்ன பொழுது கோமதிக்கு கண்களும் கலங்கி உடம்பும் நடுங்கியது.
“ஒண்டுக்கும் பயப்பிடாதையும். . . இது உலகத்திலை ஒண்டும் புதிதில்லை. . .”
இத்துடன் அவர்கள் சம்பாசணை முடிந்து அவரவரின் அறைக்குள் போனார்கள்.
அறைக்குள் போனதும் கோமதி எதிரே நிற்பதை எந்த விதத்திலும் பொருட்படுத்தாது தனது உடுப்புகளைக் கழற்றி எறிந்து விட்டு ஓர் மெல்லிய அரைக்காற்சட்டைக்குள் சுரேன் நுழைந்து கொண்டான்.
கோமதி எதையும் பார்க்காத மாதிரி கட்டில் கால்மாட்டில் அமர்ந்து கொண்டாள்.
சுரேன் தனது சூட்கேiசுNர் திறந்து அழகாக பாசல் செய்யப்பட்டிருந்த ஓர் பெட்டியை அவளிடம் நீட்டினான்.
என்ன இது என்றவாறு நிமிர்ந்து பார்த்தாள்.
“டென்மார்க்கில் இருந்து உமக்கு கொண்டு வந்தது”, என்றவாறு கொடுத்தான்.
“தாங்ஸ்”, என்றவாறு அதனை வேண்டி, அந்தபு; பாசலை சுற்றியிருந்து நைலோன் நூலை மெதுவாக கழற்றினாள். . . அடுத்து பாசலைச் சுற்றியிருந்த பேப்பரைக் கழற்றும் பொழுது டென்மார்க்கில் இருந்து ஏதாவது நைற் றெஸ்றாகத்தான் இருக்கும் என்ற ஐயப்பாட்டில் திறந்தவளவுக்கு அருவருப்புத்தான் காத்திருந்தது.
பெண்கள் போடும் உள்ளாடைகள் இரண்டு!
மேலும் அவற்றைக் கையில் எடுக்காது தூக்கி கட்டிலின் ஓர் மூலையில் போட்டாள்.
„ஏன் பிடிக்கேல்லையோ“, சுரேன் தான் கேட்டான்.
தலைகுனிந்தபடியே இல்லை எனத் தலை ஆட்டினாள்
„உமக்கு என்ன விலை எண்டு தெரியுமோ. . . உங்கடை இலங்கை காசுக்கு ஐயாயிரம் ரூபாய். . .“
உங்கடை இலங்கை காசுக்கு எனறது என்றது மனதை கொஞ்சம் நெருடியது.
„என்ரை வெடிங் பிறசண்டாய் வேண்டியந்தனான். . . அதை இண்டைக்கு நீர் போட்டுக்கொண்டு என்னோடை இருக்க வேணும் . . „, சுரேன் தொடர்ந்தான்.
கோமதிக்கு கை, கால்கள் எல்லாம் நடுங்கத் தொடங்கியது.
வேண்டாம். . பிளீஸ் . . வேண்டாம். . . பிளீஸ். . . .குரல் கெஞ்;சியது.
அவன் கட்டில் காலடியில் கிடந்த அந்த பெட்டையைத் துக்கிக் கொண்டு கிட்டவாக வந்தான்.
„எவ்வளவு ஆசையோடை வேண்டிக் கொண்டு வந்தனான் தெரியுமோ?“, அவனின் பிடிவாதத்துக்கு ஈடு கொடுக்க முடியாது தவித்தாள்.
அவனைக் கும்பிட்டுப் பார்த்தாள்.
முடியவில்லை.
ஒரு கணவனுக்கு நல்ல மனைவியாக இருப்பது என்றால் என்ன என்ற வியாக்கியானங்கள் ஒன்றுமே அவளுக்கு வியங்கவில்லை.
கடைசியில் தன்னைக் கொஞ்சம் இளக்கிகொண்டு. . ., „சரி போட்டுத் துலைக்கிறன்.
. .உந்த லைற்றை கொஞ்சம் நூருங்கோ“என்றாள்.
„லைற்றை நூத்தால் எப்பிடி நான் பார்க்கிறது?“
கோமதிக்கு அதன் பின் எதுவுமே நினைவில்லை. . . .
எல்லாம் அவன் நினைத்தபடி. . . அவன் வெறி தீரும்வரை. . . அந்த வெளிச்சுNர்தில் மீண்டும் மீண்டும் அவன் வெளிதீரும்வரை. . . ..
அந்தக் காட்டுப் பன்றி. . . அந்த மரவள்ளித் தோட்டங்கள். . . .சென்றிக்கு நின்ற கோமதி. . . தப்பி தப்பி வந்து. . . . டென்மார்க்காரன் ஒருவனிடம் என்னை காவு கொடுத்து விட்டேனே என்ற தோல்வியில் அவள் துடித்திருந்தாள்.
இப்போ அவனாக எழுந்து போய் லைற்றை அணைத்து விட்டு தூங்கப் போனான்.
அவனால் அணிவிக்கப்பட்டு அவனாலே துச்சாதனம் செய்யப்பட்ட அந்த இரண்டு உள்ளாடைகளும் கட்டில் காலடியில் விழுந்து கிடந்தது.
இதுக்காகத் தானாய் டென்மார்க்கில இருந்து என்னிடம் வந்தாய். . . .?
இதுக்காகத்தானா அப்பா, அம்மா எல்லோரையும் விட்டு என் வாழ்க்கையை உன்னிடம் ஒப்படைக்க வந்தேன்?
மீண்டும் பதில் தெரியாத கேள்விகள் கண்ணீரில் கரைந்து போய்க்கொண்டிருந்தது.
பங்கர் கிடங்கு வெட்டும் பொழுது தனது பங்கை முடிந்து விட்டு தனக்காக கை கொடுக்கும் அந்த செந்திலின் முகம் மெதுவாக அவள் முன் வந்து போனது. நீ எண்டால் இப்பிடியா செய்வாய் செந்தில். . . அவள் மனது முணுமுணுத்தது.
செந்தில்!
கோமதி இயக்கத்துக்கு வந்து சேர்ந்த பொழுதுதான் அவன் இந்தியாக்கு றெயினிங்கிற்குப் போய்விட்டுத் திரும்பியிருந்தான்.
சவரம் செய்யாத தாடி. . யாரையும் அலட்சியம் செய்யாத பார்வை . . .
இடுப்பில் தொங்கும் சின்ன ரிவோல்வர், ஒரு எறிகுண்டு. . ..
இந்தியாவில் தங்கியிருந்த பொழுது யாரோ ஒரு ஆட்டோக்காரன் இவனை மலையாளி என நினைத்து கதைக்க, இவனும் சுNர்தமான யாழ்ப்பாணத் தமிழில் கதைத்துக் கொண்டு போக, கடைசியாய் ஆட்டோக்காரன் கேட்டானாம்,
„மம்முட்டி உங்களுக்கு என்ன வேணும்“என்று. இவனும் தன் வாய்க்கு வந்தபடி
„என்ரை பெரியப்பா மகனாக்கும்“என்று சொல்ல ஆட்டோக்காரன் அன்று காசே வேண்டவில்லையாம். அதிலிருந்து செந்திலுக்கு முன்னால் மலையாள என்ற அடைமொழியும் சேர மல்லாகச் செந்தில் இயக்கப் பொடியன்களிடையே மலையாளச் செந்திலாகினான். அதற்கேற்ற மாதிரி ஒரு முறுக்கு மீசை வைக்கத் தொடங்கியிருந்தான்.
செந்தில் கோமதியை விட நாலு வயது மூத்தவன்.
கோமதி இருந்த பிரிவுக்கு செந்தில் தான் றெயினிங் பொறுப்பு மிகவும் கடுமையாக நடந்து கொள்வான். மீசையை முறுக்கி கொண்டு அவனை வருவதைக் கண்டால் அனைத்துப் பெண் பிள்ளைகளுக்கும் பயம்.
ஆனால் போமதி அவனைச் சீண்டியபடியே இருப்பாள்.
ஒரு நாள் கோமதி சக தோழிகளிடம், „மீசை முறுக்கினால் போலை வீரபாண்டிய கட்டப் பொம்பனோ“என்று பகிடியாக கதைத்தது செந்திலுக்கு கேட்டு விட்டது.
அன்று அவளுக்கு தண்டனை றெயினிங் முடிந்த பின்பு றெயினிங் திடலைச் சுற்றி நூறு தடவை ஓட வேண்டும் என்பது தான்.
ஓன்று. . .இரண்டு . . என்று வெயிலுக்குள் ஓடத் தொடங்கியவள் அறுபத்தைந்தாவது தடவை மைதானத்தை சுற்றி வந்த போது தள்ளாடித் தள்ளாடிப் போய் ஒரு கரையில் மயங்கி விழுந்து விட்டாள்.
செந்தில் பயந்து போய் விட்டான்.
மற்றுப் பெண் பிள்ளைகள் வந்து தூக்கிக் கொண்டு போக அவனும் அவர்கள் பாசறைக்குப் போய் அவளுக்கு நினைவு திரும்பும் வரையிலும் பக்கத்திலேNயு இருந்தான்.
கடற்பயணத்தின் தான் பாவித்து விட்டு மிகுதியாய் வைத்திருந்த குளுக்கோசை எடுத்து வந்து அவளின் வாயினுள் திணித்தான்.
கோமதிக்கு நினைவு கொஞ்சமாக நினைவு திரும்பியது.
செந்திலுக்கு உயிர் வந்தது போல இருந்தது.
ஒரு குறிப்பிட்ட தண்டனையை குறிப்பிட்ட நண்பர் நிறைவேற்றத் தவறும் பட்சுNர்தில் அவருக்கு வேண்டப்பட்டவர் அதற்கு உதவலாம் என்று ஒரு விதிவலக்கு இருந்தது. அதிகமாக பங்கர் வெட்டும் பொழுது இதனை பாவிப்பார்கள்.
கோமதிக்கு இன்னும் முப்பந்தைந்து சுற்றுகள் இருந்தது.
சூரியன் மேற்Nகு போய்க் கொண்டு இருந்தான்.
செந்தில் மைதானத்தை சுற்றி ஓடத்தொடங்கினான்.
கோமதி அவனை வைத்தகண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அன்று தான் அவளுக்குள் அவளின் பெண்மை துளிர்த்தது போன்றிருந்தது. ஆனால் செந்தில் எதையும் வெளிக்காட்டிக கொள்வதில்லை.
கட்டளைகள் . . . நிறைவேற்றுகள் . . .நாட்டிற்கான இலட்சியப் போராட்டம். . .
உளவுப் பிரிவு அவனில் சந்தேகப்படும் வரை –மற்ற இயக்க தோழர்களுடன் தொடர்புகள் என.
அடுத்தநாள் கோமதி றெயினிங்கிற்கு போகும் பொழுது செந்திலுக்குப் பதிலாக வேறு ஒருவன் நின்றிருந்தான்.
„செந்தில் எங்கே“
„அங்கே“எனக் காட்டினான்.
செந்தில் தூரத்தில் பங்கர் வெட்டிக் கொண்டு நின்றான்.
„ஏன்“
„போராட்டத்தில் எதுவும் நடக்கலாம்.. .எவனும் எப்பொழுதும் துரோகி ஆனலாம.; அதுபற்றி உனக்கு கணக்க தேவையில்லை“
கோமதியின் முகம் சிவந்தது.
இது எனக்குரிய இடம் இல்லை என அவளின் அடிமனம் சொல்லிக் கொண்டது.
பாடசாலைக்கு போக அடம் பிடிக்கும் பிள்ளையாகவே அடுத்த அடுத்த நாட்கள் அவள் றெயினிங்கிற்கு போனாள்.
தூரத்தில் செந்தில் பங்கர் வெட்டிக் கொண்டு நிற்கும் பொழுது அவளால் றெயினிங்கில் கவனம் செலுத்தவே முடியவில்லை.
விளைவு? தண்டனை –அடுத்த இர ண்டு கிழமைக்கும் செந்தில் பங்கர் வெட்டும் பகுதியில் அவளும் பங்கர் வெட்ட வேண்டும்.
மனம் விரும்பி ஏற்றது.
அந்த மீசைக்காரனின் புன்சிரிப்புக்கு கிட்டவாக அவள் அண்மித்த பொழுது மண் வெட்டி ஆழமாகவே நிலத்தினுள் பாய்ந்தது.
அடுத்த ஆறு நாட்களும் பொழுது போனதே தெரிவில்லை. அவளுக்கு களைப்பு ஏற்படும் போது செந்திலும் ஒரு கை கொடுப்பான். இது அவளுக்கு நன்கு பிடிந்திருந்தது.
„செந்தில் உன் வாயைத் திறந்து உன் உள்ளதுஇதுக்குள் இருப்பதை சொல்ல மாட்டாயா“மனம் இருந்து தவிக்கும்.
ஏழாம் நாள் செந்திலைக் காணவில்லை.
எல்லோரிடத்தும் கேட்டுப் பார்த்தாள். பதில் ஒன்று தான்.
போராட்டத்தில் எதுவும் நடக்கலாம்.
அவள் தன்னுள் உடைந்து போனாள்.
செந்திலின் நினைவுக் கீறல்களிலும், தாம்பத்தியத்திற்கு சுரேன் காட்டிய வரைவிலக்கணத்தின் வேதனையிலும் கோமதி நித்திரை இல்லாதது தவித்துக் கொண்டிருக்க. . . தன் மகனுக்கு நல்ல மனைவி கிடைத்து விட்டது என்ற திருப்தியில் சுரேனின் பெற்றாரும். . . , தங்கள் மகளை இலங்கை நரகத்தில் இருந்து டென்மார்க் என்ற சொர்க்கத்துக்கு அனுப்பி போட்டம் என்ற திருப்தியில் கோமதியினதும் பெற்றோர்கள் நிம்மதியாக தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.
*
சிங்கப்பூரில் இருந்த அடுத்த இரண்டு நாளும் கோமதிக்கு சுரேனினால் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை.
இயற்கை அவளுக்கு உதவியிருந்தது. இது சுரேனை எட்ட நிற்க வைத்தது.
எப்பவும் இப்படியே இருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும் என ஒருகணம் யோசித்தாலும் இது தான் இயற்கையா? இதுவும் சேர்ந்ததும் தான் எம் திருமணபந்தங்களா? இந்த வேதனைகளில் தான் நாம் பிள்ளைகளை பெற்றுக் கொள்கிறோமா? என மீண்டும் மீண்டும் விக்கிரமாதித்தன் போல் விடைதெரியாத கேள்விகளை மனம் அடுக்கி கொண்டு போனாலும். . . . மனத்தின் ஓர் மூலையில் தான் தான் ஓர் பிழையான இடத்தில் சிக்கிக்கொண்டு விட்டமோ என்ற ஓர் ஐயப்பாடும் அவளுள் எழாமல் இல்லை.
இதைத் தவிர வெறுத்துத் தள்ளும் அளவுக்கு அவன் எந்தளவு மோசமாகவும் நடக்கவில்லை. அவள் விரும்பினாலும் சரி, விரும்பா விட்டாலும் சரி மாப்பிள்ளை தோரணையுடன் அவளுக்கு விதம் விதமான உடுப்புகள் வேண்டிக் கொடுத்தான். டென்மார்க்கின் காலநிலை மாற்றங்கள். . . அதற்கேற்ப மாறும் உடைக் கலாச்சாரங்கள் பற்றியெல்லாம் கதைகதையாக கோமதிக்கும் தன் பெற்றோருக்கும் சொன்னான். அல்லது . . . சொல்லுவதில் பெருமைப்பட்டான்.
டென்மார்க்கின் குடும்ப உறவுகள். . . திருமணத்துக்கு முன் சேர்ந்து வாழ்வது . . .
பிடிக்காவிட்டால் வேறு துணையை நாடுவது. . . இது உன் பிள்ளை. . .இது என் பிள்ளை. . . இது எங்கள் பிள்ளை . . என்ற வாழ்க்கைத் தத்துவத்தை எல்லாம் தானும் ஆமோதிக்கும் போல் கதைத்துக் கொண்டு இருந்தான்.
சுரேனின்; பெற்றோருக்கு அவன் நன்கு மாறிவிட்டான் என்று தெரிந்தது.
இப்பொழுது தான் கோமதியின் மனதில் முதன் முறையாக ஓர் சின்னக் கீறல் விழுந்தது.
சுரேனுக்கும் டெனிஷ்காரர் போல் ஏதாவது பாகம் ஒன்று? . . . .
தன் கற்பனையைக்கு அவளால் நிஜ உருவம் கொடுத்துப் பார்க்கவே முடியவில்லை. ஆனாலும் மனதின் உறுத்தலை முற்றாவும் தூக்கி எறிய முடியவில்லை.
பகிடியாக கேட்போம் என நினைத்தாலும் அந்தக் கேள்வியால் தனக்கும் அவனுக்கும் பெரிய இடைவெளி வந்து விடும் என்ற நினைப்பில் எதுவுமே கேட்கவில்லை.
அறிவு சொல்வது. . . மனம் அதனைக் கேட்பது. . .அல்லது மறுதலிப்பது. . .
இதொன்றும் புதிதில்லையே. . . ஆனால் போராட்டத்தில் இது எல்லாம் இயற்கை என்ற தத்துவத்தில் வளர்ந்த அவளுக்கு இதை மட்டும் ஏனோ இயற்கை என எடுக்க முடியவில்லை.
எங்கேயோ. . .எதிலையோ.. . ஏதோ ஓர் தவறு நடந்திருக்கிறது என்ற ஐயப்பாடு அவளுள் வளர்ந்து கொண்டே போனது.
அது திருமணத்தக்கு மூன்றாம் நாள் சுரேனுடன் டென்மார்க் விமானத்தில் ஏறி இருக்கும் வரை அவளுடன் கைகோர்த்துக் கொண்டே வந்தது.
*
கோமதியைக் கூட்டி வந்து மனநோய் மனத்துவருக்கு முன்னால் இருத்தினார்கள்.
மருத்துவருக்கு பக்கத்தில் மொழிபெயர்ப்பாளரும் கோமதிக்கு பக்கத்தில் இரண்டு நேர்ஸ்மாரும் அமர்ந்திருந்தார்கள்.
கடந்த மூன்று நாட்களாக கட்டிலில் கட்டிப் போட்டிருந்ததால் இரண்டு மணிக்கட்டும் சிவந்து போய் இருந்தது.
அதனை நேர்ஸ்மார் ஆதரவாக தடவி விட்டுக் கொண்டு இருந்தார்கள்.
„உங்களுக்கு நாங்கள் என்ன செய்தால் நீங்கள் சந்தோஷப்படுவியள்?“
கோமதி சுற்றும் முற்றும் பார்த்தாள். . . .
அவளின் முகம் இருண்டு கொண்டு வந்தது. . . . .
„எனக்கு என்ரை இர ண்டு பிள்ளையளும் வேணும்“
மனோதத்துவ வைத்தியர் தலையைக் குனிந்தார்.
அது நடக்காது எண்டு உங்களுக்குத் தெரியும் . . .
„பேந்தேன் என்னைக் கூப்பிட்டு வைச்சுக் கதைக்கிறியள். . .. „
„உங்களுக்கு ஏதாவது வகையிலை உதவி செய்ய விரும்புறம். . .“
ஏளனமாச் சிரித்தாள்.
மருத்துவரின் கையில் இருந்த கொப்பியையும் பேனையையும் பிடுங்கி எடுத்தாள்.
„அப்பிடி நீங்கள் செய்யக்கூடாது“, மொழிபெயர்ப்பாளர் தன்னை மீறிச்சொன்ன பொழுது கோமதியின் கண்களில் ஓர் அனல் பாய்ந்தது.
மொழிபெயர்ப்பாளர் மௌனமானார்..
மருத்துவரிடம் இருந்து பறித்த கொப்பியில் மிக வேகமாக. . . மிக வேகமாக ஓர் துவக்கை வரைந்தாள்.
”இது எனக்கு வேணும். . .”
”ஏன்?”
”அவனைச் சுடவேணும். தேவையில்லாமல் கதைச்சால் இவளையும் சுடவேணும்”
மொழிபெயர்ப்பாளருக்கு உடம்பெல்லாம் நடுங்கியது.
கோமதி அத்துடன் அமைதியடையவில்லை. . .
”உங்களுக்கு டெனிஷ்பாஷை தெரிஞ்சால் நீங்கள் எல்லாம் கொம்போ? எனக்கு பாஷை தெரியாதபடியாலை தானே என்ரை இரண்டு பிள்ளையையும் பறிகொடுத்தனான். . . .இரண்டு பிள்ளையையும் பறிகொடுத்தனான். . . .”
இப்போது கோமதி பெரிதாக அழத்தொடங்கி விட்டாள்.
அவளை இரண்டு நேர்ஸ்மாரும் ஆதராவாகத் தாங்கினார்கள்.
மருத்துவர் இன்னோர் நாளைக்கு சம்பாஷணைத் தொடரலாம் என மொழிபெயர்ப்பாளரை அனுப்பிவிட்டு, நேர்ஸ்மாரிடம் அடுத்த முறைக்கு இன்னோர் மொழிபெயர்ப்பாளரை ஒழுங்கு செய்யச் சொல்லிவிட்டு எழுந்து போனார்.
”அம்மா அவைக்கு சசி எண்டும் சுசி எண்டும் பேர் வைக்கச் சொன்னவா. . . .
டென்மார்க்கு கலியாணம் கட்டி வாற தாருட்டையோ சசிக்கும் சுசிக்கும் சட்டை குடுத்து விடுறன் எண்டவா. . .”
நேர்ஸ்மார் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
ஆனால் கோமதி மகிழ்ச்சியாக ஏதோ கதைக்கிறாள் எனப் புரிந்தது.
