என்னைச் சபிப்பவர்கள் சபிக்க!
என்னைச் சபிப்பவர்கள் சபிக்க!
நான் புல்லாய் புழுவானாய் மீண்டும் பிறக்க வேண்டும் என்று!!
எனது பள்ளிக் காலத்தில் ஒரு கடிதம் வரும் ”இதே போல் எழுதி அடுத்த தினங்களுக்குள் பத்துப் பேருக்கு அனுப்பினால் நீங்கள் பரீட்சையில் சித்தி அடைவீர்கள்”என்று.
இப்பொழுது சுமார் 40 வருடங்களுக்கு பின்னால் இதனை வேறுவடிவத்தில் சந்தித்து இருக்கின்றேன்.
இந்த படத்தில் உள்ள சுவாமிகளையோ…அவர் காட்டும் பக்தி நெறிகள் பற்றியதல்ல எனது விமர்சனம்!
ஆனால் 21ம் நூற்றாண்டில் பேஸ்புக்குடனும் இன்ரநெற்றுடனுமா சீரடிசுவாமிகள் திரிகிறார் உங்களைக் கண்காணித்துக் கொண்டு என்பதுதான் என் கேள்வி.
பக்தி என்பது வேறு…மூடநம்பிக்கைகள் வேறு…
இதனை நாம் எமக்குள் தெளிவுபடுத்தாதவரை நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருப்போம்.
இன்று பக்திமார்க்கம் என்பது பெரியதொரு தொழில் நிறுவனமாகி, மக்கள் பல சுரண்டலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் பொழுது பக்திக்கும் மூடநம்பிக்கைக்கும் இடையிலான வித்தியாசம் மக்களுக்கு தெரிய வேண்டும்.
இனிமேல் கண்ணை மூடிக்கொண்டு இறைவனை வணங்காமல் கண்ணைத் திறந்து கொண்டு வணங்கினால் பல விடயங்கள் தெளிவாகும்.
அன்புடனும் அக்கறையுடனும்
வி. ஜீவகுமாரன்
உண்மையான வார்த்தை அண்ணா
உங்களது மின் அஞ்சல் முகவரி கிடைக்குமா? எனது பெயர் எழில்செல்வி, நான் சென்னையில் வசிக்கும் உயர்குல சைவ வேளாளர் குலத்தை சேர்ந்த பெண். குமுதம் எழில்செல்வி என்று முக நூலில் என்னைத் தேடினால் பார்க்கலாம். நன்றி. எனது மின் அஞ்சல் கொடுத்துள்ளேன்.