ஆனால் ஒரு வினாடிதான். . . .அவளின் முகம் மாறி விகாரமடைந்தது. . . ., ”யாரையும் டென்மார்க்கிற்கு வரவேண்டாம் என்று சொல்லுங்கோ. . . .
வரவேண்டாம் என்று சொல்லுங்கோ. . . .”
இப்போவும் நேர்ஸமாருக்கும் ஏதும் விளங்காவிட்டாலும் டென்மார்க், டென்மார்க்
என்று அவள் திரும்ப திரும்ப சொல்வது புரிந்தது.
„வட் டு யூ மீன் பை டென்மார்க்?“
கோமதி யன்னலை நோக்கிப் போனாள்.
யன்னல் கம்பிகள் இரண்;டையும் அழுத்திப் பிடித்தபடி வெளியுலத்தை பார்த்தபடி, „டென்மார்க் பாட். . . டென்மார்க் பாட். . .“
மீண்டும் மீண்டும் அவள் குழறியது கிட்டத் தட்ட அனைத்து வாட்டுகளுக்கும் கேட்டிருக்க வேண்டும்.
பக்கத்து வாட்டில் நின்றிருந்த டாக்டர் ஓடி வந்து அடுத்தொரு கிழமைக்கும் கோமதியை கட்டியே வைத்திருக்கச் சொல்லிக் கொண்டு கொஞ்சம் அதிகமாகவே தூக்க மருந்தை ஊசிமூலம் ஏற்றினார்.
சிவந்திருந்த மாலைச்சூரியன் கடலுள் இறங்கிக் கொண்டு இருந்தான்.
*
டென்மார்க்!
இலங்கையை 180 பாகையால் திருப்பி விட்டது போன்றிருந்தது கோமதிக்கு!
அது காலநிலை என்றால் என்ன. . . கலாச்சாரம் என்றால் என்ன. . .
விமானத்தால் வந்திறங்கிய பொழுது சுரேனின் தமிழ், டெனிஷ் நண்பர்கள் என ஓர் பட்டாளமே கைகளில் பூக்கொத்துகளோடும், டென்மார்க் கொடிகளுடனும வரவேற்க காத்திருந்தார்கள்.
சுரேனை ஆண்-பெண் என்ற எந்த வித்தியாசமே இல்லாது அனைவரும் கட்டித் தழுவியும், கோமதிக்கு கை கொடுத்தும் தங்கள் வாழ்த்தை தெரிவித்துக் கொண்;டார்கள்.
“யூ ஆர் வெளி பியூட்டி புல்”, என ஓர் டெனிஷ்காரி பராட்டியது கோமதிக்கு மகிழ்ச்சியையும், நண்பன் கூட்டத்துக்குள் இருந்த ஒருவன் தங்களுக்குள், “சுப்பர் கட்டையடா”என கதைத்தது அருவருப்பையும் கொடுத்தது.
அனைவருமே அவர் அவர்கள் காரில் ஏறி டென்மர்க்கின் அகலத்தெருக்களில் மிதக்கத் தொடங்கினார்கள்.
டீசல் மணமும், மண்ணெண்ணெய் மணமும், ஹோர் சுNர்தங்களும் இல்லாத அமைதியான தெருக்களில் போவது ஓர் புதிய அனுபவமாகவே இருந்தது.
மேலாக எந்தத் தெருமுனையில் இருந்து எவன் மறிப்பான், எந்த றோட்டுக்கரையில் இருந்து எந்த வெடிதீரும் என்ற எந்தக் கவலையும் இல்லாது இப்படி காரில் மிதந்து போகும் நாள் என்று தான் வருமோ என அவள் மனம் எண்ணிக் கொண்டது.
”எப்பிடி இருக்கு கார்?”
சுரேனாகவே பேச்சுக் கொடுத்தான்.
”நல்லாய் இருக்கு. . .”
”எவ்வளவு காசு தெரியுமா?”
”தெரியாது. . . .”
”சும்மா சொல்லும் பார்ப்பம். . . .”
”தெரியாது. . . . .”
”பறவாயில்லை. . .சும்மா ஒரு கணக்குக்கு சொல்லும் பார்ப்பம். . . .”
”இலங்கை காசுக்கு ஒரு 5 லட்சம்?”
சுரேன் கடகட எனச் சிரித்தான்.
”50 லட்சம். . . . .அதாவது 250 ஆயிரம் குறோன்கள். . .”
கோமதிக்கு நம்பவே முடியவில்லை. . . தனக்கு நகைகள் செய்து கொடுக்க ஓர் 2 லட்சத்துக்கு தாயும் தகப்பனும் பட்ட பாட்டை எண்ணிப் பார்த்தாள். . .
„உங்களிட்டை இவ்வளவு காசு இருக்கா?“
“இல்லை”, என கை விரித்தான்.
“பிறகு எப்படி இது?”
“அதெல்லாம் பாங்கிலை இன்ஸ்ரோல்மென்ற்றிலை எடுக்கிறது தான். மாதம் மாதம் சம்பளக் காவிலை கட்டுறது தான். இப்பிடித்தான் இங்கை எல்லாம். . . .நான் இருக்கிற பிளட்ஸ்சும் அப்பிடித் தான். . . .”
“அப்ப வேலை இல்லாமல் போய் விட்டால். . .”
“எல்லாம் அம்;போ தான். . . வேலையில்லா காசு கிடைக்கும். . . அதுவும் கொஞ்ச நாளைக்குத்தான். . . . இல்லாட்டி பாங் எல்லாத்தையும் திருப்பி எடுத்துப் போடும். . .
அதாலைதான் இங்கை இரண்டு பேரும் சேர்ந்து வேலை செய்யவேணும். . .
உம்மையும் கெதியாய் ஏதாவது ஒரு இடத்திலை வேலைக்கு சேர்க்க வேணும். . . “
அத்திவாரம் இல்லாக் கட்டடத்துள் இந்த மன்னர்கள் அரசாட்சி நடத்:துகிறார்கள் என்று எங்கேயோ வாசித்த வரிகள் நினைவில் வந்து போனது.
கார் ஓடிக்கொண்டேயிருந்தது.
அடுத்த அரைமணி நேரத்தினுள் சுரேன் தான் வசிக்கும்; அடுக்குமாடிக் கட்டடத்தின் முன்பாக காரை நிறத்தினான். முன்னாலும் பின்னாலும் வந்த சுரேனின் நண்பர்களின் காரிலிருந்து அனைவரும் வந்திறங்கினார்கள்.
பின்பென்ன?. . . சுரேன் வீட்டு சின்ன வரவேற்பறையில் சோபாக்களிலும். . .இடம் இல்லாதவர்கள் நிலத்திலும் இருந்து சுரேன் டியூட்டி பிறி கடைகளில் வேண்டி வந்த சிவாஸ் ரீகலையும் பிறின்ஸ் சிகரட் பெட்டிகளையும் தாமகாவே திறக்கத் தொடங்கினார்கள்.
நேரம் செல்ல செல்ல ஆங்கிலம், தமிழ், டெனிஷ் அனைத்து மொழிகளில் ஆளுக்கால் அரசியலும். . . ஆங:;கிலத் தழிழ்பட விமர்சனங்களும். . . .நடாத்தத் தொடங்கினார்கள்.
58 கலவரம் தொடக்கம் அண்மையில் நடந்த கிளிநொச்சி தாக்குதல் வரையிலும் . . பராசக்கி தொடக்கம் பருத்திவீரன் வரையிலும் ஒன்றையுமே விட்டு வைக்கவில்லை. .
“டே பருத்திவீரனில் கடைசிலை அந்த குரூப் செக்ஸை இன்னும் வடிவாய் காட்டியிருக்கலாமடா. . .”
“டே . . . அது குரூப் செக்ஸ் இல்லையடா. . . குரூப் ரேப்படா. . .”
“நோ. . .நோ.. . . இது குரூப் ரேப் இல்லையடா. . . குரூப்பாய் வந்தவங்கள் தனித்தனியாய் செய்த ரேப்படா . . . .”
கோமதிக்கு முகம் சுருங்கியது.
“சொறி சிஸ்டர். . . .நாங்கள் ஒன்றும் தப்பாய் கதைக்கேல்லைத் தானே. . . .”
கோமதி இல்லை என்பது போல தலையாட்டி விட்டு அவ்விடத்தை விட்டகன்று சமையலறைக்கு போனாள்.
சுரேன் நண்பர்கள் கொண்டுவந்திருந்த உணவை அனைவருக்கும் பரிமாற ஆயத்தம் செய்து கொண்டு இருந்தான். அவனது கையும் சாடையாக தடுமாறிக் கொண்டிருந்தது.
“விடுங்கோ நான் போடுறன். . .”
“நீர் எனக்கும் வெறி எண்டு நினையாதையும். . .ஜஸ்ற். . . என்ஜோய் தான். . .”
கோமதியியே உணவை எல்லாத் தட்டுகளிலும் போட்டு அனைவருக்கும் பரிமாறினாள்.
ஒரு டெனிஸ் பெண:ணும் கோமதிக்கு வந்து உதவினாள்.
அந்த பெண்ணின் வாயிலிருந்த சிகரட் புகை கோமதிக்கு செருமலெடுக்க வைத்தது.
“சொறி.. . சொறி”, என தன் சிகரட்டை அணைத்துக் கொண்டு, “யூர் ஆர் குயூட”;
என கோமதிக்கு முத்தமிட்டாள். அவ்வாறே திரும்பி, “யூ ஆர் லக்கி”என சுரேனுக்கும் முத்தமிட்டாள்.
“தாங்ஸ்”–சுரேன் வழியுமாப் போல் இருந்தது.
குசினி மூலைக்குள் கிடந்த குப்பை பையுனுள் அவளைப் போட்டு வெளியில் தூக்கி எறிய வேண்டும் போல் கோமதிக்கு இருந்தது.
சாப்பிட்டு முடிய போத்தல்களும் முற்றாக காலியாக ஆளுக்கால் போவதற்காக எழுந்து கொண்டார்கள்.
“நாங்கள் பாருக்கு போறம். நீயும் வாறியா”, என சுரெனிடம் ஒருவன் கேட்டான்.
“டே. . . அவனுக்கு டென்மார்க்கில் இண்டைக்கு அவனுக்கு பெஸ்ற் நைற். டோன்ற் டிஸ்ரேப்”, என மற்றவன் அனைவரையும் இழுத்துக் கொண்டு போனான்.
பெஸ்ற் நைற் என்ற சொல்லு அவளின் வயிற்றைக் குமட்டியது – அங்கிருந்த சிகரட் புகையுடன் சேர்ந்து.
காலியாக அறையை சிகரட் புகை முட்ட வைத்துக் கொண்டிருந்தது.
கோமதிக்கு அந்தப் புகை செருமலெடுக்க வைத்தது.
எல்லோரும் போன பின்பு கோமதி வீட்டை ஒதுக்கத் தொடங்கினாள்.
சுரேன் சோபாவிலே தூங்கி விட்டான். அல்லது அவன் நண்பர்களுடன் சேர்ந்து குடித்த குடிவகைகள் அவனைத் தூங்க வைத்துக் கொண்டிருந்தது.
குடித்துப் போட்ட பியர் போத்தல்கள், பியர் ரின்கள், நிலத்தில் விழுந்து கிடந்த சிகரட் கடடுடைகள் அனைவற்றையும் அருவருப்புடன் எடுத்துக் கொண்டு போய் குப்பைத் தொட்டியில் போட்டாள்.
புகுந்த நாடும் சரி. . . புகுந்த வீடும் சரி இரண்டும் புதிது என்பதற்கிணங்க அங்கிருந்த உணவுவகைகளும் சரி. . .பாத்திரங்களும் சரி. . . புதிதாகவும வித்தியாசமாக தோன்றியது.
இப்பொழுதுதான் வீடு வீடாகியது.
ஒரு தரம் தலையில் குளித்தால் இரவுப் பயணக் களைப்பிலும், இவ்வளவு நேரமும் உடுப்பிலும் உடம்பிலும் படிந்த சிகரட் புகைகளிலும் இருந்து விடுதலை கிடைக்கும் போல் தோன்றவே குளியலறையுள் போய் தாள்ப்பாளை போட்டுக் கொண்டு சவரை நன்கு திறந்து விட்டாள்.
கண்ணை மூடிக்கொண்டு சவரில் இருந்தும் தலையிலிருந்தும் கொட்டும் தண்ணீர் முகம் வழியாக ஒடிக்கொண்டிருக்க இதமாய் இருந்தது. இந்த சுகத்தை சுவரில் சாய்ந்தபடி அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
சுமார் அரை மணித்தியாலக் குளிப்பிற்குப் பின்பு புது ஆடை ஒன்றை அணிந்து கொண்டு வெளியே வந்தாள்.
சுரேன் இப்பவும் தூங்கிக் கொண்டு இருந்தான்.
நேரம் மாலை ஐந்து மணியை எட்டிக் கொண்டு இருந்தது.
குளித்ததற்கு சூடாக ஓர் கோப்பி குடித்தால் நன்றாக இருக்கும் போல் இருக்க அதையும் ஊற்றிக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தாள்.
ரீ. வீயை போட்டுப் பார்த்தால் தனிமைக்குத் துணையாக இருக்கும் போல் இருந்தாலும் ரீ. வுpயில் எந்த சனல், எங்கு இருக்கு என்று தெரியாததாலும், ரீ. வுpச் சுNர்தம் சுரேனின் நித்திரையைக் குழப்பிப் போட்டாலும் என்ற தயக்கத்திலாலும் அந்த ரீ. வுp. திட்டத்தை கை விட்டாள்.
முhறாக ஏதாவது புத்தகங்கள் இருந்தால் வாசிக்கலாம் என்ற எண்ணத்தில்
சுரேனின் கொம்பியூட்டர் அமைந்திருந்த புத்தக அலுமாரியைப் பார்த்தாள். அனைத்தும் ஆங்கில அல்லது டெனிஷ் புத்தகங்கள் தான்.
ஆனால் நிலமட்டத்துடன் இருந்த கடைசித் தட்டில் ஓர் கடதாசிப் பெட்டியின் கீழ் சினிமாப் புத்தகங்களின் சைசில் பல சஞ்சிகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அதில் ஒன்றை உருவி எடுத்த பொழுது அவள் கண்களை அவளால் நம்ப முடியவில்லை. மேலாக வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது.
அத்தனையும் பெண்களும், ஆண்களும் நிர்வாணமாக. . . வண்ண வண்ணப் படங்களில். . .என்ன கேவலம் இது?. . . ஓர் பெண் பல ஆண்களுடனும். . .
ஓர் ஆண் பல பெண்களுடனும். . . .பெண்களும் பெணகளுமாக. . .
ஓர் புத்தகம் மட்டுமில்லை. . .கட்டுக்கட்டாக. . . .
கோமதிக்கு மனம் படபடத்தது.
திரும்பி சுரேனைப் பார்த்தாள். அவன் இப்பவும் தூங்கிக் கொண்டுதான் இருந்தான்.
இதுக்காகத் தானா என்னட்டை சிங்கப்பூருக்கு வந்தாய்?
இதுக்காகத் தானா என்னை இஞ்சை கொண்டு வந்து இருக்கிறாய்?
இதற்கு மேல் அவளால் எதுவும் யோசிக்க முடியவில்லை.
கையில் எடுத்த புத்தகத்தை மீண்டும் இருந்த இடத்தில் கொண்டு போய் வைத்து விட்டு அறைக்குள் போய் படுத்துக் கொண்டாள்.
ஆனாலும் கண்களை மூட முடியவில்லை.
இந்த ஓர் கிழமையில் சிங்கபூ+ர் வந்தது தொடக்கம் தான் அனுபவித்த வேதனைகளும் சுரேன் அனுபவித்த சந்தோஷங்களும் அந்தப் புத்தகங்களின் பக்கங்களும் அவள் கண் முன்னே மாறி மாறி வந்து போனது.
மூன்று வேளை கஞ்சிக்கு கஷ்பபட்ட ஓர் குடும்பத்தில் பிறந்திருந்த போதிலும் சரி. . இயக்கத்துக்கு போய் அங்கு ரெயினிங் அது இது என்றும் கடைசியில் பங்கர் கிடங்கு கிண்டியது போதும் சரி. . . .இயக்கத்தால் வந்த பிறது ஆமிக்காரன்களுக்கு பயந்து
ஒளித்து திரிந்த பொழுதும் சரி. . . இந்த ஓர் கிழமையுள் அவள் உடல் + மனம்; இவ்வளவு வேதனையைச் சந்தித்திருக்கவில்லை.
வெளிநாட்டுத் திருமணங்கள், ஏமாற்று வித்தைகள் இப்படி எத்தனையோ கதைகளைக் கேட்டிருந்தாலும் தனது அனுபங்கள் போல் யாரிடம் இருந்தும் கேள்விப் பட்டிருக்கவில்லை. அல்லது தாம்பத்தியம் என்பது நாலு சுவருக்குள் உள்பட்ட விடயம் என்பதால் அமுக்கி வாசிக்கப்பட்டு விட்டதோ என அவளுக்கு தோன்றியது. மேலாக இது சுரேனுக்கு மட்டும் பொழுந்துமா?. . . அன்றில் அனைத்து வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கும் பொதுமைப்படுத்தப்படுமா? கேள்விகளை மீண்டும் மனம் அடுக்கி கொண்டு போனது.
வெளியில் சுரேன் எழும்பிய அரவம் கேட்டது.
ஐயையோ என்றது மனம்.
அவன் குளியறைக்குள் போய் தாழ்ப்பாள் போட்டது கேட்டது.
”அப்பாடா”என்று மீண்டும் மனம் இளைப்பாறியது.
கொஞ்ச நேரத்தில் சுரேன் குளியலறையில் இருந்து வெளியே வந்து அவள் படுத்திருந்த அவர்களது படுக்கையறையை திறந்தான்.
கோமதி கண்களை இறுக்க மூடிக்கொண்டாள்.
புக்கத்தில் வந்திருந்து மெதுவாக அவளின் தலையை மெதுவாக வருடினான்.
கோமதி கண்ணைத் திறந்து பார்த்தாள்
”என்ன நீரும் நித்திரை கொண்டனீரோ”
”இல்லை”எனத் தலையாட்டினாள்.
”கோப்பி ஊற்றித் தரட்டுமா”, என்று எழுந்தவளை மெதுவாக அணைத்துக் கொண்டான்.
அந்த அணைப்பு அவளுக்குப் பிடித்திருந்தாலும் சற்று நேரத்துக்குப் முன் பார்த்த சஞ்சிகைகள் அவன் கைகளை விலத்த வைத்தது.
எழுந்து குசினிக்குப் போனான்.
சுரேனும் கோலில் இருந்து தான் சிங்கப்பூருக்கு போயிருந்த சமயம் வந்திருந்த கடிதங்களைப் பார்வையிடத் தொடங்கினான்.
கட்ட வேண்டிய பில்லுகளும் தொகைகளும் எண்ணி;க்கையில் நன்கு கூடியிருந்தது.
கோப்பியைச் சுரேனுக்கு கிட்டவாக வைத்து விட்டு இரவுக்கு என்ன சாப்பாடு செய்யுறது எனக் கேட்டாள் கோமதி.
”நோ…நோ…இண்டைக்கு நோ சமையல்… .நாங்கள் இரண்டு பேருமாய் போய் ஏதாவது ரெஸ்றோறண்டிலை சாப்பிட்டு ஏதாவது படமும் பார்த்திட்டு வருவம”;.
அது அவளுக்குப் பிடித்திரந்தது.
தமிழ்ப் படமா? வியப்புடன் கேட்டாள்.
”நோ. . .எப்பவாவது தான் தமிழ்ப் படம் வரும். மற்றும் படி இங்கிலிஸ் படம் தான். .
பாஷை விளங்காட்டியும் படம் பார்க்கலாம் தானே”என்றவாறு சுரேன் உடுப்பு மாற்றத் தொடங்கினான்.
*
டென்மார்க் இரவில் அழகாய்தான் இருந்தது.
அழகான லைற்றுகள். . . அமைதியான தெருக்கள்….ஆளை ஆள் அணைத்தபடி செல்லும் அன்னியோனியமான உறவுகளின் நெருக்கம – அது இருபதாய் இருந்தாலும் சரி. . . எண்பதாய் இருந்தாலும் சரி. . .
சுரேனும் கோமதியின் கையைப் பிடித்தபடி அந்த நடைபாதையில் போய்க் கொண்டிருந்தான். இது கோமதிக்கு பிடித்திருந்தாலும் மீண்டும் அந்த சஞ்சிகைப் படங்கள் வந்து அவன் கைகளை உதற Nவுண்டும் போல் இருந்தது.
இருவருமே ஓர் றெஸ்றோரண்ட்டுக்குள் நுழைந்து கொண்டார்கள்.
சிங்கப்பூரில் எல்லோருமாய் போய் சாப்பாட்டுக் கடைகளில் சாப்பிட்டதற்க்கு, மெல்லிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சுரேனுடன் எதிர் எதிராய் இருந்து சாப்பிடுவது ஒரு புதிய அனுபவமாய் இருந்தது.
வழமைபோல் சுரேன் ஒரு பியரை வரவழைத்து அதன் நுரையை அனுபவித்தபடியும் கோமதி கொக்கோ கோலாவை சுவைத்தபடியும் சுடச்சுடச் பரிமாறப்பட்டு அந்த பொரித்த டெனிஷ் கோழிகளை இரண்டு பேரும் உண்ணத் தொடங்கினார்கள்.
நேரம் போய்க் கொண்டிருந்தது.
சுரேன் அடுத்த அடுத்த நாள் எங்கு எங்கு போக வேண்டும, எப்படி பதிவுகள் செய்ய வேண்டும், எப்போ கோமதி டெனிஷ் பாஷை கற்க வேண்டும் என்று எல்லாம் சொல்லிக் கொண்டு இருக்க புது உலகத்தில தானும் எதிர்நீச்சலடிக்க தனக்குள்; தான் தயார் ஆகிக்கொண்டிருந்தாள்.
இருவரும் சாப்பிட்டு முடித்த பொழுது சுரேன் தனது மணிக்கூட்டைத் திருப்பி பார்த்தான்.
இப்ப ஏழரை மணி. எட்டு மணிக்கு படம் தொடங்கும். வாரும் என இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான்.
கோமதியும் பின்தொடர்ந்தாள்.
தியேட்டருள் ஆங்காங்கே ஆட்கள் தனியாவும் சோடியாகவும் இருந்தார்கள். இந்தியா, இலங்கை போல் அதிக கூட்டமில்லாமல் இருந்தது கோமதிக்கு பெரிய ஆச்சரியமாய் இருந்தது.
சிறிது நேரத்தில் விளம்பர சிலைட்டுகள் போடப்பட்டது.
தியேட்டரின் வெளிச்சம் படிப்படியாக குறைந்து வர படம் தொடங்கியது.
திரையில் காட்டப்பட்டிருந்த படத்தின் ஆரம்பக் காட்சி கோமதிக்கு தெளிவாக புரியவில்லை. ஏதோ ஒரு சம்பவத்தை மிக அருகாக படம் பிடித்திருத்திருந்தார்கள். . அடுத்த செக்கன்களில் கமரா பின்னால் போக கோமதியால் நம்பவே முடியவில்லை. ஓர் ஆணும் பெண்ணும் உடல் உறவு கொள்ளும் காட்சி. . .இருவர் நிர்வாணமாக. . .
சுதனின் வீட்டில் ஒரு புத்தகத்தில் படங்களாக பாhத்தது. . .இங்கு திரையில் நிஜமாக. . .ஆணும் பெண்ணும் முணகும் சத்;தங்களுடன் . . .
கடவுளே. . .கோமதி கண்களை மூடிக்கொண்டாள்.
சுரேனைத் திரும்பி பார்த்தாள். . .அவனின் கண்கள் சுவாரஷ்யமாக திரையில் பதிந்தபடி. . .
”எழும்புங்கோ போவம் . . .”
”சும்மா இரும். . .இதுகள் ஒண்டும் தப்பில்லை. . .இதுகளைப் பார்த்தால் தான் நீரும் நானும் சந்தோஷமாக இருக்கலாம். . .”, கோமதியை எழ விடாது சுரேன் அவளின்; கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.
கோமதிக்கு அருவருப்பு மீற கண்களை மூடிக்கொண்டாள். . .
என்ன கறும உலகத்துக்கு வந்து இருக்கிறன் என மனத்துக்குள் அழுதாள்.
இப்படி ஒரு படம் களவாக ஓடியதற்காக இயக்கம் நாலுபேரை மொட்டையடித்து முளு;ளியவளைச் சந்தியில்; லைற் போஸ்ற்றுடன் கட்டி வைத்து அடித்ததை அவள் அறிவாள். படம் பார்த்த அனைவரிடமும் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் அபாரதமும் கோட்டைக்கு கிட்ட மூன்றுநாள் பதுங்குகுழி வெட்டுமாறு பணிக்கப்பட்டதும் அவள் நன்கு அறிவாள்.
இப்போது சட்டம் அங்கீகரித்த ஒரு தியேட்டரின் நடுவில் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நன்நாளில் மங்கலநாண் பூட்டடிய ஒருவனின் பக்கத்தில் வலுக்கட்டாயமாக இருந்து. . . .தூ. . .
திரையில் இதெல்லாம் மனுஷ ஜென்மங்களா. . .
ஓர் ஆண் பல பெண்களுடனும். . .பல ஆண்கள் ஒரு பெண்ணுடனும். . .பெண்களும் பெண்களும். . .இந்த நாட்டின் கலாச்சாரங்களையா நான் அடுத்த ஒரு வருடங்களும் படிக்க வேண்டும் எண்டு சொன்னவை?
வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது.
சீட்டிலேயே வாந்தி எடுத்து விடுவாள் போலிருந்தது.
சுரேனின் கையை விடுவித்துக் கொண்டு எழுந்தாள்.
சுரேன் மிக இறுக்கமாகப் பிடிச்சுக் கொண்டு ”எங்கை போறீர்?”
”கையை விடுங்கோ. . சத்தி வருகுது. . ரொலிலெற்றுக்கு போயிட்டு வாறன். . .”
சுரேனின் கைப்பிடி தளர விரைவாக வெளியே வந்து ரொயிலெற்றுக்குள் நுழைந்து கொண்டாள்.
அங்கே வோசிங்பேசினுக்கு கிட்டவாக போகவே இவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த சத்தி அவளை முந்திக்கொண்டு வந்தது. அடிவயிற்றில் இருந்து நெஞ்சறைக்கூட்டைப் மேலே இழுத்துக்; கொண்டு தொண்டைக்குழியைப் பிய்த்துக் கொண்டு காலையில் இருந்து சாப்பிட்ட அனைத்தும் வெளியே வந்து கொட்டியது.
கட்டி கட்டியாக மஞ்சள் மஞ்சளாக மீண்டும் மீண்டும் அடிவயிற்றில் இருந்து. . . .
கடைசியாக தொண்டைக்குழி நோப்பட்டு கொஞ்சம் இரத்தமும் வந்தது.
முகம் முழக்க வியர்க்க வியர்க்க கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். நெற்றி முழக்க நன்கு வியர்த்துப் போய் இருந்தது. தண்ணீரை இரண்டு கைகளாலும் ஏந்தி முகத்தை நன்கு அலசினாள்.
என்னதான் அலவினாலும் தியேட்டருள் பார்த்த காட்சிகள் மீண்டும் மீண்டும் கண்கள் முன்னால். . .மீண்டும் வாந்தி வருமாய்ப் போல் இருந்தது. . .மனுசர்களை மிருகப் பிறப்பு என்று மற்றவர்கள் பேச அவள் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் இது. .
.மிருகங்கள் இப்படி. . . ஒரு மிருகத்துடன் மற்ற மிருகங்கள். . .
ரொயிலற் கதவு மெதுவாய் தட்டப்பட்டது.
“கோமதி. . .ஆர் யூ ஒல் றைற்?”
மீண்டும் அவளுக்குச் வாந்தி வந்தது.
சுரேனுக்கு கேட்க வேண்டுமென்றே மீண்டும் ஒரு தரம் பெலத்து ஓங்காளித்தாள்.
ரொலிலற்றுக்கு வெளியே நின்ற ஒரு டெனிஷ்காரி கோமதியின் வாந்தியின் சத்தம் கேட்ட பொழுது, “உன்னுடைய மனுசி கர்ப்பமா”என்று ஆங்கிலத்தில் சுரேனிடம் கேட்டது கோமதிக்கு கேட்டது.
“யெஸ் ஒவ் கோர்ஸ்”, என சுரேன் சொல்ல மீண்டும் கோமதிக்கு வயிற்றைப் பிரட்டியது.
இனியும் தியேட்டருக்குள் போக வேண்டும் என நிச்சயம் சுரேன் அடம்பிடிப்பான். . .
அதற்காகவேனும் இன்னும் சாந்தியெடுப்பது போலக் காட்ட வேணும் என நினைத்தபடி மீண்டும் மீண்டும் ஓங்காளித்தாள்.
அவளது யுத்தி கொஞ்சம் வேலை செய்துதான் இருக்க வேண்டும்.
“உமக்கு இன்னுமும் வாந்தி வருமெண்டால் வாரும் வீட்டை போவம்”
பலித்து விட்டது.
நன்கு களைத்தவளாக கோமதி வெளியே வந்தாள்.
சுரேன் ஒரு டக்ஸியை அழைத்து அதில் கோமதியுடன் ஏறினான்.
கோமதி பின் சீற்றில் நன்கு தலையைச் சாய்த்தவாறு கண்களை மூடிக்கொண்டு இருந்தாள். . . கன்னங்கள் வழியே கண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.
மீண்டும். . . மீண்டும.; . . ஏன்?. . . ஏன்??. . . ஏன் இது நடந்தது?. . .ஏன் இது எனக்கு நடந்தது என்று தன்னிடமே தான் கேட்டுக் கேட்டு தன்னிடமே தான் தோற்றுக் கொண்டிருந்தாள்.
அம்மம்மா அம்மாக்கு அடிக்கடி சொல்லுவாவாம். . .அப்பாவை பசியிருக்கு வைச்சிடாதை. பக்குவமாய் கவனி எண்டு. . . ஆனால் இஞ்சை என்னைச் சிதைத்து சிதைத்து எந்தப் பசியை இவன் தீர்த்துக் கொள்ளப் போகின்றான். எதுக்காக?. .
.எதுக்காக??. . .
வீட்டை வந்த பொழுது இரவு ஒன்பது மணியாகி விட்டது.
சாந்தி எடுத்த களையில் கோமதி அப்படியே சோபாவில் படுத்தாள்.
சுரேன் தானே கோப்பி ஊற்றி எடுத்து வந்து குடுத்தான்.
இதைக் குடியும். . .எல்லாம் சரியாகும். . .பயணக்களை அது தான். . . .
கோமதி எதுவும் சொல்லவில்லை. நிமிர்ந்து ஒரு தரம் பார்த்துவிட்டு கோப்பியைக் குடித்தாள்.
கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.
இப்பிடிNயு தலையை மடியிலை வைச்சுக் கொள்ளும் என அவள் தலையை தன் மடியில் வைத்து தடவி விட்டுக் கொண்டு ரீ. வி. யில் ஏதோ சனல்களை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
இந்த மடித்தூக்கமும் அவன் அரவணைப்பும் அவளுக்கு பிடித்துக் கொண்டாலும் தியேட்டர் நினைவுகள் அவளை அவனை விட்டுத் துரத்திக் கொண்டு இருந்தது.
கண்கள் அயரத் தொடங்கியது.
சுரேன் ஹோலில் இருந்த லைற்றுகளை அணைப்பதை அவளால் உணரக் கூடியதாய் இருந்தது.
மீண்டும் அவன் அவளருகே. . .அவளை மெதுவாய் அணைத்தபடி. . .அவளது ஆடைகளை மெதுவாக அகற்றியபடி. . .கோமதி கண்களை முழிக்காது சடமாகவே இருந்தாள். . .
இப்போது கேட்ட ஒலி அவளைத் திகைக்க வைத்தது.
தியேட்டரில் கேட்ட அதே ஒலி. . திடுக்கிட்டு கண்களை விழித்துப் பார்த்தாள். . தியேட்டரில் ஓடிய காட்சி போல ரீ.வி.யில். . .
எழுந்து உள்ளே ஒடப்போன கோமதியை சுரேன் வலுக்கட்டாயமாய் பிடித்திழுத்தான்.
”ஐயோ விடுங்கோ. . .எனக்கு உதெல்லாம் வேண்டாம். . .நான் அறைக்குள்ளை போறன். . . ”
”இல்லை எனக்கிது வேணும். . .அதைப்பார்த்துக் கொண்டு நானும் நீரும் அது போலை. . . ”
”கடவுளே என்னால் ஏலாது.. . ”
”எனக்கு வேணும். ”.சுரேனின் குரல் இறுகியது. . .
”அப்பிடியெண்டால் நீங்கள் ஒரு டெனிஷ்காரியைத் தான் கட்டியிருக்க வேணும். . ”
”ஏன் நீங்கள் எல்லாம் பெரிய பத்தினியளோ. . ”
”சுரேன் பிளீஸ். . .பெரிய கதையள் கதைகதைக்காதையுங்கோ. . .என்னாலை ஏலாது.
. ”
”அதுக்காக நான் உம்மை வீட்டை வைச்சுக் கொண்டு ஒரு டெனிஷ்காரியை காசு குடுத்துப் பிடிச்சுக் கொண்டு திரியேலாது. . .”
சோபாவில் இருந்து எழும்ப முயற்சித்த கோமதி முற்றிலும் சுரேனின் பிடியுள் இறுகினாள்.
பின்பென்ன முன்னே ரீ. வி.யில் ஒர் பெண்ணின் முனகலுடன் அரங்கேறிக் கொண்டிருந்தவை இங்கே கோமதியின் விசும்பலில் அரங்கேறிக் கொண்டிருந்தது –சுரேனின் வெறி தீரும் வரை. . . கோமதிக்கு மீண்டும் வயிற்றுப் பிரட்டல் எடுக்கும் வரை.
சுரேன் எழுந்து போய்விட்டான். படமும் முடிந்திருந்தது. கோமதியின் கண்களில் வழிந்திருந்த கண்ணீர் காண்ந்திருந்தது. சோபாவில் இருந்து எழுந்து அறைக்குள் போய் படுக்க மனமில்லாமலோ. . .அனறித் தென்பில்லாமலோ சோபாவிலேயே படுத்திருந்தாள். . .ஆடைகள் அங்கும் இங்குமாக அரைகுறையாக அந்த இருட்டினுள் படுத்திருந்தாள்.
இருட்டு அவளுக்கு ஒன்றும் புதிதில்லை. . .எத்தனை சென்றிகள் இரவில். . .
எத்தனை இரகசிய சமிக்கைகள். . . சங்கோத வார்த்தைகள். . .காட்டுப் பாம்புகள் பக்கத்தே சரசரவென்று ஊர்ந்து போகும். . . யானைகள் தண்ணி குடிக்கு கூட்டம் கூட்டமாக வந்து போகும். . .எந்தப் பயமும் இல்லாமல் நிலத்தில் கண்ணிவெடிகளைத் தாட்டுக் கொண்டு போயிருப்பாள்.
அன்று பாம்;பு ஊர்ந்த தேகமாய். . .கலைந்து போன தேன் கூட்டுக் குழவிகள் கொட்டிவிட்ட தேகமாய். . .காட்டுப் பன்றிகள் குதறிப்போட்ட தேகமாய். . .
நான் இயக்கத்தில் இருந்து வந்திருக்க கூடாது. . .வந்திருந்தாலும் இப்பிடி ஒரு திருமண பந்தத்துள் போயிருக்க கூடாது . . .அப்பிடிப் போயிருந்தாலும் இப்பிடி ஒரு வாழ்க்கை அமைந்திருக்க கூடாது. . .
அடர்காட்டுக்குள் அகப்பட்டவன் வெளியேற வழியில்லாமல் தவிப்பது போல அவளுக்கும் அடுத்த வழி என்ன என்று தெரியாமலே அயர்ந்து விட்டாள். . .பாவம் மூளை கூட எத்தனை நாழிகைகள் தொடந்து சிந்திக்கும். . .அதுவும் களைக்க அவளும் களைத்திருக்க வேண்டும் போலும்.
*
”கோமதிக்கு இப்ப எப்பிடி இருக்கு?”–டாக்டர் நேர்ஸிடம் கேட்டார்.
”முன்பிருந்த ஆத்திரம். . .ஆவேசம் எல்லாம் குறைஞ்சிருக்கு. . .பதிலாக அடிக்கடி அழத்தொடங்கிறா. . .அதுவும் சத்தமில்லாமல். . .”
”சாப்பாடு எப்பிடி?”
”அளவுக்கு அதிகமாக சாப்பிடுறா. . .எங்களுக்குத் தெரியாமல் சாப்பாடுகளை கொண்டு போய் அலுமாரிக்குள்ளை ஒழிச்சு வைக்கிறா. . .அது பழுதாய் மணக்கத் தொடங்கத்தான் எங்களுக்கே தெரியுது. . .ஏன் எனக்கேட்டால் சசிக்கும், சுகிக்கும் எண்டு சொல்லுறா. . . ”
”புருஷன் வந்து பார்க்கிறவரோ . . ”
”இல்லை. . .கடைசியாக தன்ரை டெனிஷ்கார நண்பர்களுடன் வந்த பொழுது, கோமதி பாண் வெட்டுற கத்தியை எடுத்துக் கொண்டு விரட்டி ஆஸ்பத்திரியே அல்லோலகல்லோலப்பட்டுது உங்களுக்கும் தெரியும் தானே. . .அதுக்குப் பிறகு அவன் வருவதில்லை. . . ”
”ஓ. கே. இப்ப கொடுக்கிற மருந்தை தொடந்து கொடுங்கோ. . .உடம்பு தான் அளவுக்கு அதிகமாய் பருக்கும். . .ஆனால் மனம் அமைதிப்படும். . .”
அவர்கள் கதைத்துக் கொண்டு இருக்கும் பொழுது கோமதி ஒரு கொப்பியுடன் வந்தாள்.
„ஹாய் கோமதி. . . ஹவ் ஆர் யூ?”டாக்கர் கேட்டர்.
”பைன். . . ”, என தயங்கியபடியே சொன்னபடியே, அதே தயக்கத்துடன் பெயின்ற் வேணும் என நேர்ஸிடம் சொன்னாள்.
நேர்ஸ் கோமதியின் கொப்பியை வேண்டிப் பார்த்தாள். . .
கொஞ்சம் அதிர்ந்து போனாள். . .கோமதியின் கொப்பியில் பென்சிலினால் கோட்டுச் சித்திரம் வரையப்பட்டு இருந்தது.
ஒரு பசுவுடன் நாலு சிங்கங்கள் பலாத்கார உடல் உறவு கொள்வது போல. .
.பசுவின் கண்களில் மிரட்சியும். . .சிங்கங்களின் கண்களில் வெறியையும் நன்கு வெளிக்காட்டியிருந்தாள்.
கொப்பியை நேர்ஸ் டாக்கருக்கும் காட்டி விட்டு அந்த கோட்டுச் சித்திரங்களுக்கு வர்ணம் தீட்ட அவள் கேட்ட பெயின்ற் பெட்டியை கோமதிக்கு கொடுத்து விட்டாள்.
டாக்டர் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தார்.
“அவளை புருஷன் மிஸ் யூஸ் பண்ணியிருப்பன் எண்டு நினைக்கிறீங்களா? “நேர்ஸ் கேட்டாள்.
”நிச்சயமாக . .ஆனால் அவன் தனியே செய்தானா. . .இல்லை இன்னும் நாலைந்து பேருடன் சேர்ந்து செய்தானா. . .அது தான் புரியவில்லை. . .எனிவே. . கோமதியை நல்லாய் ஒப்சேர்வ் பண்ணுங்கோ. . .”கூறிவிட்டு டாக்டர் போய் விட்டார்.
*
யாருக்கும் காத்திரா நிமிடக் கம்பிகள் சுற்றி வந்து காலை ஏழு மணியில் நின்று அலாரத்தை அடிக்க வைத்தது.
கோமதி திடுக்கிட்டு எழுந்தாள்.
கலைந்து போயிருந்த உடுப்புகளைச் சரி செய்து கொண்டு நேரே குளியலறைக்குள் போனாள்.
ஷவரில் தண்ணியை நன்கு திறந்து விட்டு கீழே உட்கார்ந்து கொண்டாள்.
கண்ணை மூடிக் கொண்டு ஒரு தியானத்தில இருப்பது போல மனதை ஒரு முனைப்படுத்த முயன்றாள். . .முடியவில்லை. . .பல முறை முயன்றாள். .
.தோல்விதான் எஞ்சியது. . . தலையில் வந்து விழும் தண்ணீர் கன்னங்கள் வழியே ஓடும் கண்ணீரையும் சேர்த்துக் கழுவிக் கொண்டு இருந்தது. ஆனால் மனம் மட்டும் ஒன்றை மட்டும் வேண்டியது. . .
விடுதலை!
சுரேனிடம் இருந்து விடுதலை!!
இந்த ஐரோப்பிய அரியண்டங்களில் இருந்து விடுதலை!!!
தோய்ந்து விட்டு வெளியே வந்த பொழுது சுரேன் ஹோலில் இருந்து காலைத் தினசரியை புரட்டிக் கொண்டு இருந்தான். . .
”பேக்கரியிலை போய் பிரட் வாங்கியரட்டா. . .முதன்நாள் எதுவுமே நடக்காதது போலவும். . அனைத்தும் சர்வசாதாரணம் போலவும”; கேட்டான்.
”ஓம்”எனத் தலையாட்டி விட்டு அறைக்குள் போய் தாழ்ப்பாளைப் போட்டாள்.
சுரேன் வெளிக்கதவைச் சாத்திவிட்டுப் போகும் சுNர்தம் கேட்டது.
கோமதிக்கு அப்பாடா என இருந்தது. . .
தனியே இருக்க வேண்டும் போல் இருந்தது. . . சுரேன் இல்லாது தனியே இருக்க வேண்டும் போல் இருந்தது. . . தனித்து எப்படி இந்த உலகத்துக்கு வந்தமோ. .
.இல்லைத் தனித்து எப்படி இந்த உலகத்தில் இருந்து போக இருக்கின்றோமோ. . .
அப்படித் தனியே. . .அந்த தனிமையை மனம் நாடியது.
ஹோலில் டெலிபோன் மணி அடிப்பது கேட்டது.
மறுமுனையில் கோமதியின் தாய் – வன்னியில் இருந்து.
”ஏன் பிள்ளை டெலிபோன் எடுக்கேல்லை. . .நேற்று உங்கை போய்ச் சேர்ந்திருப்பியள் அல்லோ. . .”
கோமதி அழத்தொடங்கிளாள். . .
“என்ன பிள்ளை. . என்ன நடந்தது. . .”
கோமதி தொடர்ந்தும் அழுதாள். . .
“நல்ல பிள்ளையல்லோ. . அழமால் சொல்லு. . .”
“எனக்கு எதுவும் பிடிக்கேல்லை. . .நான் உங்கை வரப்போறன். . .”
“சின்னப்பிள்ளை மாதிரி கதைக்காதை. . .ஊர் நிலவரங்கள் தெரியும் தானே. . ஏனடி. . மாப்பிள்ளை குடி கிடி ஏதும். . .”
“இல்லையம்மா. . .”
“ஏதும் நீ வாய்காட்டி அடிச்சுக்கிடிச்சு”
“இல்லையம்மா. . .”
“அப்ப நீ என்னத்தை சொல்லுறாய். . .”
“அவர் சரியில்லையம்மா. . .”
“பிள்ளை. . .கலியாணம் கட்டின புதிசிலை எல்லாம் அப்பிடித்தான். . .போக போக எல்லாம் சரி வரும். . .”
“உங்களுக்கு ஒண்டும் தெரியாது. . .பாருங்கோ ஒரு நாளைக்கு உங்கை வந்து நேரிலை நிற்பன். . . இல்லாட்டி இஞ்சை தற்கொலை தான் செய்வன்.. . .”
“ஐயோ பிள்ளை அப்பிடி அம்மாவோடை கதைக்காதை. . .நீ அழ அழ எனக்கு உடம்பெல்லாம் நடுங்குது.”
“யார் டெலிபோனிலை”சுரேன் கேட்டபடியே கதவைத் திறந்து கொண்டு பாணுடன் உள்ளே வந்தான்.
கோமதி கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
“அது அம்மா”
“மாமியோ. . . இஞ்சை தாரும். . .”
“ஹலோ மாமியோ. . எப்பிடிச் சுகமாய் இருக்கிறிங்களோ”
“இல்லை நீங்கள் நேற்று டெலிபோன் எடுக்கேல்லை. . .அது தான் எடுத்தனான் தம்பி”
“கோமதி எப்பிடி இருக்கிறா தம்பி”–தாய் மனது கேட்டது
“அவா பைன். . .நேற்று ஒரே பிரண்ட்ஸ். . பேந்து ராத்திரி படத்துக்கு போட்டு வந்தனாங்கள். . .இண்டைக்கு சன் டே. . .இனி நாளைக்கு இவாவை பள்ளிக்கூடம் சேர்க்கிற வேலையள் பார்க்க வேணும். . நீங்கள் ஒண்டுக்கும் பயப்பிட வேண்டாம். .
. இந்தாங்கோ டெலிபோனை கோமதியிட்டை குடுக்கிறன்.”
கோமதி ரிசீவரை வாங்க சுரேன் பாண் பாக்கை குசினிப்பக்கமாய் எடுத்துச் சென்றான்.
“என்னடி கதைக்கிறாய் . . தம்பி அந்த மாதிரிக் கதைக்கிறார். . .”
“சரி. . சரி. . வையுங்கோ. . வீண் காசு. . .”
டெலிபோனை வைத்து விட்டு கோமதி ஒரு வினாடி மௌனமாக நின்றாள்.
“என்ன தாய்ப் பாசமும் தாய் நாட்டுப் பாசமுமோ. . .”சிரித்தபடியே சுரேன் கேட்டான்.
கோமதி பதில் சொல்லவில்லை.
“இந்தாரும் பாண்”என தானே பட்டரும் ஜாமும் பூசி கோமதிக்கு கொடுத்தான்.
அது கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. . . அம்மா சொன்னது போல போக போக எல்லாம் சரி வரும் என்பது. . . உடலுறவு என்னும் விடயத்தை தவிர மற்றும்படி சுரேன் காட்டும் அக்கறைகள் பரிவுகள் அவளுக்குப் பிடித்து தான் இருந்தது.
ஆனால் ஆணிவேரில் புற்று இருக்கும் போது கிளைகளில் எத்தனை பூக்கள் இருந்தென்ன. . .எதுவும் கண்ணுக்கு அழகாய் தெரியலாம். . .ஹோட்டல்களின் சமையற்கட்டை எட்டிப் பார்க்காத வரை. . .
“பார்த்தீரே சொல்ல மறந்திட்டன். . . எங்கள் இரண்டு பேரையும் பீற்றர் ஆட்கள் இரவுச் சாப்பாட்டுக்கு வரச் சொன்னவை. . .”
“யார் பீற்றர். . .”
“நேற்று குசினிக்கை நின்று உமக்கு கெல்ப் பண்ணின லேடியும் அவளின்ரை புருஷனும் தான். . .பீற்றர் சிறிலங்காதான்.. .”
“யார் அந்த சிகரட் குடிச்சுக் கொண்டு நின்ட லேடியோ. . .”
“ஓம். . .”
“நான் வரேல்லை. . .பிளீஸ் . . .”
“சிகரட் குடிச்சால் என்ன தப்பு. . .எங்கடை ஆச்சிமார் சுருட்டுக் குடிக்கிலேல்லையோ.“.
“அதுக்கில்லை. . .எனக்கு என்னவோ அவளைப் பிடிக்கேல்லை. . .”
“சும்மா ஆட்களைப் பார்த்து எடை போடாதையும். . .அவளைக் கட்டித் தான் பீற்றர் நல்லாய் இருக்கிறான். . . தவிரவும் நான் கார் வேண்ட கறன்டி சைன் பண்ணினதும் அந்த லேடி தான் தெரியுமா? மொத்தத்திலை இஞ்சை இருக்கிற தமிழ் ஆட்களுக்கு எவ்வளவோ உதவி. . .”
அரை மனத்துடன் கோமதி ஒத்துக் கொண்டாள்.
மத்தியான சாப்பாட்டுக்கு பின்பு சோபாவில் இருந்து ரீ. வி. யில் ஒரு தழிழ் படத்தைப் பார்த்தபடியே கோமதி கண்ணயர்ந்து விட்டாள். . .படம் ஓடிக்கொண்டிருக்கும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. . . சிறிது நேரத்தில் சுரேன் ஒரு தலையணியைக் கொண்டு வந்து அவள் மடியில் போட்டு விட்டு அதன் மேல் தலையை வைத்துப் படுத்துக் கொண்டான். . .இந்த சின்ன சின்ன சுகங்கள் கோமதி எதிர்பார்க்கும் ஒன்று தான். . .ஆனால் அடுத்த செக்கன் என்ன செய்வானே?. . .என்ன நடக்குமோ? என கற்பனை பண்ண முடியாது, தன்னை ஒரு பெண் பிறப்பாக எண்ணிப் பார்க்காமல் நடாத்தும் குரூரவேதனைகளை அவளால் எள்ளளவும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
கோமதி தான் நித்திரை போல நன்கு கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
கூட்டுக்குள உள்ள கிளிதானே எங்கே பறந்து விடப்போகின்றது என்னமோ என்னவோ கோமதிக்கு அன்றைய பின்;னேரம் எந்த அசௌகரியமும் கொடுக்கவில்லலை.
பின்பென்ன. . .
ஞாயிறு போய் திங்கள் வந்தது.
சுரேனின் லீவு முடிந்து வேலைக்கு போகத் தொடங்கினான்.
கோமதிம் டெனிஷ்மொழிக்கல்வி வகுப்புக்கு போகத் தொடங்கினாள்.
வேலை. . .களை. . .பள்ளிக்கூடம் . . .வீட்டு வேலைகள். . .சாமான்கள் வேண்டுதல்.
. .சமைத்தல். . .கடிதங்கள். . .ரசீதுகள்;. . .என வாரத்தின் ஐந்து நாட்களும் விரைவாக ஒடத்தொடங்கியது.
ரசீதுகள்; தான் ஐரோப்பியத் தமிழருக்கு எப்பொழுதும் பெரிய தலையிடியாய் இருப்பது.
“இன்று சுகத்தை அனுபவி. . .நாளை அதற்கான தொகையைச் செலுத்து”, அல்லது
“தவணை முறையில் செலுத்து”என்ற கருத்து வருகின்ற மாதிரி விளம்பரங்கள் வீதியெங்கும் இருக்கும். . .ஓடும் பஸ், றெயினில் தொங்கிக் கொண்டு இருக்கும். .
.சம்மர் காலம் ஆயில் வானத்தில் பறக்கும் பெரிய பலூன்களில் இருக்கும். . .
அஃதில்லாது விட்டால் தபால் பெட்டியுள் விளம்பரக் கடிதங்களாக வந்து குவியும்.
இந்த இலவச சுகத்தை அனுபவித்து விட்டு ரசீதுகள் வரும் பொழுது கட்ட முடியாமல் தவிப்பதும். . .கட்ட வேண்டிய நேரத்திற்கு கட்டாவிட்டால் அதற்கு தண்ட
பணம் கட்ட வேண்டு வருவதும். . .அதையும் கட்டாவிட்டால் “எட்டாம் நம்பர்”பட்டம் குத்துவது என்று அந்தக் காலத்தில் சொல்லுவது போல இங்குள்ள அப்புக்காத்துகளிடம் இருந்து மிரட்டல் கடிதம் வருவதும். . . பாவங்கள் தமிழர்கள். . ஏன் டெனிஷ்காரரும் தான்.
சுரேனும் கல்குலேட்டரும் கையுமாக ரசீதுகளுடன் போராடுவதும் பின் சிலருடன் டெனிஷ் nமிழியில் தன் நண்பர்களுடன் கதைப்பதும் பொக்கற்றில் இருந்து தனது கிறடிக்காட்டை அதிலிருந்த நம்பர்களை வாசிப்பதும். . . கோமதிக்கு அவன் யாரிடமோ கடன்பட்டுக் கொண்டிருக்கிறான் என்பது மட்டும் புரியும்.
ஆனால் கோமதி தானாகவே எதுவும் கேட்கமாட்டாள். ஒருநாள் தானாகவே சொன்னான் “கெதியாய் நீர் டெனிஷ்பாஷை படிச்சு முடிச்சு நீரும் ஒரு வேலைக்குப் போனால்தான் இந்த பில்லுகள் எல்லாம் பிரச்சனையில்லாமல் கட்டலாம்”என.
அவளும் சம்மதம் எனத் தலையாட்டினாள்.
மற்றும்படி தாம்பத்தியம் என்பது கொடுப்பதும் எடுப்பதும் என்ற நிலை இங்கு இல்லாமல் எடுப்பது என்ற அளவில் போய்க் கொண்டிருந்தது.
ஆனால் கோமதி இப்பொழுதெல்லாம் அழுவதில்லை. இதுவும் தன் வாழ்வின் ஒரு பகுதி என்று நினைத்து அதற்கு அவள் தன்னை இசைவாக்கிக் கொண்டாள் – தான்
எதிர்பார்த்த வாழ்வு ‘இது’இல்லை என்ற உள்காயத்துடன்.
இரவு விடிந்தால் பகல். . .பகல் வந்தால் ஓட்டம். . .வாழ்விற்கான ஓட்டம். . .அதில் தன்னை நன்கு இணைத்துக் கொண்டு ஓட வெளிக்கிட்ட பொழுது தான் அந்த மாதம் தனக்கு வீட்டுக்கு விலக்கு வரவில்லை என்பது கூட மறந்து விட்டது என்பது உறைத்தது.
ஒரு கணம் திகைத்து விட்டாள்.
இதையிட்டு சந்தோஷப்படுவதா. . .இல்லை கவலைப்படுவதா. . .
இருவரின் சந்தோஷத்தில் இது அவதரித்ததா?. . . .இல்லை ஒருவரின் அழுகையிலும் மற்றவரின் ஆவேசுNர்திலும் தரித்ததா?. . . எதுவாயினும் யாருக்காகவும் காத்திராத காலம் போல அந்த ஒட்டுண்ணியும் தான் மரத்தை உறிஞ்ச்சுNர் தொடங்கி விட்டது.
கோமதிக்கு வாந்தி வரத் தொடங்கியது.
சுரேன் தானாக கேட்டான், “ஏன் வெயிலைக்கை திரிஞ்சனீரோ”என்று.
கோமதி இதுவாக இருக்கலாம் என்ற பொழுது அவனின் முகத்தில் மாறுபட்ட உணர்ச்சிகளின் பிரதிபலிப்பை அவதானித்தாள்.
ஆனால் மகிழ்ச்சிக்கான பிரதிபலிப்பு அதுவல்ல என்பது கோமதிக்கு நன்கு தெரிந்தது.
“ஏன் உங்களுக்குச் சந்தோஷம் இல்லையோ”
“நான் நினைச்சன் நீர் பில்ஸ் பாவிச்சுக் கொண்டிருக்கிறீர் எண்டு”
கோமதி அதிர்ந்து போனாள்.
“என்ன சொல்லுறிங்கள்”
“தமிழிலைதான் சொல்லுறன் . . . பிள்ளை பெறுகிறது எண்டது சும்மா இல்லை. .
.நாங்கள் இரண்டு பேரும் வடிவாய் கதைச்சு. . .எங்கடை பொருளாதாரத்தை. .
.வசதிகளை. . .லீவுகளைப் பார்த்து. . .பிளான் பண்ணிச் செய்யுறது”
“அப்பிடியே எங்கடைஅம்மா அப்பாவை செய்து நீங்களும் நானும் பிறந்தனாங்கள்”
“அது வேறை. . .எந்த யோசினையும் இலு;லாமல் பெத்து தள்ளிப்போடுங்கள். .
.இஞ்சை பிள்ளை எண்டது பெரிய ஒரு சிலவான விடயம் தெரியுமே. . .பி;ள்ளைக்கு ஒரு நாள் கட்டுற பம்மஸ் காசே எங்களுக்கு ஒரு நாளைக்கு சாப்பாட்டுக்கு காணும்”“அப்ப ஏன் நீங்கள். . .”சொல்ல முடியாது தவித்தாள்.
“படுத்தெழும்பினீங்கள் எண்டு கேட்கப் போறீரோ”
கோமதி ‘ஓம்’எனவே தலையாட்டினாள்.
“செக்ஸ் எண்டது வேறை. . . பிள்ளை பிறக்கிறது எண்டது வேறை. . .நான் நினைச்சனான் நீர் எல்லாம் பாதுகாப்பாய் தான் இருக்கிறீர். . .இரண்டு மூண்டு வருஷம் கழிச்சு நீரும் வேலை பார்க்கத் தொடங்க பிள்ளை பெறலாம் எண்டு”
இப்பொழுது கோமதி அழத் தொடங்கினாள்.
“இப்ப ஏன் அழுறீர்”
“நீங்கள் கலைக்கச் சொல்லிப் போடுவியளோ எண்டு பயமாய்க் கிடக்கு”
“ஏன் பழியை என்னிலை போட பார்க்கிறீர். . .நாங்கள் இரண்டு பேரும் இன்னும் இரண்டு மூண்டு வருஷத்துக்கு சந்தோஷமாயிருக்க ஏன் அப்பிடி ஒரு பிள்ளை தடையாய் இருக்க வேண்டும் எண்டு யோசித்துப் பாருமன்”
“சந்தோஷம் கொட்டித்தான் கிடக்குது”என்று சொல்ல வாயெடுத்தவள், “கடைசி வரை நான் இதுகளுக்கு சம்மதிக்க மாட்டன்”என்று சொல்லும் போது அடக்க முடியாது பீறிக்கொண்டு வந்த அழுகையை அழுத்தியபடியே விம்மிக் கொண்டு ஓடிப் போய் கட்டிலில் விழுந்தாள்.
சுரேன் முன் வாசல் கதவை அடித்துச் சாத்திக் கொண்டு வெளியில் போவது கேட்டது.
கோமதி எவ்வளவு நேரம் கட்டிலில் அப்படியே கிடந்தாளோ தெரியாது.
மனவெளி எங்கும் நிர்வாணம். . . சின்ன வயது சந்தோஷங்களை இழந்த நிர்வாணம்.
. . நாட்டுக்காக போராப் போய்விட்டு அங்கு உதிர்ந்து மடிந்த காதலால் வந்த நிர்வாணம். . .நாட்டை . .உற்றம் சுற்றம். . தாய். . . தகப்பனை பிரிந்து வந்த நிர்வாணம். . . கடைசியாக இன்று தாயாப் போகப் போகும் சந்தோஷம் நிலையாமல் போகப் போகின்றதோ என்ற மனவெளியின் நிர்;வாணம்.
அப்படியே படுத்திருந்தாள்.
இருட்டி விட்டது.
இரண்டு மூன்று மணித்தியாலங்களுக்குப் பின் சுரோன் கொஞ்சம் சிரித்த முகத்துடன் அறைக்குள் வந்தான்.
“சரி. . . உம்மடை விருப்பப்படி நாளைக்குப் போய் டாக்டரைப் பார்ப்பம்”
குளிர்ந்து போனாள் – முதல் மறையாக அவனின் கழுத்தை கட்டி அணைத்து முத்தமிட்டாள். அவனும் அவளை எடுத்துக் கொண்டான்.
அன்றைய பொழுது அவளுக்கு வாழ்வின் இரு முனைகளை ஒரே நேரத்தில் தொட்டுப் பார்த்தது போலிருந்தது.
அடுத்தநாள் டாக்டரிடம் போனார்கள்.
சிறுநீர்ச் சோதனை அவளின் கர்ப்பத்தை உறுதிப்படுத்தியது.
டாக்டர் வாழ்த்துச் சொன்னார். மேலும் பிள்ளை பிறக்கும் வரை எப்பொழுது எப்பொழுது தன்னிடம் வர வேண்டும், எப்பொழுது வைத்தியத் தாதியிடம் போக வேண்டும், எப்பொழுது ஆஸ்பத்திரிக்குப் போய் பிள்ளையை ஸ்கேன் பண்ணிப் பார்க்க வேண்டும் என்று ஒரு பெரிய அட்டவணையே கொடுத்தார்.
நன்றியுடன் இரு கைகளாளும் வேண்டிக் கொண்டாள்.
“வேலைக்கு போகலாமோ என்று கேளுங்கோ. “
சுரேன் டெனிஷில் கேட்டான்.
“வடிவாய் போகலாம்.”
சுரேன் மொழிபெயர்த்துச் சொன்னான்.
“நல்லதாய் போய்ச்சுது உங்கடை கஷ்டங்கள் குறைஞ்சிடும்.”
“என்ன சொல்லுறா”–டாக்டர் ஆர்வ மிகுதியால் கேட்டார்.
சுரேன் கூற டாக்டர் பாராட்டினார் – நல்ல குடும்ப அக்கறையான பெண் என.
தொடர்ந்தும் டாக்டரே சொன்னார் பிள்ளை பிறக்கிறதுக்கு முதன் நாள் வரை வேலைக்கும் போகலாம் – உடல் உறவும் வைத்துக் கொள்ளலாம்.
சுரேன் சிரித்தபடி மொழி பெயர்க்க அவள் கன்னங்கள் சிவக்க தலை குனிந்தாள்.
சுரேன் மாறி மாறி மொழி பெயர்ப்பதைப் பார்த்த டாக்டர், உங்களுக்கு மொழிபெயர்பாளர் ஒருவரின் உதவி தேவைப்பட்டால் நாங்கள் ஒழுங்கு செய்ய முடியும் என்று.
ஆனால் சுரேனோ தானே அவளுடன் எல்லா இடத்துக்கும் கூட்டி வருவதாக சொன்னான்.
மிக்க நல்லது என்றபடி டாக்டர் இருவருக்கும் கைகுலுக்க விடை பெற்றுக் கொண்டார்கள்.
வழியெல்லாம் அவள் சந்தோஷத்தில் மிதந்தாள் – தனக்கென்று ஒரு உறவு தன் தொப்புள் கொடியில் வளர்வதை நினைத்து.
வீட்டை வந்ததும் முதல் வேலையாக இலங்கைக்கு டெலிபோன் எடுத்து இரு வீட்டார்க்கும் சொன்னார்கள்.
பின்பென்ன. .. ஆயிரம் அறிவுரைகள் . .அப்பிடி இப்பிடி இருக்க வேணும். . .எந்த எந்த நாளில் தோய வேண்டும். . .எந்த அந்த நாளில் முழுக வேண்டும். .
.என்னென்ன எப்போது சாப்பிட வேண்டும். . . முடிந்தளவு நல்லாய் படுக்க வேண்டும்.
. .பாரங்கள் தூக்க கூடாது. . .சுரேனில் இருந்து தள்ளியிருக்க வேண்டும். . .
டாக்டர் சொன்ன அறிவுரைகளுக்கும் இந்த அம்மா டாக்கர்மாரின் அறிவுரைகளுக்கும் நூற்றி எண்பது பாகை வித்தியாசம் இருந்தது.
வைத்தியம் சொல்லா விட்டால் வருத்தம் பார்க்கப் போகிறவர்களுக்கு திருப்தி ஏற்படுவதில்லையே. இதுவும் சேர்ந்தது தானே அந்த வரிச்சு மட்டை வேலிகள். .
.பலமும் இருக்கும். . .ஓட்டைகளும் இருக்கும். ஆனால் ஓட்டைகள் இருக்கிறதால் அவை என்றும் தம் பலத்தை இழந்து விடுவதில்லை. வயதாகிக் கறையான்கள் அரித்தால் தவிர. . அப்பொழுதும் புது வேலிகள் முளைக்கும் – புதுக் கதியால்களுடன்.
அப்படிப் புதுக்கதியால்களுடன் புதுப் பனைஓலை மணத்துடன் நிமிர்ந்து நிற்கும் வேலியாக கோமதி தன்னை உணர்ந்தாள்.
பின்பென்ன. . . அடிவயிற்றின் ஒட்டுண்ணி தாய் மரத்தை நன்கு உறிஞ்சுNர் தொடங்கியது. அதை கோமதியால் நன்கு உணரத் கூடியதாக இருந்தது. மூன்று நான்கு மாதங்களில் வெளித்தள்ளும் வயிறு அவளுக்கு இரண்டாம் மாதத்திலேயே மிதப்புத் தெரிந்தது.
சுரேன் வீட்டில் இல்லாத நேரங்களில் சேலை உடுக்கும் பொழுது கண்ணாடியில் தன் வயிற்றைத்தடவிப் பார்த்து தானே மகிழ்ந்து கொள்வாள்.
அதில் ஒரு சின்ன சின்ன மகிழ்ச்சி. அது தான் அவளே. எப்பொழுதும் சின்ன சின்ன எதிர்பார்ப்புகள். . .சின்ன சின்ன சந்தோஷங்கள். . .சிங்கப்பூரில் சின்னப் பொம்மைகளை பார்த்துகு; கொண்டு நின்றது போல. .
*
காலை ஒன்பது மணிக்கு வர வேண்டிய பெண் மொழிபெயர்ப்பாளர் கொஞ்சம் தாமதமாகவே வந்திருந்தார். கண்கள் கொஞ்சம் கலங்கி இருந்தது.
டாக்டருக்காக கோமதியும் நேர்ஸ்சும் காத்திருந்த பொழுது, மொழிபெயாப்பாளரைக் கவனித்த கோமதி “வீட்டிலை பிரச்சனையா. . .முகம் எல்லாம் காஞ்ச்சிருக்கு”என என அக்கறையுடன் கேட்டாள்.
மொழிபெயர்ப்பாளர் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு, ‘இல்லை’எனத் தலையாட்டி விட்டு. . . தனது கைக்குட்டையால் முகத்தைத் துடைத்து விட்டு. . . கைப்பையைத் திறந்து அதிலிருந்த சின்னக் கண்ணாடியை எடுத்து தனது முகத்தை சரி பார்த்து மீண்டும் கலைந்திருந்த கண் மையைச் சரி செய்து கொண்டாள்.
“நீங்கள் இல்லை எண்டு சொன்னாலும் அக்கா உண்மை அது தான். இங்கை வந்திருக்கிற பொம்பிளைச் சென்மங்கள் எல்லாம் பாவங்கள். . .பத்து பதினைஞ்சு வருஷத்துக்கு முதல் இருபதோ முப்பதோ கட்டி இஞ்சை வந்ததாலை ஒவ்வொருத்தனுக்கும் தாங்கள் ராசாக்கள் எண்ட நினைப்பு. . . எனக்கு வருத்தம் வந்ததாலை அடிக்கடி அழுகிறன். . .நீங்கள் வருத்தம் வராமல் அழுகிறியள். . .அது தான் வித்தியாசம்”
“கோமதி என்ன சொல்லுகின்றா”நேர்ஸ் மொழிபெயர்ப்பாளரிடம் கேட்டார்.
“அவா சும்மா அலட்டுகின்றா”என டெனிஷில் சொல்ல நேர்ஸ் மீண்டும் தன் பைலினுள் மூழ்கினாள்.
“இந்த நேர்ஸ்க்கு மட்டும் வீட்டிலை பிரச்சனை இராது என நினைக்கிறிங்களே. . .
நாட்டிலை நடக்கிற போரிலை மரணம் ஒருநாள் தானக்கா. . . இஞ்சை வீடுகளுக்கை நடக்கிற போரிலை மரணம் ஒவ்வொரு நாளும் தான். . . இவளுக்கும் புருஷனுக்கும் கூட சண்டை வரும். . .யார் சாப்பாட்டுக் கோப்பையை கழுவிறது. . .யார் கக்கூசைக் கழுவுறது எண்டு. . .”
கதைத்துக் கொண்டே இருந்தாள் கோமதி.
பெரிதாக அவள் கதையில் அக்கறை காட்டாவிடினும் அவள் சொல்லுவதில் முழுக்க முழுக்கு உண்மையிருக்கிறது என்பதனை மொழிபெயர்க்க வந்தளவின் மனதுக்கு தெரிந்தது.
சிறிது நேரத்தில். . .தான் காலம் தாழ்த்தி வந்ததிற்கு மன்னிப்புக் கேட்டபடி டாக்டர் வந்து அமர்ந்தார்.
கோமதிக்கு கொடுக்கப்படும் மருந்து அட்டவணையைப் பார்த்தார்.
பின் நேர்ஸிடம் கோமதியின் நிலை எப்பிடி இருக்கிறது எனக் கேட்டார்.
”கோமதியின் நிலையில் மிக நல்ல முன்னேற்றம் வருகிறது. . பின்நேரங்களில் என்னுடன் தோட்டத்துக்குள் நடக்க வருகின்றாள். . . பூக்களைப் பிடிங்கி சின்னக் கொத்தாக கட்டி எனக்கு அன்பளிப்பு செய்கிறாள். . . ஆனால் வழி தெருவில் ஏதாவது பிள்ளைகளைப் பார்த்தால். . .குறிப்பாக ஆண்பிள்ளைகளைப் பார்த்தாள் முறைக்கின்றாள். . .பெண் பிள்ளைகளைப் பார்த்தாள் அழுகின்றாள். . .”
நேர்ஸ் சொன்னவை மொழிபெயத்து சொல்லப்படுகின்றது.
”நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள். . .”
”பெண்பிள்ளைகள் பாவம். . .ஆண் பிள்ளைகள் கொடுமைக்காரர் . . . ”
”எனக்கு விளங்குது. . .கோமதி உங்களுக்கு நாங்கள் இனி மருந்தைக் குறைக்கப் போறம். . .அதுக்குப் பிறகு. . .கிழமையில் மூன்று நாளைக்கு ஒரு மனநல வைத்தியர் வந்து உங்களோடை கதைக்க ஒழுங்கு செய்யுறம். . .அப்பிடியே ஒரு மாதம் கொன்ஷல்ரேசனைத் தொடர்தால் பிறகு சனி, ஞாயிறுகளில் வீட்டை போய்
வருவது பற்றி யோசிக்கலாம்”
கோமதியின் முகம் மாறிக் கொண்டு வந்தது. ”எந்த வீட்டைச் சொல்லுறியள்”
”இந்த சிற்றியிலை இருக்கிற உங்கடை வீட்டைத்தான் சொல்லுறன்”
”தூ. . . அது வீடோ. . .அது சிறைச்சாலை. . . பாலியல் கொடுமை நடக்கிற சிறைச்சாலை. . . மனுஷ இதயம் இல்லாத ஒரு அரக்கன். . .கொலைகாரன் இருக்கிற இடம். . .நான் அங்கை போக மாட்டன். . என்னை இலங்கைக்கு அனுப்புங்கோ. . ”
டாக்டர், நோர்ஸ், மொழிபெயர்பாளர் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
கோமதி எழுந்து விறுவிறு என்று தனது அறைக்குப் போனாள். . .அதே வேகத்தில் கையில் ஒரு உள்ளாடையை எடுத்து வந்து மேசையில் எறிந்தாள். . .
”ஒரு புதுப்பொம்பிளைக்கு இதோ டென்மார்க்கிலை இருந்து கொண்டு வாறது. . .
செக்ஸ் படமோ போட்டுக்காட்டுகிறது. . . மிருகம் திருந்தும் திருந்தும் எண்டு பார்த்தன். . .அவன் கொலைகாரனாக மாறிட்டான். . .அந்த நாயோடை நான் இன்னும்
படுத்தெழும்ப வேணுமோ”
இப்பொழுது கோமதி பழையபடி பெரிதாக அழத்தொடங்கினாள்.
நேர்ஸ் அவளை அரவணைத்தாள்.
நேர்ஸின் நெஞ்சில் தலை வைத்துக் கொண்டு அழுதாள்.
”சரி. . . இதைப்பற்றி நகரசபையின் சமூகப்பிரில் கதைப்போம். . .உங்கள் விருப்பம் இல்லாமல் அங்கு உங்களை அனுப்ப மாட்டம். . . .”
”டாக்டர் அவனிட்டை சொல்லி வையுங்கோ. . . இலங்கைப் பக்கம் தலைகாட்ட யோசிக்க வேண்டாம் எண்டு. . .நெத்தி வெடி தான்”
ஆவேசத்தை அமைதிப்படுத்தும் மாத்திரையைக் கொடுக்கும் படியும். . .மனநல வைத்தியருடனும். . நகரசபை ஊழியர்களுடன் கதைக்க ஏற்பாடு செய்யும் படியும் கூறிவிட்டு டாக்டர் எழுந்து கொண்டார்.
மொழிபெயர்ப்பாளரும் எழுந்து கொண்டார்.
”ஆக வீட்டிலை விட்டுக் குடுக்காதையுங்கோ. . . மிதிச்சு சாகடிச்சுப் போடுவாங்கள்”
காதில் கேட்காத மாதிரி டாக்டரைப் பின் தொடர்ந்தாலும் மொழிபெயர்ப்பாளரின் மனம் கணக்கவே செய்தது.
கோமதியை அழைத்துக் கொண்டு நேர்ஸ் தன் அறைக்குத் திரும்பினாள்.
”என்ரை பாஸ்போட் அவனிட்டைக் கிடக்குது”
கோமதி என்ன சொல்லுகிறாள் என்று நோர்சுக்கு விளங்காவிட்டாலும் பாஸ்போட் என்பது மட்டும் விளங்கியது.
’சரி’எனத் தலையாட்டிபடி மாத்திரைகளை எடுத்துக் கொடுத்தாள்.
மாத்திரைகள் அவளை மயக்க நிலைக்கு கொண்டு போனது.
*
முதலாவது ஸ்கேனிங்கிற்கு கோமதியும் சுரேனும் வந்திருந்தார்கள். இது கோமதிக்குப் முற்றாகப் புதிது. பெரிய பணக்காரப் பெண்கள் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் கர்ப்பமாக இருக்கும் பொழுது வயிற்றை ஸ்கேனிங் செய்து, கம்பியூட்டரில் பிள்ளையின் தலையின் குறுக்கு நீளத்தை அளந்து அதன் தற்போதைய நிறை. . பிறக்கும் பொழுது என்ன நிறையிருக்கும் என டாக்டர்கள் கூறுவதைக் கேட்டிருக்கின்றாள்.
அவளுக்குத் தெரிந்ததெல்லாம் குளத்தடி தைலக்காவின் தாய் சரசக்கா கடையாக மாதவிடாய் வந்த தேதியைக் கேட்பதும் கையைப் பிடித்துப் பார்த்ததும் உனக்கு இத்தனையாம் தேதி பிள்ளை பிறக்கும். . . போய் படுத்து படுத்துக் கிடாமல் குனிஞ்சு நிமிர்ந்து வேலை செய் எனச் சொல்லி விடுவதும் தான்.
பன்னீக்குடமும் அதே தேதியில் உடையும். . .சிலவேளை ஒரு நாள் முந்தலாம். .
.அல்லது ஒரு நாள் பிந்தலாம்.
இது புதிய உலகம். . . விஞ்ஞான உலகம். . .அதன் விதிமுறைகள் வேறு. .
.வரைவிலக்கணங்கள் வேறு. . . இயற்கையின் விந்தைகளுக்கு காரணாகாரியம் மடு;டம் அவர்களால் கூறமுடியுமே தவிர எதையும் தடுப்பதற்கு பலம் இல்லை. . .அது சுனாமி ஆயினும் சரி. . .குளோபல் வோமிங் பற்றிக் கதைத்துக் கொண்டு இருக்கும் பொழுதே பேஸ்மன்றினுள் தண்ணீர் புகுந்துவிடும்.
ஆனாலும் என்ன செய்வது. . . பாம்பு தின்னுகின்னுகின்று ஊருக்கு வந்து விட்டோம்.
.நடுத்துண்டு சாப்பிட்டாக வேண்டும் என்ற நினைப்புடன் அந்த வெயிற்றிங் கோலில் மாட்டியிருந்த படங்களின் அழகைப் பார்த்து வியந்து கொண்டிருந்தாள்.
அத்தனையிலும் குழந்தைப்பிள்ளைகள். . .ஒரு வயதுக்கு உட்பட்ட. . .ஆண் குழந்தைகளும். . .பெண் குழந்தைகளும் …ஆடையுடன் சிலர். . அம்மணமாய் சிலர்.
. .வெவ்வேறு நாட்டுக் குழந்தைகள். . .அழகாய்த்தான் இருந்தார்கள். . .
”கொம். . மதி”என கோமதியின் பெயரை தட்டுத் தடுக்;கி கொண்டு நேர்ஸ் ஒருத்தி கோமதியின் பையிலுடன் வர சுரேனும் கோமதியும் எழுந்து அவள் பின்னாள் சென்றார்கள்.
பரிசோதனை செய்யும் அறையுள் ஓர் ஆண்; டாக்டர் தான் இருந்தார்.
கோமதிக்கு கொஞ்சம் கூச்சமாய் இருந்தாலும் சுரேன் பக்கத்தில் நிற்கும் தையிரியத்தில் கர்ப்பவதிகளைப் பரிசோதனை செய்யும் அந்த பிரத்தியோகக் கட்டிலில் ஏறி நிமிர்ந்து படுத்துக் கொண்டாள்.
ஸ்கேன் செய்யும் போது பயன்படுத்தப்படும் அந்த வெண்ணிறக்களி போன்ற திராவத்தை டாக்டர் அடிவயிற்றில் தடவிய பொழுது அவள் கூச்சத்தால்; நெளிந்தாள். அப்படியே பக்கத்தில் நின்ற சுரேனின் கையை ஆதராவாகப் பிடித்துக் கொண்டாள்.
வயிற்றின் இடப்பக்கமும் வலப்பக்கமும் ஸ்கேன்கருவி அசைய அவளும் இடமும் வலமுமாக கூச்சத்தில்; நெளிந்தாள். கம்பியூட்டரிலும் கால்மாட்டிற்கு நேர் எதிரேயிருந்த பெரிய திரையிலும் அவளது கர்ப்பபை தெரிந்தது. அதில் திட்டாக இருந்த இடத்தை சுற்றி இப்போ டாக்டர் பரிசோதித்துக் கொண்டு இருந்தார்.
சோதித்துக் கொண்டு இருந்தபடியே, ”உங்கள் குடும்பத்தில் யாராவது இரட்டைப்
பிள்ளைகள் இருக்கிறார்களா”எனக் கேட்க இருவருமே ’இல்லை’எனத் தலையாட்டி விட்டு ஆளை ஆளாள் பார்த்தார்கள்.
”இப்பொழுது அவர்கள் உங்கள் குடும்பத்துக்கு கிடைத்து விட்டார்கள்.பாராட்டுகள்”என டாக்டர் ஆனந்தம் மலர இருவருக்கும் கைகுலுக்கினார்கள்.
இரண்டு தேவதைகள் வந்து தன் வயிற்றில் இறங்கியது போலிருந்தது.
கோமதியின்; கடைக்கண்ணால் கண்ணீர் வடியத்தொடங்கி கன்னங்கள் வழியே ஓடி தலையணையை நனைத்தது.
சுரேனின் கைகளை இன்னமும் இறுக பற்றிக் கொண்டாள்.
ஆந்த ஆதரவு அவளுக்கு இப்பொழுது அதிகமாகவே தேவைப்பட்டது.
சுரேனின் முகம் ஒரு கணம் இருண்டு முகிலுக்குள் மறைந்து கொண்டது. பின் டாக்டரின் புன்சிரிப்பயைக் கண்ட பொழுது தன்னை சுரோகரித்துக் கொண்டான்.
மீண்டும் நாட் கணக்குகள். . .சந்திப்பிற்கான புதிய திகதிகள். . .என்ற சம்பிருதாய சம்பாஷணைகளுக்குப் பின்பு சுரேனும் கோமதியும் வெளியே வந்தார்கள்.
”உண்மையைச் சொல்ல வேணும் உங்களுக்குச் சந்தோஷம் தானே”அவனின் கையைப்பிடித்தபடி நெருக்கமாக நடந்து கொண்டே கேட்டாள்.
”ஊம். . . ”
”என்ன ஊம் கொட்டுறியள். . .நல்ல சந்தோஷம் எண்டு சொல்லுங்கோ. . .”
”சரி. . நல்ல சந்தோஷம். . .போதுமா”
“எனக்காக சொல்லாதையுங்கோ. . .நீங்கள் காசுக்கு யோசிப்பீங்கள். . .இரண்டும் பொம்பிளைப் பிள்ளையள் எண்டு யோசிப்பீங்கள். . . அடுத்து அடுத்து இரண்டு பிள்ளையள் பிறந்தால் ஏற்றுக் கொள்ளுறது தானே. . இது கடவுளாய் ஒண்டாய்த் தந்து இருக்கிறான். . .நான் பள்ளிக்கூடம் போய் டெனிஷ் படிச்சு.. . .பிறகு உழைக்கத் தொடங்கிட்டால் எண்டால் உங்களுக்கு என்ன கவலை. . .இரண்டு
பிள்ளையளும் இராசாத்தியள் மாதிரி வளருங்கள். . .”
சுரேனின் மனக்கண்ணாடியை பிரதி விம்பம் எடுத்து பார்த்த மாதிரி கோமதி கதைத்துக் கொண்டு வர அவனுக்கு கொஞ்சம் அரியண்டமாய் இருந்தது.
“சும்மா.. தொணதொணக்காமல் வாறீரோ”
கோமதிக்கு சுள் என்றது. . .ஆனாலும் சமாளித்துக் கொண்டாள். . .செலவுகளைப் பற்றி யோசிக்கிறார் போலும் என தன்னையே தான் சமாதானப்படுத்திக் கொண்டு பின்பு ஏதும் பேசாமல் போய் காரினுள் ஏறினாள்.
கார் கடற்கரை வீதி வழியால் ஓடத்தொடங்கியது.
அன்று காற்றழுத்தம் எதுவும் இன்றி கடல் மௌனமாக இருந்தது போலிருந்தது.
*
வீட்டை வந்து சேர்ந்ததும் மீண்டும் இலங்கைக்கும் மற்றைய நாடுகளில் உள்ள மற்றைய உறவினர்களுக்கும் தொலைபேசிகள் பறந்தன – இரட்டைச் சந்தோஷத்துடன்.
மீண்டும் அனைவரின் ஆலோசனைகள் – மிகக் கவனமாய் இருக்கும்படி. . .மேலாக எப்பிடி தனிய இரண்டு பிள்ளைகளையும் பெற்று வளர்க்ப் போகிறியோ என்ற கரிசனையும். .. கடவுள் உன்னைக் கஷ்டம் இல்:லாமல் பார்த்துக் கொள்வார் என்ற ஆறுதல் வார்த்தைகளும். . .அவளைக் குளிர்வித்துக் கொண்டிருந்தன.
தாய்மை –கருவிலேயே ஒரு குழந்தையின் அகவளர்ச்சியை ஆரம்பிக்கும் பணியை இயற்கை ஒரு பெண்ணுக்கு கொடுத்திருப்பதைப் போலவும் அதற்கு ஏற்றவாறு ஆசிய நாடுகள் என்றாலும் சரி. . . ஐரோப்பிய நாடுகள் என்றாலும் சரி. . .மேலாக விலங்கினங்குகள் ஆயினும் சரி. . . கலாச்சார அமைப்புகள் அமைந்திருப்பது வியக்கத் தக்கவையே.
கோமதிக்கு இது இரட்டைத் தாய்மை. இது கொஞ்சம் இயற்;கைக்கு மாறானது. ஒன்றாக அழுங்கள். . .ஒன்றாக பால் கொடுக்க வேண்டும். . .ஒன்றாக சலம், மலம் போகும் . .ஒன்றாகவே துணி மாற்ற வேண்டும:;. . .மேலாக இனிய தாம்பத்தியத்தில் உருவானதும் இல்லை. . .ஆனாலும் அவள் மகிழ்ந்தாள். . . இழந்து போன சுகங்கள் எல்லாம் அந்தப் பிள்ளைகளே என அவள் நம்பினாள்.
ஓய்வாக இருக்கும் பொழுதெல்லாம் பிள்ளைகளுக்கு என்ன பெயர்கள்கள் வைக்க வேண்டும் என்ற ஆராய்ச்சி தொடங்கியது. ஊரில் இருந்தும் பல பெயர்த் தெரிவுகள். இலக்கியங்களில் இருந்து. . .இந்து சமய நூல்களில் இருந்து. .. என இத்தியாதி இத்தியாதிகளில் இருந்து பெயர்கள் பிரேகரிக்கப்பட்டு கடைசியாக சசி, சுசி என்ற பெயர்கள் அவளால் பிரேகரிக்கப்பட்டு அவளாளே ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சுரேனிடம் அவை நல்ல பெயர்களா என வினாவப்பட்ட பொழுது உமக்குப் பிடித்தால் சரி தான் என்ற மொட்டையான பதிலே வந்தது. . .அதில் அவளுக்கு கொஞ்சம் ஏமாற்றமே.
சுரேன் முன்பு சொன்ன மாதிரி பிள்ளை என்ற ஒன்று எங்களுக்கு வேண்டும் என்று வயிற்றில் தரித்த பிள்ளைகள் அல்லவே இது. . . அதனால் தான் என்னவோ அவற்றில் சுரேனுக்கு ஈடுபாடு இல்லை என எண்ணிக் கொள்வாள்.
ஆனால் அவளுக்கு. . . அந்த முகம் தெரியாத இரண்டு இதயத் துடிப்புகளிலும் அளவில்லாத ஈடுபாடு வரத்தொடங்கியது. . .சின்ன சின்ன சட்டைகள் தைத்து மகிழ்ந்தாள். . . சின்ன சின்ன விளையாட்டுச் சாமான்கள் வேண்டி படுக்கை அறையுள் நிரப்பினாள். . . சின்ன சின்ன சண்டைகள் அவர்கள் பிடிக்கும் பொழுது தான் எப்படி விலக்குத் தீர்க்க வேண்டும் எண்ணிக் கொள்வாள்.
இந்த நாட்டில் மற்றவர்கள் செய்யுமாப் போல் அவர்களுக்கு தனி அறை கொடுக்க தற்போதைய வீட்டில் இடமில்லை என்று சுரேன் சொல்ல தானும் பிள்ளைகளும் ஹோலில் படுத்துக் கொள்வோம் என மிக இலகுவாக சொன்னாள்.
“அப்ப நாங்கள் இரண்டு பேரும் சந்தோஷமாய் இருக்க வேண்டும் என்று நீர் யோசிக்கிறதில்லையோ. . .”என்று சுரேன் கேட்ட போது, “எப்பவும் நீங்கள் மட்டும் தானே சந்தோஷமாய் இருந்தனீங்கள். . .தேவைப்பட்டால் அதை நீங்களாகவே எடுப்பியள்”எனச் சொல்ல வாய் வந்த பொழுதும், தற்போதைய நிலைமையை யோசித்து, “நான் என்ன தூரத்திற்கே போயிட்டன்”எனச் சமோசிதத்துடன் கூறியதை நினைத்து தனக்குள் சந்தோஷப்பட்டாள்.
சுரேனும் அதற்குப் பிறகு ஏதும் பேசவில்லை.
ஆனாலும் சுரேன் தன்னில் இருந்து ஏனோ சற்றுத் தூரத்தில் இருப்பது போல சில தடவைகள் அவளுக்குப் பட்டாலும், இரண்டு பிள்ளைகள் – செலவு –அது இது என்று யோசிக்கிறார் ஆக்கும் என எண்ணிக் கொள்வாள்.
அடுத்து பதினைந்து நாட்களுக்கு டாக்டரிடம், வைத்தியத் தாதி, ஆஸ்பத்திரி, அவர்கள் இருக்கும் நகரசபை என்று எல்லாவற்றிலும் இருந்து கோமதியின் பெயருக்கு ஒரே கடிதங்களாய் வரத் தொடங்கியது. சுரேன் தான் எல்லாவற்றையும் மொழிபெயர்ப்பான். சிலவற்றில் அவளது கை எழுத்தை வேண்டி மிகுதியை தானே நிரப்பி அனுப்புவான்.
அவ்வகையில் அடுத்த வெள்ளிக் கிழமை காலை ஏழு மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வரச் சொல்லியும், முதன் நாள் இரவு பன்னிரண்டு மணியில் இருந்து எதுவும் சாப்பிடவோ. .
.குடிக்கவோ வேண்டாம் என்றும் குறிப்பிட்டு இருந்தது.
“ஏனப்பா போன முறை இப்பிடிச் செய்யேல்லை. . .இந்த முறை இப்பிடி”
“இந்த முறை உம்மை ஒப்பிரேஷன் தியேட்டருக்குள்ளை கொண்டு போய் இரண்டு பிள்ளையும் கருப்பையில் இரு பக்கத்தில் கருக்கட்டி இருக்கோ. . .அல்லது இரண்டு பக்கத்திலும் இருக்கோ என பார்க்ப் போறார்கள். . .”
“ஒரு பக்கத்திலை எண்டால் தான் நல்லது. . .பார்க்க ஒரே மாதிரி இருக்கும். .
.லவகுஷா மாதிரி”
“யார் அது லவகுஷா”
“அது இராமபிரானுக்கும் சீதாபிராட்டிக்கும் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள். லவன் – குஷன்.”சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது மனத்தினுள், “அந்த சீதைக்கு
போலத் தானே நானம் ஒரு வனவாசத்தை அனுபவித்தேன்;”என தனக்குள் தானே சொல்லிக் கொண்டு அயர்ந்து போனாள்.
*
கோமதி அனுமதிக்கப்பட்டிருந்த வாட்டிற்கு பொறுப்பான தலைமை டாக்டர், தினசரி கோமதியைக் கவனித்துக் கொள்ளும் வாட் டாக்டர்;, அதே மாதிரி தினசரி அவளைக் கவனித்துக் கொள்ளும் நேர்ஸ், நகரசபை உத்தியோகஸ்தர், டெனிஷ் அகதிகள் சங்கத்தில் இருந்து வந்திருந்த தென்கிழக்காசிய நாடுகளுக்கு பொறுப்பான அதிகாரி, மொழிபெயர்ப்பாளா, கோமதி; அனைவரும் அந்த வட்ட மேசையைச் சுற்றி இருந்தார்கள்.
அந்த கலந்துரையாடலுக்கு வந்திருந்த அனைவருக்கும் கோமதியைப் பற்றிய அறிக்கையை தலைமை டாக்டர் அனைவருக்கும் வழங்கினார். கோமதிக்கு மொழி பெயர்க்கப்பட்டுச் சொல்லப்பட்டது.
கோமதியின் மனநிலை நன்கு வருகிற படியினால் இனித் தொடர்ந்தும் ஆஸ்பத்திரியில் இருக்கத் தேவையில்லை என்றும், ஆனாலும் குறைந்தது அடுத்த இரண்டு வருடங்கள் ஆவது மனநிலையைச் சமன் செய்யும் மாத்திரைகளை தவறாது எடுக்க வேண்டும் என்றும், அதுவரை அவர்கள் சொந்த நகரத்தில் உள்ள டாக்டரிடம் மாதம் ஒரு தடவை ஆவது சென்று கலந்துரையாடுவது கட்டாயம் என்றும் அதில் சொல்லப்பட்டிருந்தது.
மேலும் கோமதி சுரேனின் வீட்டிற்கு போக மறுக்கும் காரணம் நியாயமாக நகரசபைக்குப்படுவதால் நகரசபை கோமதிக்கு வாழ இரண்டு அறை கொண்ட வீடு எடுப்பதாக உறுதியளித்தது.
ஆனால் கோமதியோ இலங்கைக்கே திரும்ப போக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதால் இலங்கையில் போர் உக்கிரமாகி இக்கால கட்டத்தில் அங்கு போவது உசிதம் இல்லை எனவும் அகதிகள் சங்கம் தனது கருத்தை தெரிவித்தது. மேலாக கோமதியின் பெற்றார் எங்கு இருக்கிறார்களோ எனத் தெரியாத சூழ்நிலையில் கோமதியை இலங்கைக்கு அனுப்புது விவேகமான காரியம் இல்லை என்றாலும் இறுதி முடிவு கோமதியின் கையில் தான் என அனைவரும் அபிப்பிராயப்பட்டார்கள்.
கோமதியின் முடிவைக் கேட்க அனைவரும் காத்திருந்தார்கள்.
கைகளை நீட்டிக் கொஞ்சம் சோம்பலை முறித்தபடி, “இனிச் சுரேன் எண்ட பொறுக்கி இனியொரு தழிழ்ப் பெட்டையைக் கட்டிக் கொண்டு வந்து இஞ்சை வைச்சு கற்பழிக்க நீங்கள் யாரும் விடக்கூடாது”
கோமதியின் கண்கள் சிவந்தது.
“கோமதி. . நாங்கள் இப்ப உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் எண்டு சொல்லுங்கோ. . .அதுக்கு தான் இங்வளவு பேரும் கூடி இருக்கிறம்”
“ஓம் டாக்டர் விளங்குது. . . இன்னும் நாலைஞ்சு வருஷத்திலை இந்த இடத்திலை இன்னொரு சுமதியோ. .. சுந்தரியோ இருந்து அழக்கூடாது எண்டதுக்கு தான் சொல்லுறன் . . .”
“சரி. . .அதை நாங்கள் பார்த்துக் கொள்ளுறம். . நீங்கள் உங்கடை முடிவை சொல்லுங்கோ” – இது நகரசபையில் இருந்து வந்திருந்த பெண் உத்தியோகஸ்தர்.
“நன்றி. . . ;உங்களுக்கு கடவுள் புண்ணியம் கிடைக்குதோ இல்லையோ என்னைப் போலை இன்னொரு பிள்ளை கஷ்டப்படாமல் இருக்க உங்களாலை உதவி செய்ய முடியும்”
“ஓகே. . . அவரைப்பற்றிய தனிப்பட்ட அறிக்கையில் நாங்கள் பதிவு செய்து வைப்பம். இப்ப நீங்கள் உங்கடை முடிவைச் சொல்லுங்கோ. . .”
“சொல்லுறன். . . நான் இலங்கைக்கு போக வேணும்”–உறுதியாகச் சொன்னாள்.
மற்ற அனைவரும் ஆளை ஆள் பார்த்தார்கள்.
“சனங்கள் எல்லாம் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். . .போர் நிறுத்தத்தை செய்யச் சொல்லி எல்லா நாட்டிலும் ஊர்வலங்கள் நடக்குது. . .இடம் பெயாந்த சனங்கள் எந்த வசதியும் இல்லாமல் கஷ்டப்படுகினம். . .இந்த நிலைமையிலை
நீங்கள் அங்கை போய்….”அகதிகள் சங்க அதிகாரி இழுத்தார்.
“நீங்கள் சொல்லுறது விளங்குது. . .இங்கை மட்டும் என்ன. . .வீட்டுக்கை கிடந்து அடிபடுறம். . .பிரிஞ்சு போய் தனியக் கிடந்து கஷ்டப்படுறம். . . என்னதான் நிம்மதியாய் இருந்தாலும் கடை தெருவுக்குப் போகேக்கை நாங்கள் வேறை இன சனங்கள் என்று நீங்கள் எங்களைப் பார்ப்பது வடிவாய் தெரியும். . . இப்பவும் என்னை உங்களிலை ஒருத்தியாய் வைச்சுக் கதைக்கேல்லை. . .யாரோ ஒரு இலங்கைப் பொம்பிளையாய் தான் வைச்சுக் கதைக்கிறியள். . .ஆனால் நாங்கள் எங்கடை நாட்டுக்குப் போனால் அது எங்கடை பூமியிலை சாகிறம் எண்ட நிம்மதியோடை ஒரு நாள் செத்துப் போவம்”
கோமதி தொடர்ந்து கதைத்துக் கொண்டு இருக்க தலைமை டாக்டர், “ஓகே. .
.உங்களுக்கு ஒரு பத்து நாள்; தவணை தருகின்றோம். இந்த கால கட்டத்தில் உங்களுடன் தினமும் உரையாட ஒரு மனநல வைத்தியரை ஒருங்கு செய்யுமாறு நகரசபைக்கு நாங்கள் பரிந்துரை செய்கின்றோம். அதுவரையில் நீங்கள் உங்கள் முடிவைப் பரிசீலனை செய்யலாம். இப்பொழுது போய் வாருங்கள்”என சம்பாஷணையை முடிவுக்கு கொண்டு வந்தார்.
கோமதியும் மொழிபெயர்பாளரும் போக மிகுதியாய் இருந்தவர்கள் தொடர்ந்தும் இருந்து கதைத்தார்கள். . . .மேலாக கோமதிக்காக கவலைப்பட்டார்கள்.
ஒரு பத்து நிமிடம் சென்றிருக்கமாட்டாது. . .கோமதியின் அறையில் இருந்து பெரிய அலறல் சுNர்தம் கேட்டது. . . அனைவரும் எழுந்து ஓடிப் போனார்கள்.
சில நிமிடங்களுக்கு முன்பு தபாலில் வந்திருந்த, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பல ஆஸ்பத்திரி அறிக்கைகளும், விவாகரத்திற்கான சுரேனின் வக்கீல் அனுப்பிய நோட்டீசும்; கோமதியின் கட்டிலில் பரந்து கிடந்தது.
கோமதி விறைத்துப் போய் நின்றாள்.
“உங்கடை பிளளைக்கு எணடால் நீங்கள் எல்லாரும் அவனை இப்பிடி விட்டு விடுவிங்களோ. . .கடவுளே. . .”
“நீங்களே விவாகரத்தை விரும்பிறிங்கள் தானே. பிறகேன் கோபப்படுகிறீர்கள்”
“அதை நான் கேட்ட வேணும். அப்பதான் அது அவனுக்கு தண்டணை. இப்ப அவன் கேட்கிறது எனக்கு அவமானம். . .என்னை விசரி எண்டு வக்கீல் எழுதியிருக்கிறன். . .
நாய்கள். . . வக்கிலிண்டை பெண்டாட்டியோடை போய்ப் படுக்கச் சொல்லுங்கோ. .
.அவளவை தான் இவங்களுக்குச் சரி. . .”
நேர்ஸ் ஒடி வந்து அவளைக் கட்டிப் பிடித்து சமாதானப்படுத்தினாள். . .
கோமதி அதிக நாட்களுக்குப் பின்பு இன்று அழத் தொடங்கினாள்.
“பாவப்பட்ட பெண்”என அவளுக்காகப் பரிதாபப்பட்டுக் கொண்டு வந்திருந்த அதிகாரிகள் அனைவரும் அறையை விட்டு வெளியேறினார்கள்.
*
வெள்ளி அதிகாலை சுரேன் எழும்ப முன்பே எழுந்து குளித்து தோய்ந்து சுவாமிப் படங்களுக்கு விளக்குகள் எல்லாம் கொளுத்தி தனது இரண்டு பிள்ளைகளும் சுகமாய்ப் பிறக்க வேண்டும் என்று பிரார்;த்திக் கொண்டாள்.
அத்துடன் அன்றைய சோதனைகளும் நன்கு அமைய வேண்டும் என ஆண்டவனை வேண்டிக் கொண்டாள்.
நேரம் காலை ஆறு மணியைக் காட்டியது.
இனி சுரேனை எழுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டு சுப்பிரபாத சி.டி.யை போட்டு விட்டு மின் அடுப்பினைத் தட்டி விட்டாள்.
வழமையாக வெள்ளிக் கிழமைகளில் அவள் விரதம் இருப்பது வழமை. இன்று காலையில் தோய்ந்து விட்டு குடிக்கும் தேனீர் குடிக்க கூடாது.. .அவ்வளவு தானே என எண்ணியபடி சுரேனுக்கு மட்டும் தேனீரும் ஊற்றி பாணுக்கு பட்டரும் ஜாமும் பூசுNர் தொடங்கினாள்.
எம். எஸ். ஸின் சுப்பிரபாதம் சுரேனைப் படுக்கையில் இருந்து எழும்ப வைத்தது.
சுரேன் குளிக்கப் போன கையுடன் தொலைபேசி அடித்தது.
யார் இந்த நேரத்தில் விடியற்காலையில் என்று நினைத்தபடி டெலிபோனுக்கு கிட்டவாகப் போனாள். பொதுவாக அதிகாலை டெலிபோன்கள் இலங்கையில் இருந்து வருவனவாகத்தான் இருக்கும்.
அதுவும் போர் மூட்டம் மூடிக்கொள்ள ஆரம்பித்த பொழுது nதிகமாக அவலச் செய்தியையே அவை காவி வரும்.
“ஹலோ நான் கோமதி”என அவள் ஆரம்பிக்கும் முன்பே,
”அது நான் பிள்ளை”என தாய் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.
“என்னம்மா விசேசம். . விடியக் காலமை எடுத்திருக்கிறியள்”
“எப்பிடிப் பிள்ளை சுகமாய் இருக்கிறியோ”
“ஓமம்மா. . .”
“டொக்டரிட்டை ஒழுங்காய் போறனீயோ. . .”
“ஓமம்மா. . . இண்டைக்கும் செக்கிங் இருக்கு. . .அரண்டு பேரும் ஒரே மாதிரி இருப்பினமோ. . இல்லாட்டி வேறு வேறு மாதிரி இருப்பினமோ எண்டு சோதிக்கப் போகினம் . . .”
“கடவுளே. . . வத்தாளைப்பளை அம்மன் ஒண்டும் வராமல் உன்னைக் காப்பாத்துவா”
“அது சரி. . .ஏன் எடுத்தனிங்கள்”
“இல்லை சும்மா தான்”
“இல்லை. . .நீங்கள் ஏதோ சமாளிக்கிறியள். . சொல்லுங்கோ. . .”
“இல்லைப் பிள்ளை. . . வத்தாப்பளை பொங்கலுக்கு நீ வந்து நிக்கிறாய் போலை கிடக்கு. . . வள்ளி தெய்வானை போலை உன்ரை இரண்டும் கோயில் நாவலடியிலை விளையாடிக் கொண்டு நிண்டதுகள். . .பிறது பார்த்தால் காணேல்லை.. .அதுகள் வரும் எண்டுட்டு நீ கொஞ்;சமும் பராவாய் பண்ணாமல் மோதகம் பிடிச்சுக் கொண்டு இருக்கிறாய். போய் பாரடி எண்டு நான் உன்னைக் களைச்சுப் போட்டுப் பார்த்தா. .
.மோதகச் சட்டிக்கை அதுகளின்ரை தலை கிடக்குது. . .திடுக்கிட்டு எழும்பிட்டன். .
.இப்ப மட்டும் அந்தப் பதற்றம் போகேல்லைப் பிள்ளை. . .அது தான் நீ எழும்பட்டும் எண்டுட்டு பாத்துக் கொண்டு இருந்தனான்”
“அம்மா. . அம்மா. . . இண்;டைக்கு அவை எப்பிடி இருக்கினம் எண்டு சோதிக்கப் போகினம். . அது தான் பேத்தியாருக்கு காட்டியிருக்கினம். . .பாத்தியளே அவை இப்பவே உங்களை இந்தப் பாடு படுத்தினால் வெளியிலை வந்த பிறகு என்ன பாடுபடுத்துவினம்”
“சரி பி;ள்ளை. . . இப்பதான் மனதுக்கு ஆறுதலாய் கிடக்கு. . .எதுக்கும் ஆசுபத்திரியாலை வந்த பிறகு ஒருக்கா டெலிபோன் எடுத்து சுகத்தை சொல்லிப் போட்டு வை”
“ஓமம்மா கட்டாயம் சொல்லுறன்”
டெலிபோன் உரையாடல் முடியவும் சுரேனும் ஆஸ்பத்திரிக்கு போக வெளிக்கிட்டுக் கொண்டு வந்து சாப்பாட்டு மேசையடியில் கோமதி தயார் செய்திருந்த பாணை எடுத்து சாப்பிடத் தொடங்கினான்.
“அம்மாவேடை கதைச்சுக் கொண்டு இருந்ததாலை சுடுதண்ணி ஆறிப் போச்சு. . .
பொறுங்கோ திரும்ப சுட வைச்சுNர்தாறன். . .கேட்டீங்களோ. . முஸ்பாத்தியை சுகியும் சசியும் தொலைந்து போக அம்மா கனவு கண்டவாவாம்”
சுரேனின் முகத்தில் ஒரு வித்தியாசமான உணர்ச்சி தோன்றி மறைந்தது. ஆனால் கோமதி அதனை அவதானிக்கவில்லை.
“பிறகு. . .”
“பிறகு என்ன. . .பாவம். . .பயந்து போய் வந்து டெலிபோன் எடுத்தவா. . .”
“ஏன் கோமதி. . . உலகத்திலை எத்தியோ நடக்குது. . .பயணம் என்று வெளிக்கிட்டுப் போன சனம் விமான விபத்திலை இல்லாமல் போகுதுகள். . .போன வருஷம் சுவீசில் இருந்து போன எங்கடை தழிழ் குடும்பம் ஒன்று மாமல்லபுர றோட்டிலை அக்சிடன்ற்பட்டு தகப்பனும் தாயும் செத்துப் போக பிள்ளையள் அநாதையாய் திரும்பி வந்ததுகள். . .அப்பிடி எதுவும் எங்களுக்கும் நடக்கலாம். .
.எங்கடை பிள்ளைகளுக்கும் நடக்கலாம். . .”
“தயவு செய்;து நிற்பாட்டுறியளே. . .வெள்ளிக் கிழமையும் காலையுமாய். . மாமியார் தொடங்கி வைக்க மருமகன் பின் பாட்டுப் பாடுறார். . .நான் செத்துப் போனால் என்ன நிலை எண்டு கதையுங்கோ. . .நீங்கள் செத்துப் போனால் என்ன நிலை எண்டு கதையுங்கோ. .ஆனால் விளையாட்டுக்கு மட்டும் அதுகளைப் பற்றிக் கதையாதையுங்கோ. . .என்ரை பிள்ளையளுக்கு வாழ்க்கையிலை எந்த தீங்கும்
வராது. . . அது மட்டும் உறுதி. . .”
பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு சுரேனுக்கு தேனீரை குடுத்து விட்டு தோய்ந்து விட்டு உலர விட்ட தனது முடியை வடிவாக பின்னிக் கொண்டாள்.
ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக வேண்டிய எல்லாப் பேப்பர்களையும் சரி பார்த்துக் கொண்டாள்.
சுரேனும் தேனீர் குடித்து முடித்து கார் திறப்பைக் கையில் எடுக்க ஒரு தரம் சாமிப்படத்தடிக்குச் சென்று நெற்றியில் மீண்டும் ஒரு சின்னத் திருநீற்றுக் கீறை இட்டபடி வெளியே வந்தாள்.
கார் சின்ன றோட்டுகளை மெதுவாகத் தாண்டி பின் ஆஸ்பத்திரிக்குப் போகும் பெரும் தெருக்களில் விரைவாக ஓடத் தொடங்கியது.
*
ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் கார் நிறுத்துவதற்கென பிரத்தியோகமாக உள்ள இடத்தில் காரை நிறுத்தி விட்டு சுரேனும் கோமதியும் உள்ளே நுழைந்தார்கள்.
ஆஸ்பத்திரியின் வெவ்வேறு பகுதிகளுக்கு செல்லுவற்காக போடப்பட்டிருந்த வெவ்வேறு நிறங்களான கோடுகள் வழியாக குழந்தைப் பிள்ளைப் போல் கோமதி நடந்து போனாள். சுரேன் பாதையின் கரையாகவே நடந்து சென்றான்.
சுமார் நாலைந்து நிமிட நடைக்குப் பிறகு குறிப்பிட்ட அந்த வாட்டுக்கு இருவரும் வந்து சேர்ந்தனர்.
அங்குள்ள வெயிற்றிங் ஹோலில் வேறும் பல டெனிஷ் பெண்கள் வந்திருந்தனர் – சிலர் கணவன்மாருடன். . .சிலர் தாய், சகோதரங்களுடன். அவர்களை கூர்ந்து கவனித்துக் கொண்டு வரும் பொழுது பின் வரிசையில் கோமதியின் வயதை ஒத்த ஒரு தமிழ்ப்பெண் டெனிஷ் பத்திரிகை ஒன்றில் தலைமூழ்கி இருந்தாள்.
“அங்கையப்பா ஒரு தமிழ் பொம்பிளை இருக்கு. . . எந்த இடம் எண்டு விசாரிப்பமோ”
“சும்மா இரும். . .யார் ஆட்கள் எண்டு தெரியாமல் ஏன் வீணாய். . . .”
கோமதி மௌனமானாள்.
தற்சமயம் பத்திரிகையில் இருந்து தலை நிமிர்ந்த அந்தப் பெண்ணின் கண்களில் கோமதி தட்டுப்பட, தானாகவே அந்தப் பெண் எழுந்து வந்து நீங்கள் தான் கோமதியோ என நட்புடன் கேட்டாள்.
கோமதி பதில் கூற முதல் சுரேன் கொஞ்சம் கலவரப்பட்டனாக, “நீங்கள் யார்”எனக் கேட்டான்.
“என்ரை பெயர் சாந்தகுமாரி. நான் உங்கடை வைவ்வுக்கு மொழிபெயர்க்க வந்து இருக்கிறன்”
“உங்களை யார் வரச் சொன்னது”–கொஞ்சம் விசனப்பட்டான்.
“ஆஸ்பத்திரி தான் கூப்பிட்டவை”
“எனக்கு நல்லாவே டெனிஷ் தெரியும்”
“இருக்கலாம் இது மருத்துவ மொழிபெயர்ப்பு. . . “
“அப்பிடி ஒரு சீரியஸான வருத்தம் ஒண்டும் இல்லை. . . பிளீஸ் நீங்கள் போங்கோ”
“ஆஸ்பத்திரி தான் என்னைக் கூப்பிட்டது”
“எப்பிடி இருந்;தாலும் இது என்ரை மனுசின்ரை பிரச்சனை. . . என்னாலை வடிவாய் அவாக்கு உதவி செய்ய ஏலும்”
“உங்களுக்கு விருப்பமில்லாவிட்டால் நான் போறன். . .ஆனால் நேர்ஸிட்டை சொல்லிப் போட்டு போறன்”
“ஏனப்பா அவாவும் வரட்டுமன். . .”என கோமதி தொடங்க முதல்,
“கொஞ்சம் பொத்திக் கொண்டு இருக்கிறீரோ”என சுரேன் தன்னை மறந்து தன் குரலை உயர்த்திய பொழுது அங்கிருந்த அனைவரும் ஒரு முறை திரும்பி பார்த்தார்கள்.
சுரேனின் சத்தத்தை கேட்டு வெளியில் வந்த நேர்ஸிடம் மொழிபெயர்ப்புக்கு வந்த பெண் நிலைமையை விளக்கினாள்.
நேர்ஸ் சுரேனிடம் வந்து தங்கள் றிப்போட்டில் கோமதிக்கு டெனிஷ் தெரியாது என்று இருந்தபடியாலே தாங்கள் மொழிபெயர்ப்பாளரை ஒழுங்கு செய்திருந்ததாகவும். . . .
சுரேனுக்கு பாஷை நன்கு தெரிந்தபடியால் தாம் மொழிபெயர்ப்பாளரை திருப்பி அனுப்புவதாய் கூறி சமாதானப்படுத்தினாள்.
சுரேன் அந்தளவில் சமாதானப்பட்டாலும் அந்த கூடத்தை விட்டு வெறியேறிக் கொண்டிருந்த மொழிபெயர்பு;பாளரை முறைத்து பார்த்தது, “காசுக்கு அலையுறாளவை”என்று சொன்னது கோமதிக்கு என்னவோ மாதிரி இருந்தது.
ஆனாலும் சுரேனுடன் ஏதும் கதையாமல் இருப்பதே நல்லது எனப்பட்டது.
முகம் எல்லாம் சிவத்து பற்களுக்கிடையில் கை நகங்களை கடித்தபடி. . . சுரேனும் மிகவும் அமைதி இழந்தவனாக காணப்பட்டான்.
அடிக்கடி கை மணிக்கூட்டைப் பார்ப்பதும். . . தலையைக் தன் தலையைக் கோருவதாயும். . . கதிரையில் நன்கு சாய்ந்து தலையை பின்னேக்கித் சாய்த்து முகட்டைப் பார்ப்பதாயும் இருந்தான்.
கோமதியின் முறை வந்த பொழுது கோமதியும் சுரேனுமாக உள்ளே நுழைந்தார்கள்.
நேர்ஸ் முதலில் வந்து கைகளைக் குலுக்கி விட்டு ஆஸ்பத்திரிக்குரிய பிரத்தியோக ஆடைகளை அணியும்படி நீட்டினாள்.
ஏன் என்பது போல கோமதி திரும்பி சுரேனைப் பார்த்தாள்.
தியேட்டருக்குள்ளை கொண்டு போய் சோதிக்க இருப்பதால் ஆஸ்பத்திரிக்குரிய பிரத்தியோக உடைகளையே அணிய வேண்டும் என சுரேன் விளங்கப்படுத்தினான்.
கோமதி ஒரு தடவை இலங்கையை நினைத்துப் பார்த்தாள்.
எந்த நோயாளிக்கும் வீட்டில் இருந்து வந்தால் தான் மாற்று உடுப்பு. மற்றும்படி எத்தனை நாள் சென்றாலும், எத்தனை தூரம் வியர்வையில் ஆடைகள் நனைந்ததாலும் மாற்று உடுப்பு என்பதே அவர் அவர்களுக்குரியது. அவர்கள் ஆடையில் அந்த நோயாளியின் பொருளாதாரப் நிலைமை தெரியும். ஆனால் டென்மார்க்கின் ஆஸ்பத்திரிகளில்; அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளில் யார் பணக்காரன், யார் ஏழை என்று தெரியாது.
உடுப்புகளை மாற்றிக் கொண்ட பின்பு நேர்ஸ் காட்டிய கட்டிலில் ஏறிப்படுத்துக் கொண்டாள்.
“என்ரை பிள்ளையள் சுகமாய்த் தான் பிறக்கும். . .இதெல்லாம் தேவையா?”என சிரித்தபடியே சொன்னாள்.
சுரேன் ஒன்றும் சொல்லவில்லை.
சிறிது நேரத்திற்கு முன் மொழிபெயர்ப்பாளருடன் நடந்த வாய்த் தகராறில் இருந்து முற்றாக அவன் விடுபடவில்லைப் போலும் என நினைத்துக் கொண்டாள்.
அடுத்து வந்த மயக்கமருந்து கொடுக்கும் டாக்டர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஊசியை வலது கையில் போட்டார்.
“ஏன் ஊசி போடினம்”
”இது உம்மை சோதிக்கும் பொழுது, நீர் நல்ல ஆறுதலாய் இருக்கிறதுக்கு
போடினம்”சுரேன் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது கோமதி ஆழ்ந்த தூக்கத்திற்குள் போய்க் கொண்டிருந்தாள்.
கையில் ஒரு பச்சைநிற பொலித்தீன் தொப்பியைக் கொண்டு வந்து கோமதிக்கு அணிவித்தபடி, “நீங்கள் போய் வெளியில் காத்திருக்கள்.. . .உங்கள் மனைவிக்கு
நினைவு திரும்பிய பின்பு உள்ளே கூப்பிடுகின்றோம்”என ஒரு நேர்ஸ் கூற சுரேன் கோமதியை திரும்பி திரும்பி பார்த்தபடி வெளியே போனான்.
ஓடலி வந்து கோமதியின் படுக்கையை உள்ளே தள்ளிக் கொண்டு போனான்.
கோமதி தனது நினைவை இழந்து கொண்டிருந்தாள். . . தாயார் தனக்குப் பக்கத்தில் வந்து கொண்டிருப்பது போல அவளுக்குப்பட்டது.
*
சுமார் இரண்டு மணித்தியாலத்துக்குப் பின்பு கோமதிக்கு சாடையாக நினைவு திரும்பிக் கொண்டிருந்தது.
வாய் ஏதோ பிசத்திக் கொண்டிருந்தது.
நேர்ஸ் வெளியால் போய் சுரேனை உள்ளே கூட்டி வந்தாள்.
சுரேன் வந்து தனக்குப் பக்கத்தில் நிற்கும் அசுமாத்தம் தெரிந்தது.
கஷ்ட்டப்பட்டு கண்ணை முழித்தாள்.
அரை முழிப்பிலும் அரைப் பிசுNர்தலிலும், “பிள்ளையள் எப்பிடி இருக்கினமாம்”கேட்டு விட்டு மீண்டும் முற்றாக விடுபடாத மயக்கத்தில் வாய் பிதற்றினாள்.
அடிவயிறு நொந்தது.
“தண்ணி. . .”
“என்ன சொல்லுறா. . .”நேர்ஸ் கேட்டாள்.
“தண்ணியாம் . . .”
“நான் தேநீர் எடுத்து வருகின்றேன். . .குளிர் நீர் சிலவேளையில் பிரக்கடிக்கப் பார்க்கும்”கூறிவிட்டுச் சென்ற நேர்ஸ் கொஞ்ச நேரத்தில் மெல்லிய சூட்டில் தேநீரை கொண்டு வந்து சுரேனிடம் கொடுத்தாள்.
சுரேனோ அதனை அவளுக்கு பருக்குவதோ. . .அல்லது எழுப்பி கொடுப்பதுவோ என தடுமாறுவதைப் பார்த்த நேர்ஸ், கோமதியின் தலையை தூக்கி தனது மடியில் வைத்துக் கொண்டு. . .அவளின் தலையை ஒரு கையால் வருடியபடி. . . தேனீரை பருக்கினாள்.
கோமதிக்கு மிகவும் இதமாக இருந்தது.
மெதுவாய் கண்ணைத் திறந்தாள்.
“அடி வயிற்றுக்குள் நோகுது”என சுரேனுக்கு வாயாலும். . . சைகையால் நேர்சுக்கும் சொன்னாள்.
“இரத்தோட்டம் கூடவாய் இருக்கின்றது”என டெனிஷில் சுரேனுக்கு கூறியபடி இரண்டு மொத்த நப்பின்களை எடுத்து வந்து மாற்றினாள்.
கோமதிக்கு எதுவும் புரியவில்லை.
மாற்றிய நப்பின்களை நேர்ஸ் கழிவுக் கூடையில் போடும் பொழுது அவை இரண்டும் இரத்தத்தினால் தோய்ந்து போயிருந்ததைக் கண்டு அதிர்ந்து போனாள்.
அவளின் மயக்கம் முற்றாகத் தீர்ந்தது.
“என்ன நடந்தது”என துடிதுடித்தபடியே கேட்டாள்.
”அமைதியாய் இரும். . .நேற்றே வயிற்றுக்குள்ளை பிள்ளையள் செத்துப் போச்சாம்”சுரேன் அவளின் முகத்தைப் பார்க்காமலேயே சொன்னான்.
”இல்லை. .நீங்கள் பொய் சொல்லுறியள். . .”
மோதகச்சட்டியுள் பிள்ளைகளின் தலை இரண்டும்.
”அம்மா இவர் பொய் சொல்லுறார்”
கோமதி குழறிய அலறலில் அந்த வாட்டுக்குள் இருந்த அத்தனை நோர்ஸ், டாக்டர்களும் ஓடி வந்தார்கள்.
கோமதியின் நிலையைப் பார்க்க ஏதோ விபரீதம் நடந்து விட்டது எனப் புரிந்து கொண்டார்கள்.
“என்ன நடந்தது”என டாக்டர்கள் கேட்க, ”அவா கவலைப்படுகிறா”என சுரேன் சமாளிக்கப் பார்த்தான்.
ஏதோ சுரேன் சமாளிக்கின்றான் என்று கோமதிக்கு புரிந்து விட்டது.
தனக்கு தெரிந்த அரை குறை ஆங்கிலத்தில்,
“மை பேபீஸ். . .நோ. . .டை. . . “
“மை பேபீஸ். . .நோ. . .டை. . . “
“மை பேபீஸ். . .நோ. . .டை. . . “
திரும்ம திரும்ம அவள் சொல்ல சொல்ல அவளின் முகம் விகாரமாகிக் கொண்டு வந்தது.
டாக்டர்கள், நேர்ஸ்மார் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.
”வை பிளீடிங். . .”என நேர்ஸ் கட்டிய நப்பினைப் பிய்த்தெறிந்தாள்.
”அமைதியாய் இரும். உம்மை பற்றி என்ன நினைப்பினம்”என கிட்டவாகப் போன சுரேனின் சேட்டைப் பிடித்துக் கொண்டு, ”ஏன் இவங்கள் என்ரை பிள்ளையளைக் கொண்டவங்கள் . . ., ஏன் நீங்கள் விட்டனீங்கள்”என டாக்டர்மாரைப் சுட்டிக் காட்டிக் கதைக்க அவர்களுக்கு பாஷை விளங்காவிட்டாலும் எங்கேயோ ஒரு பிழை நடந்து விட்டது எனத் தெரிந்தது.
”என்ன சொல்லுறா”
”இற் வில் பி ஒகே. . .”சுரேன் சமாளித்தான்.
”நோ ஒ.கே . .””நோ ஒ.கே . .””நோ ஒ.கே . .”
கோமதியின் நிலை மோசமாகிக் கொண்டு போக, ”ஒரு மொழிப்பாளரை கூப்பிடுங்கள்”என ஒப்பிறேஷன் தியேட்டருக்கு பொறுப்பான டாக்டர் சொன்னார்.
”ஏன் மொழிப்பாளர்?. . . எனக்கு நல்லாய் டெனிஷ் தெரியும்”சுரேன் முந்தினான்.
அப்பொழுது காலையில் மொழிபெயர்பாளரை திருப்பி அனுப்பிய நாடகத்தை மெதுவாக நேர்ஸ் டாக்டரிடம் சொன்னாள்.
”அப்படியா”
”ஜெஸ். . . இப்பவும் என்னாலை மொழிபெயர்க்க முடியும்”
”இப்ப நடக்க இருக்கிறது மொழி பெயர்ப்பில்லை. . .விசாரணை. . .”
சுரேனின் தலை குனிந்தது.
ஆளுக்கால் குசுகுசுக்க தொடங்கினார்கள். . . .
மொழிபெயர்பாளருக்கு டெலிபோன் பறந்தது. . .
”அரை மணித்தியாலத்துள் வருகின்றாவாம்”
கோமதிக்கு எதுவுமே புரியவில்லை.
கட்டிலால் இறங்கி கீழே குனிந்து பார்த்தாள்.
நேர்ஸ் ஒருத்தி ஓடி வந்து என்னத்தை தேடுகிறாய் என சைகையாள் கேட்டாள்.
”மை பேபீஸ். . .சசி. . சுகி. . .”
”மை பேபீஸ். . .சசி. . சுகி. . .”
”மை பேபீஸ். . .சசி. . சுகி. . .”
நேர்ஸ் பரிதாபமாய் டாக்டரைப் பார்த்தாள்.
கருவைக் கலைத்த அந்த டாக்டரின் கண்களில் கண்ணீர் கசிந்திருந்தது.
”நோ கிறை. .. நோ கிறை. . .யூ குட். . .””நோ கிறை. .. நோ கிறை. . .யூ குட். . .”
”நோ கிறை. .. நோ கிறை. . .யூ குட். . .”என்று டாக்டரைப் பார்த்து சொல்லியபடி சுரேனை முறைத்தப் பார்க்கத் தொடங்கிளாள்.
தூரத்தில் மொழிபெயர்ப்பாளர் வந்து கொண்டிருந்தார்.
நேர்ஸ் ஓடிச்சென்று சுருக்கமாக நடந்த விபரீதத்தை கூறி. . .அதனை விசாரிக்க வேண்டும் என டாக்டர்கள் விரும்புகிறார்கள் எனக்கூறியபடி கலந்துரையாடல் நடக்கும் அறைக்கு மொழிபெயர்ப்பாளரையும், கோமதியையும் கூட்டிச் சென்றாள்.
“புருஷனையும் கூப்பிடுங்கள்”
வெளியே நேர்ஸ் வந்து பாhத்த பொழுது சுரேன் அங்கிருக்கவில்லை.
”நான் சந்தேகப்பட்டது போல நடந்திருக்க வேண்டும்”என தனக்குள் டாக்டர் சொல்லிக் கொண்டு மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் டாக்டர் கேள்வி கேட்கத் தொடங்கினார்.
”இந்தப் பேப்பரிலை இருக்கிற கையெழுத்து உங்களுடையது தானே”
”ஜெஸ் . . . மை. . .மை . . .சிக்கினேச்சர்”
”எதுக்காக இந்தக் கையெழுத்தை வைத்தனீர்கள் எனத் தெரியுமா?”
”மை. . .பேபிஸ் . . .செக்கிங். . .”
அங்கிருந்த அனைவரும் ஆளை ஆளைப் பார்த்துக் கொண்டார்கள்.
”நீங்கள் தமிழிலேயே கதைக்கலாம். அதுக்காகத் தான் மொழிபெயர்ப்பாளரை கூப்பிட்டிருக்கிறம்”
”நோ. .தமிழ் . . .நோ. . தமிழ். . . நோ. . .பிளீவ். . . நோ. . .தமிழ்ஸ். . .
நோ . . .தமிழ்; . . . ”சொல்லிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள்.
எழுந்து போய் குப்பைக் கூடையினுள் பார்த்தாள்.
”வெயர் சுசி. . .வெயா: சகி. . .””வெயர் சுசி. . .வெயா: சகி. . .””வெயர் சுசி. . .வெயா: சகி. . .”
பின் மொழிப்பெயர்ப்பாளருக்கு அண்மையாக வந்து, ”அம்மா காலமை சொன்னவா. .
.பிள்ளையளின்ரை தலை மோதகச்சட்டிக்கை கிடந்தது எண்டு. . .அந்தப் பொறுக்கி தான் தூக்கி எறிந்திருக்க வேணும்”என்று சொல்ல மொழிபெயர்ப்பாளருக்கே அரைவாசிதான் விளங்கியது.
நிலைமையை புரிந்து கொண்ட டாக்டரில் ஒருவர், ”ஆளை மனேநிலை பாதிக்கப்பட்டவரின் பிரிவுக்கே அனுப்ப வேண்டும்”என அபிப்பிராயப்பட்டவர்.
”அதற்கு முதல் மொழிபெயர்ப்பாளர் இங்கே இருக்கின்றபடியால் என்ன நடந்தது என தெளிவாக சொல்ல வேண்டியது எங்களின் கடமை”
அனைவரும் ஆமோதித்தனர்.
”கோமதி. . .”
மேசைக்கு அடியில் ஏதோ என்றைத் தேடும் பாங்கில் இருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள்.
”இன்று காலையில் உங்களுக்கு நடந்தது கருக்கலைப்பு”
”அப்ப சசி. . .சுகி. . .”
”அதைத்தான் சொல்ல வருகின்றோம். இரண்டு பிள்ளைகளை உங்களால் பெற்று எடுத்து வளர்க்க முடியாததால், உங்களின் சுய விருப்பத்தின்படி கருக்கலைக்க ஒப்புதல் அளித்து, நீங்கள் கையெழுத்து வைத்து எங்களுக்கு உங்கள் சொந்த டாக்டர் மூலம் விண்ணப்பித்த கடிதத்தின் பிரகாரம் தான் காலை 8.51 மணிக்கு
கருக்கலைப்புச் செய்தோம். . .”
கோமதி விறைத்தவளாய் பார்த்துக் கொண்டு இருந்;தாள்.
”சட்டப்படி அவன் மீது நடவடிக்கை எடுக்க முடியாதோ”மற்ற டாக்டர் கேட்டார்.
”முடியும் என்று நான் நினைக்கவில்லை. நான் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை என கோமதி சொன்னாலும், ஒத்துக் கொண்டேதான் கையெழுத்து வைத்தார் என கணவன் சொன்னால், சாட்சியம் இல்லாததால் அது கோட்டிலை எடுபடாது”
கோமதி தொடர்ந்தும் விறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
”நடந்த நிகழ்வுக்கு நாங்கள் மனம் வருந்துகின்றோம்”என டாக்டர் எழும்ப போக, எட்டி டாக்டரின் ஸ்ரெலஸ்கோப்பை பிடித்திழுத்தாள்.
டாக்டர் திகைத்துப்; போனார்.
”ஏனடா. . .டொக்டருக்கு படிச்சுப் போட்டு பிள்ளையளை கொல்லுறியள்””ஏனடா. . பொம்பிளையளைக் கட்டிக் கொண்டு வந்து இஞ்சை வைச்சுக் கற்பழிக்கிறியள்”
”ஏனடா. . .கிடந்து எழும்பி போட்டு பிள்ளையளை கொல்லுறியள்”
நிலைமை மோசமாகப் போய்க் கொண்டிருந்ததை அவதானித்த மற்ற டாக்டர் நேர்ஸிடம் ஊசியைக் கொண்டு வருமாறு கண் ஜாடையால் காட்டினார்.
”கொஞ்சம் அமைதியாய் இருங்கோ. ஏங்கடை தழிழாக்களுக்கு மரியாதை இல்லை”என மொழிபெயர்ப்பாளர் தானாகவே கோமதியை சமாதானப்படுத்த முயற்சித்தாள்.
”என்னடி தமிழாக்களுக்கு மரியாதை. . .”என்றவாறு மொழிபெயர்ப்பாளரின் கன்னத்தில் அறைந்தாள்.
இதனைச் சற்றும் எதிர்பார்க்காத மொழிபெயர்ப்பாளர் கண்கள் கலங்க அறையை விட்டு வெளியேறினாள்.
ஆனால் கோமதியோ, ”நான் என்ன கள்ள பிள்ளையே பெத்தனான். . .மற்ற தமிழாக்கள் போலை சீட்டை எடுத்துக் கொண்டு ஓடினனானோ. . .கள்ள கிறடிக் காட்டிலை காசு எடுத்தனானோ. . . அவனனவனோடை படுத்துப் போட்டு இஞ்சை வந்து அழிச்சுப் போட்டு போனனா. . .சொல்லிப் போட்டுப் போடி. . .எங்கை போறாய்”எனச் சொன்னவாறு பின்னாலே போய் மொழிபெயர்ப்பாளரின் தலைமுடியை பிடித்து இழுத்தாள்.
மொழிபெயர்ப்பாளர் திணறினாள்.
ஆஸ்பத்திரின் நடைபாதையில் நின்ற அனைவரும் விநோதமாகப் பார்த்தார்கள்.
அது மொழிபெயர்பாளருக்கு இன்னும் அவமானமாய் இருந்தது.
பின்னால் ஓடி வந்த இரண்டு நேர்சும் கோமதியைப் பிடிக்க, அமைதிப்படுத்தும் ஊசியை டாக்டர் அவளது முழங்கையில் ஏற்றினார்.
”ஐயோ ஊசி போடாதையுங்கோ. . .என்ரை பிள்ளையளுக்கு நோகும். . .அதுகள் பாவங்கள். . .அதுகள் பாவங்கள். . . ”சொல்லிக் கொண்டே கோமதி மயங்கிக் கொண்டு போனாள்.
அனைவருக்கும் கோமதியின் நிலைமையை பார்க்க பரிதாபமாக இருந்தது –மொழிபெயர்ப்பாளர் உட்பட.
*
பின்பென்ன. . . மயக்க நிலையிலேயே மனநோயளர் பிரிவுக்கு மாற்றப்பட்டு. .
.முதலில் அதிக ஊசிகளும் குறைந்தளவு குளிகைகளுமாகத் தொடங்கி. . .நிலைமை முன்னேற குறைந்தளவு ஊசிகளும் அதிகமாக குளிகைகளுமாக மாறி. .கடைசிக் காலகட்டத்தில் ஊசிகள் அறவே நிற்பாட்டப்பட்டு தனியே குளிசைகளை வாழ்நாள் முழுக்க எடுக்கும் நிலைக்கு கோமதி மாறியிருந்த நிலையிலேயே. . . அடுத்தது என்ன கேள்விக்குறி வைத்தியத்துறைக்கும், அவள் வசிக்கும் நகரசபையின் சமூகசேவைப் பிரிவுக்கும் எழுந்தது.
”எங்கள் கடமை முடிந்து விட்டது. . .நீங்கள வீட்டிற்கு போங்கள்”என்ற அனுப்பி வைக்காமல் மிகப் பக்குவாமாக நகரசபையின் சமூகசேவைப் பிரிவிடம் கையளிப்பார்கள். அவ்வகையில் தான் கோமதியை அடுத்த பத்து தினங்களுக்கும் குறைந்தது பத்து தடவை ஆவது நகரத்தில் உள்ள யாரோ ஒரு மனநல வைத்தியரிடம் கலந்துரையாட வைப்பது நல்லது என வைத்தியத்துறை நகரசபையிடம் பரிந்துரைத்திருந்தது.
மனநோயின் விசித்திரம் என்னவென்றால் தாயக்கட்டை போட்டு உருட்டும் பாம்பும் ஏணியும் போல அது திடீரெனவும் ஏறும் திடீரெனவும் சறுக்கும். . . அதே போல் மெதுமெதுவாகவும் ஏறும். . .மெதுமெதுவாகசும் இறங்கும். . .எனவேதான் வாழ்வின் எக்காலத்திலும் மனவிரக்திக்கான மருந்துகளை நிற்பாட்டக் கூடாது என வைத்தியர்கள் சொல்கிறார்கள். . .சக்கரைவியாதிக்குப் போன்று.
அவ்வாறுதான் இன்று நடந்த சம்பாஷணையும் . . . . சுரேன் அனுப்பிருந்த விவாகரத்து நோட்டீஸ் வரும் வரை அவள் நல்லாய்த் தான் இருந்தவள். அது வந்த போது பாவம் குழம்பிவிட்டாள் . . .பாம்பின் வழியே கீழே சறுக்கியவளாக.
தண்டனை பெறவேண்டியவன் தன்னைத் தண்டித்து விட்டதாக. . . மேலாக
விசரி என்ற அடைமொழியுடன் வந்திருந்த வக்கீலின் கடிதம். . . நீதி தேவதையின் கண்கள் கண்களால் மட்டும் கட்டப்படவில்லை . . .காதுகளும் பஞ்சால்
அடைக்கப்பட்டுவிட்டதே என வேதனைப்பட்டாள். . . .இலங்கையில் நடைபெறும் அரசியல் போல. . .ஏன் அண்மைக்காலமாக அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பியாவில் நடைபெறும் தமிழர்களின் ஊர்வலங்களை அந்த அந்த நாட்டு அரசாங்கங்களும் செய்தி ஸ்தாபனங்களும் தங்கள் கண்களைக் கட்டிக் கொண்டும், காதுகளுக்குள் பஞ்சை அடைத்துக் கொண்டும் இருப்பது போல.
மனம் கொஞ்சம் ஆறுதல் பட்டாலும். . .உருக்கொண்ட இந்த யுத்தத்தின் போது தாய் சகோதங்கள் எங்கே இடம் பெயர்ந்து போய் இருப்பார்களோ என மனம் அடிக்கடி பதைபதைக்கும்.
தாயின் குரலை மூன்று மாதத்துக்கு முதல் கடைசியாக கருக்கலைப்பு நடந்த அன்று அதிகாலையில் கடைசியாகக் கேட்டது தான். அதுக்குப் பிறகு ஏதுமில்லை. .
.சிலவேளை தாய் மீண்டும் தொலைபேசியில் அழைத்திருக்குலாம். சுரேன் என்ன சொன்னனானோ தெரியாது. தான் nசுNர்துப் போய்விட்டுப் போய்விட்டதாகக் கூறி இருக்கலாம். தன் வயிற்றில் வந்த இரண்டு ஜீவன்களை தனக்கே தெரியாமல் தனது சம்மதக் கையெழுத்துடன் கருக்கலைப்புச் செய்ய தன்னை அணைத்து கொண்டு ஒப்பிரேஷன் வாசல் வரை வந்தவனுக்கு கோமதி nசுNர்துப் போய்விட்டுடாள் எனச் சொல்ல எவ்வளவு நேரம் எடுக்கும்.
சொல்லுவான்!
சொல்லியிருப்பான்!! சொல்லக் கூடியவன்!!!
துரோகக் குப்பல், காட்டிக் கொடுப்பு அரசியல்கள்கள் எல்லாம் இவனிடம் பிச்சை எடுக்கவேண்டும்.
வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகள் எல்லாம் சுரேனின் மீது கோபமாயும் பெண்ணாகப் பிறந்ததால் தன்னை முன்பின் தெரியாத ஒருவனிடம் அனுப்பி தான் வஞ்சிக்கப்பட்டும் எதுவும் செய்ய முடியாத இயலாமையில் எழும் கவலையும் சேர்ந்து அவளை அழுத்திக் கொண்டிருந்தது.
முதன் நாளே சிங்கப்பூரில் அந்த மிருகத்தினிடம் இருந்து தப்பி இருக்க வேண்டும். . .
அவனையும் அவன் கட்டிய தாலியையும் தூக்கி எறிந்து விட்டு சிங்கப்பூர் வீதிகளில் இறங்கி நடந்திருக்க வேண்டும்.
அவனின் நினைவுகளில் மீள வேண்டும், மீள வேண்டும் என்று நினைத்தாலும் திரும்ம திரும்ப மனம் செக்குமாடாய் சுற்றிக் கொண்டே வந்தது.
நேரம் போனதே தெரியவில்லை.
இரவாகி விட்டது.
இரவுக் கடமையில் உள்ள நேர்ஸ் சாப்பாட்டுத் தட்டுடனும், மாத்திரைகளுடனும் வந்திருந்தாள்.
இப்பொழுது மாத்திரைகளின் அளவு மிகக் குறைவாக இருந்தது.
”ஆர் யூ ஓல் றைற்”என விளங்ககூடிய எளிய ஆங்கிலத்தில் கோமதின் சுகத்தைக் கேட்டாள்.
”ஓம்”எனத் தலையாட்டிய கோமதி, ”சிலிப்பிங் ரபிளற். . பிளீஸ்”என நித்திரைக் குளிசை கேட்டாள்.
அன்று அது அவளுக்கு கட்டாயம் தேவை என உணர்ந்த நேர்ஸ் ”ஒகே”எனச் சொல்லிவிட்டு அதனை எடுப்பதாகச் சென்றாள்.
கோமதி சாப்பிட்டுக் கொண்டு இருக்;கும் பொழுது திரும்பி வந்த நேர்ஸ் கையில் ஒரு கடிதத்தை எடுத்து வந்திருந்;தாள்.
அது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது.
அடுத்த பத்து நாளும் மாலை நாலு மணிக்கு தமிழிலேயே பேசக்கூடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் மனோநலவைத்தியர் வருவார் என இருந்தது.
பெயர் : ஜானகி சடகோபன். வயது 42.
கோமதிக்கு அது மனதுக்கு பெரும் நிறைவாக இருந்தது.
*
முதலாம் நாள் : கோபம்
இரண்டாம் நாள் : அழுகை
மூன்றாம் நாள்: பழி வேண்டும் உணர்ச்சி
நாலாம் நாள்: கனவுகள்
ஐந்தாம் நாள் : பிரிவுகள்
ஆறாம் நாள் : கடந்த காலம்
ஏழாம் நாள் : நிகழ் காலம்
எட்டாம்நாள் : எதிர்காலம்
ஒன்பதாம் நாள்: மீண்டும் எதிர்காலம்
பத்தாம் நாள் : டென்மார்க்கில் எதிர்காலம்
இந்த பத்து நாளும் கோமதியில் பெரிய முன்னேற்றம் இருந்தது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்தப் பெண் மனநல வைத்தியரின் அரவணைப்பும். . .
ஆறுதலும். . .எதிர்காலத்தை பற்றி ஊட்டிய நம்பிக்கைகளும் கோமதிக்கு மாணிக்க கங்கையில் தோய்ந்து எழுந்தது போல இருந்தது.
மொழி பயில ஆறு மாதம். . . வேலை பார்த்துக் கொண்டே தொழிற்கல்வி பயில குறைந்தது இரண்டரை வருடங்கள். . . மொத்தம் மூன்று வருடங்களில். . . ஒரு சுசிக்கும் ஒரு சசிக்கும ; பகிர இருந்த அந்த தாய்மையை பெற்றார் இல்லாமல் போரால் சீரழிந்து வரும் ஆயிரம் பிள்ளைகளுக்கு பகிர முடியும் என்று நம்பிக்கை ஊட்டினார்.
பெற்றார் இல்லாமல் வரும் பிள்ளைகளுக்கான செஞ்சிலுவைச் சங்கத்தின் அகதி நிலையங்கள் ஒன்று. . .இரண்டு என்று இருந்து இப்பொழுது மூன்றாவதும் திறந்தாயிற்று. அங்கு அந்த அந்த நாட்டுப் பாஷையில் பேசக் கூடிய ஊழியர்கள் அதிகம் தேவை. . . அல்லது அவர்களின் பணி தேவை. . .அதற்கு கோமதிகள் போன்று தாய்மை நிறைந்தவர்கள் வேண்டும். . .வாழ்வின் தோல்விகளால் துவண்டு நிமிர்ந்தவர்கள் வேண்டும். . .அப்பொழுது தான் அவர்களால் மற்றவர்களின் துன்பத்தை விளங்கிக் கொள்ள முடியும்.
கோமதியின் இந்த மாற்றத்தையும் எதிர்கால விருப்பத்தையும் மனநல வைத்தியர் நகரசபைக்கு அறிவித்த பொழுது அவர்கள் மிகவும் மகிழ்ந்து போனார்கள்.
மேலாக அடுத்தநாள் தனது கடந்த பத்துநாளாக கோமதியுடன் தான் பணியாற்றிய அறிக்கையை கைகளிப்பதற்காக கோமதியையும் நகரசபை உத்தியோகஸ்தரையும் தனது வீட்டிற்கு இரவுப் போசனத்திற்கு அழைத்திருந்தார்.
கோமதியும் மிக மகிழ்வாக ஏற்றுக் கொண்டாள்.
”டாக்கர் என்று உங்களைக் கூப்பிடமாமல் ஜானகி அக்கா என்று கூப்பிடட்டுமோ”
ஜானகி சிரித்துக் கொண்டு ஓம் எனத் தலையாட்டினாள்.
*
அன்று பகல் முழுக்க ஆஸ்பத்திரியின் பின்வளவுகளில் இருந்த பூக்களைப் பறித்து அழகிய பூங்கொத்துகளாகச் செய்து தனது வாட்டில் உள்ள நேர்ஸ்மாருக்கும் கொடுத்து விட்டு பெரிய பூங்கொத்தை மனநலவைத்தியர் வீட்டுக்கு போகும் பொழுது எடுத்துச் செல்வதற்காக பெரிய கடதாசியில் சுற்றி வைத்திருந்தாள்.
கோமதியில் ஏற்பட்ட மாற்றம் ஆஸ்பத்திரியில் இருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
கால் இழந்த ஒருவர் ஊன்று கோல் கொண்டு நடக்க தொடங்கும் போது. . . கை இழந்த ஒருவர் பொய்க் கையுடன் சாப்பிடும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சி போலவே இதுவும்.. . சூறாவளியினால் விழுந்த மரத்தின் ஒர் கிளையில் இருந்து மீண்டும் மரம் உதித்து வருவது போல இந்த மனநோயார்களின் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசும் பொழுது அந்தப் பிரிவில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.
தன் ஆடைகளையே கழற்றி எறிந்து கொண்டிருந்த ஒரு பெண், அழகாக ஆடை அணிந்து தலைசீவி, கைகளில் பூக்கொத்துகளுடன் நிற்க அவளுக்காக பணியாற்றிய அனைவருக்கும் மகிழ்சு;சியாக இருந்தது.
பின்நேரம் நாலு மணிபோல ஜனானகி தனது காரில் வந்து கோமதியை அழைத்துக் கொண்டு சென்றார்.
சுமார் ஆறு மாத காலத்துக்குப் பின் கார் பணயம்.
காட்டுவழிப் பாதை வேறு. . .மரநிழல்களினூடு கார் செல்ல மனம் மிக மகிழ்வாக இருந்தது.
காட்டின் நடுவே அமைந்திருந்த ஒரு மேட்டுப்பிரதேசுNர்தில் அமைந்திருந்த வீட்டின் முன் அவர்களது கார் போய் நின்றது.
காரால் இறங்கிய பொழுது தான் கொண்டு வந்திருந்த பூக்கொத்தை ஞாபகமாக இரண்டு கைகளாலும் கொடுத்தாள்.
கொடுக்கும் பொழுது கோமதிக்கு சற்றுக் கண்கள் கலங்கியது.
கோமதியைக் கட்டி அணைத்து நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டு வீட்டினுள் போய் அழகிய கண்ணாடிச் சாடி உன்நை எடுத்து அதனை நீரால் நிரப்பி அதனுள் கோமதியின் பூவை வைத்து அந்த சாடியை சோபாக்கு முன்னால் இருந்த ரீபோட்டில் வைத்தாள்.
ஜானகியின் வீடு மிகவும் துப்பரவாகவும் மிக நேர்த்தியாகவும் இருந்தது.
”நான் ரீ.வி.யை போட்டு விடுறன். நீங்கள் பார்த்துக் கொண்டு இருங்கள். றோல்ஸ் மட்டும் பொரித்தொடுத்தால் சரி. . .நகரசபை ஆட்கள் இன்னமும் அரை மணித்தியாலத்தில் வந்து விடுவினம்”
”நான் உங்களுக்கு குசினியில் ஏதாவது உதவி செய்யட்டுமா”
”இல்லையா. .நான் எல்லாம் செய்திட்டன். . .ரீ. வியை போட்டு விடுறன் . .
.பாருங்கள்”என ரீ. வி. யை ஜானகி அழுத்தினாள்.
இலண்டன் ரீ. வி. யில் ”கலக்கப் போவது யாரு”போய்க் கொண்டிருந்தது.
கோமதிக்கு அதில் பெரிய சுவாரஸ்யம் இல்லாமல் சோபாவில் இருந்தபடி சுற்றிவர சுவரில் மாட்டியிருந்த படங்களைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அதில் எவற்றிலும் ஜானகிக்கு ஒரு குடும்பம் இருப்பது போலத் தெரியவில்லை. ஆனால் கேட்பது நாகரீகம் இல்லை என்று மௌமான இருந்தாள்.
தான் பிடுங்கி கட்டிய பூக்கள் கண்ணாடிச் சாடியில் அழகாக இருந்ததை ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
இப்பொழுது ”கலக்கப் போவது யாரு”முடிந்து தீபத்தின் மாலைச் செய்தி ஆரம்பமானது. . .
கடவுளே. . .இடம்பெயர்வுகள். . .குண்டடிகள். . .மரணங்கள். . .பசி. . .பட்டினிகள்.
. .இருபதாம் நூற்றாண்டின் பயங்கர இனப்படுகொலைகள் கண் முன்னே
அரங்கேற்றப்படும்காட்சிகள். . .
”பார்த்தியா கோமதி. . .இந்த மக்களுக்காகத் தான் . . .இங்கே வரப்போகின்ற அநாதைப் பிள்ளைகளுக்காக நீ உழைக்க வேண்டும் என்று சொன்னேன். . புரியுதா”என்றபடி கோமதி முன் பெரிய கிளாசில் ஜஸைக் கொண்டு வந்து ஜானகி வந்து விட்டு மீண்டும் குசினிக்குள் நுழைந்து றோல்ஸ் பொரித்தலைத் தொடர்ந்தாள்;.
கோமதியின் கண்கள் ரீ. வி. யிலேயே பதிந்திருந்தது.
நிகழ்வுகள் மனத்துள் போராட்டத்தை வளர்ந்தது.
நான் வந்திருக்க கூடாது. . .நின்று போராடியிருக்க வேண்டும் . . .இறந்து கிடக்கும் போராளிகளுடன் நானும் போயிருக்க வேண்டும். . . .
அடுத்த கட்ட துண்டில் ஒரு பெண் போராளியின் உடல் அம்மணமாக்கப்பட்டிருந்த கொடுமை காட்டப்பட்டுக் கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு சிங்களச் சிப்பாய் சிரித்துக் கொண்டிருந்தான். அந்த சிங்கள வெறியனுக்கும் சுரேனுக்கும் என்ன வித்தியாசம்?
மனம் கறுவியது.
திரையில் காட்சி மாறியது.
உலகமெங்கும் தமிழர்கள் உண்ணாவிரதம். . . கவனயீர்ப்பு போராட்டங்கள் நடாத்திக் கொண்டு இருந்தார்கள். . . ஆயிரக்கணக்கில். . .இலட்சக்கணக்கில். . .குழந்தைகள்.
. பெரியவர்கள். . .வயோதிபர்கள் என. . .கைகளில் கொடிகள். . . பதாகைகள். .
.என அனைத்து நாடுகளிலும். . .
கனடா. . .
அவுஸ்திரேலியாவில் சிட்னி. . .அது மறைய மெல்பேர்ன். . .
அடுத்தது ஐரோப்பா. . . .
இலண்டன் . . .பிரான்ஸ். . இத்தாலி. . ஜே;மனி. . நோர்வே. . .சுவீடன். . .
அடுத்தது டென்மார்க்கின் தலைநகரம்
கிட்டவாக காட்டப்படுகிறது.
அதில் முன் வரிசையில் சுரேன்!
கையில் சிவப்பு மஞ்சள் கொடியுடன் ”கொல்லாதே. . .கொல்லாதே. . .தமிழரைக் கொல்லாதே”கோஷம் போட்டுக் கொண்டு நின்றான்.
கோமதிக் கைகள் நடுங்கியது.
முன்னேயிருந்த பூக்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிச் சாடியை இறுக்கிப் பிடித்தாள்.
அடுத்த கணம் அது ரீ. வி. யுpன் திரையை நோக்கிப் பறந்தது.
களீர் என்ற சத்ததுடன் ரீ. வி. யின் திரை தூள் தூள் ஆனது.
ஜானகி ஒடிவந்து பார்த்தாள்.
கோமதி நடுங்கி கொண்டு இருந்தாள்.
முகம் விகாரமடைந்திருந்தது.
“மன்னிச்சுக் கொள்ளுங்கோ. . . மன்னிச்சுக் கொள்ளுங்கோ. . .”
என சோபாவின் மூலையில் குந்திக் கொண்டு பலமாக அழத்தொடங்கினாள்.
வீட்டின் உள்ளே வந்த சமூகசேவை உத்தியோகஸ்தர் எதுவும் புரிமாமல் ஜானகியைப் பார்ந்;தார்.
எல்லாம் சரி வரும் என்பது போல ஜானகி அவருக்கு கண்சாடையில் சொன்னாள்.
ஜானகியின் உறுதி சமூகசேவை உத்தியோகஸ்தருக்கு நம்பிக்கையை கொடுத்தது.
கோமதி அழுது கொண்டே இருந்தாள்.
Skriv et svar